Thursday, May 12, 2011

தோற்றுப்போனவரா உள்துறை அமைச்சர்?

இன்று அதிமுக போதுச்ச்யலாளர் செல்வி.ஜெ.ஜெயலலிதா கொட்த்துள்ள அறிக்கை ஒரு உண்மையை பட்டவர்த்தனமாக்கி உள்ளது. தேர்தல் ஆணையத்திற்கு அவர் வைத்துள்ள வேண்டுகோளில், இந்த முறை வாக்கு எண்ணிக்கை எண்ணப்படும்போது, சென்ற நாடாளுமன்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நடக்கும் போது விடப்பட்ட ஒரு பிழையை சரிசெய்யும்படி கேட்டுள்ளார். அது சிவகங்கை நாடாளுமன்றத்திற்கான வாக்கு எண்ணிக்கை நடக்கும்போது ஏற்பட்ட கோளாறு. அதாவது இந்தியாவையே இப்போது ஆள்வதாக படம் காட்டிக்கொண்டு இருக்கும் ப.சிதம்பரத்தின் தொகுதியின் வாக்கு எண்ணிக்கையில் ஏற்பட்ட கோளாறு.


ப/சிதம்பரத்தை எதிர்த்து அப்போது சிவகனகை நாடாளுமன்ற தேர்தலில் 2009 ஆம் ஆண்டு அதிமுக சார்பாக போட்டிபோட்டது ராஜா கண்ணப்பன். அப்போது வாக்கு எண்ணிக்கையில் வழக்கம் போல, என்னும்போதே ஒவ்வொரு பாகத்திலும் எண்ணி முடிந்தவுடன், இரண்டு அல்லது போட்டியிடும் வேட்பாளர்களின் ஏஜெண்டுகள் தனகுள்ளு வந்த வாகுகளை குறித்துக் கொண்டே அவ்ருவார்கள். கடைசியாக அனைத்து பாகங்களின் வாக்குகளையும் சேர்த்து தேர்தல் அதிகாரி அதாவது வாக்கு எண்ணிக்கை அதிகாரி, தொகுத்து மொத்தம் குறிப்பிட்ட வேட்பாளர் எத்தனை வாக்குகள் வாங்கினார் என்று சொல்வார். எல்லா வேட்பாளர்களின் ஏஜெண்டுகளும் தாங்கள் குறித்துவைத்த எண்ணிக்கையையும் கூட்டி, சரி பார்ப்பார்கள். இந்த இடத்தில் சிதம்பரம் பெற்ற வாக்குகளை, கண்ணப்பனுக்கும், கண்ணப்பன் பெற்ற வாக்குகளை சிதம்பரத்திற்கும் கூட்டி பாத்து, சிதம்பரம் வெற்றி என்று அறிவித்து விட்டார்கள் என்பதே அந்த அம்மையார் இப்போது கூறியிருக்கும் குற்றச்சாட்டு. அந்த வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது என்கிறார் ஜெயலலிதா.


அதேபோல இப்போதும் நடந்து விடக்கூடாது.என்பதுதான் அவரது கோரிக்கை. இதில் சிதம்பரம் எப்படி வென்றார் எனபது நாட்டுக்கு தெரிய வந்துள்ளது. நம் பங்குக்கு நாமும் ஒரு உண்மையை சொல்லிவைப்போம். விடுதலை சிறுத்தை கட்சியின் ஒர்வே சட்டப் பேரவை உறுப்பினராக கடைசி வரை இருப்பவர் எழுத்தாளர் ரவிக்குமார். இவர் முதல்வர் கருணாநிதியின் செல்லப் பிள்ளை என்று பெயர் பெற்றவர். இவர் ஒரு சமயம் முதல்வர் களிஞரிடம், " இந்த சிதம்பரத்தை, தொற்றுப்ப்னவரை நீங்கள்தான் வெற்றிபெற வைத்தீர்கள். அவர் நமக்கு இப்போது தொல்லை கொடுத்து வருகிறார்" என்று கூறியிருக்கிறார். அதற்கு கலிஞர்," நான் இல்லப்பா. அது ஏன் பையன் செய்தது" என்று கூறினாராம். மதுரை பையன் தொலைபேசியில் பேச, தேர்தல் அதிகாரியான மாவட்ட ஆட்சி தலைவர் எழுந்து நின்று போன் பேச, சரி அய்யா என்று கூறியவர், ஏற்காணவே தான் அறிவித்திருந்த கண்ணப்பன் வெற்றியை மாற்றிபோட்டு, சிதம்பரம் வெற்றி என்று கண்ணப்பனிடம் கூறிய கதையை ஊடகவியலாளர்கள் கூறுகிறார்கள்.

எப்படியோ, நாட்டுக்கு பின்புற கதவு வழியாக, மக்களை சந்தித்து வாக்குகள் வாங்காத ஒருவர் பிரதமராக இருக்க, தேர்தலில் தோற்றுப்போன ஒருவர் உள்துறை அமைச்சராக இருக்கிறார் என்பது, " நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு" நல்ல பெயரைக் கொடுக்குமல்லவா?

No comments:

Post a Comment