Friday, September 2, 2011

எத்தனை நாள் திட்டமிட்டாய் செங்கொடி?

மூன்று தமிழர் உயிர்காக்க நாம் எல்லோருமே குரல் எழுப்பி வந்தோம். யார் அதற்காக குரல் கொடுத்தாலும் அங்கே போய் நாமும்கழந்து கொண்டோம். இதுதானே செங்கொடி, நமக்குள் இருந்துவந்த ஒற்றுமை? ஆகஸ்ட் 18 இல் சென்னையிலிருந்து புறப்பட்ட நூற்றுகனக்கான இரு சக்கர வாகனங்களை," மூன்று தமிழர் உயிர் காக்க" பேரணியாக "மரணதண்டனை எதிர்ப்பு மக்கள் இயக்கம்" ஒட்டி வந்தபோது,, காஞ்சியில் அதை வரவேற்க காத்திருந்த தோழர்கள், மூன்று மணி நேரம் முழக்கமிட்டதில், செங்கொடி உன்னுடைய முழக்கங்கள் "மேலோங்கி" இருந்தனவே? காஞ்சி வந்த இரு சக்கர வாகன பேரணியில், மற்ற தோழர்களுடன் செங்கொடி நீயும் கலந்து கொண்டு, வேலூர் நோக்கி செல்லும்போது, ஒரு வாகனத்தின் பின்புறம் அமர்ந்துகொண்டு, நீ "குறளை உயர்த்தி" முழக்கமிட்டாயாமே? எல்லா தோழர்களும் அந்த பேரணியில் உன்னுடைய முழக்கத்தை கவனித்திருக்கிரார்களே?
வேலூர் நகரில் "தொரப்படி சிறைக்கு" அருகே சென்ற போது, செங்கொடி உன்னுடைய முழக்கங்கள் ஒவ்வொரு தொழராலும் கவனிக்கப்பட்டுள்ளதே? நீ எந்த அளவு இந்த பிரச்சனையில், "மூன்று தமிழர் உயிர் காக்கும்" பிரச்சனையில், ஆழமாக ஈடுபாடு கொண்டிருந்தாய் என்பதற்கு இவையெல்லாம் எங்களுக்கு "கண்ணாடி" போல தெரிகிறது. அப்போதே நீ உன்னை பற்றி உன் உயிர் பற்றி "தீர்மானித்துவிட்டாயா?" நீ அப்போதே "திட்டமிட்டு விட்டாயா" செங்கொடி? அடுத்து "மக்கள் மன்றம்" அகஸ்ட் 23 ஆம் நாள் வேலூரில் ஏற்பாடு செய்திருந்த "ஆர்பாட்டத்திலும், ஊர்வலத்திலும்" கலந்து கொள்ள நான் சென்னையிலிருந்து அவசர, அவசரமாக வந்தேன். மற்ற மக்கள் மன்ற தோழர்களுடன் செங்கொடி நீயும் இணைந்துகொண்டு முழக்கமிட்டாய், ஆனால் உனது "முழக்கங்கள்" அன்று வானதிர கேட்டனவே? அப்போதும் உனக்குள் எழும்பியிருந்த கிளர்ச்சி "வித்தியாசமாக" இருக்கிறதே என்று நாங்கள் எண்ணிப்பார்க்கவில்லையே?
அகஸ்ட் 26 இல், "மூன்று தமிழர் உயிர் காக்கும் இயக்கம்" ஒவ்வொரு மாவட்டத்திலும் "மனிதச் சங்கிலி" என்று அறிவித்திருந்தது. அதை காஞ்சியில் வெற்றிகரமாக ஆக்க " மக்கள் மன்றமும்" ஏனைய அமைப்புகளும் இணைந்து தயார் செய்தன. அந்த மனித சங்கிலி ஆர்ப்பாட்டத்தில், வைகோ கலந்து கொண்டார். என்றைக்கும் இல்லாத அளாவுக்கு, செங்கொடி நீ வைகோ அருகில் போய் நின்று கொண்டு, "பெரும் சத்தத்துடன்" முழக்கங்களை எழுப்பினாயே? அப்போதுகூட நம் த்ழர்களுக்கு உன்னிடம் வந்திருக்கும் "ஆவேசம்" பற்றி எண்ணிப் பார்க்க முடியவில்லையே? அப்போதே நீ இந்த "திட்டத்தை" தீர்மானித்து விட்டாயா, செங்கொடி? இப்படி நீ தொடர்ந்து ஒரு வார காலமாக, "ஆவேசம்" அதிகம் வெளிப்படுத்தி, "பேரரவாலன், முருகன், சாந்தன்" ஆகியோரை காப்பாற்ற பெரும் அளவில் போராட்டங்களில் பங்கெடுத்து வந்தாயே? அவை எல்லாம் உன்னிடம் இப்படி "உன்னையே மாய்த்துக் கொள்ளும்" திட்டம் ஒன்று இருப்பதாக எங்களுக்கு தெரியவில்லையே?
செங்கொடி, நீ "எத்தனை நாள்" திட்டமிட்டாய்? என்று எண்ணிப் பார்க்க முடியாத "கையாலாகதவர்களாய்" நாங்கள் ஆகிவிட்டோம். எங்களை இப்படி "அழவைத்துவிட்டு" நீ மட்டும் "கொள்கை" தீப்பொறியை உடலில் தாங்கிச் சென்று விட்டாயே? நீ இளம் தழியாக மட்டுமில்லை. சிறிய தங்கையா மட்டும் இல்லை. நீ "உரிமை வேண்டும் தமிழர்களின்" ஒட்டுமொத்த தமிழர் தாயா?

செங்கொடி, நீ திட்டமிடுவதில் எங்களை மிஞ்சிவிட்டாய்.


நாங்கள் ஏதோ நாற்பதுஆண்டு அனுபவத்தில், போராட்டங்களுக்கு திட்டமிடுகிறோம் என்றும், அது அனேகமாக வெற்றிபெறுகின்றன என்றும் எண்ணி இறுமாந்து இருந்தோம். ஆனால் செங்கொடி, நீ திட்டமிட்டு நடந்துகொண்டதில் உன் திட்டத்தை நிறைவேற்றியதில் , அதில் நீ வெற்றிபெற்றதில், நாங்கள் மட்டுமல்ல, இந்த உலகமே வருத்தப்படுகிறது. ஒரு இளம் தோழர் புரட்சிகரமாக வளர்ந்த இளம் பெண் தோழி,,தானே தனித்து திட்டமிடுவதில்,திட்டமிட்டதில், சக தோழர்களையும் கலந்துகொள்ளாமல் திட்டமிட்டதில், அதையும் சகதோழர்களுக்கு தெரியாமலேயே நிறைவேற்றியதில், உனது இளம் வயதில் நீ வெற்றி பெற்றதில் நாங்கள் மகிழ்ச்சி அடையவில்லை. மாறாக ஆளாத்துயரத்தில் வீழ்ந்தோம். ஏன் தெரியுமா? நீ நாம் வைக்கும் கோரிக்கைகாக "உன் உயிரையே" தியாகம் செய்துவிட்டாய். இதை எப்படி செங்கொடி நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியும்? நீ இப்படி உயிரை விடுவதற்கா உனக்கு உன் அக்காமார்கள் மார்க்சையும், லெனினையும், மாவோவையும், பிரபாகரனையும், அறிமுகம் செய்தார்கள்?

இத்தனை நாளும் எந்த விசயமானாலும் உன் தாய் போல உடன் இருந்து உன் வளர்ச்சிக்கு உதவிய உன் அக்கா மகேசிடம் சொல்லாமல், கேட்காமல் நீ எதையாவது செய்தது உண்டா? இப்போது மட்டும் மகேசுக்கு தெரியாமல்,, ஜெசிக்கு தெரியாமல், மகாவிற்கு தெரியாமல், மேகலாவிடம் கூறாமல்,வின்சென்ட் அண்ணனிடம் தெரிவிக்காமல்,நீவீட்டைவிட்டு கிளம்பும்போது வீட்டில் இருந்த நீலாவிடம் சொல்லிக்கொள்ளாமல், எப்படி உன்னால் கிளம்ப முடிந்தது? சின்ன தம்பிகளாக அந்த "கூட்டு வாழ்க்கையில்" உன்னுடன் "மக்கள் மன்றத்தில்" வாழ்ந்துவரும் "கவுதமும், பகத்சிங்கும்" உனக்கு நினைவுக்கு வரவில்லையா? அந்த "குழந்தை கலைஞர்கள்" அடிப்ப்படும்போது ரசிப்பாய்? நீ ஆடிப்ப்படும்போது அந்த குழந்தை செல்வங்கள் ரசிப்பார்களே? எல்லாம் எப்படி மறந்து, இப்படி ஒரு முடிவை எடுத்தாய்? எதிர்களை வீழ்த்தத் தானே நாங்கள் "கதைகள்" சொல்வோம். எப்போதாவது நாமே நம்மையே வீழ்த்திக் கொள்வதை ஏற்றுக் கொண்டுள்ளோமா? உனக்கு மட்டும் அந்த விபரீத எண்ணம்எப்படிவந்தது? நக்சல்பாரி இயக்கம் பல வர்க்க எதிரிகளை அழித்தொழ்த்தது பற்றி வேண்டுமானால் நான் பேசியிருப்பேன். என்றுமே "தன் உயிர் தியாகம்" செய்வதை ஆதரித்து பேசியது இல்லையே? முத்துகுமார் மறைவு உனக்குள் இப்படி விபரீத முடிவை ஊக்குவித்ததா?


உன் முடிவை நீ தேடிக்கொள்வதற்கு முந்திய நாள்,முத்துகுமார் பற்றி அவரது மறைவால் ஏற்பட்ட எழுச்சி பற்றி ஏன் வினவி இருக்கிறாய்?. அது உனக்குள் ஒரு நெருப்பாய் எழுந்து கடைசியில் உன்னை அழித்துவிட்டதா? செங்கொடி, நீ பெரும்பாலான மக்கள் மன்றத்தின் தோழர்கள் சென்னை சென்றுள்ள சூழலில்,இரு சக்கரவாகனத்தை தனியே எடுத்துக் கொண்டு, காஞ்சி நகருக்கு ஏன் கிளம்பியிருகிறாய்?என்றுமே சொல்லாமல் வெளியே செல்லாத நீ அன்று மட்டும் ஏன் யாரிடமும் சொல்லிக்கொள்ளாமலே, வெளியே கிளம்பினாய்? கையில் இருக்கும் இரு சக்கர வாகனத்தை காட்டி பெட்ரோல்பங்கில் பாட்டில் நிறைய பெட்ரோல் வாங்கி ஏன் ஊற்றிக் கொண்டுள்ளாய்? வட்டாட்சியர் அலுவலகத்தில் வழக்கமாக மக்கள் மன்றம் போராட்டங்களை நடத்தி வந்ததால், நீ திட்டமிட்ட போராட்டத்திற்கும் வட்டாட்சியர் அலுவலக வளாகமே உன்னால் தேர்வு செய்யப்பட்டதா? வழமையாக மக்கள் மன்றத்தினர் ஒவ்வொரு ஆர்ப்பாட்டத்திற்கு வரும்போதும், மனுக்கள் கொடுக்க வரும்போதும், வழக்குகள் பலவற்றையும் நடத்த அங்கே இருக்கும் நீதிமன்றத்திற்கு வரும்போதும், தேநீர் குடிக்கும் கடைக்காரர் உனக்கும் பழக்கமானதால், அதை எப்படி தந்திரமாக பயன்படுத்திக்கொண்டாய்? அந்த "தேநீர் கடைக்காரிடம்" போக்குவரத்து நெரிசல் என்பதால், இரு சக்கர வாகனத்தை இங்கே நிறுத்தி செல்கிறேன் என்றும், நாளை அக்கா வரும்போது "சாவியை" கொடுத்து விடுங்கள் என்றும் சொல்லும் தந்திரத் திட்டம் உனக்கு எங்கிருந்து வந்தது? ஞாயிற்று கிழமை என்பதால், ஆள் நடமாட்டம் இல்லை எண்பதை பயன்படுத்திக் கொண்டு, மறைவில் உடலெங்கும் பெட்ரோலை ஊற்றிக் கொண்டு, திடீரென வெளியே தோன்றி " மூவரையும் தூக்கிலிடாதே" என்று உரக்க கூவிக் கொண்டே கீழே வீழ்ந்துள்ளாயே?

எப்படிப் பெண்ணே இத்தனை "திட்டங்களையும்" நீயே போட்டு நீயே நிறைவேற்றி எங்கள் எல்லோரையும் வென்று விட்டாய்? நாங்கள் உன்னிடம் "தோற்று விட்டோம்". .

Thursday, September 1, 2011

சிவப்பில் வளர்ந்து, நெருப்பில் போனாயே....அது சரியா?

செங்கொடி. உன்னை என் அன்பு தங்கை மகேஷ், மக்கள் மன்ற லுவலகம் காஞ்சிபுரம் ஊருக்குள் இருக்கும்போது, பத்து ஆண்டுகளுக்கு முனம்பு ஒரு நாள் அறிமுகம் செய்தாள். நீ ஒரிருக்கையில் உள்ள ஒரு பழங்குடி இருளர் குடும்பத்தில் பிறந்து, தாயை இழந்த நிலையில் மக்கள் மன்றத்தில் இணைக்கப்பட்டாய் என்பதையும் கூறினார். அதற்கு அந்த ஊர் மக்கள் மத்தியில் குடும்ப உறுப்பினர் மத்தியில் எவ்வளவு தூரம் கடினப்பட்டு "இணங்கவைத்து" அழைத்து வந்தோம் என்பதையும் கூறினார். மகேஷ் கடந்த இருபத்தொரு ஆண்டுகளாக தோழமையோடு, அன்பு தங்கையாக பல்வேறு போராட்டங்களில் உடன் வரும்போதெல்லாம் "மக்கள் மன்றத்தை" எப்படி ஒரு "கம்யூனாக" ஜெசியுடன் சேர்ந்து நடத்தி வருகிறார் எனபது எனக்கு தெரியும். கம்யூன் என்றால் "கூட்டு வாழ்கை" அன்பதை புரிந்து கொண்டு நீயும் அங்கே வாழை வந்தாய் எனபது எனக்கு தெரியும். "தாயை" இழந்த நிலையில் சென்கொடியே" உனக்கு தாயாக மகேஷ் இருந்து வளர்த்து வந்ததும் நம் இருவருக்கும் தெரியும்.

நாங்கள் "சிவப்பு" சிந்தனைகளை கற்று களம் வந்தவர்கள். மாவோ, சாரு, சே குவேரா, என்று படித்தவர்கள், தமிழ் மண்ணில் "பெரியாரையும்" இணைத்தே கற்றோம். ஈழ விடுதலை போர், எனகளுக்கு "புலிகளை" அறிமுகம் செய்தபோது, உனக்கும் அதுவே அறிமுகம் ஆனது. "தமிழீழ தேசிய தலைவராக" நாங்கள்மேதகு பிரபாகரனை காணும்போது, நீயும் எங்களுடன் சேர்ந்து அடஹியே எதிரோலித்தாய். "மஞ்சள் நிறத்தில்" புலி கொடியில் பறக்க, " சிவப்பு"தானே பின்னணி வர்ணம்? "மாவோ, சேகுவேரா "ராணுவ தந்திரங்கள்" பிரபாகரனுக்கே "பாடமாக" அமையவில்லையா? அதனால் "சிவப்பு" சிந்தனைகள் நமக்கு அன்னியமில்லை. நாங்கள் என்னதான் பேசிவந்தாலும், ஒவ்வொரு மே தினத்திலும், மக்கள் மன்றம் நடத்திவரும், ஊர்வலங்களிலும், மேடை "நடனங்களிலும்" உன் ஆட்டத்தில் இருந்த "நளினம்" என்னை கவராமல் இல்லை. இத்தனை சிறிய வயதில் இத்தனை அமைதி முகத்தோடு, "செங்கொடி" ஆடும் நடனமும், பாடும் பாட்டும், "திகைக்க"வைத்தன எண்பதை நான் சொல்லாமலும் இல்லை. மக்கள் மன்றத்தில் உள்ளத்தில் நீயே சிறிய வயது சிறுமி. "கவுதம், கார்கி" ஆகியோர் குழந்தைகள் என்பதால் நீதான் சிறிய வயது "போராளியாக" இருந்தாய்.

மக்கள் மன்றத்தினர் போராடும்போதேல்லாம், கைது செய்யப்பட்டால் உன் பெயரும் அதில் இருக்குமே? தளராத "இளம் போராளியாக" நீ இருந்தாய். யாரிடமும் அதிகம் பேசமாட்டாயே? நான் மக்கள் மன்றத்திற்கு வரும்போதெல்லாம், மகாவும், மேகலாவும் வந்து பேசுவார்கள். நீ ஓரத்தில் சிரித்துக்கொண்டே நிற்பாயே? ஏன் "செங்கொடி" பேசமாட்டாயா? என்று ஒரு முறை நான் கேட்டபிரகுதானே பேசத் தொடங்கினாய்? நான் வந்தவுடன் "ஓடிவந்து" முன்னே நின்றுகொண்டு, "தோழர்" என்று கூறிவிட்டு சிரிப்பையே? எங்கே போனது அந்த சிரிப்பு? இப்போது உடலெங்கும் "நெருப்பு சுட்ட வெடிப்புகளுடன்" எப்படி நான் உன்னை "பிணவறையில் சந்தித்தேன்?" எப்படி நான் அழாமல் இருக்க முடியும்? நான் பொதுவாக அழும் குணம் கொண்டவன் அல்ல என்பது உணமைதான்.அதை மாற்றி விட்டாயே? நீ எங்களை விட வலுவாய்ந்தவள்தானே?

சென்னை கோயம்பேடில் "பெண் வழக்கறிஞர்களின்" சாகும்வரை பட்டிநிப்போரில் கலந்து கொள்ள மகேஷ், ஜெசி, மகா,மேகலா, வின்சென்ட் அண்ணன், பாலு என மக்கள் மன்றத்திலிருந்து பலரும் வந்திருந்த அந்த அகஸ்ட் 28 ஆம் நாள், நீ வரவில்லை. அது வெறும் செய்தி என நினைத்தோம். ஆனால் உனக்குள் இப்படி ஒரு "மாபெரும் திட்டம்" இருக்கும் என்று எங்களுக்கு தெரியவில்லையே? "மணி அன்னா என்ன போராட்டம் எடுக்கலாம்" என்று மகேஷ் வினவிய போது, "உயிர் இழப்பு" இல்லாமல் கடுமையான போராட்டங்களை மத்திய அரசை எதிர்த்து எடுக்கவேண்டும் என்று மகேஷிடம் சொல்லி அனுப்பும்போது, நீ எப்படி " அதேநேரத்தில் "உயிர் இழப்பிற்கு" தயார் செய்துகொண்டிருந்தாய்? உனக்கு எப்படி நாங்கள் பேசியது கேட்டது? மகேஷ் காஞ்சி வருவதற்குள் முந்திக்கொண்டாயே?

Friday, August 26, 2011

தங்கையை உள்ளேயே சிறைவைக்க விரும்பும் அண்ணனா?


அப்பா "தலைவராக" இருக்கிறார். மூத்த அண்ணன் "மத்திய அமைச்சராக" ரசாயனத்துரையை பார்த்தும், பார்க்காமலும் இருக்கிறார். பேரங்கள் வணிகத்தில் முன்னேறி விட்டனரே. அதில் இளைய பேரன் கேட்டார் என்று, தலைவர் அந்த " தொலை தொட்பார்பு துறையை" வாங்கி தருகிறார். அதில் புதிய பணக்காரர்களான அம்பானிகளுக்கு, இளையவர் எல்லாம் செய்கிறார். பழைய பாரம்பரிய முதலாளி தனக்கு "டாடா" காட்டியதாக கோபபடுகிறார். டாட்டா, தாத்தாவிடம் வ்ருகிறார். அமைச்சரவை "கை" மாறுகிறது. கை நிறைய தங்கள் "பொம்மை" மூலம் குடும்பம் லாபம் பெறுகிறது. குடும்பத்தில் விழித்திக்கொண்டவன் கெட்டிக்காரன். வணிக சகோக்கள் உறவில் இருக்கும் " இளையவருகுதான்" அந்த வாய்ப்பு கிடைக்கிறது. அவரை " ஊடக சகோகளின்' வைக்கோல் கன்னுக்குட்டி என்றும் ஒரு "நக்கல் சொல்"உண்டு.

அதனால் தாத்தா தொடங்கிய புதிய "காட்சி ஊடகத்தில்" பயன் பெற்ற " பால்வாக்கள்" பணம் போட முயன்ற போது, தம்பிகாரரே அதை பெற்றுக்கொண்டார் என்பது பால்வா தரப்பு செய்தி. ஆனால் பணம் பெற்றதாகவும், காட்சி ஊடகத்தில் முக்கியத்தர் என்றும் "தங்கைகாரி" குற்றம் சாட்டப்பட்டு உள்ளே போகிறார். அடஹியே உணமியாக்கி அவரை உள்ளேயே தாலி, வெளியே வரவிடாமல் செய்ய இந்த "இளைய அண்ணனுக்கு" அப்படி ஒரு ஆசை. அதற்கு ஏற்றார்போல,ஒடகத்துரையை பெற்றுள்ள அமைச்சர், "பிணை வாங்க" உச்சநீதிமன்றம் செல்ல வற்புறுத்தி, அதுவே தங்கைக்கு எதிராக போய்விட்டது. அப்போதும் "தன்கைகாரியின்" கருத்தான "பிணை பெற உச்சநீதிமன்றம்" செல்ல வேண்டாம் என்ற கருத்து எடுபடவில்லை. இப்போது தனக்கு சம்பந்தமில்லாமல் " பிரதமரைய்டும், உள்துரையையும்" சாட்சிகளாக கூப்பிட தனது வழக்கறிஞர் கூறியது, தங்கைக்கு எதிராக போய்விட்டது. அதவே "பட்டத்திற்கு" துடிக்கும் அண்ணனுக்கு மகிழிச்சியை கொடுக்கிறது.

கனிமொழிக்கு முரண்பட்டு , அவரது வழக்கறிஞர் பேசினார்.


டில்லி "பாட்டியாலா நீதிமன்றம்" சீ.பி.ஐ. வழக்கை "பரபரப்புடன்" நடத்தி வருகிறது. திஹார் சிறையிலிருந்து, கனிமொழியும், ஆ.ராஜாவும், சரத்குமார் ரெட்டியும் நீதிமன்றம் வருகிறார்கள். ஆ.ராஜாவிற்கும், கனிமொழிக்கும் ஒரே வழக்கறிஞரை, "சுஷில் குமாரை" திமுக தலைமை நியமித்துள்ளது. முக்கிய குற்றவாளியாக முத்திரை குத்தப்பட்ட வழக்கறிஞர் ராஜாவிடமே , சுஷில் குமாரும் கலந்து பேசி, "வாதங்களை" தயார் செய்து கொள்கிறார். ராஜாவும்தனக்கு " தர்காபிர்கான" விவரங்களை எடுட்டிஹ்து கொடுத்து வருகிறார். இது இயல்பாகவே நடக்கக் கூடிய ஒன்றுதான். ராஜா மீது கூறப்பட்டுள்ள "குற்றச்சாட்டில்" அவர் "முதலில் வருபவருக்கு முதலில்" கொடுப்பது என்ற கொள்கையை பின்பற்றினார் என்பது முக்கிய குற்றச்சாட்டு. அந்த "முடிவை" எடுத்ததில் பிரதமரும், சிதம்பரமும் சேர்ந்துஎடுத்த முடிவு என்பது ராஜாவின் வாதம். அதாவது கொள்கை முடிவு எடுக்கும் போது, அன்றைய நிதி அமைச்சர் சிதம்பரமும், அன்றைய பிரதர் மன்மோகனும் இருந்து " கூட்டத்தின் குறிப்புகள்" எழுதப்பட்டு எடுத்த முடிவு அது.


அந்த "கூட்ட குறிப்புகளை" ஆ.ராஜா வழக்கறிஞரிடம் கொடுக்கிறார். அதே வழக்கறிஞர் கனிமொழிக்கும் பேசுவதால், கனிமொழி பற்றி பேசும்போது அந்த வாதத்தையும், அந்த "கூட்ட குறிப்புகளையும்" வழக்கர்டிஞர் சுஷில் குமார் நீதிமன்றம் முன்னால் வைக்கிறார். அது "ஊடகங்களில்" வெளியாகிறது. நாடாளுமன்றத்தில் அதைவைத்தே "பா.ஜ.க." பிரதமர் மீது பிரச்சனையை கிளப்புகிறது. மறுநாள் அதே பிரச்சனையை அதாவது, "பிரதமரும், சிதம்பரமும்" சாட்சிகளாக விசாரிக்கப்பட வேண்டும் எண்பதை ராஜா சார்பாக அதே வழக்கறிஞர் நீதிமன்றம் முன் வைக்கிறார். ராஜா மீது வைக்கப்பட்டுள்ள "குற்றச்சாட்டுகளுக்கு" அந்த வாதம் பொருத்தமானது. ஆனால் "கனிமொழி மீதான குற்றச்சாட்டுகளுக்கு " அது பொருத்தமானது அல்ல. கனிமொழி மீது "கலிஞர் டி.வி.க்கு" வந்த இருநூறு கோடி ரூபாய் பணம் சம்பந்தப்பட்ட வழாக்குதான் இருக்கிறது. அடஹ்ர்கு பிரதமரும், உள்துறையும் வரவேண்டிய அவசியம் இல்லை. இது வழக்கறிஞர் செய்த தவறு. இதிலும் தனக்கு சம்பந்தமே இல்லாமல் கனிமொழி மாட்டிக்கொண்டார். தேவை இல்லாமல் "பிரதமரையும், உள்துரையையும்" பகைத்துக்கொள்ளும் நிலைமை. அதில் அவருக்கு "நிலை தடுமாறிய நிலைமை".

முரண்டுக்கு மூக்கணாங்கயிறு கட்டணும்.


மரணதண்டனையை மூன்று தமிழருக்கு குறைப்பதோ, அல்லது நிர்வாக தடையை போடுவதோ, தமிழக அரசால் முடியும் என்ற சூழலில், புதிய தமிழகம் டாக்டர் கிரிஷ்ணசாமி, எழு கட்சி உறுப்பினர்களிடம் கையெழுத்து வாங்கி கொடுத்த "கவன ஈர்ப்பு தீர்மானத்தை" தான் ஒரு வார காலமாக எடுக்கவில்லை. தமிழக முதல்வரின் கட்டளைப்படி, பேரவைத் தலைவர் செயல்படட்டும். இன்று மீண்டும் எழுந்து தனது தீர்மானம் எடுப்பது பற்றி கிரிஷ்ணசாமியை பேசவிடவில்லை. அவரும் கோபத்தில், "வெளிநடப்பு" செய்துவிட்டார். இதுற்ற்ஹான் தமிழக சட்டமன்றத்தின் நிலைமை. முன்பே வந்த " மரணதண்டனை அமுலாக்கல் உத்தரவை" தமிழக உள்துறை ஒரு வார காலமாக "கிடப்பில்" வைத்திருந்தது. மத்திய அரசின் "நிர்ப்பந்தம்" மீண்டும் வார, அதை எடுத்து " சிறை அதிகாரிக்கு" அனுப்பியுள்ளது. அதை "முருகன், சாந்தன், பேரறிவாளன்" ஆகியோரிடம் சிறை அதிகாரி கொடுத்துவிட்டார். அவரும் "செப்டம்பர் ஒன்பதாம் நாள்" உங்களுக்கு "தூக்கு" என்றும் கூறிவிட்டார்.

தமிழக அரசை "மரணதண்டனைக்கு எதிராக" செயல்படுத்த, எதிர்க்கட்சி தலைவர் விஜயகாந்தும் "கவன ஈர்ப்பு தீர்மானம்" கொடுத்து விட்டார். அற்டஹியும் இன்று வரை எடுக்கவில்லை. அப்படி ஒரு "முரண்டா?" இந்த முரண்டை அடக்க "மூக்கணாங்கயிறு" எது? வருகிற "உள்ளாட்சி தேர்தலில்" தூக்கி எதிர்க்காதவர்கள் "ஒட்டுமொத்த தமிழகளின்" எதிரிகளாக அறிவிக்கப்படுவார்களே? வருகிற " நாடாளுமன்ற தேர்தலில்" இப்போது மூன்று தமிழர் தூக்கி எதிர்ப்பவர்கள் "ஒட்டுமொத்த தமிழர்களின்" எதிரிகளாக சித்தரிக்கப்படுவார்களே? அந்த " மூக்கணாங்கயிறு" இந்த ஆட்சியாளர்களுக்கு தெரியுமா? எத்தனை தூரம் "போற்குற்றங்களுக்கு துணை" போயிருந்தாலும், இப்போது "நாடாளுமன்றத்தில்" ஈழத்து இனப்படுகொலைகளை எதிர்த்து பேசி திமுக நற்பெயர் பெற்றுவருகிறதே? அந்த திமுக இந்த "தூக்குகளை" பயன்படுத்தி " மீண்டும் எழ" வாய்ப்பு இருக்கிறதே?

வருகிற தேர்தல் மட்டும்தான் இவர்களுக்கு "மூக்கனாங்கயிரா?" அல்லது "தமிழக இளைஞர்கள்" சிந்திப்பது போல "முத்துகுமார்களாக" அவர்களை ஆயிரக்கணக்கில் மாற்றுவது " மத்திய ஆட்சியாளர்களின்" திட்டமா?

Wednesday, August 24, 2011

"மரணதண்டனை ஒழிப்பு" ஒரே குரலாக ஒலிக்கட்டும்.

"மரணதண்டனை ஒழிப்பு" ஒரே குரலாக ஒலிக்கட்டும்.
மூன்று தமிழர் உயிர் காக்க ஒவ்வொரு தமிழரும், மனித உரிமை ஆர்வலர்களும் பெரு முயற்சிகளை தொடர்ந்து எடுத்து வருவது வேகப்பட்டுள்ளது. அவரவர் பாணியில் " முறையிடுவது", வேண்டுகோள் விடுப்பது", " கெஞ்சுவது", "நினைவு படுத்துவது" , "சட்ட நியாயங்களை சொல்வது", "முன்னுதாரணங்களை காட்டுவது", உணர்சிகரமாக பேசுவது", உணர்ச்சி முழக்கங்களை இடுவது", "வழக்கின் முடிவுறாதன்மையை சுட்டிக் காட்டுவது", "சாட்சிகளை வர்ணிப்பது", "குற்றம் சட்டப்பட்டவருக்காக வாதாடுவது", "இன உணர்வோடு குரல் கொடுப்பது", "விடுதலை செய்ய கோருவது", " பதிலுக்கு எதிரிகள் மீது பாய்வது", " அழுது புலம்புவது" , " ஆத்திரப்படுவது", இப்படி பல முறைகளிலும் இன்று குரல்கள் கிளம்பி வருகின்றன. அவதரி "ஒருங்குபடுத்தி", இன்றைய " சாத்தியப்பாடான கோரிக்கையான" "மரணதண்டனையை" "ஆயுள் தண்டனையாக குறையுங்கள்" எண்பதை தொடர் முழக்கமாக முன்வைக்க வேண்டிய தருணம் இது. மனித உரிமை தளத்தில் நின்று கொண்டு அவ்வாறு எழுப்பும் கோரிக்கைக்கு உலகம் செவி சாய்க்க முடியும். "மரணதண்டனை ஒழிப்போம்" என்ற உலக முழ்ஜக்கத்துடன் நாமும் சேர்ந்து கொள்வோம்.