தமிழன் எங்கிருந்தாலும், இந்தியா இலங்கையை உலக கோப்பை போட்டியில், மட்டைபந்து விளையாட்டில் வென்றதால், அடியும், உதையும், கைதும் வாங்கவேண்டும். மரணத்தை சந்திக்கவேண்டும். இது என்னடா கொடுமை? நம்மூர் இந்திய தமிழர்கள் மீனவனாக பிறந்ததால், மீன் பிடிக்க சென்ற போது, அவர்களை பிடிக்கும் சிங்கள கடல்படை. இந்தியா இலங்கையை இரண்டாம் நாள் வென்றால், இரவிலேயே அந்த தமிழக மீனவர்களை, நிராயுதபாணியானவர்களை, நகத்தால் கீரியும், வாளால் வெட்டியும், கட்டையால் அடித்தும், கையை வெட்டியும், கழுத்தை அறுத்து, தலையை வெட்டி, முண்டமாகியும் கொலை செய்வார்கள் சிங்கள படைகள்.
அதற்கு இந்திய அரசு எந்த கேள்வியும் கேட்காது. எந்த வழக்கும் தமிழக அரசு இலங்கை படை மீது போடாது. ஆனால் அதே மட்டைபந்து ஆட்டத்திற்கு ராஜபக்ஷேவை இந்திய அரசு கூப்பிட்டு கௌரவிக்கும். அந்த ஆட்டத்தில் ஆடிய வீரர்களுக்கு இந்திய அரசும், தமிழக அரசும் கோடி கணக்கில் நிதி கொடுக்கும். அந்த விளையாட்டினால் ஏற்பட்ட மரணத்தை தழுவிய தன் சொந்த நாட்டு குடிமக்களான தமிழக மீனவர்களுக்கு சில லட்சங்களை இரையாக போட்டு அவர்கள் உயிர்களை மீன் பிட்க்க அனுமதிக்கும். இத்தகைய இந்திய அரசையு, தமிழக அரசையும் தண்டிக்க எந்த சட்ட நிபுணர்களும் புறப்பட மாட்டார்கள்.
இங்கே உள்ள தமிழனுக்கு மட்டுமா என்று இன்றைய அங்கில ஏடான, "டெக்கான் குரோனிகல்" அம்பலப்படுத்தியுள்ளது. இந்தியா வெற்றி பெற்றதை ஈழத்தமிழர்கள் மகிழ்ச்சி போங்க வரவேற்று இருக்கிறார்கள். உடனே அங்கிருந்த சிங்கள ராணுவம் வடமராச்ச்சி பகுதியில் அவர்களை அடித்து நொறுக்கியுள்ளது. அதேபோல, வல்வெட்டித்துறை கிராமத்தில் [ அது தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரனது சொந்த ஊர் ] இந்திய வெற்றியை கொண்டாடிய தமிழர்கள் மீது சிங்கள ராணுவமும், காவல்துறையும் சேர்ந்து கைது நடவடிக்கையை எடுத்துள்ளது.
இந்தியாவே நீ வெற்றி பெற்றால் அதனால் அதாக்கப்படுவதும் தமிழர்கள்தான். அவர்கள் எந்த நாட்டு தமிழர்கள் என்பது அல்ல பிரச்சனை. இந்தியா வென்றால், மட்டைபந்து ஆட்டக்காரருக்கு கொடிகள் குவியும். எங்கள் தமிழர் இல்லங்களில் அழுகுரல் குவியும். இந்த உண்மையை யாராவது அந்த மட்டைபந்து ஆட்டக்காரர்களுக்கு தெரிவிப்பார்களா? அவர்களாவது கண்விழிப்பார்களா? மத்திய, மாநில அரசுகள் இந்தியாவில் தமிழர்களை கைவிட்டு விட்ட நிலையில் நாங்கள் மட்டைபந்து ஆட்டக்காரர்களை மட்டுமே இப்போது இதற்கு பதில் கேட்கும் நிலையில் இருக்கிறோம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment