Sunday, April 24, 2011

தங்கச்சிமடத்திற்கு கொலை, வடமராச்சிக்கு தாக்குதல், வல்வெட்டித்துறைக்கு கைது?

தமிழன் எங்கிருந்தாலும், இந்தியா இலங்கையை உலக கோப்பை போட்டியில், மட்டைபந்து விளையாட்டில் வென்றதால், அடியும், உதையும், கைதும் வாங்கவேண்டும். மரணத்தை சந்திக்கவேண்டும். இது என்னடா கொடுமை? நம்மூர் இந்திய தமிழர்கள் மீனவனாக பிறந்ததால், மீன் பிடிக்க சென்ற போது, அவர்களை பிடிக்கும் சிங்கள கடல்படை. இந்தியா இலங்கையை இரண்டாம் நாள் வென்றால், இரவிலேயே அந்த தமிழக மீனவர்களை, நிராயுதபாணியானவர்களை, நகத்தால் கீரியும், வாளால் வெட்டியும், கட்டையால் அடித்தும், கையை வெட்டியும், கழுத்தை அறுத்து, தலையை வெட்டி, முண்டமாகியும் கொலை செய்வார்கள் சிங்கள படைகள்.

அதற்கு இந்திய அரசு எந்த கேள்வியும் கேட்காது. எந்த வழக்கும் தமிழக அரசு இலங்கை படை மீது போடாது. ஆனால் அதே மட்டைபந்து ஆட்டத்திற்கு ராஜபக்ஷேவை இந்திய அரசு கூப்பிட்டு கௌரவிக்கும். அந்த ஆட்டத்தில் ஆடிய வீரர்களுக்கு இந்திய அரசும், தமிழக அரசும் கோடி கணக்கில் நிதி கொடுக்கும். அந்த விளையாட்டினால் ஏற்பட்ட மரணத்தை தழுவிய தன் சொந்த நாட்டு குடிமக்களான தமிழக மீனவர்களுக்கு சில லட்சங்களை இரையாக போட்டு அவர்கள் உயிர்களை மீன் பிட்க்க அனுமதிக்கும். இத்தகைய இந்திய அரசையு, தமிழக அரசையும் தண்டிக்க எந்த சட்ட நிபுணர்களும் புறப்பட மாட்டார்கள்.

இங்கே உள்ள தமிழனுக்கு மட்டுமா என்று இன்றைய அங்கில ஏடான, "டெக்கான் குரோனிகல்" அம்பலப்படுத்தியுள்ளது. இந்தியா வெற்றி பெற்றதை ஈழத்தமிழர்கள் மகிழ்ச்சி போங்க வரவேற்று இருக்கிறார்கள். உடனே அங்கிருந்த சிங்கள ராணுவம் வடமராச்ச்சி பகுதியில் அவர்களை அடித்து நொறுக்கியுள்ளது. அதேபோல, வல்வெட்டித்துறை கிராமத்தில் [ அது தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரனது சொந்த ஊர் ] இந்திய வெற்றியை கொண்டாடிய தமிழர்கள் மீது சிங்கள ராணுவமும், காவல்துறையும் சேர்ந்து கைது நடவடிக்கையை எடுத்துள்ளது.

இந்தியாவே நீ வெற்றி பெற்றால் அதனால் அதாக்கப்படுவதும் தமிழர்கள்தான். அவர்கள் எந்த நாட்டு தமிழர்கள் என்பது அல்ல பிரச்சனை. இந்தியா வென்றால், மட்டைபந்து ஆட்டக்காரருக்கு கொடிகள் குவியும். எங்கள் தமிழர் இல்லங்களில் அழுகுரல் குவியும். இந்த உண்மையை யாராவது அந்த மட்டைபந்து ஆட்டக்காரர்களுக்கு தெரிவிப்பார்களா? அவர்களாவது கண்விழிப்பார்களா? மத்திய, மாநில அரசுகள் இந்தியாவில் தமிழர்களை கைவிட்டு விட்ட நிலையில் நாங்கள் மட்டைபந்து ஆட்டக்காரர்களை மட்டுமே இப்போது இதற்கு பதில் கேட்கும் நிலையில் இருக்கிறோம்.

ஊழல் தடுப்பு சட்டம் உயிருள்ளதா?

ஊழல் தடுப்பு சட்டம் உயிருள்ளதா?
அன்னா பற்றி கண்ணா,பின்னா?
அன்னா ஹசாரே ஒரு புயலை கிளப்பினார். அதை உணமையல்ல என்று கூற முடியுமா? அன்னா ஹசறேக்கு உண்மையில் ஊழலை ஒழிக்க எண்ணமில்லை என்று வேண்டுமானால் யாரும் கூறலாம். ஆனால் அவர் கிளப்பிய அந்த புயல் நாடெங்கும் நடுத்தர வர்க்கம், படித்த வர்க்கம், மற்றும் தொழிலாளி வர்க்கம் மத்தியல் விழிப்புணர்வை ஏற்படுத்த வில்லை என்று கூற முடியுமா? சில மேதாவிகள் அவர் மீதான தங்கள் கேள்விகளை அல்லது குற்றச்சாட்டுகளை எடுத்து வைத்து முளையிலேயே இப்படி ஒரு ஊழலுக்கு எதிரான மக்கள் விழிப்புணர்வை காயடிக்க அதீத அறிவுஜீவிகளாக செயல்படுகின்றனர். அவர்களுக்கு வர்களது அடையாள நெருக்கடி. என்ன செய்ய?

தாங்கள் மட்டும்தான் ஊழலை எத்ரிக்கும் சிகாமணிகள் என்று அவர்கள் ஒரு சிறிய வட்டத்திற்குள் கூறிவந்தார்கள். இப்போது ஒரு பெறும் கூட்டம் அன்னா ஹசாரே பின்னால் திரள்கிறதே என்று அவர்களுக்கு கலக்கம் வந்துவிட்டது. தங்கள் அடையாளம் போய்விடுமோ என்று வருந்தி, வயத்தெரிச்சலில் எதையோ எழுதுகிறார்கள். ஆனாலும் அவர்கள் தங்கள் வாதம் வெற்றி பெற சில, பல உண்மைகளை தேடி கண்டுபிடித்தாவது எழுதிவிடுகிறார்கள். அவற்றையும் நாம் புறம் தள்ள முடியாது. உதாரணமாக அன்னா ஹசாரே பற்றி தமிழ்நாட்டில் உள்ள அரசியல்வாதி ஹண்டே குறை கூறினார் என்று நாம் கூறினோம். ஹண்டே சுதந்திர கட்சியில் தொடங்கி, அதிமுக, பிஜேபி, என்று பயணம் செய்த அரசியல்வாதியாக இருக்கலாம். அதற்காக சந்தர்ப்பவாதம் என்று கூறி அவரது கருத்தை மறுக்க நாம் தயாராக இல்லை.

என் என்றால் அன்னா ஹசாரே தனது ராணுவ ஓட்டுனர் பதவியில் தொடங்கி, மகாராஷ்ட்ராவில் சினிமா கொட்டகையில் சீட்டு எடுத்து விற்றவர் என்றுகூட கூறுகிறர்கள். அது அன்றைய அவரது பொழைப்பாக கூட இருக்கலாம். இந்த நாட்டில் எல்லா இளைஞர்களுக்கும் அரசால் வேலை கொடுக்க முடியாதபோது, சினிமா சீட்டு விற்பதுகூட ஒரு பொழைப்புதான். அதற்காக இளைஞர்களை குறை கூறாதே. அரசை குறை கூற கற்றுக்கொள் என்று நாம் சொல்ல வேண்டும். அடுத்து அன்னா ஹசாரே ஒரு பிளாக் மெயில் செய்பவர் என்று சரத் பவர் சொன்னாராம். சரத் பவர் ரொம்ப யோக்கியர் என்பதால் நாம் அதை மறுக்க விரும்பவில்லை. அன்னாவே அடஹ்ர்கு பதில் சொல்லிவிட்டார். நான் செய்வது பிளாக் மெயில் என்றால் தொடர்ந்து அதை செய்வேன் என்கிறார்.

அதாவது அரசை பிளாக் மெயில் செய்து, ஊழலுக்கு எத்ரிப்பாக ஒரு சட்டத்தை பற்களுடன் அதாவது அதிகாரத்துடன் கொண்டுவர அண்ணாவால் முடிந்தால் அதற்கு பிளாக் மெயில் என்று பெயர் வைத்தால் அந்த வேலையை தொடர்ந்து செய்வேன் என்பது அவரது வாதம். அது சரிதானே. அடுத்து அன்னா வுடன் கரைசேர்ந்த சாந்தி பூஷன் பற்றியும், பிரஷாந்த் பூஷன் பற்றியும் வருகிறது. அவர்ஹல் பேசிய குறுந்தகடு உண்மை என்றும், உணமையில்லை என்றும் இரண்டு வாதங்கள். அதில் அமர்சிங் களம் இறங்குவது பற்றி நமக்கு அதிகம் அக்கறை இல்லை. என் என்றால் ஏற்கனவே அமர்சின்க்தான் அண்ணாவை எத்ரித்து இந்த குறுந்தகடு விவரத்தை முன்பே பிரச்சனை செய்தவர். ஆனால் திக்விஜய்சிங் இறங்கியிருக்கிறார். அவர் சோனியாவின் விசுவாசி.

சோனியாகாந்தி அன்னாவின் ஊழல் எதிர்ப்பை ஆதரிக்கிறேன் என்கிறார். அதற்காக தனது தலைமையில் உள்ள தேசிய ஆலோசனை குழுவை இறக்கி விடுகிறேன் என்கிறார். அது அவருக்கும் பிரதமாத் பொறுப்பில் உள்ளவருக்கும் உள்ள மோதலால் என்று புரிந்து கொள்ளலாம். ஆனால் எதற்காக திக்விஜயசிங்கை, ஆனவிற்கு எத்ரிராக சோனியா இறக்கிவிடவேண்டும்? மன்மோகன் வசமாக ஊழல் குற்றச்சாட்டுகளில் மாட்டிய நாட்டின் பிரதமர் என்ற பெயரில், அசிங்கப்பட்டு நிற்கிறார். அந்த கெட்ட பெயரில் இருந்து காங்கிரசை காப்பாற்ற சோனியா மன்மோகன் மீதே அனைத்து குற்றங்களையும் போட்டுவிட்டு தப்பிக்க மன்மோகன் எத்ரிப்பு காய்களை நகர்த்தலாம். காமன்வெல்த் போட்டி ஊழல், ஆதர்ஷ் வீட்டுவசதி வாரிய ஊழல், ஐ.எஸ்.ஆர்.ஒ. ஊழல், ஸ்பெக்ட்ரம் ஊழல் அனைத்திலுமே நேரடியாக சிக்குவது மன்மோகன்தான்.


அவரது அமெரிக்கா சார்பு நிலையை நியாயப்படுத்த விரும்பும் சக்திகள் சு.சாமி மூலம் மன்மோகனை காப்பாற்ற ஒருபுறம் நீதிமன்ற வக்காலத்து மூலமும், இன்னொரு புறம் சோனியா--ராகுல் கூட்டுதான் அனைத்து ஊழலுக்கும் காரணம் என்றும் போட்டுக்கொடுகின்றன. இந்த நேரத்தில்தான், 2002 ஆம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள போஸ்டன் நகரில் ராகுக் காந்தி ஐந்து கோடிக்கு இந்திய பணத்திற்கான டாலர்களுடன் சிக்கியதை, வாஜ்பாய் எடுத்துவிட்ட கதையை மீண்டும் வெளியிட்டு ஒரு கூட்டம் மகிழ்கிரரகள். அப்படியானால் இந்தியாவின் ஆளும் கட்சி குடும்பம் ஊழலில் சிக்கினால், அதை அடுத்த ஆளிம்வர்க்க கட்சி தலைமை எடுத்துவிடும் என்பதுதானே பொருள். அதாவது ஊழலில் பிரதமர் வேறு, ஆளும் குடும்பம் வேறு, ஆளும் வர்க்க எத்ரிகட்சி வேறு என்பது அல்ல என்பதுதானே பொருள். அப்படியானால் இந்த ஊழல் எத்ரிப்பு சட்ட வரைவுநகல் உண்மையில் நல்ல படி வெளிவந்தாலும் அதனால் பயன் உண்டா?


உலகை இன்று ஆளும் கார்பரேட்கள் தனியார் லாப நோக்கம் கொண்ட நிறுவனங்களாக இருப்பதால், அவற்றின் நலன்களுக்காக எப்படியும் அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும், லஞ்சம் கொடுப்பார்கள். அதற்கு பெயர் வணிக தர்மம் என்று கூறுவார்கள். அதற்காக உலகம் முழுவதும் உள்ள கார்பரேட்கள் ஒரு தனி பிரிவை தன்கள் நிறுவனத்தில் ஒதுக்கி அதன்மூலம் கமிஷியன் கொடுப்பது என்ற பழக்கத்தை தொழில் வழக்கமாக வைத்துக்கொண்டுள்ளார்கள். இப்போது அல்லோலகல்லோல படும் ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிக்கிய நீரா ராடியா கூறுவதுபோல, தனது நிறுவன லாப ஊடாடல் உலகம் முழுவதும் பன்னாட்டு மூலதன நிறுவனகளால் செயல்படுத்தப்படும் பழக்கம்தான் என்று தெளிவாகிறது. அப்படியானால் இதை தடுக்கவே முடியாதா?

முடியும். இப்போதுள்ள உலங்கை பிடித்துள்ள உலகமயமாக்கல் கொள்கையால்தான் இந்த ஊழல் வழக்கமாகி உள்ளது. தனியார்துறை இருக்கும்வரையில் இப்படி ஊழல் இருக்கத்தானே செய்யும் என்று வாதம் செய்பவர்களும் உண்டு. தையர்துரையை சீனா உட்பட நாடுகள் இன்று பயன்படுத்தி வருகின்றன. உடனடியாக இத்தகைய ஊழல்களை தடுக்க என்ன வழி என்று நாம் சிந்திக்கலாம். இந்தியாவில் பொதுத்துறைக்கு அதிக முக்கியத்துவம் இருந்த நேரு காலத்தில், தனியாரதுரையை கட்டுக்குள் வைக்க ஒரு சட்டம் இருந்தது. அதற்கு " ஏகபோக தடுப்பு சட்டம்" என்று பெயர். அந்த சட்டத்தை 1991 ஆம் ஆண்டு நரசிம்மராவ் ஆட்சியில் டங்கள், காட் என்ற திட்டங்கள் மூலம் உள்ளே நுழைந்த அமெரிக்க் பொருளாதார கொள்கைகள், நாளடைவில் தாராளமயமாக்கல், என்று வளரும்போது, அந்த "ஏகபோக தடுப்பு சட்டத்தை" நீர்த்துபோக வைத்துவிட்டார்கள். அதனால் மட்டுமே " அந்நிய தனியார் மூலதனம்" கண்டபடி இந்த நாட்டிற்குள் நுழைய முடிந்தது.

அப்படி ஒரு சட்டத்தை , " கார்பரேட் தடுப்பு சட்டம்" என்று கொண்டுவந்து, அதனுடன் சேர்த்து இந்த" ஊழல் தடுப்பு சட்டம்" வருமானால் அது உறுப்படும் என்று புதிய மாற்று ஏற்பாட்டை நாம் முன்வைக்க வேண்டும். அப்படி வைக்கும்போது இப்போது கிளம்பியுள்ள மக்களது ஊழல் எத்ரிப்புக்கும் அர்த்தம் இருக்கும். மக்களுக்கும் விளங்கிக்கொள்ள முடியும்.. மாறாக இது நொள்ளை, அது சொள்ளை, என்று கூறினால், எந்த நல்லது வந்தாலும் இந்த ரிவுஜீவிகள் புறம் சொல்லத்தான் செய்வார்கள் என்ற பெயர் தான் வரும். தவிர இந்த சொல்லப்படும் அறிவுஜீவுகளுக்கு அப்படி ஒன்றும் பெரிய அக்கறை இந்த நாட்டில் புதிய வழிகளை அக்ண்டுபிடித்து ஊழலை ஒழிக்கவேண்டும் என்று அக்கறை இருப்பதாக தெரியவில்லை. தங்கள் பெயர் வித்தியாசமாக பேசினார், எழுதினர் என்று வரவேண்டும் எனத்தான் நினைக்கிறர்கள்.

Saturday, April 23, 2011

ஒரு " சதி விமானத்தில் அமெரிக்காவிற்கு பயணமாகிவிட்டது"

URGENT MESSAGE ;-
Conspiracy send through Flight from Colombo to Newyork
-------------------------------------------------------------------------------------------------------------------

Kothapaye Rajapakse, Defence Secretary of SLGov. takes his flight now towards America. This Trip was planned in a higher level meeting of the gov.of SL. Sri Lankan President Mahinda Rajapakse who was disturbed by the leakage of the summarry of the UN Panel report on the Crimes against Humanity by both the side of War, either it is the Gov.of Sri Lanka or the LTTE.Colombo govt. approached Gov. of Russia, who gave its Green signal to the Gov.of SL and it tries to pressurise the UNSC. Colombo also is trying to influence the Gov. of PRC, Peoples Republic of China to support its cause for stopping the publication of the Panel Report by the UN Security Council. Seeing the danger of the report being published Rajapakse regime is depending on some senate members from the U.S. to support their cause. For directely handling these forces to staal the report, President of SL planned to send his brother cum Defence Secretary and a Citizen of United States, Gothapaye Rajapakse to fly to Newyork and toinfluence the forces of the UNSC to stop them from publishing their report, since the Govt.of SL itself is ging to declare its own report on the Human Rights violations at the time of war through its enquiry agency called LLRC. This trip od Gothapaye is kept as a secret trip Today morning he takes aspecial flight to US from Colombo.

ஒரு " சதி விமானத்தில் அமெரிக்காவிற்கு பயணமாகிவிட்டது"

இலங்கை அரசு ஐ.நா.வின் நிபுணர் குழு எழுதிய "மானுடத்திற்கு எதிரான குற்றங்கள்" அறிக்கையின் ஒரு பகுதி வெளியானதால், இடிந்துபோய் உட்கார்ந்த்தது. அதை முறியடிக்க எண்ணி, ராஜபக்சே அரசு, ஐ.நா.வை முதலில் மிரட்டியது. பிறகு அறிககையை அதிகாரபூர்வமாக வெளியிடவேண்டாம் என்று கெஞ்சி கேட்டுக்கொண்டது. அதற்கும் ஐ.நா.மசியாது போல தெரிந்த உடனே, ருஷ்யா மூலம் நிர்ப்பந்தம் கொடுத்து, ஐ.நா. பாதுகாப்பு குழு அந்த அறிககையை வெளியிட இடாமல் தடுக்க முயற்சிக்கிறது. அதேபோல சீனாவையு தனக்கு சாதகமாக வாதாட ஐ.நாவில் ஏற்பாடு செய்து வருகிறது.அதே நேரம், அமெரிக்காவில் உள்ள இளநகை அரசுக்கு ஆதரவாக இருக்கும் சில செனட் உறுப்பினர்களை வைத்து, ஐ.நா.வில் இலங்கைக்காக வாதாட எர்பாஉ செய்துள்ளது.

இதுபோன்ற "சதி" வேலைகளை செய்ய நேரில் ஐ.நா. சென்று நம்பகமான ஆள்கள் வேலை செய்யவேண்டும் என்று முடிவு செய்தது. அதன்படி, அமெரிக்கா குடிமகனான, அரசத்தலைவரின் தம்பியும், பாதுகாப்பு அமைச்சகத்தின் செயலாளருமான கோத்தபாயே ராஜபக்சே தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் சில உயர் ராணுவ அதிகாரிகளுடன் அமெரிக்கா சென்று, அங்கே உள்ள தங்கள் ஆதரவு சகதிகள மூலம் ஐ.நா. அறிககையை வெளியிட விடாமல் தடுக்க அனைத்து முயற்சிகளையும் செய்வார். இன்று காலை அதற்காக அமெரிக்காவிற்கு கோத்தபாயே மற்றும் அதிகாரிகள் விமானத்தில் கொழும்புவிலிருந்து, கிளம்பி விட்டார்கள். இந்த பயணம் மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.

Friday, April 22, 2011

மகிந்தாவை குற்றம் சாட்ட இந்தியா தயாரா?-ஜெ. கேள்வி.

மகிந்த இராசபக்சேவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஜெயலலிதா

மஹிந்த ராஜபக்ச மற்றும் அவருடைய சகாக்களின் போர்க்குற்றங்களை விசாரிக்கும் வகையில், அவர்களை சர்வதேச நீதிமன்றத்தின் முன் நிறுத்த உடனடி நடவடிக்கைகளை தனது பங்கிற்கு இந்திய அரசு எடுக்க வேண்டும் என தெரிவித்து அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இலங்கையில் எந்த மாறுதலும் ஏற்படவில்லை என்பதைத் தான் அண்மையில் நான்கு இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்ட கோரச் சம்பவம் நினைவூட்டுகிறது. இன்னும் சொல்லப் போனால், இந்தியர்கள், குறிப்பாக தமிழர்களுக்கு எதிரான இலங்கை அரசின் கொடூர மனப்பான்மைக்கு உண்மையிலேயே ஆதாரம் தேவை என்றால், இலங்கை அதிகாரிகளின் சித்திரவதையால் அழுகிய நிலையில் சிதைந்து கிடந்த மீனவர்களின் சடலங்களே சாட்சி.

இந்தியாவைச் சேர்ந்த தமிழர்கள் மீதே இது போன்ற கொடூரத் தாக்குதலை இலங்கை அரசு நடத்தியிருக்கும் நிலையில், யாருமே நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு அனைத்து விதமான மனித உரிமை மீறல் குற்றங்களுக்கும் ஆளாகி, இலங்கை அரசின் அடக்குமுறைக்கு அடிபணிந்து இலங்கைத் தீவில் வாழ்ந்து கொண்டிருக்கும் அப்பாவி தமிழர்களின் நிலைமை என்ன என்பதை கற்பனை செய்து பார்க்கவே அச்சமாக இருக்கிறது.

ஓர் தமிழ் இளைஞரை துப்பாக்கியால் சுடுவதற்கு முன்பு, அவரை நிர்வாணமாக்கி, கண்களை மூடி, கை, கால்களைக் கட்டி, காலால் எட்டி உதைத்து இலங்கை இராணுவத்தினர் பேரானந்தம் அடைந்த காட்சியை 25.8.2009 அன்று 40 வினாடிகளுக்கு பிரிட்டிஷ் டி.வி. ஒளிபரப்பி உலகத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

இந்த இளைஞரின் பிணம், இதேபோன்று ஒன்பது சடலங்கள் இருந்த இடத்திற்கு உருட்டி விடப்பட்டது. இந்த கொடுஞ்செயலுக்கு எதிராக சர்வதேச அளவில் கூக்குரல் எழுப்பப்பட்டதோடு மட்டுமல்லாமல், இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ச சர்வதேச நீதிமன்றம் முன்பு ஆஜர்படுத்தப்பட்டு, போர்க் குற்றத்திற்காக விசாரிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

ஆனால், இந்திய அரசோ, தமிழக அரசோ இது குறித்து எதிர்ப்பையோ அல்லது வருத்தத்தையோ கூட தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மாறாக, இலங்கை அதிபருடன் விருந்துண்டு மகிழ்வதற்காக, 2009ம் ஆண்டு அக்டோபர் மாதம், கனிமொழி உட்பட தி.மு.க., காங்கிரஸ் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை இலங்கைக்கு அனுப்பி வைத்தார் கருணாநிதி.

பரிசுப் பொருட்களுடன் திரும்பிய நாடாளுமன்றக் குழுவினர் இலங்கையில் எல்லாமே நன்றாக இருக்கிறது என்றும், அங்குள்ள தமிழர்கள் குறைபட்டுக் கொள்ளும் அளவுக்கு புகார் ஒன்றுமில்லை என்றும் தெரிவித்தனர். என்னதான் நற்சான்றிதழ் கொடுத்தாலும், அங்குள்ள தமிழர்களின் நெஞ்சை உருக்கும் நிலையைக் கண்டு மனித உரிமை ஆர்வலர்கள், முற்போக்கு நாடுகளைச் சேர்ந்த அரசுகள், ஐக்கிய நாடுகள் சபை ஆகியவை பொங்கி எழுந்தன.

தற்போது, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் அனுப்பிய குழுவின் அறிக்கை பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் இருந்து ஒரு சில பகுதிகளை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

ஐ.நா. குழுவால் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நம்பத் தகுந்த குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படின், சர்வ தேச மனிதாபிமானச் சட்டம் மற்றும் சர்வதேச மனித உரிமைச் சட்டம் ஆகியவற்றிற்கு எதிரான ஆபத்து விளைவிக்கக் கூடிய அத்து மீறல்களை இலங்கை அரசாங்கம் நிகழ்த்தியுள்ளது வெட்ட வெளிச்சமாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதில் சில குற்றங்கள் போர்க் குற்றங்கள் மற்றும் மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்கள் ஆகும். 2008ம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்கும், 2009ம் ஆண்டு மே மாதம் 19 ம் தேதிக்கும் இடையே, வன்னி பகுதிக்கு முன்னேறிய இலங்கை இராணுவம், மிகப் பெரிய அளவில் பரவலாக குண்டு மழை பொழிந்து அப்பாவி தமிழர்கள் மாண்டு போவதற்கு காரணமாக இருந்தது.

இதன் மூலம் வன்னி பகுதி மக்களுக்கு பலவிதமான தொந்தரவுகளை இலங்கை இராணுவம் கொடுத்தது. கிட்டத்தட்ட 3 லட்சத்து 30 ஆயிரம் அப்பாவி தமிழர்கள் குண்டு மழை பொழிவிலிருந்து தப்பிக்க முடியாத அளவுக்கு மிகக் குறுகிய பகுதிக்குள் சிக்கிக் கொண்டனர்.

ஊடகங்கள் மற்றும் போர் விமர்சகர்களை பயமுறுத்தும் வகையிலும், அவர்களுக்கு வாய்ப்பூட்டு போடும் வகையிலும், வெள்ளை வாகனங்களில் மக்களை கடத்துவது, மறைத்து வைப்பது உட்பட பல்வேறு அச்சுறுத்தும் நடவடிக்கைகளை இலங்கை அரசு கையாண்டது.

குண்டு மழைக்கு விலக்களிக்கப்பட்ட பொதுமக்கள் வாழும் தொடர்ச்சியான மூன்று இடங்களில் இலங்கை அரசு மிகப்பெரிய அளவில் குண்டு மழை பொழிந்திருக்கிறது. மருத்துவ மனைகள் குறிவைத்து தொடர்ந்து தாக்கப்பட்டு இருக்கின்றன. வன்னிப் பகுதியில் உள்ள மருத்துவ மனைகள் அனைத்தும் பீரங்கிகளால் தாக்கப்பட்டு இருக்கின்றன.

மருத்துவமனைகள் இருக்கும் பகுதிகள் என்று இலங்கை அரசாங்கத்திற்கு நன்கு தெரிந்திருந்தும் சில மருத்துவமனைகள் மீண்டும், மீண்டும் தாக்கப்பட்டிருக்கின்றன. போர் பகுதியில் உள்ள மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் செய்யக் கூடிய உதவிகளான மருத்துவ உதவி, உணவு ஆகியவற்றை இலங்கை அரசாங்கம் தடுத்து அவர்களை மேலும் துன்பத் திற்கு ஆளாக்கி இருக்கிறது.

இதன் மூலம் போர் பகுதியில் உள்ள தமிழர்களின் எண்ணிக்கையை இலங்கை அரசு வேண்டுமென்றே குறைத்து மதிப்பீடு செய்தது. 2009 ஆம் ஆண்டு ஜனவரி முதல் மே வரை, மனித வர்க்கத்தின் படுகொலை நடந்த இறுதி நாட்களில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் அனாமதேயமாக செத்து மடிந்தனர்.

ஐக்கிய நாடுகள் சபை குழுவின் அறிக்கை மிகத் தெளிவாக உள்ளது. இலங்கை அரசாங்கத்தின் போர்க் குற்றங்களை பட்டியலிட்ட தோடு மட்டுமல்லாமல், இலங்கை போர் முடிவிற்கு வந்து விட்டது என்று கூறி 27.4.2009 அன்று தனது மூன்று மணி நேர உண்ணாவிரத நாடகத்தை கருணாநிதி முடித்துக் கொண்டதற்குப் பிறகும், 2009 ஆம் ஆண்டு மே மாதம் இறுதி வரை இனப்படுகொலைகள் நடந்துள்ளன என்று தெளிவாக இந்த அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

தமிழர்களுக்கு எதிராக தொடுக்கப்பட்ட, மனித குல வரலாற்றில் நிகழ்த்தப்பட்ட மிக மோசமான இனப்படு கொலைக்கு ஆதரவாகவும், உடந்தையாகவும், தட்டிக் கேட்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டும் இருந்த கருணாநிதி பகிரங்கமாக பொது மன்னிப்பு கோர வேண்டும் என்று தான் தமிழக மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

ராஜபக்ச மற்றும் அவருடைய சகாக்களின் போர்க் குற்றங்களை விசாரிக்கும் வகையில், அவர்களை சர்வதேச நீதிமன்றத்தின் முன் நிறுத்த உடனடி நடவடிக்கைகளை தனது பங்கிற்கு இந்திய அரசு எடுக்க வேண்டும். இல்லையெனில், அண்மையில் தமிழக வாக்காளர்கள் முன்பு இலங்கை குறித்து சோனியாகாந்தி தெரிவித்த கருத்துக்கள் வாய்மையற்றவை என்றாகி விடும்.

இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்கு எதிரான படுகொலையை நடத்தியது இந்திய அரசு தான் என்று அடிக்கடி கூறப்பட்டு வந்த குற்றச்சாட்டு உண்மை என்று நம்புவதாக வழி வகுக்கும். இவ்வாறு அறிக்கையில் ஜெயலலிதா கூறி உள்ளார்.

என்.ராம் ஸ்பெக்ட்ரம் ஊழலில் மாட்டிக்கொண்டாரா?

என்.ராம் ஒரு பிரபல ஊடகத்தின் முதலாளியும், தலைமை ஆசிரியரும் ஆக இருக்கிறார். அவரது ஆங்கில ஊடகம் உலகம் முழுவதும் அப்படி பிரபலம். அண்ணா அந்த ஆங்கில ஊடகம் பற்றி கூறும்போது, மவுண்ட் ரோடு மகா விஷ்ணு என்றார். தனது தலையை வாஷிங்டனிலும்,தனது காலை மெட்ராசிலும் வைத்திருக்கும் மகா விஷ்ணு என்றார். அப்படி பெயர் பெற்ற அந்த மதம் பெயர் கொண்ட ஆங்கில ஏடு, தனது பணிகளில் சமீபத்தில் இலங்கை அதிபர் ராஜபக்சேக்கு ஊதுகுழல் வேலை செய்துவருவதும் எல்லோரும் அறிந்ததே.அதுமட்டுமின்றி, பிரபல சிங்கள ஊடகவியலாளர் ராஜபக்சே கொடுத்த விருதை மறுத்த போது, சிங்கள ஊடகவியலாளர்கள் எல்லோரும் ராஜபக்சே அரசை, கருத்துரிமைக்கு எதிரி என்று கண்டித்த போது, இலங்கைக்கு பறந்து சென்று ராஜபக்சே கொடுத்த விருதை வாங்கி மகிழ்ந்தவர் என்.ராம் என்பதும் அனைவருக்கும் தெரியும்.

தமிழர்கள் மீது இன அழிப்பு போரை நடத்திய ராஜபக்சேவை, புலி எதிர்ப்பு என்ற பயங்கரவாத எதிர்ப்பை நடத்துபவர் என்று பாராட்டி, சீராட்டி, ஆதரவு கொடுத்து வந்தது என்.ராம் தலைமையிலான "திஹிந்து" நாளேடு என்பதும் உலகிற்கு தெரியும். இதே என்.ராம் ஒருகாலத்தில் புலிகள் தலைவர் கிட்டுவுடன் நெருக்கமாக இருந்த போது, அவர் பற்றி அதிக ஆதரவு தந்து எழுதி வந்தவர் என்பதும் மறப்பதற்கில்லை. அதனால் தனது நட்பு எந்தப்பக்கமோ, அந்த பக்கம் எழுதுபவர் எப்படி ஊடகவியலாளராக இருக்க முடியும் என்று அறிவுஜீவிகள் எண்ணி பார்த்திருக்க வேண்டும். அதேபோல அவர் சிபிஎம் காரர்களுடன் நட்பு வைத்திருந்தார் என்பதால், அவர்களுக்காக எழுதுவதை பழக்கமாக கொண்டிருந்தார். அதை வைத்து அவரை இடதுசாரி என்று தவறாக என்னிக்கொண்டவர்கள் அதிகம். அவர் எஸ்.எப்.ஐ.யில் இருந்தார் மாணவ பருவத்தில் என்பதால், மேட்டுக்குடி வீட்டு பையன், கட்சியின் பொது செயலாளர் நம்பூதிரி பாட சென்னை வரும்போது, தனக்கு வீட்டில் கொடுத்திருந்த பீயத் காரில் விமான நிலையம் சென்று அந்த கேரள முதல்வரை கூட்டி வருவார் என்று பெருமையாக கட்சிகாரர்கள் கூறிக்கொள்வார்கள்.

அந்த காலத்தில் எஸ்.எப்.ஐ.மாணவர் தலைவர்களில் பலரும் ஜவஹர்லால் நேரு பலகலை கழகத்தில் "டிஸ்கோதே"என்ற மேற்கத்திய நடனத்தில் ஊறியவர்கள் என்பதும் அப்போதே வெளிவந்த செய்திகள். அதனால் அந்த கால நிகழ்வுகளை வைத்து எவரையும் மதிப்பிடக்கூடாது என்று விவரம் தெரிந்தவர்கள் புரிந்திருக்க வேண்டும். சமீபத்தில் கொலை குற்றத்திற்காக பிடிபட்ட சங்கராச்சாரியார் உள்ளே போன பின்பு, தப்பிக்கலாம் என்று எண்ணிய சின்ன சங்கராச்சாரியாரான விஜேந்திரன் என்.ராமின் உதவியை நாட, இந்த மனிதர் உடனே தானே தனது காரை எடுத்து கொண்டு போய், அவரை ஆந்திர எல்லையிலிருந்து கூட்டி வந்து காஞ்சிபுரத்தில் விட்டார். அடுத்த வாரமே பிரகாஷ் கரத் புதிய பொது செயலாளர்க சிபிஎம்.மிற்கு வந்தவுடன் அவரது சென்னை வருகையில் அவருக்கும் தனது வாகனத்தில் இடம் கொடுத்து கூட்டி வந்தார். இது ஒரு லிபரல் அதாவது தாராளமனது கொண்ட,கொள்கை இல்லாமல் நண்பர்களுக்காக உதவும் ஒரு பணக்கார மனிதரின் செயல்கள்தான். அதை புரியாத நமது மக்கள் அவரை இடதுசாரி என்று எண்ணினால் அது ஒரு மாயை.


சீனஅரசாங்கம் செய்யும் எல்லா தவறுகளையும் தனது லாபத்திற்காக இந்த மனிதர் பாதுகாப்பார். சீனகம்யுனிஸ்ட் கட்சி செய்வது பற்றி அதிகம் இதுபோன்ற மேட்டு குடிகளுக்கு தெரிய அவசியம் இல்லை. அங்கே அரசாங்கம் செய்யும் பிற்போக்கு வேலைகளை தனியாகவும், கட்சி செய்யக்கூடியதை வேறாகவும் பார்ப்பது ஒரு வேடிக்கை.அதில் ஒன்று ராஜபக்சேவை ஆதரிப்பது. இந்த பெரிய மனிதருக்கு[ [என்.ராமுக்கு] ஜெயலலிதா ஆட்சியுடன் மோதல் வந்த போது, அன்றைய உள்துறை அமைச்சர் அத்வானி இவருக்கு ஆதரவாக மத்திய சிறப்பு காவல் படையை அனுப்பினார் என்பதை நாம் மறக்க கூடாது. அதேபோல அந்த ஏட்டின் நூறாவது ஆண்டு விழாவுக்கு பிரதமர் வாஜ்பாயை ராம் அழைத்து வந்தார் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். அதேபோல வாஜ்பாயியின் அமெரிக்கா பயணத்தில் ராமை அவர் அழைத்து சென்றார் என்பதையும் மறக்க முடியாது.

இப்போது என்.ரவி என்ற அவரது சொந்த தம்பி ஒரு கடிதம் எழுதி அண்ணனை அமபலப்படுத்தி உள்ளார். தன்னை ஆசிரியர் பொறுப்பிலிருந்து இந்த மாதம் மூன்று நாட்கள் முன்பு, பதினெட்டாம் தேதி ராம் நீக்கி விட்டார் என்று குற்றச்சாட்டை தொடங்கியுள்ளார். மேலாண்மை இயக்குனராக இருந்த தனது தம்பி என்.முரளியையும் நீக்கி விட்டார் என்.ராம் என்று என்.ரவி எழுதுகிறார். இணை ஆசிரியர் நிர்மலா லக்ஷ்மணன் என்பவரையும் நீக்கி விட்டார் என்கிறார். மாலினி பார்த்தசாரதி என்ற தங்கள் சித்தி மகளையும், நிர்வாக ஆசிரியர் பதவியிலிருந்து ராம் தூக்கி விட்டார் என்கிறார் அவர். ஏற்கனவே மாலினியை தூக்கி எறிந்து விட்டு, தலைமை ஆசிரியராக ராம் தானே வந்தார் என்பதும் அதை ஒட்டி மாலினி அனுமதித்திருந்த பத்தி எழுத்தாளர்களான கெயில்ஒம்வேல்ட், காஞ்சனஇல்லையா, கிரிஷ்ணானந், போன்றோரின் பத்திகள் வருவது நின்று விட்டது என்பதும் வாசகர்கள் அறிந்ததே.

இப்போது என்.ரவி தனது கடிதத்தில் பல குற்றச்சாட்டுகளை என்.ராம் மீது வைக்கிறார். அவற்றில் முக்கியமானது ராம் எப்படி ஆ.ராஜாவின் நேர்காணலை போட்டு அவரை காப்பாற்றும் நோக்கத்துடன் ஊடகத்தை தவறாக பயன்படுத்தினார் என்பது. அதில் அதற்காக அதே நேரம் அந்த தொலை தொடர்புஅமைச்சகத்திலிருந்து ஒரு பக்க வண்ண விளம்பரம் கொடுக்கப்பட்டது என்றும் குற்றம் சாட்டுகிறார். அதை "பணம் கொடுத்து செய்தி வரவழைக்கும் பாணி" என்று அவர் கூறுகிறார்.அதனால் ஸ்பெக்ட்ரம் ஊழலை மறைக்கும் முயற்சியில் ஈடுபட்டார் என்றும் கூறுகிறார். அப்படியானால் சுற்று சூழல் சாட்சியங்களின் படி இந்த என்.ராமும் ஸ்பெக்ட்ரம் ஊழலில் விசாரிக்கப்பட்டு தண்டிக்கப்படுவாரா என்ற கேள்வி நமக்கு எழுகிறது. அகில உலக அளவில் கொடுங்கோலன் ராஜபக்சே தண்டிக்கப்படும்போது, அவனது கைத்தடிகள் அவரவர் நாடுகளில் தண்டிக்கப்படுவது நடக்கத்தான் செய்யுமோ?

Thursday, April 21, 2011

பறக்கும் பாலம் பறந்தே போச்சா?

கலைஞர் அரசு சென்னையை மையமாக வைத்து, தமிழ்நாட்டு வளர்ச்சிக்கு பன்னாட்டு மூலதன நிறுவனங்கள் மற்றும் இன்னபிற கார்பரேட் நிறுவனங்கள்தான் உதவியாக இருக்கும் என்ற ஆய்ந்த முடிவின்படி ஏற்பாடுகள் செய்தார். அவர் ஆண்ட கடைசி ஐந்தாண்டும் தமிழ்நாட்டை கார்பரேட்களின் நலனுக்கு என்ற வகையில் பிரித்து கொடுத்து, டில்லி தந்த வாய்ப்பில் காற்பறேட்களுக்கு உதவி செய்து அதில் தங்களுக்கு கிடைத்த உதவி தொகையான கமிஷனை மட்டுமே எடுத்துக்கொண்ட குடும்பம் எனும் நற்பெயரையும் கார்பரேட்களிடம் பெற்றுள்ளார்.

அப்படி செய்த பணிவிடைகளில் கிடைத்த சிறு உதவி தொகையை இன்று ஸ்பெக்ட்ரம் ஊழல் என்று அழைக்கிறார்கள்.அவ்வாறு செய்த உதவிகளில் ஒன்றுதான் சென்னையில் உள்ள வணிக துறைமுகத்தை பெரிதாக்குவதும், சிறு துறைமுகங்கள் என்ற பெயரில் தமிழ்நாடெங்கும் கடலோர மாவட்டங்களில் இதுபோன்ற சிறு துறைமுகங்களில் அந்நியநாட்டு ஒப்பந்தங்களை அளிப்பதில் மத்திய அரசுடம் சேந்து கொண்டு முடிவு செய்து அங்கும் மீனவர் வாழ்நிலையை கெடுக்க ஏற்பாடு செய்வதில் கெட்டிக்காரத்தனமான வேலையை வெற்றிகரமாக செய்துவிட்டார். இப்போது புரியாத மீனவர்கள் ஒருகட்டத்தில் இவை அனைத்துமே மீனவர்களை கடல்கரையை விட்டு வெளியேற்றி கரைகளை அந்நிய நாட்டு உடமையாக ஆக்கத்தான் என்பதை புரிந்துகொள்வார்கள்.

அந்த வரிசையில்தான் பறக்கும் மேம்பாலங்களும் வந்தன.அதாவது திட்டமிடப்பட்டன. ஒன்று போர் நினைவுதூனிலிருந்து மதுரவாயில் செல்லும் மேம்பாலம். அது அமிஜிகரை மக்கள் வீடுகளை இடிக்கும் மேம்பாலம். மக்கள் மத்தியில் பெறும் எதிர்ப்பு வந்தது. அடுத்து கலங்கரை விளக்கிலிருந்து, தென்சென்னையில் கொட்டிவாக்கம் வரையிலான பறக்கும் மேம்பாலம். இவை இரண்டுமே வணிக துறைமுகத்திலிருந்து வெளியே வரும் கார்பரேட் கண்டைனர்களை கொட்னுசெள்ள போடப்படும் என்பதுதான் கலைஞர் அய்யா அந்த பெரு முதலாளிகளுக்கு கொடுத்த வாக்குறுதி.

அதன்படி கீழே உள்ள மீனவர் குப்பங்கள் உடையட்டும். ஆனால் பன்னாட்டு நிறுவனகள் வாழவேண்டும் என்ற அரச குடும்பத்தின் ஆசை. இதை எதிர்த்து பல போராட்டங்கள். மீனவர்கள், சுற்றுப்புற சூழல்வாதிகள் நடத்தியும் கவலைப்படாத கலிஞர் அரசு இப்போது உயர்நீதமன்றம் முன்னால், அந்த திட்டம் பற்றி பரிசீலனையில்தான் இருக்கிறது, இன்னமும் நுடிவு செய்யவில்லை என்று பின்வாங்கியுள்ளார். மக்கள் எத்ரிப்பு தனக்கு எதிராக மக்களை வாக்களிக்க செய்துவிட்டது என்று உணர்ந்த பின்னால் அதற்கான காரணங்களை கண்டு பிடித்து, இனி தமிழ்நாட்டில் அரசியல் செய்ய வேண்டும் என்றால் இதுதான் வழி என பின்வாங்குகிறார்.
.

Wednesday, April 20, 2011

கோடீஸ்வர குடும்பத்திற்கு எதிராக.......

எதுக்கய்யா இந்த மாதிரி எல்லோரும் சேர்ந்து இரட்டை இளைக்கும், அதன் தோழமை கட்சிகளுக்கும் ஒட்டுமொத்தமாக வாக்களித்தீர்கள் என்று சாமான்ய தமிழனை கேட்டால், அது ஒன்னும் அந்த ம்மா மீதுள்ள பற்றினால் அல்ல என்கிறான் தமிழன். அப்பா எதற்கு ன்று வினவினோம். அது ஒண்ணுமில்ல. அந்த கோடீஸ்வர குடும்பம் செய்யும் அலும்பு தாங்களா என்கிறான். அது எண்ண அலும்பு? என்றோம். ஒன்றா? இரண்டா? எடுத்து சொல்ல என்கிறான்.

ஒரு முதலமைச்சர் போனமுறை கலைஞர் ஆளும்போது இருந்தார். ஓஹோ. 1996 முதல் 2001 வரை உள்ள ஆட்சியை சொல்றீங்களா? ஆமாம். அப்பவே தமிழ் மக்கள் அந்த ஆட்சியின் சாதனைகளை வைத்து வாக்கு போடல்ல. ஆட்சியை மாத்திட்டாங்க. அந்த முறை கலைஞர் உணமையிலேயே ஊழலை பல தட்டுகளிலும் குறைத்து சாதனை செய்தார். இந்த முறை ஆட்சியில் அவர் ஒருவர் மாட்டுமா முதல்வராக இருந்தார்? பத்து பேர் முதல்வராக இருந்தனர். காவல்துறையில் யார், யாரை எங்கே போடவேண்டு என்று முடிவு பண்ற இடத்தில் அந்த துறையை கவனித்த கலைஞர் இல்லையே?

துணை முதல்வர் தளபதி அனேகமாக உளவு துறையை கையாண்டார் என்றால், அதில் உள்ள ஜாபர் சேட் மூலம் பெரிய காய் நகர்த்தல்களைத்தானே கலைஞர் செய்து வந்தார்? என்றார்கள். சரி. மதுரை மண்டல காவல் அதிகாரிகளை மாற்றுவதில் தளபதி தலையிட்டாரா என்றால், அதுதான் இல்லை. அடுஹு அண்ணன் பகுதி.என்று தளபதியே பின்வாங்கவில்லையா? என்கிறார்கள். சரி. தன்னால் முடிந்த அளவு ராசாத்தி அமமையாரும் காய் நகர்த்தலை செய்தாரே என்கிறார்கள். அதனால்தானே ஜாங்கிட் ஆட்சி சென்னை மற்றும் புற நகர்களில் நடந்தது என்கிறார்கள். ஓஹோ. அதனால்தான் ஜாபரையும், ஜாங்கிட்டையும் தேர்தல் ஆணையம் மாற்றிவிட்டதோ என்று கேட்கதொன்றியது. எல்லாம் திமுக காரர்களே பேசுவதுதான்.

சரி. ஒரு தொழிலை சுதந்திரமாக விட்டார்களா? திரை தொழிலில் நுழைந்து அதையும் ஆக்கிரமித்தார்கள். ஏற்கனவே சின்னத்திரை அவர்களது குடும்பம் கையில்தான். அதை வைத்து விளம்பரம்செய்துதங்கள் படங்களை ஓடச்செய்யட்டும் .அதற்காக திரை அரங்குகளை கையில் எடுத்துக்கொண்டு, அதில் தங்கள் படங்கள் தவிர மற்றவர் படங்களை திரையிட மறைமுக தடை விதிப்பது கோபத்தை கொடுக்காதா? என்கின்றனர். அதோடு நிறுத்தாமல் குறிப்பிட்ட கலைஞர்களுக்கு தடங்கல்கள் செய்வது என்ன நியாயம்? என்று கேட்கிறார்கள்.

சரி. அடுத்த திட்டம் அந்த தனியார் பேருந்துகளை கை வைப்பதாமே? என்று கேட்டார்கள். அது என்ன? என்றோம். கலாநிதி, தயாநிதி சகோதரர்கள் எண்ணூறு பேருந்துகளை பயங்கர உயர் தொழில் நுட்பத்துடன் ஏற்பாடு செய்து தயார் செய்து வைத்துள்ளதாகவும், அவற்றை இப்போது இரவில் பல ஊர்களுக்கும் செல்லும் ஆம்னி பேருந்துகளின் தடங்களில் இறக்க இருப்பதாகவும் வந்த தகவல் அடுத்த அதிர்ச்சியாக இருக்கிறது. இப்படி தமிழ்நாட்டையே ஒரு கோடீஸ்வர குடும்பம் வாங்கி, தன்கள் கைகளில் வைத்து கொள்வதை, தமிழ் மக்கள் ஏற்கத்தாயாரக இல்லை என்று முடிக்கிறார்கள்.

அப்பா போட்ட வாக்குகள் அம்மா வரணும், என்பதைவிட, யார் வரக்கூடாது என்பதுதான் என்கிறீர்களா? என்றால் ஆமாம் என்கிறார்கள்.அதனால்தான் மத்திய உளவு துறையினர் சமீப கணக்கு, அதிமுக 126 என்றும், அவர்கள் கூட்டணி 186 என்றும் கணக்குசொல்கிறார்களா?