ராகுல் காந்தி கைதானார். பெரிய செய்தியாக முதல் பக்கத்தை நாடு பூரா நிறைத்தது. அதுதானே அவர் எதிர்பார்த்தது. உத்திரப் பிரதேசத்தில், விவசாயிகள் போராடுகிறார்கள். எதற்காக? அரசு நிலநகளை கையகப்படுத்தும்போது, சதுர அடிக்கு 800 ரூபாய் வரை, கொடுக்கவேண்டும் என்று போராடுகிறார்கள்.நொய்டா டில்லி அருகே யமுனை நதிக்கரையில் உள்ள உத்திரப பிரதேச மாநிலப் பகுதி. எப்போதுமே நொய்டாவில் நடக்கும்எல்லா பிரச்சனைகளும், டில்லியின் பாதிப்புகளால் உருவானாலும், அது உத்திரப் பிரதேச அரசைத்தான் பாதிக்கும். " சிறப்பு பொருளாதார மண்டலம்" நொய்டாவில் தொடங்கி, செயல்படுத்த டில்லியின் அரச குடும்பங்கள் அதாவது ஆட்சியாளர்கள் எப்போதுமே விரும்புவர். அந்த அளவுக்கு அதிகமான வாய்ப்பும், வசதியும் நிறைந்த பகுதி அது.
டில்லியின் அரசியல்வாதிகளுக்கு நினைத்தால் நொய்டாவில் நல்லதும் செய்யமுடியும், கேட்டதும் செய்யமுடியும்.dilliyin அதிகாரிகளுக்கு நொய்டா ஒரு சொர்க்க பூமி. அங்கேதான் குழந்தைகளை கொலைகள் செய்த கொடூரக் காட்சிகளும் அரங்கேறியது. அப்போதும் மாயாவதி அரசுதான் பழியை சுமந்தது. நொய்டா டில்லியின் நிழலில் எல்லாவடரியும் அனுபவித்துக்கொள்ளும்.ஆனால் சட்டஒழுங்கு பிரச்சனை வந்துவிட்டால், பதில் சொல்ல வேண்டியது, உத்திரப் பிரதேச அரசு என்று ஆகிவிடும் உத்திரப் பிரதேசத்தின் தலைநகரில் இருந்து நோய்டாவை கவனிப்பதை விட, டில்லியில் உள்ளோர் நன்றாக கவனிக்க முடியும். அதனால் டில்லி அரசியல்வாதிகள் நொய்டாவில் விளையாடும் விளையாட்டு, உத்திரப் பிரதேச அரசின் ஆள்வோரால் எப்போதுமே தாக்குப் பிடிப்பது கடினம். இப்போதும் அப்படித்தான் நடந்துள்ளது.
மாயாவதி ஆட்சி ஒருபுறம் முலாயம்சிங் கூட்டத்தால் எதிர்க்கப்படுகிறார். மறுபுறம் காங்கிரஸ் கட்சியால் எதிர்க்கப்படுகிறது. தலைகீழாக நின்று பார்த்தாலும், உத்திரப் பிரதேச அரசியலில் காங்கிரஸ் கட்சி எழ முடிய வில்லை.இளவரசர் ராகுலை எப்படியாவது உத்திரப் பிரதேச மக்களிடம் செல்வாக்கு பேரா வைத்துவிட வேண்டும் என்று காங்கிரஸ் தலை பிரும்ம பிரயத்தனம் எடுக்கிறது. அதன் முதல் நாடகம்தான், ராகுல் தலித் மக்களின் வீடுகளில் போய் தங்கினார்.ஊடகங்கள் அதை பெரிதாக பெரு புரட்சியே நாட்டில் நடந்ததுபோல வெளிப்படுத்தினார்கள். தலித் வீட்டில் இந்த இளவரசர் போய் தங்கிவிட்டால் போதுமா? அதன்மூலம்தான் தலித் மக்களது வாழ்கையை பற்றி தெரிந்துகொள்ள போகிறார் என்றால், அதாவது அவர் மூலம் ஆள்வோர் தலித் மக்களது வாழ்கை பற்றி தெரிந்துகொள்ள கொள்ள போகிறார்கள் என்றால் , இதுவரை தெரியவில்லையா?.
அறுபத்தி இரண்டு ஆண்டு காங்கிரஸ் கட்சி, நாட்டையே ஆண்டபிறகு, அத்தனை ஆண்டுகளாக உத்திரப் பிரதேசத்தையும் ஆண்ட பிறகுதானே தலித் மக்களது நிலைமை இப்படி மொடமாக இருக்கிறது என்று மக்களுக்கு தெரியாதா? அதை இந்த பட்டத்து இளவரசர் போய் தங்கி பார்த்த பிறகுதான் தெரியவர வேண்டுமா? அது மக்களுக்கு ஏற்கனவே தெரிந்ததுனாலேதானே அவர்கள் காங்கிரசை தோற்கடித்துவிட்டு, மாயாவதியை கொண்டு வந்திருக்கிறார்கள்? தலித் மக்களுக்கு இந்த இளவரசர் ஏதாவது புதிய திட்டங்களை கொண்டுவந்து, அவர்களது வாழ்க்கை செப்பனடைய அத்தகைய மத்திய திட்டங்கள் மூலம் அறிமுகமாகி இருந்தால் கவனிப்பார்கள். வெறும் " தங்கியிருக்கும்" நாடகம் அந்த மக்களை ஏமாற்ற போதுமானதா? அந்த இரண்டு ஆண்டு நாடகத்திற்கு பிறகு, இளவரசருக்கு வழிகாட்டிகளாக உள்ள, பன்னாட்டு மூலதன நிறுவனகள் வேறு மாதிரி புதிதாக சிந்திக்க தொடங்கி உள்ளனர்.
இப்போது உத்திரப் பிரதேச விவாசாயிகள் போராட்டத்தில் யாராவது, விவசாயிகளின் நிலங்களை கையகப்படுத்த கூடாது என்று குரல் கொடுக்கிறார்களா? பசுமை நிலங்களை எப்படி எடுக்கலாம் என்று தட்டி கேட்கிறார்களா? ராகுலும் அப்படிப்பட்ட கோரிக்கையை புதிதாக கிளப்ப தயாரா? சரி. அதுதான் இல்லை. நிலங்களை கையகப் படுத்தும் போது, கொடுக்க வேண்டிய நட்ட ஈட்டை, அதிகப்படுத்தி கொடுக்க மத்திய அரசு ஏதாவது சட்டத்தை கொண்டுவந்துள்ளதா? அப்படி உத்தேசமாவது இருக்கிறதா? இவையெல்லாம் இந்த அரச குடும்பம் ஆளும் மத்திய அரசு சம்பந்தப்பட்டவை ஆயிற்றே? அதை மக்களுக்கு தெரியவிடாமல் செய்வதில் இவர்களது கெட்டிக்காரத்தனம் இருக்கிறதா? அப்படியானால் ஆழமான கோரிக்கையை வைக்காத ராகுலின் கைது ஒரு நாடகம்தானே?
மாநில அரசு தனது வரையறைக்கு உட்பட்டு அதிக நட்ட ஏஅடு கொடுக்கும் சட்டம் ஒன்றை கொண்டுவர வேண்டும் என்று இவர்கள் கோரிக்கை வைத்தார்களா? ஆக்கபூர்வமான வழியில் விவசாயிகளுக்கு உதவ என்னினால்தானே இவர்கள் அப்படி செய்வார்கள்? விவசாயிகள் போராட்டம் காவல்துறையால் அடக்கப்பட்டபோது, மேலும் கொந்தளித்தது. அப்போது அஜித்சிங் வந்தார். அவர் காங்கிரஸ் ஆதரவுதான். விவசாயிகளின் போராட்டத்தை கலவரமாக ஆகியதற்கு பிரியங்காவின் கணவர் வதேராதான் கரணம் என்று ஊடகங்களில் செய்திவருகிறது. அதேபோல " ராகுல் ஏன் நொய்டா செல்லவில்லை என்று ஊடகங்களில் கேள்வி எழும்பியது. அஹையோட்டித்தான் அய்யா நேற்ற்யதிகாலை மோட்டார் சைக்கிளில் நொய்டா சென்றார். தர்ணா செய்தார். கைதானார். இந்த நாடகம் அவர்களுக்கு தேவைப்படுகிறது.
ஒரு அரசு தனக்கு அடுத்த தலைவர்களைவரை உருவாக்க என்னவெல்லாம் செய்யும் என்பதற்கு பல வரலாருகளிருக்கின்றன.ஒரு இளவரசரை உருவாக்க பல முயற்சிகள் செய்வார்கள். அவரது பெயரை மதிப்புள்ளவராக ஆக்குவதற்கும் பல முயற்சிகள செய்வார்கள். அதில் ஒன்றுதான் இந்த அதிகாளி மோட்டார் சைக்கிள் சவாரியும் கைதும். இதில் அவர்கள் சாதித்தது என்ன? ராகுலை ஒரு அக்கறையுள்ள, விவாசயிகள் மீது பற்றுள்ள அரசியல்வாதியாக காட்டி விட்டார்கள். அவரது இளமையை மோட்டார் சைக்கிள் மூலம் காட்டிவிட்டார்கள். அதற்காக ராகுல் ஏன் வரவில்லை என்று முந்திய நாளே ஊடகங்களில் கிளப்பி விவாதமாக்கி விட்டார்கள். இதன்மூலம் அவர் தலைமையிலான காங்கிரஸ் விவசாயிகளின் நண்பனாகி விடும் என்று நம்புகிறார்கள்.
இதற்காக் அவர்கள் சார்ந்திருப்பது, அனுபவம் உள்ள பன்னாட்டு நிறுவனகளின் ஆலோச்டனையை. விளம்பரம் செய்வதில் அரசியல்வாதிகளுக்கு எப்படி விளம்பரம் செயவது, அரசியல் பிரமுகர்களை எப்படி வளர்பப்து என்ற தேர்ச்சி உள்ள பன்னாட்டு விளம்பர் நிறுவனகளின் ஆலோசனைப்படி இந்த இளவரசர் உரூவாக்கப் படுகிறார். .
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment