அய்யா, கலைஞர் அவர்களே, உங்கள் பெயர் எல்லா இடத்திலும் கல்வெட்டுகளில் வரவேண்டும் என்பதற்காக, நீங்கள் ஆட்சியில் தொடர்ந்து இருக்கவேண்டும். அதற்காக மத்திய அரசை தாங்கள் தொங்கி பிழைக்கவேண்டும். இன்று காலை முதல்வர் கலைஞர் திறந்து வைத்ததாக எழுதப்பட்ட கல்வெட்டை, கடற்கரையில் கண்டேன். கண்டவுடன் எனக்கு இப்படி எழுத தோன்றியது. பல நாள் உங்கள் பெயர் கொண்ட கல்வெட்டுகளை , கடற்கரையிலும, வள்ளுவர் கோட்டத்திலும், கன்னிமரா நூல் நிலையத்திலும், அன்னா நூற்றாண்டு நூல் நிலையத்திலும், ஒவ்வொரு புதிய மேம்பாலங்களிலும், புதிதாக கட்டப்பட்டு இன்னமும் முடிக்கப்படாத [ அதற்குள் அவசரப்பட்டு தமிழ்மக்கள் ஆட்சி மாற்றத்தை கொண்டுவருகிறார்கள்] புதிய சட்ட பேரவை வளாகத்திலும் இன்னும் இன்னபிற இடங்களிலும், கண்டுகொண்டுதான் இருக்கிறோம்.
ஆனால் உங்கள் ஆசையான தாங்கள்தான் ராஜ ராஜ சோழனின் வாரிசு, என்பதும், கேரளாவின் மாவேலி அரசரின் வழி வந்தவர் என்பதாகவும் உள்ள கற்பனை வளத்தை செயல்படுத்த , மத்திய அரசு தமிழர் விரோத வேலைகளை எங்கு சென்றாலும் அதற்கு முழு மனதோடு ஆதரவு கொடுத்து வந்துள்ளீர்கள். அந்த செயல்பாடுகளில், ஈழத்தில் ஒரு லட்சம் தமிழர்களை இனப்படுகொலை செய்ததை ஆதரித்து, அங்கீகரித்த காரணத்தால் உங்கள் பெயரை கல்வெட்டுகளில் பதிக்க முடிந்தது. ஆனால் எங்கள் தமிழர்கள் அதற்காகவே கல்லறைகளில் பெயர் பதிக்கப்படும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளார்களே.
அதேபோல தமிழ்நாட்டு மீனவர்கள் தொடர்ந்து சிங்கள கடல் படையால் கொலை செய்யப்பட்டு, அவர்களது பெயர்கள் கல்லறைகளில் பதிக்கப்பட்டு வருவதற்கு காரணமே, கலைஞரே உங்கள் பெயர் கல்வெட்டுகளில் பதிக்கப்பட்டதனால்தானே
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment