Sunday, April 24, 2011

ஜெயலலிதா அறிக்கைக்கு ஈழத்தமிழர் பாராட்டு.

திடீரென அதிமுக தலைவி செல்வி ஜெயலலிதா அளித்த அறிக்கை, ஐ.நா. நிபுணர் குழுவிற்கு ஒரு கை கொடுத்தது. தமிழ்நாட்டில் அத்தகைய கைகொடுத்தால் தேவை என்று புலம் பெயர்ந்த தமிழர் சமூகம் எண்ணுகிறது. ஈழத்தமிழர் இனப்படுகொலைக்கு பங்களிப்பு செலுத்திய சோனியா அரசையும், அதற்கு ஆதரவு கொடுத்த கருணாநிதி அரசையும் உலக தமிழர்கள் மன்னிப்பதாக இல்லை. ஆனாலும் தனது சித்து விளையாட்டுக்களால், களிஞரும் அவரது தொண்டரடிப்பொடி அரசியல் அடியாட்களும், அவ்வப்போது தாங்கள் செய்ததை சொல்வதைவிட, ஜெயலலிதா எப்படியெல்லாம் ஈழத்தமிழருக்கு எதிரானவர் என்பதை பட்டியல் போட தயங்கவில்லை.

சென்ற நாடாளுமன்ற தேர்தலின் போது, ஈழத்தமிழர்களது படுகொலைகள பகிரங்கமாக நடந்து வந்த நேரம். அப்போது அந்த போரை எதிர்த்து உலகமே கொந்தளித்தபோது, தமிழகமும் தனது பங்கிற்கு கொந்தளிக்காமல் இல்லை. அந்த நேரம் நடந்த இரண்டு கூட்டணி அரசியலும் அழத்தமிழர்களை பற்றியும், அந்த போர் தவறு என்பதை பற்றியும், அந்த வன்னி போர் நிறுத்தப்படவேண்டும் என்பதை பற்றியும் நிறையவே பேசிவந்தனர். அதுநேரம் செல்வி.ஜெயலலிதாவும், தமிழீழம் ஒன்றே ஈழத்தமிழருக்கு தீர்வு என்று பேசிவந்தார். அந்த பெச்ச்சை திமுக கிண்டல் செய்தது. தேர்தல் நேர சித்து விளையாட்டு என்று குறை கூறியது. அதையும் பலர் நம்பினார்கள்.

குறைந்த பட்சம் ஜெயலலிதா பற்றி ஒரு குழப்பத்தை அன்று கருணாநிதியால் ஈழத்தமிழர் பிரச்சனையில் ஏற்படுத்தமுடிந்தது. ஆனால் இப்போது செல்வி.ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிககையை யார் குறை கூற முடியும்? ஆனாலும் கருணாநிதி குறை கூறுகிறார் என்பதும், அது எள்ளி நகையாடப்படுகிறது என்பதும் வேறு செய்தி. ஈழத்தமிழர்களில், முக்கிய அறிஞர்கள், போராளிகளுடன் இரண்டற கலந்து இணைத்து செயல்பட்டவர்கள் இந்த ஜெயலலிதா அறிக்கை பற்றி என்ன கூறுகிறார்கள் என்று வினவினோம்.

ஜெ.அறிக்கை மிக சிறப்பாக இருப்பதாக கூறினர்.அது மட்டுமின்றி, இந்த அறிக்கை தேர்தல் முடிந்த பிறகு வந்திருப்பதுதான் முக்கிய சிறப்பு என்று கூறினார். இது உணமையிலேயே ஜெ.க்கு கிடைத்த பாராட்டுதான்

No comments:

Post a Comment