Thursday, May 12, 2011

புத்தாதேவ் ஏன் விரட்டப்படுகிறார்?

மேற்கு வங்கத்தில், இடது சரிகள் ஆட்சி என்ற பெயரில் நடந்துவரும் புத்தாதேவின் சிபிஎம் ஆட்சிக்கு மக்கள் வழியனுப்பு விழா நடத்த தயாராகி விட்டார்கள். எல்லா ஊடக கருத்து கணிப்புகளிலும், தேர்தலுக்கு பின் எடுத்த கணிப்புகளிலும் அதவே மிகுந்து நிற்கிறது. கடுமையாக பாதிக்கப்பட்டு, புத்தாதேவ் ஆட்சி விரட்டப்படப் போகிறது என்பது பச்சையாக் எல்லோருக்கும் தெரிந்து விட்டது. ஏன் இந்த மாற்றம்? மேற்கு வங்க மக்கள் இடதுசாரி சிந்தனைகளிலிருந்து விடுதலை பெற்று விட்டார்களா? மம்தாவிற்கு வாக்களிப்பது என்பது, காங்கிரசை ஏற்ற்க்கொண்டதாக் பொருளா? முதலாளிகளுக்கு சாதகமாக் மக்கள் மேற்கு வங்கத்தில் போய்விட்டார்கள் என்று இந்த வரப்போகும் தேர்தல் முடிவை சொல்லலாமா?

அய்யா. சொல்லமுடியாது. ஏன் என்றால் முதலாளிகளுக்கு சாதகமாகத்தான் புத்தாதேவ் ஆட்சி புரிந்து வ்ந்தார்.அவரை விரட்டுவது முதலாளிகளுக்கு சாதகமானது என்று கூறுவது தவறு. முதலில் மேற்கு வணக்கத்தில் ஜோதிபாசு நடத்திவந்த சிபிஎம் ஆட்சி, அம்ன்னிக்கவும் இடதுசாரிகள் கூட்டணி ஆட்சி எனபது, முதலாளிகளுக்கு சாதகமாக த்தான் செயல்பட்டது அதாவது இங்கிலாந்து அம்ற்றும், பிர்லாவிற்கு சாதகமாக செயல்பட்டது என்பது நக்சல்பாரிகளின் விமர்சனம். ஆகேவே இந்த நாடாளுமன்ற இடதுசாரிகளை நாம் முதலாளிகளுக்கு எதிர்ப்பு என்று சொன்னால் உண்மையாக இருக்காது. அடுத்தூ புத்தாதேவ் ஆட்சியில்தான்"சிங்கூரும், நந்திகிராமும் நடந்தன" அந்த ஊர்களில் பசுமை நிலங்களை, விவசாயிகளின் விலை நிலங்களை அவர்களிடம் கேட்காமல் பன்னாட்டு நிறுவனகளுக்கு தாரை வார்க்க எண்ணி புத்தாதேவ் செய்த ஒப்பந்தம்தான் பெரும் போராட்டமாக வெடித்தது.


ஆகவே மேற்கு வங்க அரசு மக்களுக்கு விரோதமாக செய்த அணித்து நடவடிக்கைகளும் இப்போது சேர்ந்து அடிக்கிறது. சிபிஎம் வழக்கமாக செய்யும் வன்முறையை திருணாமல் காங்கிரசிடமும் காட்டியபோது, அதற்கு பதிலடியை மாவோவாதிகள் கொடுத்தார்கள். திரினாமுல் காங்கிரசுக்கு வாக்களிக்கும் மக்கள் இடது சாரி எதிர்ப்பாளர்கள் என்றால் அவர்கள் ஏன் மாவோவாதிகளை ஆதரிப்பதாக சிபிஎம் புலம்பவேண்டும்? மாவோவாதிகள் திரினாமுல் காங்கிரசை ஆதரிக்கிறார்கள் என்று இடதுசாரிகள் ஏன் கலங்க வேண்டும்? ஆகவே இடது சாரி பேசிக்கொண்டு, முதலாளிகளுக்கு ஆதரவாக ஆட்சி நடத்தும் புத்தாதேவ் ஆட்சிக்கு எதிராக திரளும் வாக்குகள் நிச்சயமாக இடது சாரி கருத்துகளுக்கு எதிரான வாக்குகள் அல்ல.

மாவோவாதிகள் செல்வாக்கு உள்ள பகுதிகளில் எல்லாம் அதிகப்படியான வாக்குகுகள் பதிவாகி உள்ளன எண்பதை சில ஏடுகள், மக்கள் ஆயுதப் பாதை என்ற மாவோவாத பாதையிலிருந்து திரும்பி தேர்தல் ஜனநாயக பாடஹிக்கு வந்து விட்டார்கள் என்று எழுதுகிறார்கள். இது சிரிப்புக்கு உள்ளான ஒரு க்தை. மாவோவாதிகள் இந்த தேர்தலில், சிபிஎம் அம்ற்றும் நாடாளுமன்ற இடது சாரிகளை தோற்கடிக்க எவ்ண்டும் என்று முடிவு செய்திருந்தார்கள். அதற்காக இருக்கும் ஒரே மாற்றான திரினாமுல் காங்கிரசுக்கு தானே போடுவார்கள்? இந்த உணமியை கூட புரியாதவர்கள் ஊடகங்களில் எழுதுகிறார்கள். இதே செயல்தந்திரத்தை ஆந்திராவில், நக்சல்பாரிகள், தெலுங்கே தேசம் கட்சிக்கு எதிராக ககிரசுக்கு வாக்களித்து வெற்றிபெற வைத்ததும், அதில் கூட்டணியாக இருந்த டி.ஆர்.எஸ். என்ற அமைப்பை ஆதரித்தார்கள், அதனால் அவர்களது செயல்தந்திரப்படி இப்போது, மாவோவாதிகள் சிபிஎம் மிற்கு தேர்தல் அரசியலிலும் சிம்ம சொப்பனமாக விளங்குகிறார்கள்.

No comments:

Post a Comment