நமது நாட்டை உலுக்கி வரும் ஊழல்களை பட்டியலிடுங்கள் என்று குழந்தைகளிடம் கூறினால், அவர்கள் காட்சி ஊடகங்களில் தொடர்ந்து அம்பலப்படுத்தப்படும் ஸ்பெக்ட்ரம் ஊழலையும், ஆங்கில ஊடகங்களில் தொடர்ந்து சொல்லப்படும் காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஊழலையும், எல்லோரும் மறந்துவிட்ட அதன்மூலம் மறைத்துவிட்ட ஐ.எஸ்.ஆர்.ஒ. ஏற்படுத்திய இரண்டு லட்சம் கோடி நட்ட ஊழலையும் சொல்வார்கள். அவர்களுக்கு நன்றாக டேஹ்ரிந்த ஐ.பி.எல். ஊழலை மறந்துவிடுவார்கள். ஏன் என்றால் அது அவர்களுக்கு பிடித்தமான விளையாட்டு. ஆசையாக மட்டை பந்து விளையாட்டை ரசிக்கமுடியாமல் போய்விடுமோ என்று அந்த மேட்ச் பிக்சிங் ஊழலை மட்டும் மறந்துவிடுவார்கள்.
அத்தகைய ஐ.பி.எல் மட்டைபந்து ஆட்ட விளையாட்டை பிரபலப்ப் படுத்த ஒவ்வொரு ஆட்டத்திற்கும் ஒரு தூதுவரை அதாவது அம்பாசடரை அந்த ஆட்டத்தை ஏலம் எடுத்த நிறுவனம் முதலில் பிக்ஸ் செய்கிறது. பிறகுதான் அவர்கள் ஆட்ட விளையாட்டு வீரர்களின் பெயர்களை வெளியே அறிவித்து, அதன்மூலம் கொடிகளை களவாட, மேட்ச் பிக்ஸ் செய்கிறது. இது எல்லாமே அந்த மேலாளர்களுக்கு அத்துபடி. இது ஒரு பகிரங்க சூதாட்டம். அப்படித்தான் நமது சென்னையிலும் ஒரு சூதாட்டம் முதல்வர் பார்வையிலும், தலைமையிலும் நடந்து வந்தது போலும். அதுதான் சென்னை சங்கமம்.
சென்னை சங்கமத்திற்காக, "தமிழ் மையம்" என்ற நிறுவனம் பல கோடிகளை கையாண்டது. அதற்கு நன்கொடை கொடுத்த நிறுவனகள் பெரும்பாலும் " தொலை தொடர்பு அமைச்சகத்திடம்" ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு கேட்டு வரிசையில் நின்றவர்கள் எனபது இப்போது தெரியவந்துள்ளது. அதுவும் ஸ்பெக்ட்ரம் உரிமம் பெறுவதற்கு முந்திய வாரம் இந்த "தமிழ் மையத்திற்கு" லட்சங்களை அள்ளி, அள்ளி தந்துள்ள அந்த நிறுவனகள் தமிழ் மீதோ, தமிழ் நாட்டு கிராமப்புற கலைகள் மீதோ பற்று கொண்டவர்கள் இல்லை எனபதும் தெரிய வ்ந்துள்ளது.
அந்த '[சென்னை சங்கமத்திற்கு" அம்பாசடர் போல, ஒரு 'செலிபெரிடி' நிலையை, கருணாநிதியின் மகள் கனிமொழிக்கு, "தமிழ் மையம்" கொடுத்துள்ளது. அந்த "பிரபலத்திற்கு" எவ்வளவு பணம் யாரிடம் வாங்கப்பட்டது என்பதோ, அதை அந்த நன்கொடையாளர்கள் ஏன் கொடுத்தார்கள் என்பதோ தெரிய எவ்ண்டிய அவசியம் இல்லை. அவருக்கு வேண்டியது எல்லாம் விளம்பரம்தான். அண்ணன் மு.க.அழகிரியும்,.அண்ணன் மு.க. ஸ்டாலினும், இன்னொருபுறம் தயாநிதியும் அப்பாவை பயன்படுத்தி பெரிய பதவிகளில் இருக்கும் போது, வீட்டிற்கு போனால் தொல்லை செய்யும் அம்மாவிற்கு சமாதானம் சொல்லவும், அதேசமயம் தனக்கு புகழ் சேரவும்," தமிழ் மையம்" நண்பர்கள் நல்ல உதவி செய்கிறார்கள் எனபது மட்டுமே அந்த பெண்ணுக்கு தெரிந்திருக்கும். இப்போது மாட்டிக்கொண்ட பின் எல்லாம் புரிந்திருக்கும். அல்லது அது ஒன்றும் தவிரில்லையே என்று அன்று புரிந்திருக்கும். இப்போது எல்லாமே தவறு போல என்று அறிந்திருக்கும்.
இது என்னவோ, ஐ.பி.எல். அம்பாசடராக இருக்கும் "பிரபலங்களுக்கு" ஒவ்வொரு விளையாட்டிலும் நடக்கும் " மேட்ச் பிக்சிங்" பற்றி தெரியாது என்று சொல்வதுபோல இருக்கிறதே?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment