ஊழல் தடுப்பு சட்டம் உயிருள்ளதா?
அன்னா பற்றி கண்ணா,பின்னா?
அன்னா ஹசாரே ஒரு புயலை கிளப்பினார். அதை உணமையல்ல என்று கூற முடியுமா? அன்னா ஹசறேக்கு உண்மையில் ஊழலை ஒழிக்க எண்ணமில்லை என்று வேண்டுமானால் யாரும் கூறலாம். ஆனால் அவர் கிளப்பிய அந்த புயல் நாடெங்கும் நடுத்தர வர்க்கம், படித்த வர்க்கம், மற்றும் தொழிலாளி வர்க்கம் மத்தியல் விழிப்புணர்வை ஏற்படுத்த வில்லை என்று கூற முடியுமா? சில மேதாவிகள் அவர் மீதான தங்கள் கேள்விகளை அல்லது குற்றச்சாட்டுகளை எடுத்து வைத்து முளையிலேயே இப்படி ஒரு ஊழலுக்கு எதிரான மக்கள் விழிப்புணர்வை காயடிக்க அதீத அறிவுஜீவிகளாக செயல்படுகின்றனர். அவர்களுக்கு வர்களது அடையாள நெருக்கடி. என்ன செய்ய?
தாங்கள் மட்டும்தான் ஊழலை எத்ரிக்கும் சிகாமணிகள் என்று அவர்கள் ஒரு சிறிய வட்டத்திற்குள் கூறிவந்தார்கள். இப்போது ஒரு பெறும் கூட்டம் அன்னா ஹசாரே பின்னால் திரள்கிறதே என்று அவர்களுக்கு கலக்கம் வந்துவிட்டது. தங்கள் அடையாளம் போய்விடுமோ என்று வருந்தி, வயத்தெரிச்சலில் எதையோ எழுதுகிறார்கள். ஆனாலும் அவர்கள் தங்கள் வாதம் வெற்றி பெற சில, பல உண்மைகளை தேடி கண்டுபிடித்தாவது எழுதிவிடுகிறார்கள். அவற்றையும் நாம் புறம் தள்ள முடியாது. உதாரணமாக அன்னா ஹசாரே பற்றி தமிழ்நாட்டில் உள்ள அரசியல்வாதி ஹண்டே குறை கூறினார் என்று நாம் கூறினோம். ஹண்டே சுதந்திர கட்சியில் தொடங்கி, அதிமுக, பிஜேபி, என்று பயணம் செய்த அரசியல்வாதியாக இருக்கலாம். அதற்காக சந்தர்ப்பவாதம் என்று கூறி அவரது கருத்தை மறுக்க நாம் தயாராக இல்லை.
என் என்றால் அன்னா ஹசாரே தனது ராணுவ ஓட்டுனர் பதவியில் தொடங்கி, மகாராஷ்ட்ராவில் சினிமா கொட்டகையில் சீட்டு எடுத்து விற்றவர் என்றுகூட கூறுகிறர்கள். அது அன்றைய அவரது பொழைப்பாக கூட இருக்கலாம். இந்த நாட்டில் எல்லா இளைஞர்களுக்கும் அரசால் வேலை கொடுக்க முடியாதபோது, சினிமா சீட்டு விற்பதுகூட ஒரு பொழைப்புதான். அதற்காக இளைஞர்களை குறை கூறாதே. அரசை குறை கூற கற்றுக்கொள் என்று நாம் சொல்ல வேண்டும். அடுத்து அன்னா ஹசாரே ஒரு பிளாக் மெயில் செய்பவர் என்று சரத் பவர் சொன்னாராம். சரத் பவர் ரொம்ப யோக்கியர் என்பதால் நாம் அதை மறுக்க விரும்பவில்லை. அன்னாவே அடஹ்ர்கு பதில் சொல்லிவிட்டார். நான் செய்வது பிளாக் மெயில் என்றால் தொடர்ந்து அதை செய்வேன் என்கிறார்.
அதாவது அரசை பிளாக் மெயில் செய்து, ஊழலுக்கு எத்ரிப்பாக ஒரு சட்டத்தை பற்களுடன் அதாவது அதிகாரத்துடன் கொண்டுவர அண்ணாவால் முடிந்தால் அதற்கு பிளாக் மெயில் என்று பெயர் வைத்தால் அந்த வேலையை தொடர்ந்து செய்வேன் என்பது அவரது வாதம். அது சரிதானே. அடுத்து அன்னா வுடன் கரைசேர்ந்த சாந்தி பூஷன் பற்றியும், பிரஷாந்த் பூஷன் பற்றியும் வருகிறது. அவர்ஹல் பேசிய குறுந்தகடு உண்மை என்றும், உணமையில்லை என்றும் இரண்டு வாதங்கள். அதில் அமர்சிங் களம் இறங்குவது பற்றி நமக்கு அதிகம் அக்கறை இல்லை. என் என்றால் ஏற்கனவே அமர்சின்க்தான் அண்ணாவை எத்ரித்து இந்த குறுந்தகடு விவரத்தை முன்பே பிரச்சனை செய்தவர். ஆனால் திக்விஜய்சிங் இறங்கியிருக்கிறார். அவர் சோனியாவின் விசுவாசி.
சோனியாகாந்தி அன்னாவின் ஊழல் எதிர்ப்பை ஆதரிக்கிறேன் என்கிறார். அதற்காக தனது தலைமையில் உள்ள தேசிய ஆலோசனை குழுவை இறக்கி விடுகிறேன் என்கிறார். அது அவருக்கும் பிரதமாத் பொறுப்பில் உள்ளவருக்கும் உள்ள மோதலால் என்று புரிந்து கொள்ளலாம். ஆனால் எதற்காக திக்விஜயசிங்கை, ஆனவிற்கு எத்ரிராக சோனியா இறக்கிவிடவேண்டும்? மன்மோகன் வசமாக ஊழல் குற்றச்சாட்டுகளில் மாட்டிய நாட்டின் பிரதமர் என்ற பெயரில், அசிங்கப்பட்டு நிற்கிறார். அந்த கெட்ட பெயரில் இருந்து காங்கிரசை காப்பாற்ற சோனியா மன்மோகன் மீதே அனைத்து குற்றங்களையும் போட்டுவிட்டு தப்பிக்க மன்மோகன் எத்ரிப்பு காய்களை நகர்த்தலாம். காமன்வெல்த் போட்டி ஊழல், ஆதர்ஷ் வீட்டுவசதி வாரிய ஊழல், ஐ.எஸ்.ஆர்.ஒ. ஊழல், ஸ்பெக்ட்ரம் ஊழல் அனைத்திலுமே நேரடியாக சிக்குவது மன்மோகன்தான்.
அவரது அமெரிக்கா சார்பு நிலையை நியாயப்படுத்த விரும்பும் சக்திகள் சு.சாமி மூலம் மன்மோகனை காப்பாற்ற ஒருபுறம் நீதிமன்ற வக்காலத்து மூலமும், இன்னொரு புறம் சோனியா--ராகுல் கூட்டுதான் அனைத்து ஊழலுக்கும் காரணம் என்றும் போட்டுக்கொடுகின்றன. இந்த நேரத்தில்தான், 2002 ஆம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள போஸ்டன் நகரில் ராகுக் காந்தி ஐந்து கோடிக்கு இந்திய பணத்திற்கான டாலர்களுடன் சிக்கியதை, வாஜ்பாய் எடுத்துவிட்ட கதையை மீண்டும் வெளியிட்டு ஒரு கூட்டம் மகிழ்கிரரகள். அப்படியானால் இந்தியாவின் ஆளும் கட்சி குடும்பம் ஊழலில் சிக்கினால், அதை அடுத்த ஆளிம்வர்க்க கட்சி தலைமை எடுத்துவிடும் என்பதுதானே பொருள். அதாவது ஊழலில் பிரதமர் வேறு, ஆளும் குடும்பம் வேறு, ஆளும் வர்க்க எத்ரிகட்சி வேறு என்பது அல்ல என்பதுதானே பொருள். அப்படியானால் இந்த ஊழல் எத்ரிப்பு சட்ட வரைவுநகல் உண்மையில் நல்ல படி வெளிவந்தாலும் அதனால் பயன் உண்டா?
உலகை இன்று ஆளும் கார்பரேட்கள் தனியார் லாப நோக்கம் கொண்ட நிறுவனங்களாக இருப்பதால், அவற்றின் நலன்களுக்காக எப்படியும் அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும், லஞ்சம் கொடுப்பார்கள். அதற்கு பெயர் வணிக தர்மம் என்று கூறுவார்கள். அதற்காக உலகம் முழுவதும் உள்ள கார்பரேட்கள் ஒரு தனி பிரிவை தன்கள் நிறுவனத்தில் ஒதுக்கி அதன்மூலம் கமிஷியன் கொடுப்பது என்ற பழக்கத்தை தொழில் வழக்கமாக வைத்துக்கொண்டுள்ளார்கள். இப்போது அல்லோலகல்லோல படும் ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிக்கிய நீரா ராடியா கூறுவதுபோல, தனது நிறுவன லாப ஊடாடல் உலகம் முழுவதும் பன்னாட்டு மூலதன நிறுவனகளால் செயல்படுத்தப்படும் பழக்கம்தான் என்று தெளிவாகிறது. அப்படியானால் இதை தடுக்கவே முடியாதா?
முடியும். இப்போதுள்ள உலங்கை பிடித்துள்ள உலகமயமாக்கல் கொள்கையால்தான் இந்த ஊழல் வழக்கமாகி உள்ளது. தனியார்துறை இருக்கும்வரையில் இப்படி ஊழல் இருக்கத்தானே செய்யும் என்று வாதம் செய்பவர்களும் உண்டு. தையர்துரையை சீனா உட்பட நாடுகள் இன்று பயன்படுத்தி வருகின்றன. உடனடியாக இத்தகைய ஊழல்களை தடுக்க என்ன வழி என்று நாம் சிந்திக்கலாம். இந்தியாவில் பொதுத்துறைக்கு அதிக முக்கியத்துவம் இருந்த நேரு காலத்தில், தனியாரதுரையை கட்டுக்குள் வைக்க ஒரு சட்டம் இருந்தது. அதற்கு " ஏகபோக தடுப்பு சட்டம்" என்று பெயர். அந்த சட்டத்தை 1991 ஆம் ஆண்டு நரசிம்மராவ் ஆட்சியில் டங்கள், காட் என்ற திட்டங்கள் மூலம் உள்ளே நுழைந்த அமெரிக்க் பொருளாதார கொள்கைகள், நாளடைவில் தாராளமயமாக்கல், என்று வளரும்போது, அந்த "ஏகபோக தடுப்பு சட்டத்தை" நீர்த்துபோக வைத்துவிட்டார்கள். அதனால் மட்டுமே " அந்நிய தனியார் மூலதனம்" கண்டபடி இந்த நாட்டிற்குள் நுழைய முடிந்தது.
அப்படி ஒரு சட்டத்தை , " கார்பரேட் தடுப்பு சட்டம்" என்று கொண்டுவந்து, அதனுடன் சேர்த்து இந்த" ஊழல் தடுப்பு சட்டம்" வருமானால் அது உறுப்படும் என்று புதிய மாற்று ஏற்பாட்டை நாம் முன்வைக்க வேண்டும். அப்படி வைக்கும்போது இப்போது கிளம்பியுள்ள மக்களது ஊழல் எத்ரிப்புக்கும் அர்த்தம் இருக்கும். மக்களுக்கும் விளங்கிக்கொள்ள முடியும்.. மாறாக இது நொள்ளை, அது சொள்ளை, என்று கூறினால், எந்த நல்லது வந்தாலும் இந்த ரிவுஜீவிகள் புறம் சொல்லத்தான் செய்வார்கள் என்ற பெயர் தான் வரும். தவிர இந்த சொல்லப்படும் அறிவுஜீவுகளுக்கு அப்படி ஒன்றும் பெரிய அக்கறை இந்த நாட்டில் புதிய வழிகளை அக்ண்டுபிடித்து ஊழலை ஒழிக்கவேண்டும் என்று அக்கறை இருப்பதாக தெரியவில்லை. தங்கள் பெயர் வித்தியாசமாக பேசினார், எழுதினர் என்று வரவேண்டும் எனத்தான் நினைக்கிறர்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
நல்ல பதிவு.
ஒரு சட்டம் கொண்டு வரக்கூடாது என்று நினைத்தால் அதில் எல்லா கட்சிகளும் ஒன்று சேர்ந்து விடுகிறார்கள். உதாரணத்திற்கு பெண்களுக்கு 33% ஒதுக்கீடு சட்டம்.
இந்த சட்டம் என்ன செய்கிறார்கள் என்று பார்க்கலாம்.
Post a Comment