இன்றைக்கு வெளியாகி இருக்கும் செய்தி, எந்த சென்னை சகமத்தை கூறி கனிமொழி புகழை முதல்வர் கலிஞர் உயர்த்தி பிடித்தாரோ, அந்த சென்னை சங்கமத்தை நடத்திய " தமிழ் மையம்" தொடர்பானது. " தமிழ் மையம்" அலுவலகம் சீ.பி.ஐ. சோதனைக்கு உள்ளானபோது, அருள் திரு ஜகத் கஸ்பர் கூறியவை ஒவ்வொருவருக்கும் நினைவுக்கு வரும். இப்போது அதே ஏற்பாட்டில், பெரும் தொலை தொடர்பு நிறுவனங்கள், தமிழ் மீது பற்று கொண்டோ, தமிழ் கிராம கலைகள் மீது பற்று கொண்டோ அந்த சன்மான தொகைகளை கொடுத்ததாக கூறுவாரா? அல்லது ஸ்பெக்ட்ரம் உரிமத்தை அடுத்த வாரமே வாங்குவதற்காக வாரி, வாரி வழங்கினாரா என்பது அவரது விளக்கத்தில்தான் சொல்லவேண்டும். அதில் நேரடியாக தொடர்பு கொள்ளாமல் ஏதோ புகழ் வருகிறது என்பதற்காக, நண்பர்கள் ராஜா கூறிய ஏற்பாடுகளையும், ஜகத் கஸ்பர் செய்த ஏற்பாடுகளையும் ஏற்றக்கொண்ட கனிமொழி இன்று அவற்றில் சிக்கியுள்ளார்.
: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டுக்கு முன்னால் சென்னையில் கனிமொழி தொடர்புடைய கலாசாரத் தொண்டு நிறுவனம் (என்ஜிஓ) ஒன்றுக்கு டெலிகாம் கம்பெனிகள் பல லட்சம் ரூபாய் நன்கொடை அளித்துள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. இதையடுத்து இந்த பணப்பரிவர்த்தனைகள் குறித்து விசாரிக்க வேண்டும் என்று பொதுநல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் கோரினார். இது குறித்து அடுத்த விசாரணை.யின்போது பரிசீலிக்கப்படும் என்று நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, ஏ.கே.கங்குலி இருவரும் கூறினர்.
தொலைதொடர்புத் துறை அமைச்சராக ஆ.ராசா இருந்தபோது 2008 ஜனவரி 10-ம் தேதி இந்த நிறுவனங்கள் ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ்களை பெற்றுள்ளன. அதற்கு 5 நாள்களுக்கு முன்பு சென்னை சங்கமம் கலாசார நிகழ்ச்சிக்காக அதை நடத்திய என்ஜிஓவுக்கு யூனிடெக் நிறுவனம் 50 லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளது. அதேநாளில், அதாவது 2008 ஜனவரி 5-ம் தேதி டாடா டெலி சர்வீசஸ் ரூ.25 லட்சம் வழங்கியுள்ளது. இந்த இரு பட்டுவாடாக்களும் காசோலை மூலமே நடந்துள்ளன.
யார் யாருக்கு லைசென்ஸ் கிடைக்கப்போகிறது என்று தகவல் சில நிறுவனங்களுக்கு முன்கூட்டியே தெரிந்திருக்கிறது. லைசென்ஸ் வழங்கப்படுவற்கு மூன்று நாள்களுக்கு முன் ரிலையன்ஸ் கேபிடல் நிறுவனம் 25 லட்சம் ரூபாயும் ஷியாம் டெலிகாம் லிமிடெட் ஒரு லட்சம் ரூபாயும் சென்னை சங்கமத்துக்கு வழங்கியுள்ளன. இந்தப் பட்டுவாடாக்களும் காசோலை மூலமே நடந்துள்ளன அதன்மூலம் சிக்கியவர் யார்? சிக்க வைத்தவர்கள் யார்? என்பது உலகுக்கு புரியுமா? எல்லோரும் நாளது என்று எண்ணித்தான் செய்தனர்.ஆனால் அது சிக்கலில் கொண்டு போய் விட்டு விட்டது என்கிறீர்களா?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment