Tuesday, May 10, 2011

காஸ்ட்ரோவை, கிலானி தாண்டினால், இருவரையும் சாம்ஸ்கி தாண்டுகிறார்.

நோம் சாம்ஸ்கி ஒரு அமெரிக்க குடிமகன். ஆனால் உலகில் ஒவ்வொரு மூலையிலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட மாபெரும் மனித உரிமை ஆர்வலர். அவரது தொழிலில், "மொழியியலில் " உலகத்திற்கே மாபெரும் வழிகாட்டி. இந்த உலகில் எந்த நாட்டில் மொழியியல் வல்லுனர்கள் உருவானாலும், அவர்கள் நோம் சாம்ஸ்கியை அல்லது அவரது புத்தகங்களை குருவாக ஏற்றுக் கொண்டுதான் அந்த மொழியியல் பற்றி, அதன் கட்டமைப்பு பற்றி கற்றுக் கொள்ள முடியும். " மொழி" எப்படி ஒரு அடிப்படை கருவியாக ஒவ்வொரு தேசிய இனத்திற்கும் இருக்கிறதோ, அதேபோல உலகளாவிய மொமொழிகளின் அடிப்படை கட்டமைப்பு, வரலாற்று ரீதியான " மானுட வளர்ச்சியின்" அடிப்படை எண்பதை நோம் சாம்ஸ்கி விளக்கினால் கேள்விகேட்காமல் புரிந்து கொள்ளும் நிலையில் இந்த உலகம் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு மகத்தான மார்க்சிய அடிப்படை கொண்ட, மனித உரிமை ஆர்வலர் அவர்.


அந்த நோம் சாம்ஸ்கி, அமெரிக்காவால் பின் லேடன் கொலை செய்யப்பட்டது குறித்து தெரிவத்துள்ள கருத்துக்கள் சாட்டையால் அமெரிக்க் வல்லரசின் மனஹ்சாட்சியை அடித்தது போல தெரிகிறது. " ஆப்கானிஸ்தானை சேர்ந்த ஒரு அதிரடி படை, திடீரென அமெரிக்காவில் இருக்கும் ஜார்ஜ் புஷ் வீட்டிற்குள் புகுந்து, அவரை சுட்டுக் கொன்று, அவரது உடலை அட்லாண்டிக் கடலில் வீசி எறிந்தால், அமெரிகராகிய நாம் தாங்கி கொள்வோமா?" என்று அந்த நோம் சாம்ஸ்கி வினவுகிறார். இவரது கேள்விகள் வெள்ளை மாளிகையின் பளிங்குகளில் படிந்த்ள்ள கரைகளையும், காயங்களையும், இரத்தங்களையும் காட்டுவதாக உள்ளது. அதனால்தான் காஸ்ட்ரோ கூற்றை, கிலானி மிஞ்சி விட்டாரே என்று நாம் நினைத்தால், அதையும்கூட நோம் சாம்ஸ்கி தாண்டி விட்டார்.

No comments:

Post a Comment