இன்று முரசொலி ஏட்டில், உ.பி.களுக்கு " கொடிகட்டி பறக்கும் குடிநீர் பிரச்சனை" என்ற தலைப்பில், தி.மு.க.தலைவர் கலைஞர் எட்டு கேள்விகளையும், அதற்கான பதில்களையும் எழுதியுள்ளார். வழக்கம் போல, "கேள்வியும் நானே,பதிலும் நானே" பகுதிதான் இது. அதில் எழுதியுள்ள எட்டு கேள்விகளில், ஐந்து கேள்விகளுக்கு, முதல் வரியில் ஒரே பதிலை கூறியுள்ளார். ஏன் அப்படி கூறியுள்ளார்? அவர்தான் சிறந்த அறிவாளி ஆயிற்றே? அவர்தான் சிறந்த அரசியல்வாதி ஆயிற்றே? அவருக்கு அப்படி என்ன ஆதங்கம்? அவருக்கு அப்படி என்ன மனக் குழப்பம்? அவர் ஏன் நிலை குலைந்து போய் அப்படி எழுதுகிறார்? அப்படி என்னதான் அந்த ஐந்து கேள்விகளின் பதிலிலும் "ஒரே முதல் வரியை" எழுதினார்?
அது என்ன முதல் வரி? அறிய ஆவலாக இருக்கிறதா? எட்டு கேள்விகளில், மூன்றாம் கேள்விக்கான பதிலில், " கருத்துக்கணிப்பு வெளியிட்டுள்ள "இந்து"விடம் கேட்க வேண்டிய கேள்வியை என்னிடம் கேட்கிறீர்கள்" என்று உச்சநீதிமன்றம் தமிழக அரசின் தலைமை செயலாளரை நேரில் வந்து நிற்கும்படி ஊறியது பற்றிய கேள்விக்கு விடை தருகிறார். அதேபோல 4,5,6,8 ஆகிய கேள்விகளுக்கு எழுதிய பதிலில், " இதுவும் இந்துவிடம் கேட்கவேண்டிய கேள்விதான்" என்றி கூறுகிறார். அந்த அளவுக்கு அவரை துன்புறுத்தி, நிலை குலைய செய்த "தி ஹிந்து" செய்திதான் என்ன? ஒன்றும் இல்லை அது இந்து ஏட்டின் செய்தியும் அல்ல. சி.என்.என்-ஐ.பி.என். மற்றும் இன்னொரு சமூக ஆய்வு நிறுவனம், ஆகியவற்றுடன் "தி ஹிந்து" ஆங்கில நாளேடும் சேர்ந்து வருகிற 2013 நாடாளுமன்ற தேர்தல் எப்படி இருக்கும் என்று ஒரு ஆய்வை வாக்காளர்கள் மத்தியில் எடுத்து, வெளியிட்டு வருகிறார்கள். அதில் நேற்று, தமிழாண்டு பற்றிய ஆய்வு. அதில் .அ..தி.மு.க.அதிக வாக்கு விழுக்கடுகளை, அதாவது 23% இலிருந்து 26% க்கு கூடியுள்ளது என்று மட்டும் போட்டிருந்தால்கூட, தலைவருக்கு அவ்வளவு கோபம் வந்திருக்காது. அதிலும் அ.தி.மு.க.2009இல் இருந்த நிலையிலிருந்து,2013இல் 18-20 வரை தொகுதிகளில் வெற்றிபெறும் என்று போட்டதையும் தாண்டி திமுக பற்றி போட்டது அவரை துன்புறுத்திவிட்டது.அதனுடன் தி.மு.க. "ஏழு விழுக்காடு" வாக்குகள் குறைந்துவிட்டது என்று போடப்பட்டதுதான் அவருக்கு கோபத்தை வரவழைத்துள்ளது. அதிலும் 2009இல் பெற்ற 18 இடங்களில் இருந்து தி.முக. 8 முதல் 12 இடத்திற்கு குறையும் என்று போட்டது அதிக கோபத்தை ஏற்படுத்தி விட்டது.
A report compiled by a committee chaired by former US Secretary of State Madeleine K. Albright has criticised the international reaction to Sri Lanka during the final stages of the conflict despite embracing the Responsibility to Protect (R2P) concept.