Tuesday, May 10, 2011

தேர்தல் முடிவை முன்கூட்டி கணிப்பதில், ஊடகங்களின் போட்டியா? அரசியல்வாதிகளின் சதியா?

மே பத்தில் மேற்குவங்க தேர்தல் முடிவடைந்தது. அதனால் அதற்கு பிறகு உங்கள் ஊடகங்களின் கருத்து கணிப்புகளை வெளியிடலாம் என்றும், அதனால் எந்த பாதிப்பும் யார்க்கும் ஏற்பட்டுவிடாது என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதையே "சாக்காக" கொண்டு "ஹெட்லைன்ஸ் டுடே " சீ.என்.என்-ஐ.பி.என்., நியூஸ் எக்ஸ், சீ.வோட, என்று ஆளாளுக்கு ஆங்கில காட்சி ஊடகங்கள், தமிழ்நாடு மட்டுமின்றி, மேற்கு வங்கம், கேரளா, அஸ்ஸாம், என்று தேர்தல் முடிந்த இடங்களில் யாருக்கு வாக்களித்தார்கள் என்று ஒரு புள்ளிவிவரக் கணக்கை எடுத்துள்ளனர்.


இதில் தமிழ்நாட்டை பொறுத்தவரை, ஹெட்லைன்ஸ் டுடே தவிர யாருமே திமுக வெற்றிபெறும் என்று கூறவில்லை. சிஎன்என்- ஐபிஎன் நை பொறுத்தவரை, அதிமுக கூட்டணி மொத்தமே 132 இடங்களை பிடித்து ஆட்சியை அமைக்கும். ஆனால் நியூஸ் எக்ஸ், மற்றும் சீ வோட்டை பொறுத்தவரை, அதிமுக என்ற தனிக்கட்சி மட்டுமே 133 இடங்களை பிடிக்கும். அதிமுக கூட்டணி ஒட்டுமொத்தத்தில் 176 க்கு மேல் தொகுதிகளை பிடிக்கும். இவ்வாறு எங்கோ வடக்கே உள்ள அந்த இரண்டு நிறுவனங்களும் கணிக்க வேண்டிய அவசியம் என்ன? ஹெட்லைன்ஸ் டுடே யை பொறுத்தவரை, அவர்கள் நல்ல தொகைக்கு கலாநிதியை சார்ந்து வாழ் வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் என்பது புரிகிறது. அந்த கணிப்பை "கலைஞர் டி.வி. தனது கட்டாயத்தில் வெளியிட்டால், ஏன் அதையே "சன் டி.வி". வெளியிடவில்லை? அவர்களுக்கு இந்த தேர்தலை விட, தங்கள் வியாபாரம்தான் முக்கியம். தங்கள் வணிகத்தில் நேயர்கள் தொடர்ந்து ஆதரவு தரவேண்டியது அவர்களுக்கு கட்டாய தேவை. போய் செய்தியை தேர்தல் முடிவுகளில் வெளியிட்டு விட்டு, பிறகு எந்த முகத்தோடு நேயர்களிடம் செல்வது? என்பது அவர்களது கேள்வி.

மற்ற வட இந்திய ஊடகங்கள் சரியாகவே கணித்ததால், அதிமுக, மற்றும் அதன் கூட்டணியின் ஏகபெரும்பான்மை வெற்றி இங்கே அறுதியிடப்பட்டு விட்டது.அதேசமயம் தங்கள் ஆதரவு தமிழ் ஏடு மூலம் திமுகவும் தனது விருப்பங்களை வெளியிட்டு ஊரை ஏமாற்றுகிறது. தமிழ்நாடெங்கும் பெரும் அலை ஒன்று அதிமுகவிற்கு சாதகமாக அடித்துள்ளது என்பது மீண்டும் இங்கே உறுதியாகிறது.

2 comments:

tommoy said...

No No , you are totally wrong , the field is in favour of DMK

DMK+ will get more than 135 seats for sure

Anonymous said...

It is only a mirage

Post a Comment