Tuesday, May 10, 2011

காஸ்ட்ரோ 8 அடி பாய்ந்தால், கிலானி 16 அடி........,

அமெரிக்காவின் மாபெரும் சாதனை என்று பீற்றிக் கொள்ளும், அபோதாபாத்தில் ஒரு வீட்டில் இறங்கி சிலரை சுட்டுக் கொன்றது என்பது இருக்குமானால், அப்படி ஒரு ஐ.நா.வின் உறுப்பு நாடு ஒன்றில், இன்னொரு உறுப்பு நாடு இறங்கி திடீரென ஆய்தத் தாக்குதலை நடத்துவது, அமெரிகாவில்வர இருக்கும தேர்தலுக்கு வேண்டுமானால் வெற்றியாக இருக்கலாம். ஆனால் மானுடத்திற்கு, அது பின்பற்றிவரும் கொள்கைகளுக்கு, உலக நாடுகளின் இறையாண்மைக்கு, பிரிதொரு நாட்டிற்குள் தலையிடாமை என்ற கொள்கைக்கு, நிராயுதபாநியரை கொள்ளக் கூடாது என்ற அங்கீகரிக்கப்பட்ட விதிகளுக்கு, மனைவி,மக்கள்முன்பு ஒருவரை கொல்வது சரியா என்ற கேள்விக்கு, மாபெரும் தோல்வி என்றுதான் கொள்ளவேண்டும்.


காஸ்ட்ரோ எழுதியதில் இருந்த நியாயத்தை ஏற்கனவே பார்த்தோம். இப்போது கொலை நடந்து சில நாட்கள் கழித்து, பாகிஸ்தான் அதிபர் கிலானி, பேசுகிறார். அவர் உலக சமூகத்தை சிறிது பின்னால் சென்று பார்கச்சொல்கிறார். கடந்த 90 ஆம் ஆண்டுகளின் நிகழ்வுகளை நினைவுக்கு கொண்டுவருகிறார். சீ.என்.என். மூலம் ஆவணமாகி உள்ள அந்த செய்திகளை கவனத்திற்கு கொண்டு வருகிறார். ஆப்கானிஸ்தானில், அமெரிக்க உயர் அதிகாரிகள் நின்று கொண்டு, அவர்களே உதவி செய்து, இஸ்லாத்தின் பெயரிலும், நாட்டு பற்றின் பெயரிலும், "புனிதப் போர்" நடத்த வீடுகளுக்கும், மசூதிகளுக்கும் செல்லுங்கள் என்று அனுப்பப்பட்ட நிகழ்வுகளை கோடிட்டு காட்டுகிறார். அரேபியா தொண்டர்களை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பி "புனிதப் போரை" நடத்தவைத்ததை குறிப்பிடுகிறார்.அதன்மூலம் ஒசாமா பின்லாடேனையும், அல் கொய்தா இயக்கத்தையும் அமெரிக்கா தோற்றுவித்தது என்கிறார் கிலானி.


அடக்குமுறை, ஒடுக்குமுறை, ஆகியவற்றால் கோபமும், விரக்தியும் அடைந்துபோன மக்களை பயன்படுத்தி, எப்படி ஒசாமா பின்லேடன் உலக அரங்கில் "பயங்கரவாதத்தை" நிகழ்த்தினார் என்றும் கூறுகிறார். அந்த கோபமும், விரக்தியும் இன்னமும் பதில் சொல்லப்படாமலே இருந்தால், அதுவே இன்னொரு வடிவில் வெடிக்கும் என்கிறார். சீனாவிற்கு ஆறுதல் தந்ததற்கான நன்றியை சொல்கிறார். பாகிஸ்தான் ராணுவத்தையும், உளவுத்துறை ஐ.எஸ்.ஐ.யையும் மட்டுமே குறை கூறுவதை கேள்வி கேட்கிறார் கிலானி. உலக உளவுத்துறைகள் அனைத்துமே தோற்றுவிட்டன என்பதுதான், அபிதாபாத்தில் பின்லேடன் இருந்த செய்தி காட்டுகிறது என்கிறார். கிலானியின் இந்த பாய்ச்சல் அமெரிக்காவின் கொடு முகத்தை மப்லப்படுத்துவதாக அமைந்துள்ளது.

No comments:

Post a Comment