Monday, September 26, 2011

பரிதாப உணர்ச்சியே மேலோங்குகிறது???

இனத்துரோகம், காட்டிக் கொடுத்தல்,தன்னல வெறி,இயக்கத்தை அழித்தல், கொள்கைகளை புதைத்தல், குற்றத்தை மறைத்தல், இரக்கமற்ற லாபவெறி, பொருள்சேர்க்கும் வெறி, பதவி மோகம், பாசாங்கு செய்தல், பாலின இழிவு, நண்பர்களை உடைத்தல், தன்னை முன்னிலைப்படுத்தல், துணிந்து பொய்கூறல், பிறர் பொருள் கவர்தல், இத்தனை " நற்குணங்களையும் "ஒருங்கே" கொண்ட ஒருவருக்கு, "பெறும் சிக்கல்" வந்துள்ளது. டில்லியில் நீதிமன்றத்தில், இரண்டு தலைமுறை அலைவரிசை ஊழல் வழக்கில், அடுத்த "குற்றப் பத்திரிக்கை" தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அது "நச்சீட்டி" என கலைஞரது "நெஞ்சை" குத்தும்.

ஆ.ராஜ்விற்கு அடுத்தடுத்த "குற்றச்சாட்டு" வழக்கு பிரிவுகள். கனிமொழிக்கு "எதிர்பாராத" வழக்கு பிரிவுகள். கலைஞர் டி.வி. விவகாரத்தில் "கனிமொழிக்கு" சம்பந்தம் இல்லை என்று "பல முறை" தந்தையே, அதாவது "கலைஞர் டி.வி." இன் உண்மையான "மூளையே" கூறியபிறகும், குடும்பத்திற்குள்ளேயே இருக்கும் "அமிர்தம்" கூறிய "போய்" சாட்ச்சியை "அடிப்படையாக" கொண்டு, கனிமொழி மீது "மேலும்" பல குற்றச்சாட்டுகளை சீ.பி.ஐ. கூறியுள்ளது. 120 பி என்ற "ராஜா துரோக" வழக்கு பிரிவிலும், 409 என்ற பிரிவில் ஏமாற்றியதாகவும், கனிமொழி மீது இப்போது சீ.பி.ஐ. குற்றச்சாட்டுகளை "புனைந்துள்ளது".

இது யார் செய்த "சதி?". யாருக்கு இதனால் "லாபம்?". காங்கிரச்கார்ர்களுக்கு, திமுக மீதோ, கலைஞர் மீதோ "கோபம்" என்று வைத்துக் கொள்வோம். அதற்காக இவ்வளவு தூரம் "இறங்கி வந்து" செய்ய என்ன "அவசியம்" இருக்கிறது? ஆ.ராஜாவின் வழக்கறிஞர், "பிரதமரையும், சிதம்பரத்தையும்" நீதிமன்றத்திற்கு வந்து "சாட்சியம்" கூறவேண்டும் என்று கூறியதால் "சிதம்பரம் மற்றும் மன்மோகன் தயவில் உள்ள சீ.பி.ஐ" இப்படி ஒரு "அபாண்டமான" குற்றச்சாட்டை வைக்கிறார்களா? கனிமொழிக்கும் ராஜாவின் வழக்கறிஞர்தான் வாதாடுகிறார் என்பதால், கனிமொழி சார்பாக பேசும்போதும், "கனிமொழி வழக்கிற்கு சம்பந்தமே இல்லாத" சிதம்பரத்தையும், மன்மோகனையும்" அவரும் "சாட்சிகளாக" இழுத்தார் என்ற செய்தி, நமக்கு இருந்தது போலவே "கனிமொழிக்கும்" அதிர்ச்சியாக இருந்ததே? அதைக்கூட கனிமொழி விரும்பவில்லை எண்பதை ஏற்கனவே நாம் கூறி இருக்கிறோமே? இப்போது "அதற்காக" கோபப்பட்டு "அவர்கள் இருவர்" மீதும் இப்படி சீ.பி.ஐ. குற்றம் சாட்டுகிறதா?

இல்லையென்றால், இத்தகைய "குற்றச்சாட்டுகளால்" கனிமொழி மேலும் "பல காலம்" சிறையிலேயே இருக்கட்டும் என்றும் "தண்டனைகூட" கிடைத்து "வெளியே" வரமுடியாத சூழல் ஏற்படட்டும் என்றும் நினைப்பது "யாராக" இருக்கும்? கனிமொழி வெளியே வந்தாள், திமுகவின் "மிக முக்கிய தலைவராக" ஆக்கப்பட்டு விடுவார் என்றும், கனியை "தலைவர்" அப்படி ஆக்கிவிடுவார் என்றும் "யார்" பயப்படுவார்கள்? யார் "டெக்கான் குரோனிகல்" ஆங்கில ஏட்டில், "ஞானியை" வைத்து ஒரு கட்டுரை எழுதச் செய்து, அதில் "கலைஞர்" கட்சி தலைமையிலிருந்து "கீழே" இறங்க வேண்டும் என்று "கருத்தை" பதிவு செய்து, அந்த "கட்டுரையை" படித்தீர்களா என்று ஒவ்வொருவராக கேட்டுக் கொண்டிருந்தது?

"யாருக்கு" கட்சித் தலைவர் "பதவி" உறுதியானது என்று "பட்டத்து இளவரசர்" பாத்திரம் "தயாராக" இருக்கிறது? யார் உண்மையில் "கனிமொழி" அந்த இடத்தை "பிடித்துவிடுவாரோ" என்ற "அச்சம்" அதிகம் கொண்டவாராக இருப்பது? யாருக்கு பின்னால் "டில்லியை" கழககண்ணியில் "கோர்க்கவேண்டியவராக" தான்தான் "இருப்போம்" என்ற ஆணவம் இருந்தது?, 2007 இல் "தலைவரிடம்" குட்டு வாங்கும்வரை அந்த நம்பிக்கையில் இருந்தது? "யார்" அந்த நம்பிக்கைகள் "உடைந்துவிட்டனவே" என்று கனிமொழி மீது "ஆத்திரம்" கொண்டு அலைவது? யார் முதலில் தனது "அச்சு ஊடகத்திலும், காட்சி ஊடகத்திலும்" தினசரி " இரண்டு ஜி" ஊழல் பற்றி "அம்பலப்படுத்தியது?". இப்படி நடப்பது எதுவுமே "எதிர்கட்சிகள்" செய்வது அல்ல. எல்லாமே "குடும்பத்திற்குள்" நடக்கும் " உள்குத்து" வேலைகள்தாம்.

கனிமொழிக்கு இப்போது குற்றயியல் நடைமுறை சட்டம் 437 பிரிவு "தந்திருக்கும்" பிணை வாய்ப்பு தரப்பட்டுள்ளதாக சீ.பி.ஐ. கூறியுள்ளது. அதுவே கனிமொழியை 'பிணையில் வார" வழிவகுக்கும். அப்போது அவர் " சிதறிவரும் திமுகவின்" சுமை தாங்கியாக மீண்டும் தன்னை "அழித்துக் கொள்வாரா?" அல்லது "புதிய வடிவம்" எடுப்பாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.


தனது "இனத்தின்" அழிவை வேடிக்கை பார்த்து "இனத்தையும்" காப்பாற்ற முடியாத ஒரு தலைவன், அதனாலேயே தனது "கட்சியையும்" காப்பற்ற முடியாத ஒரு தலைவர், தனது "குடும்பத்தையும்" அழிவிலிருந்து "காக்க" முடியாத நிலைக்கு சென்று, "கடைசியாக" இப்போது "மகளையும்" காப்பாற்ற முடியாத "ஒரு தந்தையாக" ஆகிவிட்டார். "பழி" உணர்வு வரவேண்டிய தமிழருக்கு இப்போது, "பரிதாப" உணர்வுதான் மேலோங்குகிறது

No comments:

Post a Comment