Tuesday, May 10, 2011

சிதம்பரம் செய்த தமிழர் விரோத துரோகம் அமபலமாகிறது.

வன்னி இறுதிக்கட்டப் போரின் போது தமிழீழ விடுதலைப்புலிகளை முற்றாக ஒழித்துக் கட்டுவதற்கு இந்திய அரசு சார்பாக செயற்பட்டவர்களுள் காங்கிரஸ் அமைச்சரான சிதம்பரத்திற்கு மஹிந்த ராஜபக்ஸ வழங்கிய கையூட்டு தொடர்பான தகவல்கள் கசிந்துள்ளன. தமிழர்களுக்கு சார்பாக செயற்பட்டு விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் தொடர்பில் தகவல்களைக் கறந்து சிங்கள அரசிற்கு வழங்கியதுடன் சர்வதேச மனிதாபிமான நடவடிக்கைகளையும் முடக்கவும் துணை போயிருந்தார். சிதம்பரம் பொறுபேற்றுள்ள "உள்துறை" அதை செய்ய அவருக்கு பெரிதும் உதவியுள்ளது.


இதற்காக மஹிந்த ராஜபக்ஸ அமைச்சர் சிதம்பரத்தின் மனைவி பெயரில் நளினி தொழில் நிலைக்கூட்டு நிறுவனத்திற்கு இலங்கையின் எரிபொருள் அகழ்ந்தெடுக்கும் உரிமையை வழங்கியுள்ளார். அந்த கூட்டு நிறுவனத்தை, சிதம்பரம் மனைவி நளினி, மலேசியா சென்று, அங்கே அந்த நிறுவத்தை தொடங்கி, அதன் மூலம் மகிந்தாவிடம் பேசி, அதற்கான ஒப்பந்தத்தை வாங்கி பிறகு அதையே சீனாவிற்கு விற்றிருக்கிறார. நளினி கூட்டு நிறுவனம் அதன் உரிமையை பல கோடி இலஞ்சம் பெற்றுக் கொண்டு ரஸ்யாவிற்கும் மலேசியா ஊடாக சீனாவிற்கும் விற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய அரசியல்வாதிகள் யாருமே சிங்கள அரசத்தலைவர் மகிந்தாவிற்கு, சும்மா உதவிடவில்லை. வேண்டிய அளவில் பணம் பெற்றுக் கொண்டு, வணிக ஒப்பந்தங்களை பெற்றுக் கொண்டுதான் அவர்கள் சிங்கள அரசின் தமிழின அழிப்பு போருக்கு உதவி செய்துள்ளனர்.


சிதம்பரமும், நளினியும் தமிழ்நாட்டை சேர்ந்த தமிழர்கள் என்பதால், நாம் இனி வட இந்தியர்களை குறை சொவதற்கு லாயக்கற்றவர்கள் ஆகிறோம். அதேபோல நம்முள் பலர், இந்தியாவிற்கு எதிராக சீனாவிற்கு, மகிந்தா பல ஒப்பந்தங்களை கொடுத்திருக்கிறார் என்று கோபமாக கூறுவதும் இந்த இடத்தில் அடிபட்டு போகிறது. நளினி சிதம்பரம் சிங்கள அரசிடம் பெற்ற ஒப்பந்தத்தை சீனாவிற்கு விற்றிருப்பது இப்போது அம்பலத்திற்கு வந்திருப்பதால், இதில் இந்திய அரசியல்வாதிகளுக்கும், சீன அரசிற்கும், வேறுப்பாடு இல்லாமல் வணிகம் செய்யும் மகிந்தா ராஜபக்சேவும், இந்த "சீன போட்டி" என்ற மோடி வேலையை காட்டி தமிழ் மக்களை ஏமாற்ற நினைக்கும், இந்திய அரசின் உளவுத்துறையும் இங்கே அமப்லமாகி உள்ளன.


இதைவிட மஹிந்த அரசாங்கம் காங்கிரஸ் அரசில் உள்ள பல இராஜதந்திரிகளுக்கு முதலீடுகளுக்கு இலங்கையில் நீண்டகால குத்தகைக்கு காணிகள் வழங்குதல், கறுப்புப் பணத்தை முதலீடாக மாற்றுதல், சீனா மற்றும் பல நாடுகளில் தொழில் ஒப்பந்தங்களைப் பெற்றுக் கொடுத்தல் ஆகிய உதவிகளை செய்து வருகின்றமை தெரியவந்துள்ளது.

No comments:

Post a Comment