Wednesday, February 16, 2011

நிலமுதலைகளுக்கு, கடல் சார் பழங்குடி பற்றி தெரியுமா?

இரட்டை மடி மற்றும் சுருக்கு வலை என்ற தடை செய்யப்ப்பட்ட வலைகளை மீன் பிடிக்க பயன்படுத்த கூடாது என்பது தமிழகத்தில் மட்டுமல்ல, அனைத்து நாட்டளவிலேயே அமுலில் இருக்கிறது. ஆனால் தமிழகத்தில் உள்ள ஊழல் பிடித்த மீனவர் அல்லாத மீன்வளத்துறையின் அதிகாரிகள் தங்கள் பனிக்காலத்திர்க்குள் எவ்வளவு ச்ய்ருட்டலாம் என்ற நோக்கம் கொண்டவர்கள் கை நிறைய காசை வாங்கிக்கொண்டு அத்தகைய தடை செய்யப்ப்பட்ட வலைகளை பயன்படுத்துபவர்களுக்கு பல்லக்கு தூக்குகிறார்கள். கடலிலே இருக்கும் சூழலை பற்றியோ, கடலின் நீரோட்டங்கள் பற்றியோ, மீன்களின் வளர்ச்சி பற்றியோ, மீன்களை பிடிப்பதில் இருக்கவேண்டிய கட்டுப்பாடு, ஒழுங்குமுறை, மற்றும் விதிகள் பற்றியோ, வெவ்வேறு வகை மீன்களை வெவ்வேறு காலத்தில் பிடிப்பதற்கான வெவ்வேறு வகையான வலைகளை பற்றியோ எந்த அறிவும் இல்லாத அதிகாரிகள், மீன் வளத்துறையை ஆக்கிரமித்துள்ளனர். அதேபோல மீன்வளம் பற்றிய, மீன் பிடித்தல் பற்றிய அடிப்படை அறிவே இல்லாத அரசியல்வாதிகளும், இந்த நாட்டில் கடற்கரை தொகுதிகளின் எம்.எல்.ஏ.க்களாக, மற்றும் அமைச்சர்களாக இருக்கிறார்கள். அநேக காலங்களில் கடலை பற்றிய அறிவே இல்லாத மீனவர் அல்லாத மாற்று சமூகங்களை சேர்ந்தவர்கள் அப்படிப்பட்ட அமைச்சர்களாக வந்துவிடுகிறார்கள். சிலநேரம் மீனவர் சமூகத்தை சேர்ந்த மனிதர்களே அமைச்சர்களாக வந்தாலும் அவர்கள் விவரம் தெரிந்தவர்ஹளாக இருந்தாலும், தவறான அறிவியலுக்கு எதிரான வழிமுறைகளை கையாண்டு அதிகமான லாபத்தை சுரண்டலாம் என்ற லாப வெறி கொண்டவர்களாக இருக்கிறார்கள். அப்படித்தான் ஒரு அமைச்சர் இப்போது தமிழ்நாட்டு அமைச்சரவைக்கு கிடைத்துள்ளார்.
இவ்வாறு நிலம் சார்ந்த மனிதர்களுக்கோ, அதிலும் நிலம் சார்ந்த முதலாளிகளுக்கும், அதாவது நிலம் சார்ந்த முதலைகளுக்கு, கடல் சார்ந்த மக்களான மீனவர்கள் என்ற கடல் சார் பழங்குடிகள் பற்றிய அறிவே இருப்பதில்லை. அறிவு இருந்தாலே அதில் எப்படி ஊழல் அதிகமாக செய்து சொத்து சேர்க்கலாம் என்ற புத்தி கொண்ட இன்றைய உலகமயமாக்கல் காலகட்டத்தில், இயற்கை விதிகள் பற்றிய அறிவே இல்லாவிட்டால் எந்த மனச்சாட்சி உரத்தால் கூட இல்லாமல் இந்த முதலைகள் தவறு செய்கின்றன. அப்படித்தான் இங்கே கடல் சார் உலகத்தை இவர்கள் கொடுமை படுத்துகிரரகள். உதாரணமாக மீன் பிடித்தலில் பொதுவாக உலகம் முழுவதும் கில்நெட் வலையை பயன்படுத்துவார்கள். ஆனால் லாப வெறி பிடித்த தன்னலவாதிகள் இந்த தொழிலில் நுழைந்த பின், டிராலர் முறையை அறிமுகப்படுத்தி கொள்ளை அடிக்க தொடங்கினார்கள். இந்த டிராலர் முறை எல்லா மீனவர்களாலும் எப்போதும் எதிர்க்கப்படும் முறை. ஆனால் இன்றைய சாக்கடை அரசியலின் விளைவாக, ஊழல் பெருச்சாளிகள் அதிகாரிகளாக இருப்பதன் விளைவாக இந்த டிராலர் முறை பயன்படுத்தப்படுகிறது.
இலங்கை தீவில் தமிழ் மீனவர்களும், சிங்கள மீனவர்களும் டிராலர் முறையை பயன்படுத்துவதில்லை. அவர்கள் கில்நெட் முறையைத்தான் பின்பற்றுகிறார்கள். கேரளாவில் கடற்கரைகளில் டிராலர் முறையை பின்பற்றுவதில்லை. அவர்கள் கில்நெட் முறையைத்தான் பின்பற்றுகிறர்கள். ஆனால் தமிழ்நாட்டில் கன்னியாகுமரி தொடங்கி, ராமேஸ்வரம், நாகப்பட்டினம் என்று எல்லா ஊர்களிலும் டிராலர் முறையை பின்பற்றி மீன் பிடிக்கிறார்கள். இந்த டிராலர் முறை என்பது கடலுக்குள் அடியாழம் வரை கருவி மூலம் வலையை கொண்டு சென்று, அரித்து எடுக்கும் தன்மை கொண்டது. இதுவே மீன்வலனகளை அடுத்த மீனவனின் தேவைக்கு ஏற்று கிடைக்கவிடாமல் கடலை உடனடியாக காலி செய்யும் தன்மைத்தது. ஆறு மாதங்களுக்கு முன்பு தமிழ்நாட்டு மீனவர் சங்கங்களை சந்திக்க வந்திருந்த இலங்கை மீனவர்களான தமிழ் மீனவர்களும், சிங்கள மீனவர்களும் இங்குள்ள விசைப்படகு மீனவர்களுடன் இது பற்றி ஒரு பேச்சு வார்த்தை நடத்தினார்கள். அந்த பேச்சுவார்த்தையில் இலங்கை மீனவர்கள் டிராலர் முறையை விட்டுவிடுங்கள் என்று வற்புறுத்தினார்கள்.
அதன்பிறகு ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டது. அந்த ஒப்பந்தத்தில் டிராலர் முறையில் இன்னும் எழுபது நாட்களுக்கு அதாவது இந்த ஆண்டிற்கு இந்த சீசன் காலத்தில் வேண்டுமானால் விடமுடியவில்லை என்பதால் நீங்கள் பயன்படுத்திக்கொள்ளுங்கள். ஆனால் எங்கள் அதாவது இலங்கை கடற்கரைக்கு ஐந்து மைல்களுக்கு [ கடல் மைல்கள்] அப்பால் நீங்கள் பயன்படுத்திக்கொள்ளுங்கள். அதேநேரம் அடுத்த ஆண்டிலிருந்து இத்தகைய டிராலர் பயன்படுத்தும் முறையை கைவிட்டு விடுங்கள் என்பதே வர்களது கோரிக்கையாக வைக்கப்பட்டது. அதை இங்குள்ள விசைப்படகு மீனவர் சங்கங்களும் ஏற்றுக்கொண்டு அதில் கையெழுத்திட்டனர். அதன்பிறகு சமீபத்தில் கடந்த மூன்று வாரமாக இலங்கை தமிழ் மீனவர்கள் இந்திய தமிழ் மீனவர்களிடம் இதை ந இணைவு படுத்தி டிராலர் வேண்டாம் என்று அறைக்கொவல் விடுத்து வந்தனர். அதன்பிறகும் இந்தியாவில் தமிழ்நாட்டில் உள்ள ஊழல் மீன்வளத்துறை அற்ற்ஹைகாரிகள், மற்றும் அரசியல்வாதிகளான ஆளும் கட்சிக்காரகளின் ஒத்துழைப்பில், அமைச்சரின் பங்களிப்புடன் இந்த சட்டவிரோத மீன்பிடிக்கும் முறை தொடரத்தொடங்கியது.
அதில் குறிப்பாக ராமேஸ்வரம் பகுதியின் மீன்வலத்த்டுரை துணை இயக்குனரான மார்க்கண்டன், இந்த ஆண்டுக்கான இலஞ்சத்தொகையாக இந்த சட்டவிரோத டிராலர்காரர்களிடம், ஆறு லட்சம் ரூபாயை பெற்றுள்ளார். அதேபோல நாகப்பட்டினம் பகுதியின் மீன்வளத்துறை அதிகாரிகள் ஐந்து கோடி ரூபாயை பெற்றுள்ளார்கள். இந்த பணத்தில் ஒரு பகுதி அமைச்சகம் வரை செல்வதால் அவர்களும் இவர்களுக்கு ஆதரவாக செயபடுகின்றனர். இத்தகைய சூழலில்தான் பிப்ரவரி பதினைந்தாம் நாள் யாழ்ப்பாணம் கடற்கரை வரை சென்று அதாவது அவர்கள் கேட்டுக்கொண்ட ஐந்து மெயில் தூரத்திர்க்குள்ளும் சென்று திராலரில் இரட்டை மடியையும், ஒற்றை மடியையும் கொண்ட வலைகளை வைத்துக்கொண்டு மீன் பிடித்த நாகப்பட்டினம் மீனவர்கள் நூற்று ஆறு பேரை அவர்களது பதினெட்டு படகுகளுடன் யாழ்ப்பாண மீனவர்கள் பிடித்து படித்துறை காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். இத்தனை விவரங்களும் தமிழக அரசின் அதிகாரிகளுக்கும், அமைச்சருக்கும் தெரியும். ஆனாலும் இதை வைத்து ஒரு நாடகம் ஆடி தங்களது அரசியலை நடத்த முயற்ச்சிக்கிறார்கள்.

கனிமொழியும், கருணாநிதியும் இரட்டை மடிக்கு ஆதரவா?

சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை தி.மு.க.முற்றுகை இட முயர்ச்சிஎடுத்து கனிமொழி உட்பட கைதாமே? இது எதற்காக? யாழ்ப்பாணம் அருகே இந்தியாவிலிருந்து சென்ற குறிப்பாக தமிழ்நாட்டிலிருந்து சென்ற அதிலும் குறிப்பாக நாகப்பட்டினத்திலிருந்து சென்ற பதினெட்டு படகுகளை சேர்ந்த நூற்று ஆறு மீனவர்களை பிடித்துள்ளார்கள் என்பதே அந்த செய்தி. இவர்களை கைது செய்தது அல்லது இடைமறித்தது யார்? தி.மு.க.தலைமை சொல்கிறது, அது இலங்கை கடற்படை என்று. சரி அப்படி இருந்தால் அந்த தி.மு.க. தலைமை ஏன் இதுவரை நடந்த தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல்களை இலங்கை கடற்படை வெட்டவெளிச்சமாக செய்தபோது சும்மா இருந்துவிட்டு இப்போது மட்டும் இலங்கை தூதரகமுற்றுகை என்று கிளம்பி உள்ளது? ஏன் ஜெயகுமார் என்ற புஷ்பவனம் மீனவர் இலங்கை கடற்படையால் கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்பட்டபோது காட்டாத எதிர்ப்பை இப்போது திடீரென காட்டுகிறது? எதற்காக பாண்டியன் என்ற மீனவர் இளநகை கடற்படையால் சமீபத்தில் கொல்லப்பட்டபோது கட்டத எதிர்ப்பை தி.மு.க. தலைமை காட்டுகிறது?
தேர்தல் நேரம். தி.மு.க. தலைமை உண்மையாகவே தான் தமிழர்களுக்கு ஆதரவாக இருப்பதை பதிவு செய்யவேண்டும் என்றால் சரியானதுதான். சமீபத்திய ஜெயகுமார், பாண்டியன் கொலைகளுக்கு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு வந்துள்ளதால் தானும் அதனுடன் கலந்துகொண்டு மீனவர்களுக்காக குரல் கொடுத்தால் அதுவும் கூட ஒரு அரசியல் கட்சியை பொறுத்தவரை, அதுவும் தி.மு.க. போன்ற மாநில அரசியலை முன் நிறுத்தி பணியாற்றும் அரசியல் கட்சியை பொருத்தவரை சரியானதுதான். அதனால்தான் மீன்வள அமைச்சர் கே.பி.பி.சாமியின் ஏற்பாட்டில் அவரது கைகளிலேயே உள்ள அன்பழகனார் என்ற மீனவர் தலைவரது அமைப்பையும் பயன்படுத்தி இந்த போராட்டத்தை நடத்தியுள்ளனர். காநிராஸ் கட்சிக்கும் தி.மு.க.விற்கும் சமீபத்தில் ஸ்பெக்ட்ரம் ஊழல் விசாரணையில் ஆ.ராஜாவை கிடிக்கி பிடி போடும் சீ.பி.ஐ.யால் ஏற்பட்ட முரண்பாட்டின் விளைவே இந்தார்ப்பாட்டம் என்பது மட்டும்தான் உண்மையா? அப்படியானால் உண்மையில் நடந்ததுதான் என்ன?
மீனவர்களுக்கு மட்டுமே புரிந்த அல்லது தெரிந்த மீன்பிடி தொழில் பற்றி நிலம் சார்ந்த மக்களுக்கு தெரியாது. அதாவது இரட்டை மடி வலை, சுருக்கு வலை ஆகியவை ஒட்டுமொத்த மீனவர்களும் மீன் பிடிக்க முடியாமல் தடுக்கின்ற அல்லது அவர்களுக்கு மீன்கள் கிடைக்காமல் முழு கடலையும் அரித்து எடுக்கின்ற ஒரு தடை செய்யப்ப்பட்ட வலைகளாகும். அந்த வலைகளை சில குறிப்பிட்ட எண்ணிக்கையில் உலா மீனவர்கள் மட்டும் மற்ற மீனவர்களின் எதிர்ப்புக்கு மத்தியில் ராமேஸ்வரத்திலும், நாகப்பட்டினத்திலும் பயன்படுத்துகிறார்கள். அதில் அவர்களுக்கு பல லட்சம் ரூபாய் கிடைகிறது. அதனால் மற்ற மீனவர்களுக்கு மீன்களே இல்லாமல் ஆகஈவிடுகிறது.இந்த தடை செயாப்பட்ட வலைகளை பயன்படுத்துவதை மீன் வள துறையின் ஊழல் அதிகாரிகளும், ஒழல் அரசியல்வாதிகளும் ஆதரிக்கிறார்கள். கையூட்டு வாங்கி கொள்கிறார்கள். இது விசைப்படகு மீனவர் சங்கங்களால் தொடர்ந்து எதிர்க்க படுகிறது.
இதே தடை செய்யப்ப்பட்ட வலைகளை பயன்படுத்தி மன்னார், யாழ்ப்பாணம் வரை சென்று தமிழ்நாட்டு மீனவர்கள் மீன் பிடிக்கும் போதெல்லாம் சில ஆண்டுகளாகவே அங்குள்ள தமிழ் மீனவர்கள் எதிர்ப்பை கொடுத்துள்ளார்கள். அதுதவிர யாழ்ப்பாணம், மன்னார் தமிழ் மீனவர்கள் தமிழ்நாட்டு மீனவர்கள் போல டிராலர்களை பயன்படுத்துவது இல்லை. அவைகள் இன்னமும் நாட்டு படகு முறைகளையே பயன்படுத்துகிறார்கள். இப்போது அங்கே பிடிபட்டவர்கள் இரட்டை மடி வலைகளையும், ஒற்றை மடி வலைகளையும் பயன்படுத்தி டிராலர்கள் மூலம் மீன் பிடிக்க சென்றவர்கள். அங்கே வந்து மீன் பிடிப்பதை அங்குள்ள தமிழ் மீனவர்கள் எதிர்க்கவில்லை. டிராலர்களை பயன்படுத்துவது அவர்களுக்கு இடையூறுதான் எராலும் அதைக்கூட அவரால் பெரிதுபடுத்தவில்லை. ஆனால் பல முறை எச்சரிக்கை விடுத்தும் இந்திய மீனவர்கள் தடை செய்யப்பட்ட இரட்டை மடி வலைகளை பயன்படுத்துவது அவர்களது வாழ்வுரிமையை பறிப்பதாக உள்ளது.அதுமட்டுமின்றி இவர்கள் யாழ்ப்பாண கரையோரம் சென்று மீன் பிடித்துள்ளனர். அது அவர்களது அன்றாட மீன் பிடித்தலுக்கே எதிரானது.
ஆகவே இந்த நாகப்பட்டினம் மீனவர்களை பிடித்தது யாழ்ப்பாண தமிழ் மீனவர்கள்தான், அதன்பிறகு இவர்களுக்கேபிரியாணி உட்பட நல்ல உணவு அழத்து பிறைதான் அவர்களை படித்துறை என்ற காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். ஆனால் இந்த சில குறிப்பிட்ட தவறு செய்யும் மீனவர்களை ஆதரித்து இவர்களிடம் லஞ்சப்பணம் வாங்கி கொண்டு ஒத்துழைப்பவர்கள் தமிழ்நாட்டு மீன்வள துறையின் அதிகாரிகளும், எம்.எல்.ஏ., எம்.பி. போன்றோரும், அமைச்சர் கே.பி.பி.சாமியும் என்பது தெரியவந்துள்ளது.இப்போது தி.மு.க. நடத்திய போராட்டம் தடை செயப்பட்ட வலைகளை பயன்படுத்ஹுவோருக்கு ஆதரவாகவும், ஊழல் அமைச்சர்களுக்கும், ஊழல் அதிகாரிகளுக்கும் ஆதரவாகவும் இருகிறதே தவிர, இன்மையில் அப்பாவி மீனவர்கள் கடலில் இலங்கை கடற்படையால் சுடப்படுவதற்கு ஆதரவாக இருக்கவில்லை. அப்படி அவர்கள் ஆதரவாக குரல் கொடுக்க எண்ணினால் இதுவரை கொல்லப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்களின் 538 முதல் தகவல் அறிக்கைகளையும், அடிக்கப்பட்ட, வலைகள் அறுக்கப்பட்ட, படகுகள் யுடைக்கப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்களின் இருபதேட்டேட்டாண்டு வழக்குகளையும் சேர்த்து உயர்நீதி மன்றத்தில் போட்டு, இலங்கை கடற்படை தளபதிகள் மீது கைது வாரண்டை பிறப்பிக்க செய்யட்டும்.

தயாநிதி காலம் விசாரணைக்கு வந்து விட்டது.

இந்திய ஊடகங்களிலும், தமிழக ஊடகன்கல்லும் தடுக்கப்பட்ட அந்த செய்தியை இன்று சென்னையிலிருந்து வெளிவரும் டைம்ஸ் ஆப் இந்தியாவும், நக்கீரனும் வெளிப்படுத்திவிட்டன. கபில் சிபிலால் நிரோப்பட்ட முன்னாள் நீதிடரசர் சிவராஜ் பட்டீல் விசாரணை குழு முன்வைத்துள்ள அறிக்கையின் படி, தயாநிதி சகோக்கள் அவர்களது சன் டி.டி.எச். சிறகாக வாங்கிய 675 கோடி ரூபாய் மூலதனம் எங்கிருந்து, எப்படி வந்தது என்பது அம்பலமாகியுள்ளது. அதாவது 2004 முதல் 2007 வரை தொலை தொடர்பு அமைச்சராக இருந்த அந்த இளைய சகோ. டிஷ் நிறுவனத்திற்கு கொடுக்கவேண்டிய அலைகற்றைவரைசையை கடுமையாக தாமதம் செய்து அவர்களுடன் பேரம் பேசி, அந்த ஏர்செல்லின் அங்கமான டிஷ் நிறுவனத்தை தங்களுக்கு வேண்டிய மாக்சி நிறுவனத்திடம் ஒப்பந்தம் போடவைத்து அதன்மூலம் சண் டி.டி.எச். சிறகு அந்த பெரும் தொகையை மூலதனமாக வாங்கியுள்ளனர். இப்போது அது வணிக தர்மம் என்றும் கூறுகின்றனர். இதை சிவராஜ் பட்டீல் தனது அறிக்கையில் கண்டுபிடித்து குறிப்பிட்டிருப்பதுதான் முக்கிய செய்தி.
இதை ஒட்டி கார்பொரேட் போர் கடுமையாகி உள்ளது. ரிலைன்ஸ் நிறுவனம் தங்கள் மீது குற்றம் வருகிறது என்று தெரிந்தவுடன், டாடா தான் முக்கிய குற்றவால் என்றும் அவர்களது ஒப்பந்தத்தால் தான் இரண்டு லட்சம் கோடி நட்டம் அரசுக்கு என்றும் தெரிவிக்க டாடா அதை எதிர்க்க இப்படி ஒரு பெரு முதலாளில்குழுமங்களின் போர் தொடங்கியுள்ளது. இதற்கிடையே இன்றைய டெக்கான் கிரோனிகள் ஏடு சமீபத்தில் வெளியாகி உள்ள இந்திய வான்வெளி ஆராய்ச்சி நிறுவன தேவாஸ் மல்டி மீடியா வுடனான ஒப்பந்தத்தை கசியவிட்டது முதல்வர் கருனநிதீன் குடும்ப உர்ப்பினரான ஒரு ஐ.எஸ்.ஆர்.ஒ.வின் மூத்த அதிகாரி என்பதை அம்பலப்படுத்தியுள்ளது. ஆ.ராஜாவை சிக்கவைத்த ஆனியார்ஸ் கட்சியை கவிழ்க்க பிரதமர் அலுவலகம் செய்த மாபெரும் ஊழலை அம்பலப்படித்தி திசை திருப்பிவிட கருணாநிதி குடும்ப முயற்சி என்கிறது அந்த ஏடு.
எப்படியோ ராஜ ராஜ சோழனின் வாரிசு என்று தன்னை அறிவித்துக்கொண்ட ஒரு கேரள மாவலி அரசனின் வழிவந்தவராக தன்னை கருதிக்கொள்ளும் ஒரு முதல்வர் இப்போது இந்திய நாட்டையே சுற்றிவிடுவதர்க்கான பல ஊழாகளை செய்து அதமூலம் பிரபலம் அடைந்திருப்பது தமிழர்களாகிய நாம் பெருமை படக்கூடியதன்றோ?

Tuesday, February 15, 2011

தடுக்கப்பட்ட டில்லி கசிவுகள்.

காதலர் தினத்தன்று காலையில் அந்த செய்தி வந்தது. அது எந்த காதளைப்பற்றியோ, காதலர்களைப்பற்றியோ இல்லை. தமிழ்நாட்டின் பிரபல ஊடகவியலாளருக்கு ஊழல் மீது உள்ள காதலைப்பற்றியது. நடந்துகொண்டிருக்கும் இரண்டு தலைமுறை அலைக்கற்றை ஊழலில் சிக்கியுள்ள ஆ.ராஜாவிற்கு மேலும்,மேலும் சீ.பி.ஐ.அதிகாரிகள் நெருக்கடி கொடுக்கிறார்கள்.அது தி.மு.க. தலைவருக்கு அதிக இரத்த அழுத்தத்தை கொடுக்கும். அதுவே சன் டிவி சகோதரர்களுக்கு பேருவகையை தரும்.ஆனால் டில்லியில் வெளிவந்த ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி உவகையை மாற்றி அளித்தது. 2003 ஆம் ஆண்டு அருண் செளரி தொலை தொடர்பு அமைச்சர். அப்போது முதலில் வருபவருக்கு முதலில் கொடுப்பது என்ற நடைபெற்று வந்த கொள்கையை எதிர்த்து, இரண்டு அலைவரிசை வழங்குவதில்,இந்திய தொலை தொடர்பு ஒழுங்குமுறை அதிகாரம் என்ற டி.ஆர்.ஏ.ஐ. ஒரு முன்வைப்பை வைக்கிறது. அதில் போட்டீக்கு விட்டு அலைகற்றையை வழங்கும்படி ஆலோசனை கொடுக்கப்பட்டது. அதை மத்திய அமைச்சரவையும் ஒப்புதல் கொடுத்தது. அதை அருண் சூரியின் அமைச்சரவ்கமும் ஒப்புக்கொண்டிருந்தது. அதற்குப்பிறகும் ஏன் அருண் செளரி முதலில் வருபவருக்கு முதலில் என்ற கொள்கையை பின்பற்றினார்? என்ற கேள்வியை கேட்டு வருகிற இருபத்தி ஒன்றாம் நாள் அருண் ஷௌரியை சீ.பி.ஐ. விசாரணைக்கு அழைத்துள்ளது.
அதேசமயம் அதே துறையில் 2004 ஆம் ஆண்டிலிருந்து 2007 ஆம் ஆண்டுவரை அமைச்சராக இருந்தவர் தயாநிதி மாறன். அவருக்கு சன் தொலைகாட்சி ஊடக குழுமத்தில் தமிழ்நாட்டில் ஐந்துக்கு மேற்பட்ட அலைவரிசைகளும், ஆந்திராவிலும், கேரளாவிலும், கர்நாடகாவிலும் பல அலைவரிசைகளும் இருக்கும்போதே அந்த அலைவரிசைகளுக்கு தலைமை ஏற்கும் ஒரு அமைச்சரவையை கொடுத்திருந்தார்கள். அதுவே தலைமை அமைச்சர் செய்த தவறு. ஒரு தனியார் முதலாளிக்கு அவரது வணிகம் தொடர்பான அமைச்சரவையை கொடுக்கும் சாமர்த்தியம் மன்மோகனுக்கு மட்டுமே உண்டு. அந்த தயாநிதி மாறனுடைய காலத்தில் இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை வரிசை விற்பனையும் முதலில் வருபவருக்கு முதலில் என்ற அணுகுமுறையிலேயே கொடுக்கப்பட்டது. அதில் லாபம் அடைந்த தனியார் நிறுவனங்கள் அந்த அமைச்சரை கவனிப்பது என்பது கார்பரேட் பண்பு. அதன்படியே அந்த கொள்ளையில் அதிகம் சம்பாதித்த ஏர்செல் நிறுவனம் தனது அன்பளிப்பாக 670 கோடியை சன் டிடிஎச் என்ற தாயநிதி மற்றும் கலாநிதி சகோதரர்களின் நிறுவனத்துக்கு கொடுத்துள்ளனறேன்பதே அந்த செய்தி.
அதனால் அடுத்து சீ.பி.ஐ. விசாரணை தயாநிதி மேலும் வார இருக்கிறது என்பது அந்த தகவல். இதை ஹிந்துஸ்தான் டைம்ஸ் போட்டிருக்கலாம். அதற்கு டாடா ஏற்பாடு காரணமாகவும் இருக்கலாம். அனால் தயாநிதி சகோக்கள் அவ்வளவு தூரம் விட்டுவிடுவார்களா என்ன? உடனடியாக எல்லா ஊடகங்களையும் தொடர்பு கொண்டு அது பொயசெய்தி என்றும், அதை வெளிடாதீர்கள் என்றும் தடுத்து விட்டார்கள். எல்லாம் ஊடக பெரும் உதலாளிகளால் முடியும் ஐயா.

Thursday, February 10, 2011

இதுதான் அதிகாரவர்க்க முதலாளித்துவம்.

ஐ.எஸ்.ஆர்.ஒ.வும், தேவாஸ் மல்டிமீடியாவும் செய்துகொண்ட ஒப்பந்தம் இன்று ஊரெல்லாம் கிழிந்து தொங்குகிறது. அதை தாங்கள் ரத்து செய்யப்போகிறோம் என்று அவர்களே அறிவிக்கும் நிலைக்கு அது பொய் சேர்ந்துள்ளது. அதில் முதல் தகவல்படி,அல்லது மேலோட்டமான ஒரு கணிப்புப்படி, இரண்டு லட்சம் கோடி அரசுக்கு நட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பதுதான் நாட்டை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய செய்தி. அந்த பணம் யாருடையது? இந்திய மக்களது பணம் இல்லையா?
இந்திய மக்கள் இன்னமுஜ்ம் ஏழ்மையில் வாழ்கிறார்களே? அவர்கள் தாங்கள் செலுத்திய நேரடி வரி மற்றும் மறைமுக வரி மூலம் இந்த நாட்டின் அரசு செயல்பட உதவி வருகிறார்களே? நேரடி வரி என்பது நமது நட்டு மக்களது, அதாவது உங்களையும், என்னையும் சேர்த்த இந்திய மக்களது நேரடி வரி என்றுதானே பொருள். அதை பல்வேறு விதமான வரிகள் மூலம் நாம் செலுத்தி வருகிறோமே?
மறைமுக வரி என்பது நாம் வாங்கும் ஒவவொரு பொருள் மீதும் இந்த அரசு போட்டுள்ள விற்பனை வரி, மதிப்பு கூடுதல் வரி, ஆகியவை அனைத்தும் நமது மக்களின் பைகளிலிருந்து ஒவ்வொரு நாளும் மத்திய மாநில அரசுகளின் கஜானாவிற்கு எடுத்துசெல்லப்படுகிறது. அப்படியானால் அந்த பணம்தானே இந்த விண்வெளி ஆராய்ச்சி மையத்தால் செலவழிக்கப்படுகிறது? ஐ.எஸ்.ஆர்.ஒ. எனபது இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் என்று தமிழில் பொருள்படும். அவர்கள்தான் இந்த இரண்டு லட்சம் கோடியை அரசுக்கு நட்டம் ஏற்படுத்த காரணமானவர்கள். அதிலும் இந்த விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் தலைவர்கள், வெள்யே வந்தபின் தேவாஸ் மல்திமேடிஆ போன்ற நிறுவனங்களை ஏற்படுத்துவதும், அவர்களுக்கு உள்ளே இருக்கும் நிறுவன தலைவர்கள் இத்தகைய ஒப்பந்தங்களை வேறு வெளி ஆட்களுக்கு தெரியாமல் போட்டுக்கொடுப்பதும் ஏன் நிகழ்கிறது?
இத்தகைய அதிகாரிகளுக்கு வானளாவிய அதிகாரத்தை யார் கொடுத்தது? தலைமை மாயச்ச்சரின் அலுவலகத்திற்கு கீழே இருக்கும் இந்த விண்வெளி ஆராய்ச்சி நிலையம் எப்படி தலைமை அமைச்சருக்கும் கூட தெரியாமல் இப்படிப்பட்ட அரசுக்கு பெரும் நட்டத்தை ஏற்படுத்தக்கூடிய ஒப்பந்தங்களை போடமுடிகிறது? இந்திய அரசில் அதற்க்கான ஏற்பாடு எங்கே இருக்கிறது? இப்போது அம்பலமாகி இருப்பது உள்ளபடியே ஐ.எஸ்.ஆர்.ஒ.அதிகாரிகள் தாங்கள் உருவாக்கிய புதிய எஸ்.பாண்டு திட்டத்தை வெளியே அறிவிக்காமல் அதற்கான டெண்டர் விடாமல், பலரும் போட்டியில் கலந்துகொள்வதை தடுத்து தங்களது மூத்த அதிகாரிகள் ஒய்வு பெற்று வெளியே இருப்பவர்கள் மூலம் அத்தகைய ஒப்பந்தங்களை போட்டிருக்கிறார்கள் என்பது இப்போது தெரியவந்துள்ளது.
ஏன் இந்த அதிகாரிகள் இவ்வாறு இந்தியாவின் எந்த விதியையும் மீறி, தங்கள் லாபங்களுக்காக செயலபடுகிரார்கள்? பெரிய மத்திய அரசின் நிறுவனங்களில் இருக்கும் உயர் அதிகாரிகள் இவ்வாறு இந்தியாவின் பொருளாதாரத்தை அல்லது இந்திய அரசின் மூலதனத்தை தங்கள் கைகளில் வைத்துக்கொண்டு ஆட்டிப்படைக்கிரார்களே? இது எப்படி நிகழ்கிறது? இந்திய அரசை ஆளுகின்ற வர்க்கங்களில் முக்கியமாக இந்த அதிகாரவர்க்க முதலாளிகள் இருக்கிறார்கள். ஆமாம். இவர்களுக்கு பெயர் அதிகார வர்க்க முதலாளிகள். இந்திய அரசின் மூலதனத்தை பொதுத்துறை நிறுவனங்கள் மூலம் ஆளுகின்ற இந்த அதிகாரிகள் அதிகாரவர்க்க முதலாளிகள் என்று அழைக்கப்படுகிறார்கள். இந்த அதிகாரவர்க்க முதலாளிகள் அந்நியநாடுகளுடன் பல ஒப்பந்தங்களை அந்நியநாட்டு நலன்களுக்கும், அந்நியநாட்டு நிறுவனங்களான பன்னாட்டு மூலதன நிறுவனங்களுக்கும், இந்திய நாட்டு செல்வங்களை பகிர்ந்துகொள்ள உதவியிருக்கிறார்கள் என்பதுதான் இதில் புரியப்படவேண்டிய செய்தி.அவ்வாறு இவர்கள் செயல்படுவதால் இவர்கள் தரகு அதிகாரவர்க்க முதலாளிகள் என்று அழைக்கபடுகிரார்கள்.
இவ்வாறு இந்த கொள்ளையடிக்கும் அதிகாரிகளை தரகு அதிகாரவர்க்க முதலாளிகள் என்று அழைப்பது சீ.பி.ஐ.எம்.எல். என்ற நக்சல்பாரி இயக்கம்தானே என்று கேட்கலாம். ஆம். அதுதான் உண்மை. இந்தியாவை ஆள்வது தரகு அதிகாரவர்க்க முதலாளிகள் என்று நக்சல்பாரி இயக்கம்தாம் உறுதியாக கூறியது. யார் கூறியிருந்தாலும் உண்மை அதுதானே? அதனால் அவர்கள் கூறுவதுபோல தரகு அதிகாரவர்க்க முதலாளிகளான இந்த ஐ.எஸ்.ஆர்.ஒ. அதிகாரிகள் இந்தியாவை கொள்ளை அடித்ததை இப்போது மக்கள் புரிந்துகொள்ளும் கட்டம் வந்துவிட்டநிலையில் அவர்களை தரகு அதிகாரவர்க்க முதலாளிகள் என்று அழைக்க நாமும் பழகிக்கொள்ள வேண்டும்.

Wednesday, February 9, 2011

தமிழ்நாடு தமிழருக்கே என்ற நூல் என்ன சொல்கிறது?

பிப்ரவரி எட்டாம் நாள் அதாவது மா.பொ.சீ.யின் பிறந்தநாளுக்கு முந்திய நாள் வழக்கறிஞர் சக்திவேல் எழுதிய " தமிழ்நாடு தமிழருக்கே" என்ற நூல் வெளியிடப்பட்டது. அதில் பழ.நெடுமாறன், புகழேந்தி தங்கராஜ், இலக்குவனார் திருவள்ளுவன், பெ.மணியரசன், தியாகு, திரைக்கலைஞர் ராஜேஷ், இயக்குனர் வீ.சேகர், சந்திரேசன், ஆகியோர் உரை நிகழ்த்தினர். மறுநாள் மா.பொ.சீ.க்கு கலைஞர் சிலை திறக்கிறார்.என்னே கரிசணை? மா.பொ.சீ.கூறிய கருத்துக்கள் சரிதானா? இன்னமும் மறையாமல் இருக்கிறதா? அவர் மெட்ராஸ் ராஜதானியில் 1920 முதல் 1952 வரை தமிழகத்தை ஆண்ட பத்து முதல்வர்களில் எட்டு பேர் தமிழை தாய்மொழியாக கொள்ளாத தெலுன்குகாரர்கள் என்று எழுதியுள்ளார். அந்த நேரம் ஆங்கிலேயன் ஆட்சியில் உள்ள மெட்ராஸ் ராஜதானி. அதாவது மொழிவாரி மாநிலங்கள் ஏற்படாத காலம். இப்போது மொழிவாரி மாநிலமாக தமிழ்நாடு ஆன பிற்பாடு என்ன நிலைமை?
அதேநிலைதான் உள்ளது என்பதே அந்த புதிய சக்திவேலின் நூல் கூறுகிறது. அதற்காக வரிந்து கட்டிக்கொண்டு மேற்கண்ட தமிழ் அறிஞர்கள் மேடையில் பேசினார்கள். அவர்கள் உண்மையில் தமிழ்நாட்டை தமிழன்தான் ஆள வேண்டும் என்று கருதுகிறார்களா? நமக்கு தெரிந்த வரையில் அந்த கூட்டத்திலேயே மணியரசன் குறிப்பிட்டதைப்போல பல நூறு ஆண்டுகளாக தமிழ்நாட்டில் வாழ்ந்துவரும் தெலுங்கு பேசும் மக்கள் தமிழ் மக்களாகத்தான் கருதப்படவேண்டும் என்பது ஒருபுறம் வாதம். அதேபோலத்தான் கன்னடம் பேசும் மக்களும், மலையாளம் பேசும் மக்களும் வருவார்கள். ஆனால் தமிழ்நாட்டு பண்பாட்டுடன் இரண்டற கலந்துவிட்ட அல்லது அதிகபட்சம் கலந்துவிட்ட இந்த திராவிடர்களை முதல் எதிரிற் போல சித்தரிப்பது சரியா? கலப்பு திருமணத்திலும், தமிழ் மொழிக்கான போராட்டத்திலும், தமிழர்களுக்கான போராட்டத்திலும் மேற்கண்ட மொழிவழி வந்தவர்கள் பலர் பங்குகொண்டு சிறப்பாக கூட பணியாற்றுகிறார்கள். ஆனாலும் ஒரு அச்சத்தின் காரணமாக அவர்களை கணக்கு பார்க்கிறோம் என்று நம்மவர்கள் கூறுவதாக வைத்துக்கொள்வோம்.
ஆனால் இந்த தமிழ் சிந்தனையாளர்கள் இன்னொரு இனம் எந்த ஒரு கலப்பையும் தமிழ்மக்களுடன் வைத்துக்கொள்ளாமல், பண்பாட்டு, சமூக காரோயங்களில் கலக்காமல், தனது தனித்தன்மையை தக்கவைத்துக்கொண்டே தமிழ்நாட்டில் அனைத்து துறைகளையும், அதாவது பொருளாதார மட்டத்தில் எல்லா துறைகளிலும் தங்களது ஆதிக்கத்தை செலுத்திக்கொண்டு இருக்கிறார்களே அந்த வட இந்திய வணிக சமூகம் பற்றி இவர்கள் ஏன் பேசவில்லை? அந்த மார்வாடி சமூகம் பற்றி பேச பயமா? மறந்துவிட்டதா? அல்லது கண்ணுக்கு தெரியவில்லையா? அவர்கள் வாங்கி போட்ட இலங்கள் இவர்களது இல்லையா? ஒவ்வொரு தமிழ்நாட்டு பொருளாதார துறையிலும் இந்த மார்வாடிகள் நுழைந்து கட்டுப்பாட்டை எடுத்துக்கொண்டது நமது தமிழ் அறிஞர்களுக்கு தெரியாதா? அல்லது மார்வாடியை தொட்டால் டில்லி ஆட்சியாளர்கள் கோவித்துக்கொள்வார்கள் என்று பயமா?
மார்வாடியை தொட்டுவிட்டால் டில்லிக்காரர்கல்தானே வருவார்கள்? தெலுங்கனையும், கன்னடனையும், மலையாளியையும் தொட்டால் டில்லிகாரனுக்கு மகிழ்ச்சிதானே?
வாணி போருக்கு பின் விபத்து போல உலக தமிழினமும், உள்ளூர் தமிழர்களும், டில்லியை எதிரியாக பார்க்காவிட்டாலும், கடும் கோபத்தை டில்லி மீது வைத்துக்கொண்டுள்ளார்கள். அதை திசை திருப்பும் பணியை தெலுங்கர், கன்னடர், மலையாளி எதிர்ப்பு செய்துவிடாதா என்று தமிழ் அறிஞர்கள் சிந்திக்கவேண்டும். இப்போதுதான் டில்லியை தமிழன் சரியாக புரிந்து கொண்டுள்ளான் என்று மகிழ்ச்சியடைந்தால் அதில் மண் விழா வைத்துவிடாதீர்கள் ஐயா.

Sunday, February 6, 2011

அம்பலமான புதிய ஊழலில் சிக்குவது?

இந்து ஆங்கில நாளிதழும்,அதன் வணிக இதழான பிசினஸ் லைனும், வெளியிட்டுள்ள புதிய சீ.ஏ.ஜி. அறிக்கை என்ற, கணக்கு கண்காணிப்பு குழுவின் புதிய அறிக்கை பர,பரப்பை ஏற்படுத்தியுள்ளது.அது அரசுக்கு இரண்டு லட்சம் கோடி ரூபாயை நட்டம் ஏற்படுத்திய ஒப்பந்தம் ஒன்றை பற்றி கூறுகிறது.அப்படி ஒரு ஒப்பந்தத்தை நமது நாட்டின் விண்வெளி துறையின் வணிகபிரிவு போட்டுள்ளது என்கிறது அந்த அறிக்கை. அப்படியானால் அந்த அம்பலமாகியுள்ள ஒரு லட்சத்து எழுபத்தாறு கோடி ரூபாய் கொள்ளையைவிடட இன்ரண்டு லட்சம் கோடி ரூபாய் நட்டம் என்பது பெரிய கொள்ளை இல்லையா? இதை கமுக்கமாக செய்தவர்கள் யார்? இந்த ஒப்பந்தம் போடப்பட்ட ஆண்டு 2005 . அந்த நேரத்தில் இந்த நாட்டின் தலைமை அமைச்சராக இருந்தவர் மன்மோகன் தான். இது என்ன ராஜா செய்த ஒப்பந்தத்தைவிட அதிக நட்டத்தை ஏற்படுத்தியது? இவர்கள் மாறி,மாறி இந்திய் அரசுக்கு நட்டத்தை ஏற்படுத்திக்கொண்டே இருப்பார்களா?
இந்திய விண்வெளி ஆராய்ச்சி என்ற் ஐ.எஸ்.ஆர்.ஒ .உடன், அதாவது அதன் வணிக பிரிவான அற்றிக்ஸ் உடன், தேவா என்ற நிறுவனம் போட்டுக்கொண்ட ஒப்பந்தம் இது. இதன் மூலம் ஆண்டு செயற்கை கோள்களை அந்த தனியார் நிறுவனம் வானில் பறக்க விட்டது. ஐ.எஸ்.ஆர்.ஒ.எப்போதுமே தலைமை அமைச்சரின் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் நிறுவனம். அதாவது அன்றைய தலைமை அமைச்சரான மன்மோகன் சிங் போட்ட ஒப்பந்தம். மன்மோகனும் தனியார் நிறுவனமான தேவாவுடன் போட்டுக்கொண்ட ஒப்பந்தம். அதில்தான் இந்திய அரசுக்கு இரண்டு லட்சம் கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளது என்று இந்த சீ.ஏ.ஜி. அறிக்கை தெரிவிக்கிறது
2500 மெகா ஹெர்ஸ் கொண்ட அந்த செயற்கை கோளில் எழுபது மெகா ஹெர்ஸ் இந்த தேவா நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்டுள்ளது. 2010 ஆம் ஆண்டில் மூன்றாம் அலைக்கற்றை விற்பனையில் தனியார் நிறுவனங்களுக்கு விற்கப்பட்ட தொகையை கணக்கில் கொண்டு இப்போது சீ.ஏ.ஜி. இந்த ஒப்பந்தத்தின் மூலம் தேவா நிறுவனம் பெற்ற தொகையை கணக்கிட்டுள்ளது. அதான் இரண்டு லட்சம் ரூபாய் அரசுக்கு வரவேண்டிய வருவாய் இந்த ஒப்பந்தத்தால் நட்டமாகி உள்ளது என்ற கணக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. .ஐ.எஸ்.ஆர்.ஒ. விற்கு தலைமை அமைச்சர் மன்மோகன் தான் பொறுப்பு என்பதால் அவரும் சேர்ந்து செய்த நட்டம் என்று புரிகிறது.
இப்போது தேவாஸ் மல்டி மீடியா என்ற அந்த நிறுவனம் எந்த அலைக்கற்றையையும் வாங்கவில்லை என்றும், குத்தகைக்குத்தான் எடுத்தோம் என்றும் எல்லாமே ஐ.எஸ்.ஆர்ட்.ஒ.வின் வசம்தான் இருப்பதாகவும் கூறியுள்ளது.அதே கருத்தை முன்னாள் ஐ.எஸ்.ஆர்.ஒ. செயலாளர்களான ராதாகிருஷ்ணன், மாதவன் நாயர், ஆகியோரும் கூறுகின்றனர். ஏன் இவர்கள் முண்டி அடித்துக்கொண்டு பதில் சொல்கிறார்கள்? இந்த தேவாஸ் மல்டி மீடியா நிறுவனத்தின் தலைவராக இருப்பவர் முன்னாள் செயலாளராக ஐ.எஸ்.ஆர்.ஒ.வில் இருந்த சந்திரசேகர்.. அப்படியானால் பல ஐ.எஸ்.ஆர்.ஒ. முன்னாள் செயலாளர்கள் சேர்ந்து இப்படி ஒரு திட்டத்தை தீட்டி அதை தங்களது தனியார் நிறுவனமான தேவாசிற்கே குத்தகைக்கு கொடுக்கும் ஒப்பந்தம் செய்தார்களா? இது ஒரு அதிகாரிகள் மட்டத்து மாபெரும் ஊழலா?
ஏன் டெண்டர் விடவில்லை என்று கேட்டதற்கு மற்றவர்கள் போற்ற்டிக்கு வரவில்லை என்றும், தேவாஸ் மாத்திரமே வந்தது என்றும் கூறுகிறார்கள். அதாவது இப்படி ஒரு திட்டம் ஐ.எஸ்.ஆர்.ஒ.விடம் உருவானது மடற நிறுவனங்களுக்கு தெரியவிடாமல் முன்னாள் அதிகாரிகள் மட்டுமே திட்டமிட்டு அவர்களுக்குள் போட்டுக்கொண்ட சதியா? கர்நாடகாவில் உள்ள இந்த நிறுவனம் மாதவன் நாயர் போன்றோரின் உறவினர்கள் மற்றும் எழுபது விழுக்காடு பங்கை பெற்றுள்ள பிரான்சு நாட்டு நிறுவனம் ஆகியவை சேர்ந்து செய்துள்ளதாக தெரிகிறது. நெருக்கடி இப்போது வந்தவுடன், அந்த ஒப்பந்தத்தை சென்ற ஆண்டே அரசு வழக்கறிஞர் ரத்து செய்ய சொன்னதாகவும், ஆகவே அது செயல்படுவதற்கு முன்பே ரத்து செய்யப்படும் என்றும் இப்போது கூறுவது, கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரமா? என்றும், முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயற்சியா? என்றும் எண்ணத்தோன்றுகிறது. எஸ்.பான்ட் என்பதுதான் இப்படி ஒப்பந்தம் போடப்பட்டது என்றும், கே.யு.பாண்ட்தான் சன் குழுமம் உட்பட டி.டி.எச்.களுக்கு பயன்படுகிறது என்றும் விளக்குகிறார்கள்.எப்படியோ இப்போதைக்கு தயாநிதி சிக்கவில்லை. ஆனால் மன்மோகன் மாட்டிக்கொண்டார்.ஆனால் ஏன் சன் குழுமத்தின் பங்கு தொகை கடந்த இரண்டு நாட்களாக அதிகமாக சரிந்துள்ளது?
2007 -2008 ஆண்டுகளில் தயாநிதி சகோதர்கள் நடத்தும் சன் காட்சி ஊடக குழுவினர், ஒரு செயற்கை கோளை அதிகமான பங்கை செலுத்தி வாங்கி அதை வானில் விட்டு முதல் முறை தோற்றுபோய் பிறகு வெற்றி அடைந்தது நினைவிருக்கிறதா? அது இந்த ஒப்பந்தம் தானா என்ற கேள்வியும் எழுகிறது. அதன்மூலம் தங்களது குழுமத்தின் அனைத்து அலைவரிசைகளையும் இயக்கி வருகிறார்களே? இந்திய நாட்டை நட்டமடைய வைத்து தங்கள் குடும்பம் பிழைக்கின்ற வழியா இது? இப்போது ஆ.ராஜாவின் சின்ன ஊழல் கோடுக்கு பக்கத்தில் தயாநிதியின் பெரிய ஊழல் கோட்டை போட்டாச்சா?


.