Wednesday, September 5, 2012

பள்ளம் ராஜுவின் பொழிப்புரையை கருணாநிதி எழுதுகிறாரா?


      இந்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் இணை அமைச்சர் பள்ளம் ராசு. அவர் சிங்கள வீரர்களுக்கு  இந்தியாவில் பயிற்சி கொடுப்பது என்பது இரண்டு நாடுகளுக்கும் இடையே உள்ள நல்லுறவை வலுப்படுத்துவது என்று திருவாய் மலர்ந்தார். அதை கலைஞர் உட்பட அவரது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட அனைவருமே, மற்ற கட்சிகளுடன் சேர்ந்து எதிர்த்தார்கள். சிங்கள வீரர்களுக்கு பயிற்சியா? அதை நாமும் அனுமதிப்பதா? இந்தியாவில் எங்கும் அப்படிப்பட்ட பயிற்ச்சியை கொடுக்க கூடாது. இன்று மட்டுமல்ல, எதிர்காலத்திலும் அப்படி சிங்கள வீரர்களுக்கு பயிற்சி கொடுக்கக் கூடாது. இவ்வாறு பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணியை சந்தித்து திமுக எம்.பி.கள் கூறினர்.இது ஊடகங்களிலும் வெளிவந்தது. ஆனால் இன்று கலஞட் அவர்கள் வேறொரு அறிககையை கொடுத்துள்ளார்கள். அதில்  சிங்கள விளையாட்டு வீரர்களை எப்படி சென்னையிலிருந்து திருப்பி அனுப்பலாம் என்று வினவியுள்ளார். 

                          அதற்கு ஈன்று காலை அவரது முரசொலியில் கேள்வி பதிலில், இங்கிருந்து அங்கும், அங்கிருந்து இங்கும், குறிப்பாக கிரிக்கட்டு விளையாட வீரர்கள் சென்று வரத்தான் செய்வார்கள் என்றும் குறிப்பிட்டார். இப்போது, கால்பந்து விளையாட்டு வீரர்களை திருப்பி அனுப்பியது, இரு நாட்டு உறவுகளை கெடுக்கும்  என்று கூறியுள்ளார். ஈழத்தமிழர்களை ஒன்றரை லட்சம் பேரை கொன்று குவித்து, இந்திய தமிழர்கள் உட்பட உலக தமிழர்கள் மத்தியில் பெரும் துன்பத்தை ஏற்படுததியது இரு நாட்டு உறவுகளை கெடுக்கும் என்று கலைஞர் கூறியதில்லை. ஆனால் இன்று பள்ளம் ராஜுவின் கருத்தை வலியிறுத்துகிறார். ஏன்?

                      
                            விளையாட்டு வீரர்களை இலங்கைக்கு முதல்வர்  திருப்பி அனுப்பியது, மாதா கோவிலுக்கு வந்த பக்தர்களை மக்கள் திருப்பி அனுப்புவதை தூண்டி விட்டது என்பது கலைஞரின் வாதம். இதுவே சிங்கள மேட்டுக்குடிகளின் குரலாகும். அப்படி குரலை கலைஞர் ஏன் எதிரொலிக்கிறார்?  விளையாட்டு வீரர்களை சென்னை நேரு விளையாட்டு அரங்கில் கால்பந்து விளையாட தமிழக முதல்வர் அனுமதித்திருந்தால், அதுவே மக்கள் மத்தியில் ஒரு கலகத்தை உருவாக்கி, அதன்மூலம் தமிழ்நாட்டு மக்கள் வந்துள்ள சிங்கள விளையாட்டு வீரர்களை அடித்து விரட்டி, அந்த விளையாட்டு வீரர்களின் உயிருக்கு "ஆபத்து" ஏற்பட்டிருந்தால், கலைஞர் அப்போது என்ன சொல்வார்? தமிழக முதல்வர், எதற்காக அந்த விளையாட்டு வீரர்களை சென்னைக்குள் விளையாட அனுமதித்தார்? என்று கேட்க மாட்டாரா?.

                    தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய பொறுப்பில் உள்ள ஒரு முதல்வர், வந்திறங்கிய சிங்கள விளையாட்டு வீரர்களை எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாவண்ணம், பக்குவமாக திருப்பி அனுப்பி, சட்ட ஒழுங்கை பாதுகாத்துள்ளார் அது ஏன் நான்கு முறை முதல்வராக இருந்த கலைஞருக்கு புரியவில்லை? அதை ஏன் கலைஞர் எதிர்க்கிறார்? சட்ட ஒழுங்கு தமிழ்நாட்டில் கேட்டுப் போகட்டும் என்று கலைஞர் நினைக்கிறாரா? நினைப்பார். ஏன் என்றால் அத்தனைக்கு எதிரானவர்கள் ஆட்சியில் இருந்துவிட்டால், எப்போதுமே சட்ட ஒழுங்கு கெடட்டும் என்று கலைஞர் நினைப்பதில் ஒன்றும் ஆச்சர்யமில்லை. அதனால்தான் சிங்கள விளையாட்டு வீரர்களை, இலங்கைக்கு திருப்பி அனுப்பிய செயலை கலைஞர் ஒப்பவில்லை. . 
                    

                 இதேபோல ஆசிரியர் வீரமணியும் கோவிலுக்கு வரும் பக்தர்களை தாக்குதல் கூடாது என்று கூறியுள்ளார். இந்த "மாபெரும்" நடுநிலைவாதிகள், நீதிக்கும், அநீதிக்கும் மத்தியில் நடுநிலை எடுக்கிறார்கள். இவர்கள் உரிமை இழந்த தமிழினத்திற்கும், உரிமைகளை பறித்த சிங்களத்திற்கும் மத்தியில் நடுநிலை எடுக்கிறார்கள். இவர்கள் திடீரென "நடுநிலைவாதிகளாக" மாறி சிங்களத்தை  ஆதரிக்க காரணம் என்ன?  பவர்கள் ஆட்சியில் இருந்த பொது எப்படிப்பட்ட நடுநிலையை அமுல்படுத்தினார்கள் என்பதை நாம் திரும்பி [ஆர்த்தாலே நமக்கு புரிந்துவிடும்.

               
                      திமுக தலைவர் கலைஞர் ஆட்சியில் இருக்கும்போது, சென்னையில் அப்பாவித்தனமாக உலாவி வந்த "ஈழவேந்தனை" இலங்கைக்கு வெளியேற்றினார். இலங்கை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த "சிவாஜிலிங்கத்தை" மருத்துவ சிகிச்சைகாக கூட தமிழ்நாட்டிற்குள் அனுமதிக்காமல், விமான நிலையத்திலேயே  இலங்கைக்கு திருப்பி அனுப்பினார். இந்திய அரசின் "விசாவில்" சென்னை விமான நிலையம் வந்திறங்கிய புலிகள் தலைவர் பிரபாகரனின் தாயார் "பார்வதி அம்மாளை" விமான நிலையத்திற்கு வெளியே கூட வரவிடாமல், ஜாங்கிட் தலைமையில் ஆயுத காவலர்களை பெரும் அளவில் அனுப்பி, அங்கிருந்தே திருப்பி அனுப்ப ஏற்பாடு செய்தார். அதாவது தமிழர்களை இன்னமும் சொல்லப்போனால் ஈழத்தமிழர்களை, அதிலும் சிங்கள நாட்டில்  உயிருக்கு ஆபத்து என்று இங்கே வந்த ஈழத்தமிழர்களை அதே சிங்கள கொடியவன் கையில் சிக்குமாறு திருப்பி அனுப்பினார். ஆனால் சிங்கள விளையாட்டு வீரர்களுக்கு, கோபம் கொண்ட தமிழர்களால் எந்த ஆபத்தும் ஏற்படாமல் பாதுகாப்பாக திருப்பி அனுப்பிய ஜெயலலிதாவின்  செயலை சுட்டி காட்டி, அது இரு நாடுகளின் நட்புறவை கெடுத்துவிடும் என்று கூறுகிறார்.  

                 இதன்மூலம் இந்திய பாதுகாப்பு இணை அமைச்சர் பள்ளம் ராஜுவின் சொற்களுக்கு, கருணாநிதி பொழிப்புரை எழுதியுள்ளாரா? ஏன் அந்த விளையாட்டு வீரர்கள் மீது கலைஞருக்கும், டில்லி அரசுக்கும் அத்தனை அக்கறை? அந்த கால்பந்தாட்ட விளையாட்டு வீரர்களான சிங்கள இளைஞர்கள்  கொழும்பில் உள்ள "ராயல் கல்லூரி" என்ற மேட்டு குடி கல்லூரின் மாணவர்கள். அந்த சிங்கள மேட்டுக்குடி கல்லூரிதான், அந்த நாட்டில் உள்ள சிங்கள தலைவர்கள் ஜெயவர்தனே உட்பட பலரும் படித்த "கவுரமான கல்லூரி" என்று சிங்கள கொடுமதி படைத்த, தமிழின விரோத மேட்டுக்குடிகாரர்களின் எண்ணம். அதனால் அவர்கள் கொந்தளிப்பாகி, தமிழக முதல்வருக்கு எதிராக குரலை எழுப்புகின்றனர். 

                இந்தியா எங்கும் ஏழு இடங்களில் சிங்களம் தனது "தூதரகங்களை" நிர்மாணிக்க திட்டமிட்டுள்ளது. அந்த தூதரகங்கள் மூலம் செல்வி.ஜெயலலிதாவிற்கு எதிராக ஒரு பெரும் பரப்புரையை கிளப்ப திட்டமிட்டுள்ளது. இந்தியா எங்கும் காங்கிரஸ்  மற்றும் பாஜக அல்லாத ஒரு ஆட்சி வருகிற நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று விடக் கூடாது என்று ராஜபக்சே தலைமையிலான சிங்கள அரசு திட்டமிட்டு அதற்காக வேலை செய்ய இந்த சிங்கள அரசின் தூதரகங்களை பயன்படுத்தப் போவதாக செய்திகள் வந்துள்ளன. அதற்கான முன்னோட்டமே கலைஞர் இந்த விளையாட்டு வீரர்களின் வெளியேற்றத்தை  பற்றி ஏறுக்கு மாறான கருத்துக்களை வெளியிடுகிறார். 

         அதேபோன்ற  கருத்தை இந்தியாவிற்க்கான இலங்கை துணை தூதர் வெளியிட்டிருக்கிறார். அவரும் இரு நாட்டு நல்லுறவு கெட்டுவிடும் என்று கூறியுள்ளார். அப்படியானால் தமிழர் விரோத கருத்துக்களை வெளியிட்ட பள்ளம் ராஜுவின் கருத்துகளுக்கு, பொழிப்புரை எழுதுவதில் இன்று கலைஞர் அந்த இலங்கை துணை தூதருடன் போற்றி போடுகிறார் என்றுதானே பொருள்?

                 இலங்கை தீவில் ஒன்றரை லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்ட போதும், இலங்கை கடற்படையால் இருபத்தேழு ஆண்டுகளில், ஐந்நூறுக்கு மேற்பட்ட தமிழக மீனவர்கள் கோளை செய்யப்ப்பட்ட போதும், கெட்டுப் போகாத இரு நாட்டு உறவுகள், சிங்கள விளையாட்டு வீரர்களை ஆபத்து வரும் சூழலில், பாதுகாப்பாக தமிழக முதல்வர் வெளியேற்றியதனால்,  "கெட்டுவிடும்" என்று கூறுவாரானால், கலைஞர் "எந்தப் பக்கம்" எனபதை உலகத் தமிழர்கள் மீண்டும் புரிந்து கொள்ள வேண்டும்.               

Monday, September 3, 2012

கலைஞர் கூற்றுப்படி நெடுமாறன்தான் ஈழப்போராளிகளின் சகோதர சண்டைக்கு காரணமா?


    இப்போது வன்னிப்போர் ஒரு தடங்களுடன் நின்றுள்ள நேரத்தில், தமிழீழ விடுதலைப் புலிகள் "துவக்குகளை மவுனித்து" ஆயுதப்போரட்டத்திர்க்கு ஒரு தற்காலிக இடைவெளி கிடைத்துள்ள காலத்தில், தமிழீழ விடுதலைக்கான போர் உலகம் முழுவதும் ஒரு "கருத்துப் போராக" நடைபெற்றுவரும் சூழலில், அரசியல் களம் என்ற ஒரு விரிவான களம் ஈழப்போராட்டத்திற்கு உலக அரங்கில் கிடைத்துள்ள ஒரு வாய்ப்பில், போர்க்கால நடவடிக்கைகளில் நடந்த பல நிகழ்வுகள் பற்றி, போராளிகள் மத்தியில் ஒரு பரிசீலனை நடைபெறும் என்பது உண்மைதான். திமுக தலைவர் கலைஞர் அவர்கள், இந்த நேரத்தில் அனைத்து "பின்னடைவுகளுக்கும்" காரணம் புலிகள் மைப்புதான் என்ற தனது வாதத்தை "தவறாமல்" தொடர்ந்து முன்வைத்து வருகிறார். அதில்தான் அவரது "நெடுமாறன் மீதான வசுவுகளும்" வ்ருகின்றன.

             கடந்த களத்தில் நடந்தவற்றை நெடுமாறன் தமிழ் மக்கள் மத்தியில் வைக்கும் "அக்கறையால்" பலசெய்திகளை கட்டுரைகளாக எழுதுகிறார். அதில் கலைஞர் வழமையாக முத்திரை குத்தும் "சகோதர சண்டையும்" ஒன்று. அந்த சகோதர சண்டை என்ற "சொள்ளை" பயன்படுத்தும் கலைஞர்தான் அதுபோன்ற போராளிகள் மத்தியிலான "பகைமையை" தூண்டி விடுவதில் முக்கிய பங்கை ஆற்றினார் என்ற நெடுமாறனின் குற்றச்சாட்டு கலைஞரால் பொறுத்துக் கொள்ள கூடியது அல்ல என்பது உணமைதான். அதற்காக அப்படிப்பட்ட சகோதர சண்டைகளை தூண்டிவிட்டது நெடுமாறன்தான் என்ற குற்றச் சாட்டை வைக்கும் கலைஞர் இன்று தனது முரசொலி யில், உடன்பிறப்புக்கான கடிதத்தில், 
 1985 ஆம் அண்டு நடந்த சிலநிகழ்வுகளை வழக்கம் போல சுட்டிக் காட்டுகிறார்.   இதன்பிறகும் நாம் நமக்கு தெரிந்த சிலவரலாற்று உண்மைகளை கூறாமலிருக்க முடியாது.


                 அதாவது கலிஞர்--நெடுமாறன்--எம்.ஜி.ஆர்ட்.ஆகியோர் இடையே அந்த நேரத்தில் நடந்த சில நிகழ்வுகளை நாமும் வெளியே கூற விரும்புகிறோம். அவர்களுக்குள் நடந்த மாறுபட்ட கருத்துக்கள், முதலில் "குட்டிமணி-ஜெகன் " சம்பந்தப்பட்டது. அதாவது குட்டிமணியும், ஜெகனும், தமிழ்நாட்டில் பிடிபடுகிறார்கள். அன்றைய முதல்வர் கலைஞர் அவர்கள், அவர்கள் இருவரையும் இலங்கை அரசின் கோரிக்கைப்படி, அந்த நாட்டிற்கு அனுப்பிவைக்கிறார். அந்த நேரத்திலும் இலங்கை-இந்திய அரசுகளுக்கு இடையே "கைதிகள் பரிமாடத்திர்க்கான" ஒப்பந்தம் எதுவுமே கையெழுத்து இடப்படவில்லை. அந்த நேரத்தில் இலங்கை அரசு கேட்டதற்காக அவர்களை அனுப்பி வைக்க வேண்டிய எந்த நிர்ப்பந்தமும் இல்லை. ஆனாலும் கலைஞர் தனது அதிகாரத்தில் அவ்ர்கள் இருவரையும் இலங்கைக்கு அனுப்பி வைக்கிறார். அவர்கள் இலங்கை சிறைக்குள் அடைக்கப்படுகிறார்கள்.1983 இல் இனக் கலவரம் வெடிக்கிறது. ஜூலை 23 ஆம் நாள் வெலிக்கடை சிறையில் அடைக்கப்ட்டிருந்த தமிழ் கைதிகளை சிங்கள காடையர்கள் சிங்கள ராணுவத்துடன் சேர்ந்து  சிறைக்குள்ளேயே அடித்து கோளை செய்கிறார்கள். குட்டிமணி, ஜெகன் இருவரும் கண்கள் பிடுங்கப்பட்டு "கொடூரமாக" ஓலை செய்யப்படுகிறார்கள். 

                        தமிழ்நாட்டில் பிடிபட்டவர்களை இலங்கைக்கு அனுப்பிய "துரோக செயலை" கலைஞர் செய்ததால்தானே, குட்டிமணியும்,ஜெகனும் கொடூரமாக கோளை செய்யப்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டு வருகிறது. தனது ஆட்சியில் தான் அவ்வாறு செய்ததை கலைஞர் மறுக்கிறார். நெடுமாறன் அந்த நேரத்தில் எம்.எல்.ஏ. வாக இருக்கிறார். சட்டமன்றத்தில் எழுப்பப்பட்ட அந்த கேள்விக்கு, கலைஞர் முன்னிலையிலேயே, முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். "கோப்புகளை " எடுத்து காட்டி குட்டிமணி, ஜெகனை" கலைஞர் ஆட்சிதான் இலங்கைக்கு அனுப்பி வைத்து என்று நிரூபிக்கிறார். சும்மா இருப்பார கலைஞர்? உடனடியாக் அன்றைய டெலோ இயக்க தலைவர்கா இருந்த ஸ்ரீ சபாரத்தனம் உதவியை நாடுகிறார். கலைஞர் இன்றுவரை மேற்கோள் காட்டும் "செல்வா மகன் சந்திரஹாசன்" அன்றே இந்திய வெளிவிவாகரதுறையின் உளவு துறையான "ரா" வுடன் நெருக்கத்தை கொண்டிருந்தவர். அவர் மூலம்தான் டெலோ மைப்பை உருவாக்க "ரா" அதிகாரிகள் முயற்சி எடுத்தனர். 

                 அதேசமயம் டெலோ தலிவராக இருந்த ஸ்ரீ சபாரத்தினம், குட்டிமணி ஜெகன், தங்கதுரை போலவே வல்வெட்டித்துறையை சேர்ந்தவர்தான். முதல் மூவரும் மீனவர் சமூக பின்னணி கொண்டவர்கள் என்றால், ஸ்ரீ சபா "வெள்ளாளர்" சமூக பின்னணி கொண்டவர். ஆனாலும், ஸ்ரீ அன்றைக்கு டால் ஸ்ரீ என்று அழைக்கப்பட்ட காலத்தில் அணித்து போராளி தலைவர்களுடனும் சேர்ந்து, ஈழ விடுதலைக்காக துணிந்து இஅர்ந்கியவர் என்பதை யாரும் மறக்கவில்லை. அனால் அந்த தலைவர்கள், இந்திய அரசியல் சூழ்ச்சிகளையும், தமிழக அரசியல்வாதிகளின் சூழ்ச்சிகளையும் அறிந்திருக்க வில்லை. அல்லது அவர்கள் தனகளத்து நலனிலிருந்து தொடங்கியே ஈழ விடுதலையைக் கூட நோக்குவார்கள் என்று அறிந்திருக்க வில்லை.  ரா மைப்பின் சூழ்ச்சிகளுக்கும், அரசியல்வாதிகளின் இந்திய சூழ்ச்சிகளுக்கும் விழுந்துவிடும் தன்மை அங்கே தெரிந்தது.

                  கலைஞரை எம்ஜிஆரின் அம்பலப்படுதலில் இருந்து காப்பாற்ற டெலோ தலைவர் ஸ்ரீ சபாரத்னமும், ராசுப்பிள்ளையும்  சேர்ந்து ஒரு அறிக்கை விடுகிறார்கள். அதில் குட்டிமணி, ஜெகன் தமிழ்நாட்டில் பிடிபடும்போது, அவர்களை "கடத்தல்காரர்கள்" என்றுதான் காவல்துறை கைது செய்கிறது. அவர்களும் தங்களை "விடுதலை போராளிகள்" என்று காட்டிக் கொள்ள வில்லை என்று அறிக்கை  விடுகிறர்கள். இது கலைஞர்  அவர்களால் ஏற்பாடு செய்து வெளியிடப்பட்டது என்பதை யாராவது மறுக்க முடியுமா? அதேபோல குட்டிமணி மனிவி  எழுதிய ஒரு கடிதமும் இதே போல க்ருத்துடன், "தேவி' வார இதழில் வெளியிடப்படுகிறது. இதுவும் கலைஞர்  ஏற்பாட்டின்  பேரில் எம்.ஜி.ஆர். தொடுக்கும்  அம்புகளை எதிர்கொள்ள எடுத்த  கேடயம் என்பதை யார் மறுக்க முடியும்?  1970 ஆம் ஆண்டிலேயே அண்ணாமலை பல்கலைக்கழக பட்டமளிப்பு  விழாவில், தன்னை எதிர்த்த "உதயகுமார்"என்ற மாணவனை காவல்துறையினர் அடித்து குளத்தில் போட்ட போது, உதயகுமாரின் தந்தையை வைத்தே தனது மகன் உடல் அல்ல என்று  கூற வைத்த "சித்தர்" அல்லவா கலைஞர் என்பதை அறிந்தவர்களுக்கு இந்த நிகழ்வும் புரியப்பட முடியும்.

            இத்தகைய சித்து விளையாட்டுகளால், தமிழக அரசியல்வாதி தன் "தோலை" காப்பாற்றிக் கொள்ள முயலலாம். ஆனால் இதுதானே போராளி இயக்கங்களைக் கொண்டே போராளி இயக்க தலைவர்களை  காட்டி கொடுத்ததை "நியாயப்படுத்தல்"செய்திருக்கிறார் என்பதை நாம் இன்றாவது புரிந்து கொள்ள மாட்டோமா? இப்படித்தானே சகோதர யுத்தத்தை அவரால் தூண்டி விட முடிந்தது? அதுமட்டுமல்ல கலைஞரே ஈழப்போராளிகளுக்குள்  சகோதர யுத்தத்ய்ஹ்தை தூண்டி விட்டது மத்திய ரசின் உளவு துறையான "ரா" தான் என்று கூறியிருப்பதை அவரே இப்போது ஏன் மறந்து விட்டார்? இப்படி பல விவகாரங்களையும் நாம் வரலாற்றில் லாசா வேண்டி வருமல்லவா?

Friday, August 24, 2012

செந்தூரனின் அத்தை சாவுக்கு கியூ பிரிவு பொறுப்பேற்குமா?


     செந்தூரன் என்ற இளைஞர் பூந்தமல்லி சிறப்பு அகதிகள் முகாமில், அகஸ்ட் 6 ஆம் நாள் தொடங்கி, "சாகும்வரை பட்டினி போரை" நடத்தி, அனைத்து ஈழத்தமிழர்களையும், செங்கல்பட்டு, பூந்தமல்லி முகாம்களில் இருந்து விடுதலை செய்து, பொதுவான அகதிகள் முகாமில் கொண்டு விட வேண்டும் என்று கோரிக்கையை வைத்துள்ளார். அந்த கோரிக்கையை ஆதரித்து பூந்தமல்லிமுகாமில் உள்ள மீதம் ஏழு ஈழத்தமிழர்களும், கடந்த ஐந்து நாட்களாக  அவருடன் பட்டினி போர் நடத்தி வருகிறார்கள். கடந்த சில நாட்களாக "தண்ணீர்" குடிப்பதைக் கூட செந்தூரன் நிறுத்தி  விட்டார். செங்கல்பட்டு முகாமில் 38  ஈழத்தமிழர்களும்,  பூந்தமல்லி முகாமில் 8 ஈழத்தமிழர்களும் இதுபோல அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலருக்கு சிறிய வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஆனால் அனைத்து வழக்குகளிலும் அவர்கள் அனைவருமே நீதிமன்ற "பிணை" வாங்கி உள்ளனர். இத்தகைய சூழலில், வைகோ அவர்களுக்காக போராடி சிறை சென்றார். சீமான் போராட்டம் அறிவித்துள்ளார். கலைஞர் செந்தூரனை பட்டினி போரை நிறுத்துமாறு அறைகூவல் விடுத்துள்ளார். அந்த ஈழத்தமிழர்களை விடுதலை செய்யுங்கள் என்று அவர் கூறவில்லையே? என்பதே அவர்களுக்கு வருத்தம். 


           இப்படி தொடர் போராட்டத்தை தனக்காக மட்டும் இன்றி அனைவருக்குமாக நடத்தி வரும் சென்தொஓனை காண கொழும்பிலிருந்து, அவரது சித்தப்பா அருள்ராஜ், மற்றும் அத்தை கமலாதேவி ஆகியோர் சென்னை வந்தனர். அவர்கள் செந்தூரனை காண பூந்தமல்லி சிறப்பு அகதிகள் முகாமிற்கு சென்றனர். சித்தப்ப்பாவை ஆதாவது அருள்ராஜை நமது கியூ பிரிவினர் மறைமுக மிரட்டலின் மூலம் அச்சுறுத்தி உள்ளனர். அத்தை கமலாதேவி, செந்தூரன் பற்றி பூந்தமல்லி முகாம் வாசல் சென்று விசாரித்திருக்கிறார். பட்டினி போரில் இருப்பதால் அவரைக் காண முடியாது என தெரிவித்துள்ளனர். தண்ணீர் கூட குடிக்காமல் செந்தூரன் இருக்கிறான் என்று கேள்விப் பட்டதும் அந்த 60 வயது அத்தை கமலாதேவி அதிர்ச்சி ஆகிவிட்டார். அதுவே அவருக்கு நெஞ்சுவலியை கொடுத்து விட்டது. அப்படியே அவர் மரணமடைந்து விட்டார். ராமச்சந்திரா மருத்துவமனைக்கு எடுத்து சென்று மானத்தை மடர்வர்கள் உறுதி செய்து உடலை பெற்று கொண்டனர். மீண்டும் அவரது உடலை கொழும்பிற்கு கொண்டு செல்லல காவல்துறை அனுமதி பெற வேண்டும் என்று கூறி, மாநகர காவல்துறை அனையர் அலுவலகத்திற்கு கமலாதேவியின் உடலை கொண்டுவந்து அனுமதி பெற்றுள்ளனர். 

          மல்லை சத்தியா உடன் இருந்து உதவிகள் செய்துள்ளார். அதற்கு உதவிய ஒரு ஈழத்தமிழரான யோகா மாஸ்டரை கியூ பிரிவினர் மிரட்டி, அவரது பாஸ்போர்ட்டை பிடிங்கி வைத்துள்ளனர். இத்தகைய கொடுமைகள் செய்யும் கியூ பிரிவினர் நேரடியாக மத்திய அரசின்  வெளிவிவகார துறையின் உளவு துறையான "ரா" அதிகாரிகளின் உத்தரவுப்படியே நடக்கின்றனர் என்பது நமக்கு தெரிந்த செய்தியே. சென்ற திமுக ஆட்சியின் போது, உளவு துறை தலைமை அதிகாரி  ஜாபர்சேட்  மூலம், கியூ பிரிவினர் மத்திய அரசின் "ரா" கட்டளைகளை  ஏற்று, இந்த ஈழத்தமிழர்களை சிறப்பு அகதிகள் முகாம்களில் அடைத்தனர் என்பது இன்னமும் தொடர்கிறது. தமிழக அரசிற்கு கட்டுப்படாமல் இந்த கியூ பிரிவினர் தன்னிச்சையாக மத்திய அரசின் "ரா" அதிகாரிகளுக்கு அடிபநிவதால் ஏற்படும் "விபரீதத்தை" தமிழக மக்கள் தாங்க மாட்டார்கள். அதன்மூலம் வரும் சட்ட ஒழுங்கு கெடுதலையும், பதட்டத்தையும் தமிழக அரசின் மீது, "பழி" போட திமுக வும், காங்கிரசும் தயாராகி வருகின்றன. கியூ பிரிவு அதிகாரிகள் கமலாதேவியின் சாவுக்கு பொறுப்பேற்பார்களா ? 

                செந்தூரன் சென்ற மாதம் செங்கல்பட்டு முகாமில் "இருப்பத்தொரு" நாட்கள் பட்டினி போரை நடத்தியதால், இப்போது உடல் மியாவும் தளர்ந்து உள்ளார். அவரது உஅடளுக்கு வரும் அனைத்து தீங்கும் த்ஜமிழ்நாட்டு அரசியலில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தப்போகிறது. அதற்கும் கியூ பிரிவு பொறுப்பேற்க வேண்டும்.

புத்தர் எலும்பை காட்டினாரா? மகிந்தா எலும்பை காப்பாற்றினாரா?


     கவுதம புத்தரின் எலும்பை டில்லியில் உள்ள "தேசிய அருங்காட்சியகத்தில்" வைத்திருந்ததை, பவுத்த மத நம்பிக்கை உள்ள நாட்டு மக்களுக்கு உலகம் முழுவதும் கொண்டுபோய் "காட்டுவது" என்று ஒரு பழக்கம் வைத்திருக்கிறார்கள். அதுபோல இலங்கையில் உள்ள பவுத்த மத நம்பிக்கை உள்ளவர்கள் மகிழவும், "முப்பது" ஆண்டுகளுக்கு முன்பு காட்டினார்களாம். அந்த பழக்கம் தொடரலாம். வழிபாட்டு நம்பிக்கைகளில் அப்படி ஒரு பழக்கம் இருக்குமாயின் அதை யாரும்புரிந்து கொண்டாக வேண்டும்.அதேமுறையில் மன்மோகன்சிங் என்ற ஒரு இந்திய தலைமை அமைச்சர் கூறினார் என்றவுடன், இந்திய அரசின் மத்திய பண்பாட்டுத்துறை அமைச்சர் குமாரி செல்ஜா, அந்த எலும்புகளை கொழும்பு கொண்டு செல்வதும், அதை  இலங்கை அரசத் தலைவர் மகிந்தா வரவேற்பதும், இரு அரசுகளுக்கும் இடையிலான் அவர்கள் கூறும் தூதரக நல்லுறவின் வெளிப்பாடாக, நடக்கும் என்பது நமக்கும் புரிகிறது. பிறகு ஏன் அதை நாம் இப்போது எதிர்க்க வேண்டும்?

                       இது சாதரான விஷயம் அல்ல. புத்த பெருமானின் மீது நம்பிக்கை வைத்துள்ள மக்களின் உணர்வுகளை அங்கீகரித்து , புத்தரின் எலும்புகள் என்று இந்தியாவில் காக்கப்படும் எலும்புகளை அருங்காட்சி அகத்திலிருந்து, எடுத்து ஒரு முக்கிய அமைச்சர் மூலமாக அதை இலங்கைக்கு எடுத்து செல்வதும் அங்கேயுள்ள அர்சத்ததலைவர் அதை வரவேற்று உபசரிப்பதும், இந்த நேரத்தில் சாதாரண நிகழ்வு அல்ல. அங்கே அந்த விழாவிற்கு திரண்டிருந்த சிங்கள பவுத்த நம்பிக்கை உள்ள பெரும் அளவிலான மக்கள் கூட்டமே அது சாதாரண நிகழ்வு அல்ல என்பதை கட்டியம் கூறும். அதாவது ஆள்வோர்மீது  மக்கள் நம்பிக்கை இழந்து வரும் காலங்களில் எல்லாம், ஏதோ ஒரு "மக்களது நம்பிக்கையை" அடிப்படையாக கொண்டு தங்களை அந்த மக்கள் மீது அதாவது தன் மீது நம்பிக்கை இழந்த மக்கள் மீது, மீண்டும்  நிறுவிக்கொள்வது என்பது உலக வரலாற்றில் முதன்முறையாக நடக்கும் செயல் அல்ல.   மக்களது இன, மொழி, கடவுள் மத நம்பிக்களைகளை "ஆள்வோர்" எப்போதுமே தங்களுக்கு சாதகமாக திருப்ப முயற்சி மேற்கொள்வார்கள். அதுதான் இலங்கையிலும் நடந்துள்ளதா?

                           இலங்கை தீவில் மகிந்தாவின் ஆட்சி தமிழின அழிப்பு போரை  வெற்றிகரமாக நடத்தி முடித்ததாக காட்டி, பெரும்பான்மை சிங்கள மக்களிடம் முதலில் நற்பெயர் வாங்கியது. அப்போதும் "பயங்கரவாதத்திற்கு எதிரான் போர்" என்பதாகத்தான் அதை பறை சாற்றி நற்பெயர் பெற்றது. போரை நடத்தியது  யார் என்ற கேள்விக்கு, மகிந்தாவின் குடும்பமா? அல்லது சரத் பொன்சேகா வகையறாவா ? என்ற கேள்வியும் சிங்கள மக்கள் மத்தியில் இருந்தது. அதுவே அரசத் தலைவருக்கான  தேர்தலில், மகிந்தாவா? அல்லது பொன்சேகாவா? என்று சர்ச்சையானது. அதில் மகிந்தா வென்ற பின், பொன்சேகாவிற்கு வளர்ந்துவரும் செல்வாக்கை கண்டு பயந்துபோன ராஜபக்சே குடும்பம் பொன்சேகாவை சிறையில் தள்ளியது. இன்று அமெரிக்கா தலையிட்டு பொன்சேகாவை விடுதலை செய்ய சொன்னபிறகே, மகிந்தா அவரை விடுதலை செய்துள்ளார். இந்த நேரத்தில், அமெரிக்கா பொன்சேகாவை ஆதரிக்க முயல்வதால், அதுவும் இந்திய அரசை கலந்துகொள்ளாமல் செய்வதால், டில்லி தனது பங்கிற்கு மகிந்தாவை தூக்கி பிடித்து சில வேலைகளை செய்துவருகிறது. 

                         அத்தகைய டில்லியின் "காய் நகர்த்தல்களில்" முதலில் "டெசோ மாநாடு" வரும் என்றால், அடுத்து வருவதுதான் "புத்தரின் எலும்புகளை" கொழும்பு கொண்டுபோய் சிங்கள பவுத்த மக்களிடம் காட்டுவது. இது சிங்கள பவுத்த மக்களிடம் "செல்வாக்கு இழந்துவரும்"மகிந்தாவிற்கு மீண்டும் மறுவாழ்வு கொடுக்க, சிங்கள பவுத்த அப்பாவி மக்களை மகிந்தா பக்கம் திருப்ப, இந்திய அரசின் தலைமை அமைச்சர் மன்மோகன்சிங் எடுக்கும் ஒரு முயற்சி. ஏற்கனவே மகிந்தா தனக்கு எதிர்ப்பு இருப்பதை அறிந்தே வேண்டுமென்றே, தனது  கடைசி லண்டன் பயணத்தை மேற்கொண்டு, அதில் தமிழர்களின் கடும் எதிர்ப்பை உலகறியச் செய்து, அதை "விடுதலைப்புலிகள் மீண்டும் உருவாகிறார்கள்" என்று கூறி சிங்கள அப்பாவி மக்களை ஏமாற்றி, அவர்கள் மத்தியில் ஒரு பயத்தை தோற்றுவித்து, அதன்மூலம், இழந்துபோன தனது செல்வாக்கை மீண்டும்  தக்க வைத்துக் கொள்ள முயன்றான் என்பது சமீபத்திய கதை. அதையே மீண்டும் இந்திய அரசின் நலன்களுக்காக மகிந்தவை " ஸ்டிக் அண்ட் கேரட் " என்ற குச்சியும், கேரட்டும் எனும் தத்துவத்தை பயன்படுத்த இந்திய அரசு ஒருபுறம் டெசோ மாநாடு, இன்னொரு புறம் புத்தர் எலும்புகளை காட்டுதல் என்று நடவடிக்கை எடுக்கிறது.
    
     ஸ்டிக் அண்ட் கேரட் என்றால், அதாவது குச்சியும், கேரட்டும் என்றால் என்ன? குதிரை வண்டிக்காரர் தான் புதியதாக வாங்கிய குதிரையை "வண்டியில் பூட்டி பழக்க" ஒரு தந்திரம் செய்வார். அதாவது குதிரையை பூட்டும்போது, அதற்கு முன்பு "தொங்கும் நிலையில்" ஒரு கேரட்டை கட்டிவிடுவார். அந்த கேரட்டை "கவ்வும்" நோக்கத்தில், குதிரை வண்டியை இழுத்துக் கொண்டு முன் செல்லும். அதை "துரிதப் படுத்த" ஒரு குச்சியை கையில் வைத்ஹ்டுக் கொண்டு, குதிரையை அடிப்பார். குதிரை வண்டியை இழுத்துக் கொண்டு வேகமாக ஓடும். இதைத்தான் ஆங்கிலேயர்கள் "குச்சியும், கேரட்டும்" என்ற பொருளில், "ஸ்டிக் அண்ட் கேரட்" என்று கூறுவார்கள். அந்த தந்திரத்தை இந்திய அரசு, இலங்கை அரசின் மீதும், பதிலுக்கு அதே ஆங்கிலேயர்களிடம் "பயின்ற" இலங்கை அரசு இந்திய அரசிடமும் காட்டுகிறது என்பதுதான் இதில் அடங்கியிருக்கும் தத்துவம்.

                        அதாவது அய்.நா.சபையின் மனித உரிமை கவுன்சிலில் அக்டோபர் மாதம் இறுதியில், இலங்கை பற்றிய மனித உரிமை பட்டியல் விவாதிக்கப்படும்போது, மூன்றில் ஒரு அமைப்பாளராக இந்திய அரசு அமரப்போவதை பயன்படுத்தி, பேரம் பேசுவது எனபது டில்லியின் தந்திரம். அதேசமயம் "விட்டேனா பார்" என்று மகிந்தாவும், இந்திய அரசின் பண்பாட்டு துறைக்கு தருவதாக கூறிய நூறு கோடி பெறுமான இடத்தை, சீனாவின் விமான நிறுவனத்திற்கு கொடுத்து, இந்திய அரசுக்கு எதிராக ஒரு காய் நகர்த்தலில், "ஸ்டிக்" எடுத்தும், இந்திய வணிக அமைச்சர் ஆனந்த சர்மா சென்றபோது, நூற்றெட்டு இந்திய முதலாளிகளுக்கு சிவப்பு கம்பளம் விரித்து,தனது "கேரட்" கொள்கையையும் காட்டிவிட்டது. அதுபோல மகிந்தாவிற்கு எழுந்துள்ள சிங்கள மக்களின் எதிர்ப்பை, "டெசோ எதிர்ப்பு" என்பதன்மூலம் மகிந்தாவிற்கு  ஆதரவாக ஒருபுறம் திருப்புவதிலும் இரண்டு கும்பலும் வெற்றி பெற்றுள்ளன. இப்போது பகிரங்கமாகவே, புத்தரின் எலும்புகளை காட்டி சிங்கள பவுத்த  மக்களை ஏமாற்ற, மன்மோகன்-மகிந்தா தந்திரம் பயன்படுத்த ப்டுகிறது என்பதை நாம் எப்போது உணரப்போகிறோ

Saturday, August 18, 2012

புத்தரின் மீதமிருக்கும் எலும்புகளையும் ராஜபக்சேவிற்கு கொடுக்காதே.


      கவுதம புத்தர் இந்தியாவில் இன்றைய பீகார் மாநிலத்தில் உள்ள கயா பகுதியில் பிறந்தார். அவரது போதனைகள் அமைதியை, சமாதானத்தை, ஆசையை ஒழிப்பதை மனிதகுல முன்னேற்றத்தை வலியுறுத்தின.அவரது போதனைகள் சீன,ஜப்பான், இலங்கை என்று உலகெங்கும் பரவின. ஆனாலும் புத்தரது உடல் அடக்கம் செய்யப்ப்பட்ட இந்திய மண்ணில் அவரது மீதம் எலும்புகளில் சில இருக்கின்றன. அவற்றை இந்தியாவின் பாரம்பரிய,பண்பாட்டு அடையாளமாக காப்பாற்ற  வேண்டியது அரசின் கடமை. இன்று தமிழர்களை இன அழிப்பு செய்துவரும் இலங்கை அரசத்தலைவர் மஹிந்த ராஜபக்சே, புத்தரது பெயரை சொல்லி, படுகொலைகளை செய்கிறார்.ரத்தத்தில் கைகளை நனைக்கும் ராஜபக்சே கும்பலுக்கு, "புத்தரின்" பெயரைச் சொல்லவே உரிமை கிடையாது.

        அப்படிப்பட்ட கொலைகாரன் ராஜபக்சே, இந்தியாவை ஆளும் மன்மோகன்சிங் இடம் இந்தியாவில் இருக்கும் புத்தபெருமானின் உடல் எலும்புகளை தங்களுக்கு தரும்படி கேட்டானாம். ராஜபக்சேவுடன் நல்லுறவை வளர்த்துக் கொள்ள, மன்மோகன்சிங், அந்த எலும்புகளை இலங்கை அதிபருக்கு கொடுக்க சம்மதித்து விட்டாராம். அது நல்லெண்ணத்தின் அடிப்படையில் என்பது தலைமை அமைச்சகத்தின் விளக்கம். அந்த எலும்புகளை அமைச்சர் குமாரி செல்ஜா நேரடியாகவே இலங்கைக்கு எடுத்ஹ்டு சென்று ராஜபக்சே வசம் ஒப்படைக்க போகிறார்களாம். இந்த கொடுமையை, தஹ்டுக்க, எதிர்க்க, இந்த மண்ணில் யாருமே இல்லையா? புத்த மத்ததை நம்பி, இந்தியாவில் அமிதிகாகவும், சமாதானத்திற்க்காகவும், உழைக்கும் மக்கள் அனைவரும் இந்த கொடுங்கோலன் கைகளில்  புத்த பெருமானின் எலும்புகள் சென்று சேர்வதை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும். 

                 தமிழர்களின் "கச்ச தீவை" தாரை வார்த்த இந்திய அரசே, புத்த பெருமானின் எலும்புகளையும் அந்த தமிழர் இன அழிப்பு செய்யும் ராஜபக்சே வசம் ஒப்படைக்காதே, என்று குறள்களை எழுப்பி, அதை உடனடியாக நிறுத்த  வேண்டும்.. 

Friday, August 17, 2012

டெசோ வந்தவரை இழிவுபடுத்துகிறதா திமுக?


   இன்று குமுதம் ரிபோர்ட்டர் ஏட்டில் இலங்கையின் நவ சம சமாஜ கட்சி தலைவர் விக்ரமபாஹு கொடுத்த நேர்காணல் வந்துள்ளது. அதில் தெளிவாக தமிழினப் படுகொலைக்கு இந்திய அரசு முழுமையாக காரணம் என்றும், அமெரிக்கா-இந்திய ராணுவ தந்திரமும், இலங்கை -அமெரிக்கா ராணுவ ஒப்பந்தங்களும், சேர்ந்து இன்கை தீவை அட்டுப்படுத்ஹ்டுகின்றன என்றும் கூறியுள்ளார். அவரை இந்திய அரசை எத்ரிர்த்து பேசவிடாமல் டெசோ மாநாட்டில் தடுத்து விட்டார்கள் என்றும் எழுதியுள்ளார்கள். அப்போது திமுக பற்றி அந்த சிங்கள இடதுசாரி தலைவரிடம் கேட்டதற்கு, "திமுக ஒரு முதலாளித்துவ கட்சி" என்று கூறியதை "தலைப்பாக" போட்டிருந்தார்கள். அது அவரைப் போன்ற இடதுசாரி கட்சிகளின் வழமையான "உச்சரிப்பு". தொழிலாளர் வர்க்க கட்சிகளாக உலகில் பவனிவரும் அணித்து கட்சிகளுமே பிற கட்சிகளை முதலாளித்துவ கட்சிகள் என்றுதான் கூறுவார்கள். 

                       இத் அடிப்படைகூட தெரியாமல்,டெசோ உறுப்பினரும், முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக வின் பாரம்பரிய தலைவர்களில் ஒருவருமான சுப்புலச்சுமி ஜெகதீசன் ஒரு "மோசமான" குற்றச்சாட்டை அதே இதழில் கூறியுள்ளார். அதாவது திமுக வை முதலாலைத்துஅ கட்சி என்று கூறும் விக்ரமபாஹு உடலில் "சிங்கள ரத்தம்" ஓடுகிறது என்பதை காட்டிவிட்டார் என்பதே அந்த விமர்சனம். அப்படியானால் வன்னி போரில் ஒரு லட்சம் பேரை கோளை செய்யம்போது, அதற்கு அமைதியான் அங்கீகாரம் கொடுத்த கலைஞர் உடலில் என்ன ரத்தம் ஓடுகிறது என்று கேட்க மாட்டார்களா? டெசோ மாநாட்டிற்காக அகஸ்ட் ஒன்பதாம் நாள் "ஈழம்" என்ற பெயர் வரக்கூடாது என்ற வெளிவிவகாரத் துறையின் அமைச்சகம் உடலில் எந்த ரத்தம் ஓடுகிறது? அததகைய மத்திய அமைச்சகத்தில் அங்கம் வகிக்கும் திமுக கட்சியின் உடலில் என்ன ரத்தம் ஓடுகிறது?

                 தங்களது மாநாட்டிற்கு  ஒருவரை அழைதது வந்துவிட்டு, அவரது கருத்துக்களை சரியாக ஊட புரிந்து கொள்ள "அறிவு"இல்ல்லாமல் அவரை "தூற்றி" குறை கூறும் திமுக பிரமுகர் தனது கட்சியிடம் ஓடும் ரத்தத்தை முதலில் பரிசோதனை செய்ய வேண்டாமா? சுப்புலச்சுமியை திமுக கட்சி தலைமை எந்த அளவில்  மதிக்கிறது என்பதை நாடு அறியும். அப்படி இருக்கையில் "வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ" என்று விமர்சிக்கும் "துணிவு" எங்கிருந்து வந்தது. தங்கள் விருந்தினரையே இழிவாக பேசும் "ப்பாடு" திமுக விற்கு மட்டும்தானே உள்ளது? அது நாகரீகமான அணுகுமுறையா?

Thursday, August 16, 2012

இரண்டு தமிழ் இளைஞர்களை கொன்ற சிறைச்சாலைகளை நெருப்பிடுவோம்.

இரண்டு தமிழ் இளைஞர்களை கொன்ற சிறைச்சாலைகளை நெருப்பிடுவோம்.
     இலங்கை தீவில் தமிழின அழிப்பை ஒரு இனவாத ப[ஓர் மூலம் பிராந்திய ஆதிக்கசக்திகளும், உலக ஆதிக்க சக்திகளும் கைகொடுக்க, சிங்கள பேரினவாத மகிந்தா கும்பல் பெரிய அளவில் செய்து முடித்தது.தமிழர் நிலங்களை சிங்களர் குடியமரவும், பன்னாட்டு மூலதனக் கம்பணிகள் ஆக்கிரமிக்கவும் சிங்கள-இந்திய-சீன ஆதிக்க சக்திகள் துணையோடு மகிந்தா அரசு செய்துவருகிறது.அதை மேற்பார்வை பார்க்க அமெரிக்கா சக்திகளுக்கு மஹிந்த ஆரசு இடம் தருகிறது. இத்தகைய நேரத்தில் சிறையில் வாடும் எமது இளம் உயிர்களை சிறைக்குள்ளே அவமதிக்கவும், அவமானப்படுத்தவும் செய்துவரும் சிங்கள காடையர் கூட்டத்தை "தட்டி" கேட்பவனே "மனமுள்ள" தமிழன் என அடையாளம் கண்ட சிங்கள சிறுநரிக் கூட்டம், சிறைக்குள்ளே அந்த இளைஞர்களை கொன்று குவிக்கிறது. இதுதான் இன்றைய உயர்ந்தபட்ச போர்குற்றம். 

                     இத்தகைய போர்க்குற்றத்தை தமிழ்நாட்டை விட, சரியாக உணர்ந்தவர்கள் ஈழத்தமிழர்களே என்பதை நிரூபிக்கும் வண்ணம் இப்போது, இதுவரை எழுந்து அரசியல் போப்ராட்டன்களை நடத்ஜ்த தயங்கிய தமிழினத்தை அந்த இறந்த இளைஞர்களின் உடல்கள் 'தட்டி" எழுப்பியுள்ளன. "டெல்டுக்சன்,நிமலரூபன்" இருவரது இறுதி பயணத்திலும் சரி, அதற்கு நியாயம் கேட்க "யாழ்ப்பாண" பேருந்து நிலையம் முன்னாள் ஆகஸ்டு 15 ஆம் நாள் நடைபெற்ற ஆர்ப்பட்டதிலும் சரி, மீண்டும் தமிழர்கள் யாழ்ப்பாணத்திலேயே அணிதிரள்கிறார்கள், அரசியல்ரீதியாக அணிசெர்கிரர்கள், ஆர்ப்பாட்டம் நடத்துகிறர்கள். இதுதான் "தமிழீழத்திற்க்கான" அரசியல் ஆர்ப்பாட்ட அணிதிரளல். ஆகவே அந்த இரண்டு தமிழ் இளைஞர்களின் "படுகொலைகளை" உலகறிய செய்ய உலகத் தமிழர்கள் "ஆண்க்கான்கே" அணிதிரளுங்கள். ஆர்ப்பரியுங்கள். சிறைக்குள்ளும் கொடுமையா? என கேள்வி எழுப்புங்கள். அது அய்.நா. மட்டுமின்றி, உயலகச் சமூகத்தின் "செவிப்பறைகளை" கிழிக்கட்டும். .  .