Monday, August 1, 2011

மன்னார்குடியில் ஒரு அம்பேத்கர் பேரவை தொடக்கம்

ஞாயிறு அன்று மன்னார்குடி நகரில், "அம்பேத்கார் அறிவாலயம்" என்ற ஒரு நடுநாயகமாக கட்டப்பட்ட ஒரு மணடபத்தில், " அம்பேத்கார் ஜனநாயக இளைஞர் பேரவை" என்ற புதிய அமைப்பின் தொடக்க விழா நடந்தது. ஏற்கனவே "களப் பணியாளர்களாக" வரலாற்றை சந்தித்த தோழர்கள், செல்வராஜ், சதாசிவம் போன்றோர் "வெண்மணி" என்ற அடைப்புக் குறியுடன் அந்த பேரவையின் தொடக்கத்தை ஏற்பாடு செய்திருந்தார்கள். 1968 ஆம் ஆண்டு டிசம்பர் 25 இல், "கீழ வெண்மணி" கிராமத்தில் "நாற்பத்தி நாலு" தாழ்த்தப்பட்ட விவசாயக் கூலிகளை "கூண்டோடு" எரித்துக் கொலை செய்த " நெல் உற்பத்தியாளர் சங்க" தலைவர் "கோபாலகிருஷ்ண நாயுடுவை" உயர்நீதிமன்றம் விடுதலை செய்தபோது, "மக்கள் மன்றம்" நக்சல்பாரி புரட்சிகர கட்சியான, "இந்தியக் கம்யுனிஸ்ட் கட்சி{ மார்க்சிசிட்--லெனினிஸ்ட்}" யின் கொரில்லாபடை "அழித்தொழிப்பு" செய்தது. அந்த கட்சி "வினோத் மிஸ்ரா" தலைமையில் நடத்தப் பட்டுக்கொண்டிருந்தது.

அந்த "புரட்சிகர நடவடிக்கை" உலகம் முழுவதும் மக்களால் பாராட்டப்பட்டது. அந்த வழக்கில் காவல்துறை வீட்டில் யிருந்த சிலரை முதலில் கைது செய்து "தண்டனை" வாங்கிக் கொடுத்து. அதன்பிறகு அந்தவட்டரத்தில் இருந்து நக்சல்பாரி இயக்கத்திற்கு சென்ற சிலரை கைது செய்து அவர்கள் மீது "கொலைவழக்கு" போட்டது. அவர்களும் பிறகு விடுதலை ஆனார்கள். ஆனால் காவல்துறை அவர்களை "நக்சல்பாரி இயக்கத்தின் "கொரில்லாப்படை" என்று அறிவித்தது. அந்த தோழர்களான, "வெண்மணி செல்கராஜ், வெண்மணி சுப்பிரமணியன், வெண்மணி சதாசிவம்" ஆகியோர் இணைத்து இப்போது இந்த "அம்பேத்கார் ஜனநாயக இளஞர் பேரவை" அமைப்பை தோற்றுவித்துள்ளனர். அவர்களுடன் பழைய தோழர்களான "மழலை சிங்காரவேலு, அரங்க குணசேகரன், டி.எஸ்.எஸ்.மணி, தடா ரவி" ஆகியோரும் உரையாற்றினர்.

அதில் நிறைவேற்றப்பட்ட ஒன்பது தீர்மானங்களில், " தாழ்த்தப்பட்டோர், சிருபான்மையருக்கான பாதுகாப்புக்கு தனி சட்டம்" கேட்டிருந்தனர்." பஞ்சமி நிலங்களை மீட்டெடுக்க" கோரியிருந்தனர். "தாட்கோ நிதி" யை தாழ்த்தப்பட்டோருக்கே பயன்படுத்த கோரியிருந்தனர். "சமச்சீர் கல்வி என்பது பொதுப் பாடத்திட்டம் மட்டுமலா, உள்கட்டுமான வசதிகளிலும், கல்விக் கட்டணம் தவிர்ஹ்த்ட கட்டணம் வசூலிப்பதிலும், ஏழை, பணக்கார வேறுபாடு இல்லாத திட்டம்" வேண்டும் எனக்க கோரியிருந்தனர். "நாடாளுமன்றம் முதல் ஊராட்சிவரை உள்ள உறுப்பினர்கள், அரசு ஊழியர்கள் தங்கள் பிள்ளைகளை "அரசுப் பள்ளிகளில்" சேர்க்கவேண்டும்" என்று கோரிக்கை வைத்தனர். கட்சிகள் உட்பட அமைப்புகள் எல்லோரும் தங்கள் உறுப்பினர்களை அவரவர் பிள்ளைகளை அரசுப்பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என்றனர்.

நில மோசடிகளை நடவடிக்கை மூலம் தமிழக அரசு மீட்டெடுக்க எவ்ண்டும் என்றனர். இலங்கையில் "தமிழினப் படுகொலையை செய்ததற்காக மத்தியரசு தமிழர்களிடம் மன்னிப்பு கோரவேண்டும் " என்றொரு தீர்மானம்.போற்குற்றவாளியை தண்டிக்கவும், பொருளாதரா தடை கோரியும் போடப்பட்ட தமிழக அரசை பாராட்டி ஒரு தீர்மானம். இலங்கை உள்ளாட்சி தேர்தல்களில், வடக்கு,கிழக்கு மாகான மக்கள் "தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு: வெற்றி தேடித் தந்ததன் மூலம், இரண்டு தேசிய இனமும் இனியும்செர்ந்து வாழமுடியாது" என்பது தெளிவாவதால், "தமிழீழம்" அமைய வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என்றொரு தீர்மானம்.

Friday, July 29, 2011

சீ.பி.எம். திடீரென இலங்கைத் தமிழர் மாநாடு போட காரணம் என்ன?

நாளை அதாவது ஜூலை 30 ஆம் நாள் சென்னையில் "இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு தீர்வு என்ன?" என்பதாக ஒரு மாநாடு போடுகிறார்கள். இது என்ன மார்க்சிஸ்டுகளுக்கு புது அக்கறை என்று கேட்டு விடாதீர்கள். அவர்கள் இத்தனை ஆண்டுகளும் ஏறத்தாழ அறுபது ஆண்டுகளாக அந்த பிரச்னையை "ஆய்வு" செய்துகொண்டு இருக்கிறார்கள். மார்க்சிஸ்டு என்றால் மற்றவர்களைப்போல உடனடியாக ஒரு தீர்வை நம்புவதும், அதை பரப்புவதும், அதையே நடைமுறைப்படுத்த துணிவதும் முடியுமா என்ன? நிதானமாக அங்கே இருக்கும் வர்க்க சக்திகள் பற்றி ஆய்வு செய்து, அதன்பிறகு அங்கே இருக்கும் கம்யுனிஸ்ட் கட்சியிடம் கருத்து கேட்டு, பிறகு அந்த பிரச்சனையில் , கம்யுனிஸ்ட் கட்சி தலைமையில் ஆட்சி நடக்கும் அருகாமை நாடுகளின் கருத்து என்ன என்று தெரிந்து கொண்டு, பிடகு உலக நாடுகள் மத்தியில் என்ன கருத்து இருக்கிறது என்று தெரிந்து கொண்டு, எக்கதிபத்தியங்கள் என்ன நிலைப்பாடு எடுத்திருக்கிறார்கள் என்று கவனித்து, கடைசியாக தாங்கள் வாழும் நாட்டின் அரசு என்ன சொல்கிறதோ அடஹ்ர்கு விரோதம் இல்லாமல் முடிவு எடுக்க வேண்டாமா?


மூச்சு விடாமல் இத்தனை விவரங்களையும் சேர்க்கும் மார்க்சிசிடுகள், அதை தங்கள் "அரசியல் தலைமைக் குழு" விடம் காட்டி, அவர்கள் பொதுச்செயலாளரின் நேரடிப் பார்வைக்கு வைத்த பிறகு, அவர்கள் அத்தனை கருத்துகளையும் "தொகுத்து எழுதி" பிறகுதானே கட்சி முடிவு செய்ய முடியும்? அப்படி எடுக்கும் முடிவும் "தப்பித் தவறி" கூட, "தெலுங்கான" பிரச்சனை பற்றி குழப்பம் ஏற்பட்டது போல, " மேற்கு வங்கத்தில் "கூர்காலாந்த்" பிரச்சனை மீது முடிவு எடுக்காமல் தள்ளிப் போட்டு, "மாநில ஒற்றுமையை " காப்பாற்றியது போல , "பிரிவினைவாதம்" தலைதூக்க அனுமதிக்க கூடாது அல்லவா? அட. மார்க்சிசிடுகளே, நீங்கள் "தெலுங்கானாவில்" எடுத்த முடிவான, "ஒன்றுபட்ட ஆந்திரா" என்பது தெலுங்கான தவிர்த்த, ராயலசீமா, கடலோரம் ஆகிய ஆந்திராவின் பாணனை திமிங்கிலங்களுக்கு, அதாவது ரெட்டிகளுக்கும், கம்மா நாயுடுகளுக்கும், தெலுங்கானா பகுதியில் நிலங்களை ஆதிக்கம் செலுத்தவே உதவும். அதனால்தான் அங்கே " தெலுங்கானாவை ஆதரிக்கும் மாவோவாதிகள்" செல்வாக்கு உயர்கிறது.

தோழர்களே நீங்கள் மேற்கு வங்கத்தில் மாநிலத்தின் ஒற்றுமையை கட்டிக் காக்க எண்ணி, "கூர்காலாந்து " மக்களின் நியாயமான உரிமையை மறுத்துவந்ததால், இன்று மம்தா அதையே ஆயுதமாக்கி, "அதிக சுயாட்சியை கூர்காலாண்டுக்கு" வழங்கி நற்பெயர் பெற்று விட்டார். இது இன்றைய கதை. நேற்று அதாவது 1978 ஆம் ஆண்டு, முழு அஸ்ஸாம் மாநிலமும் "மாணவர் எழுச்சியில்" எழுந்த போது, நீங்கள் அதை எதிர்த்து நிலை எடுத்ததால் உங்களை அந்த மாநிலத்தை விட்டே மாணவர்கள் எழுச்சி விரட்டி அடித்ததே நினைவு இருக்கிறதா? இவாறு எங்கெல்லாம் "சுயாட்சி முழக்கம்" எழுகிறதோ அங்கெல்லாம் ஏதாவது காரணம் சொல்லிக்கொண்டு, அதை நீங்கள் எத்ரித்து வருகிறீர்கள். அதுதான் உங்கள் வரலாறாக இருக்கிறது. "உழைக்கும் மக்களின் ஒற்றுமை" எண்பதை பிரிவினைவாதிகள் உடைத்து விடுவதாக கற்பனைக் கதையை அவிழ்த்துவிடும் நீங்கள் "அடக்கப்படும் தேசிய இனங்களையோ, அடக்கப்படும் பிரதேச மக்களையோ, அதிகாரப் பரவலாக்குதளுகாக போராடும் மக்களையோ கண்டுகொள்வதில்லை. அதன்விளைவு அந்த குறிப்பிட்ட மக்களிடமிருந்து நீங்கள் "தனிமைப்படுவதைதவிர" வேறு வழியில்லை.


இப்போது இலங்கை பிரச்சனை எண் உங்களுக்கு "முக்கியமாக" படுகிறது? இன்று "தமிழ்நாடு "விழித்துக் கொண்டுள்ளது. நீங்கள் இருக்கும் "கூட்டணிதலைமை" இலங்கை விசயத்தில் ஒரு முடிவை எடுத்து உள்ளது. இலங்கை தமிழருக்காக பேசுகிறது. ராஜபக்சே உலக அளவில் "போர்க்குற்றவாளி" என்று அம்பலப்பட்டு கிடக்கிறார். இந்தி பேசும் மாநிலங்களில் கூட "ஹெட்லைன்ஸ் டுடே" வெளியிட்ட "சேனல் நாலு" பகிரங்கமாக போர்குற்றம் பற்றி மக்களிடம் எடுத்து சென்று விட்டது. ஆதியோ ஒட்டி மத்திய அரசும் ஒரு முடிவு எடுத்தாக வேண்டும் என்ற சூழல் ஏற்பட்டுள்ளது. .மார்கிசிடுகளின் தோழர்களாக கருதப்பட்ட "ஜேவிபி கட்சிகூட" தேர்தலில் தோற்று விட்டது. அதனால் தாங்களும் ஏதாவது தமிழருக்கான தீர்வு என்று கூறவேண்டிய கட்டாயம். இல்லாவிடில் சீ.பி.ஐ. என்ற மற்றொரு இடதுசாரி கட்சி, "தமிழருக்கு ஆதரவாக" செல்வது அதிகாரபூர்வமாக ஏற்றுக் கொள்ளப்பட்டுவிடும். அதனால் இலங்கையின் ஒற்றுமையை பாதுகாக்க சீ.பி.எம். இறங்குகிறதா என சந்தேகம் எழுகிறது.

அதனால்தான் தோழர்களே, நீங்கள் லெனின் "தேசிய இனங்கள்" பற்றி கூறியதை படியுங்கள். ஸ்டாலின் " தேசிய இன சுதந்திரம்" பற்றி சொன்னதை செவி மடுங்கள். "பிரிந்து செல்வதற்கான் ஆரிமையுடன் கூடிய சுய நிர்ணய உரிமை" என்ற சொற்கள் உங்கள் கண்களுக்கு புலப்படட்டும். அதை "ஈழத் தமிழர்கள்" எப்படி பெற முடியுமோ அவர்கள் பெற்றுக் கொள்ளட்டும் என்று சொல்லத் தோன்றும். ஆயுதம் தாங்கிய போறோ, அரசியல் ரீதியான போராட்டமோ, எதுவானாலும் அடக்கப்படும் சிறுபான்மை தேசிய இனத்திற்கு "பிரிந்து செல்லும் உரிமையுடன் கூடிய சுய நிர்ணய உரிமை" மட்டுமே விடுதலை வாங்கித் தரும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். அதை அந்த நாட்டு ஈழத் தமிழ் குடிமக்கள் "தமிழீழம்" மூலம் பெற்றுக்கொண்டாலும் அது அவர்களது வழி என்று கூறி குறுக்கே நிற்காதீர்கள். இன்று உலக அரங்கில் "ஏகாதிபத்தியத்தின் வளர்ந்த வடிவமான வல்லரசுகளுக்கு எதிரான சக்தி தேசிய இனங்கள்" தான் எண்பதை உணருங்கள்.

Thursday, July 28, 2011

தலித் கிறித்துவர்களுகாக அனைத்து கிறித்துவர்களும் நடத்தும் பட்டினி?

இன்று சென்னையில் "இந்திய கிறித்துவ மக்கள் கட்சி"சார்பாக ஒரு பட்டினிப்போர். இது டில்லியில் "அனைத்து ஆயர்களும் இணைந்து இன்று நடத்தும் கோரிக்கையை"வலியுறுத்த நடத்தப்பட்டது. கோரிக்கை புதிதல்ல. "தலித் கிறித்துவர்களை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் செக்க " வலியுறுத்தியே இரண்டு பட்டினிப் போர்களும் நடத்தப்பட்டன. இந்த கோரிக்கை ஐம்பது ஆண்டுகளாக இருந்து வருகிறது. ஏன் இன்னமும் மத்திய அரசு செவி சாய்க்க வில்லை? அதற்கும் அவர்கள் அளித்த "துண்டறிக்கை" பதில் சொல்கிறது. அல்லது விளக்கம் ஒன்றை கூறுகிறது. அல்லது பிரச்னையை புரிந்து கொள்வதற்கான விளக்கத்தை துனடரிக்கையில் வெளியிட்டுள்ளார்கள். அதுவே வேறு ஒரு விளக்கத்தை, அதாவது ஏன் சேர்க்கவில்லை என்ற நமது கேள்விக்கான விளக்கத்தை கூறுவதாக நமக்கு படுகிறது.அதாவது இந்திய அரசியல் சட்டம் முதலில் "இந்து தாழ்த்தப்பட்டோரையும், பிறகு சீக்கிய தாழ்த்தப்பட்டோரையும், பிறகு பவுத்த தாழ்த்தப்பட்டோரையும், தாழ்த்தப்பட்டோர் பட்டியலில்" சேர்த்துக்கொண்டது. ஆனால் ஆயிரம் முறை கத்தியும் "கிறித்துவ தாழத்தப்பட்டோரை" செர்த்த்டுக் கொள்ளவில்லை. ஏன்? ஏன்? ஏன்?

இந்த இடத்தில்தான் இந்திய அரசு இயந்திரத்தை பற்றி புரிந்து கொள்ளவேண்டும். இந்திய அரசியல் சட்டம் பற்றியும் புரிந்து கொள்ளவேண்டும். அரசியல் சட்டத்தில் "யார் இந்துக்கள்?" என்று தெளிவாக அவர்களது விளக்கத்தை கூறி இருக்கிறார்கள். "யார்,யார் முஸ்லிம் இல்லையோ, யார்,யார் கிறித்துவர் இல்லையோ, யார்,யார் பார்சி இல்லையோ, அவர்கள் எல்லாம் இந்துக்கள்". இதுதான் இந்திய அரசியல் சட்டம் கூறும் விளக்கம். அபப்டியானால் " மதம் அற்றவர்களாக" இருக்கும் மனிதர்கள், இந்துவா? "நாத்திகர்களாக" இருப்பவர்கள் இந்துகளா? இது கொடுமையாக இல்லையா? எனக்கு எந்த நம்பிக்கையும இல்லாத"ஒரு மதத்தில் என்னை" சேர்ப்பதற்கு இந்திய அரசியல் சட்டத்திற்கு என்ன உரிமை இருக்கிறது? அது எனது "தனி மனித உரிமையை" மீறுவது ஆகாதா? இப்படித்தான் இவர்கள் "தங்களது இந்து மதத்திற்கு" ஆள் சேர்க்க வேண்டுமா? அப்படியானால் இந்திய அரசு இயந்திரம் "மதசார்பற்றது " இல்லையா? இந்த கேள்விகள் எழ வேண்டும்.


பாகிஸ்தான் அரசை " ஒரு மதச் சார்பு ஆரசு" என்று எல்லோரும் கூறுகிறோம். அவர்களும் அவர்களது அரசியல் சட்டத்திலேயே நேர்மையாக" இஸ்லாம் சார்ந்தது" என்று எழுதி இருகிறார்கள். ஆனால் இந்திய அரசியல் சட்டத்தில் "இது ஒரு மதச் சார்பற்ற அரசு" என்று முகப்பிலேயே எழுதிவிட்டு, "இந்து மதத்தில் இல்லாதவர்களையும் " இந்து மதத்தில் சேர்க்கும் வேலையை ஒரு அரசியல் சட்டமே தனது விளக்கத்தின் மூலம் செய்யுமானால் "இது என்ன அரசியல் சட்டம்" இதுவும் மறைமுகமாக "ஒரு மதச் சார்பு அரசியல் சட்டம்தான்" . இப்படி பகிரங்கமாக் சொல்ல நமக்கு துணிவு வேண்டும். அதையும் தாண்டி, "இந்து மதத்தில் உள்ள தாழ்த்தப்பட்டோருக்கு மட்டுமே இட ஒதுக்கீடு" என்றால் யாரும் இந்து மதத்தை விட்டு போககூடாது என்றும், மற்ற மதத்திற்கு சென்றவர்கள் இந்து மதத்திற்கு திரும்பி வரவேண்டும் என்றும் பொருள் இல்லையா?இது யார் செய்யும் அல்லது செய்ய வேண்டிய வேலை? இந்து மத சாமியார்கள் செய்ய வேண்டிய வேலை அல்லவா? அதை ஒரு அரசு இயந்திரம் செய்தால் அது "ஒரு மத சார்புதானே?"

இந்து மதத்திற்குள் " சீக்கிய மதத்தையும், பவுத்த மதத்தையும்" போட்டு திணித்து இந்த ஆளும் கூட்டம் சித்து விளையாட்டு நடத்துவது ஏன்? இந்திய "நிலவுடமை "சமுதாயத்தில் நில உறவுகளை, "சாதி கட்டுமானங்களால்" இருக்க கட்டிப் போட்டிருகிறார்கள்.அதனால் "ஆதிக்க சாதிகள்" நில உடமையாலர்கலகவும், தாழ்த்தப்பட்டோர் உழைக்கும் கூலிகளாகவும் இருக்கவேண்டும் என்பது அவர்களது "தர்மம்". அதுவே இந்து மத தர்மம். ஆளவே அவர்கள் நில உறவுகளை பாதுகாக்க "இந்து மதத்தை" பதுககிரர்கள். அதைவிட்டு தாழ்த்தப்பட்டோர் வெளிஎரே செல்ல விடாமல் இந்த இட ஒதுக்கீடு கொள்கைகளையும் பயன்படுத்துகிறார்கள். நிலவுடமை சமூகத்திற்கு எதிரான " உழுபவனுக்கே நிலம்" என்ற கொள்கை என்றைக்கு ஒரு புரட்சியின் மூல சாத்தியமாகிறதோ அன்று தான் இந்த "சாதி கட்டுமானம்" உசடையும்.அதுவரை "தலித் கிறித்துவர்களுக்கும்" இட ஒதுக்கீடு கொடு என்ற இந்த நியாயமான கோரிக்கையை நாம் நாடு முழுவதும் கொண்டு செல்வதும், அதற்கு செவி மடுகாத மத்திய அரசை நிர்பந்தம் செய்வது தேவை.

Monday, July 25, 2011

ஏக மகிழ்ச்சியில் கலைஞர்

கருணாநிதி வாழ்க்கையில் சமீபத்தில் அதாவது ஐம்பது ஆண்டுகளாக அடையாத மகிழ்ச்சியை இரண்டு நாட்களாக அடித்துள்ளார் என்றால் அது ஆச்சர்யமான செய்திதானே? திமுக வின் செயற்குழுவும், பொதுக் குழுவும் ,கடுமையான "தேர்தல் தோல்விக்கு" பிறகு கூடும் பொது கலைஞரின் கையாளுதல் "புதிய அணுகுமுறையை" எடுத்தது. "சிறப்பு அழைப்பாளர்கள்" வரிசையில் இதுவரை இலாத முறையில் "ராஜாத்தி அம்மாளை" அமர வைத்திருந்தார். "கனிமொழி" இருக்கவேண்டிய செயற்குழு, பொதுக்குழுவில் ராஜாத்தி மறந்திருக்கிறார் என்பது எல்லா திமுக காரர்களுக்கும் புரிந்தது. ஆனாலும் "இதை எப்படி ஸ்டாலின்" பொறுத்துக் கொள்ள முடியும்? இதை பார்த்தும் எப்படி "தயாநிதி மாறன்" சும்மா இருப்பார்? இதை "அழகிரி ஏற்ற்க்கொல்கிறாரா?"இப்படி கேள்விகள் எல்லாம் திமுக காரகளுக்கு இருந்தது.

அதேபோல "தயாளு என்ன எண்ணுவார்?" என்பது சிலரை அச்சுறுத்தியது. ஏன் என்றால் இந்த ஐம்பத்தொரு ஆண்டு வரலாற்றில், "ராசாத்தியை" கோபாலபுரம் "தயாளு அம்மாள்" என்றுக் கொண்டதே கிடையாது. இப்போது ச்ய்ரகுழு நடக்கும் பொது, "ராஜாத்தி சிறப்பு அழைப்பாளர்" என்ற செய்தி கோபாலபுரத்துக்கார அம்மையாருக்கு எட்டியது. அதை "வில்லங்கமாக" ஒரு சக்தி அங்கே போய் கேட்டது. அதற்கு தயாளு கொடுத்த பதில்தான் எல்லோரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. " ஏன் அவர்களுக்கு தகுதி இல்லையா? ராஜாத்தி சிறப்பு அழைப்பாளராக சென்றது சரிதான்" என்று தயாளு அம்மையார் வாயிலிருந்தே வந்துவிட்டது. "மனைவிக்கும்,துணைவிக்கும்" மத்தியில் திணறி வந்த தலைவர் இந்த செய்தி கேட்டு ஒரே மகிழ்ச்சி அடைந்துள்ளார். கலைஞரைப்போலவே சிந்திக்க மனைவியை தயார் செய்ய இத்தனை ஆண்டு ஆகிவிட்டது போலும்.

திமுக செயற்குழு, பொதுக் குழு படிப்பினைகள்.

வரப்போகிறது. அண்ணன் அழகிரிக்கும், தம்பி ஸ்டாலினுக்கும் தகராறு என்று ஆர்ரோடம் கூறிய எத்ரித்தர்ப்பு செய்திகளுக்கு மத்தியில் கடைசியாக திமுக தனது செயற்குழுவையும், பொதுக்குழுவையும் வெற்றிகரமாக திருச்சியில் நடத்தி முடித்திருக்கிறது. எண்பத்து எட்டு வயதிலும், கலைஞர் அந்த இரண்டு குழுக்களையும் நடத்தி, முரண்பாடுகளைக் கையாண்டு வெற்றிகரமாக திரும்பி உள்ளார். தனது அன்பு மகள் கூட்டணி கட்சியின் "நரித்தந்திர வழியால்" பின்னப்பட்டு "திகார் சிறையில்" அவதிப்படுவதை தாங்க முடியாத ஒரு தந்தை அதையும் நெஞ்சில் ஏந்தி, இந்த இரண்டு பெரும் கூட்டங்களையும் நடத்தி முடித்திருக்கிறார்.

ஸ்டாலினுடைய ஆட்கள் திட்டமிட்டு, "செயல்தளைவராக" ஸ்டாலினை கொண்டு வார எடுத்த முயற்சிகள் முதல் நாள் "செயற்குழு" வில் "பொன்முடி, த.எ.வேலு"மூலம் வெளிப்பாட்ட போதும், "பொதுக் குழு"வில் கோவை ராமநாதன் மூலம் வெளிப்பட்ட போதும் "ஒரு உரத்த குறளை" கிளப்பி தலைவர் அதை அடக்கி விட்டார். அடஹ்ர்கு பேராசிரியர் அன்பழகனும், துரைமுருகனும் துணை செய்தனர். அழகிரி பேசவேண்டிய அவசியமே இல்லாமல் ஸ்டாலினது " பட்டத்துக்கு வரும் முயற்சியை" தலைவரே கையாண்டு தீர்த்து வைத்து விட்டார். அற்ற்ஹை தீர்மானிக்க ஒரு "குழுவை" போட்டு விட்டார். அது "தொடர்ந்து வெடிக்கும்" என்பது வேறு செய்தி. இப்போதைக்கு, "இப்போ, இல்லாட்டா எப்போ" என்று பாட்டு பாடிவந்த ஸ்டாலின் குழுவினருக்கு தோல்விதான். இதுதான் கலிஞர் என்பது நிரூபணமானது மீண்டும்.

புலம் பெயர்ந்த தமிழர் வலைப்பின்னல் தொடங்கியது.

தமிழர்கள் பத்து கோடிபேர் உலகம் முழுவதும் இருந்தாலும், ஈழத் தமிழர்களின் செயல்பாடுகள் மட்டுமே உலகை பேசவைத்துள்ளன. புலம் பெயர்ந்த தமிழர் என்ற சொல்லுக்கு கூட, ஈழத் தமிழர்கள் புலம் பெயர்ந்த நாடுகளில் வாழ்ந்தாலும் விடாமல் தமிழின உணர்வை வெளிப்படுத்தி வருவதை உலகம் அறியும். இந்தியாவின் எல்லைகளுக்கு உட்பட்டு இருக்கும் தமிழ்நாட்டிலிருந்து வெளியேறி உலகம் முழுவதும் சிதறிக்கிடக்கும் தமிழர்களின் நிலைமைகளை ஒருங்கிணைக்க எண்ணி, "உலகத் தமிழர் அமைப்பு" என்ற ஒன்றை ஏற்படுத்தியுள்ள ராஜ்குமார் பழனிச்சாமியும், இரா.செழியனும் ஒரு கருத்தரங்கை சென்னையில், ஈழப்படுகொலை நாளான ஜூலை 23 ஆம் நாள் கூடினார்கள்.

அதில் "இந்தியாவிலிருந்து புலம் பெயர்ந்து சென்றுள்ள தமிழர்கள்" நிலைமை பற்றியும் பேச பலரையும் அழைத்திருந்தார்கள். ஆனாலும் அங்கே "ஈழத் தமிழர் " பற்றிய கருத்துக்கள்தான் அதிகம் வெளிப்பட்டன. முதலில் சென்னை பல்கலைக் கழகப் பேராசிரியர் மணிவண்ணன், ஒரு உரையை நிகழ்த்தினார். அது "ஈழத் தமிழர் இனப்படுகொலை" பற்றியது. அடுத்து நாவே நாட்டிலிருந்து வந்த பிரபு கண்ணனும், மனித உரிமை ஆர்வலர் டி.எஸ்.எஸ்.மணியும், " புலம் பெயர்ந்து இருக்கும் இந்தியத் தமிழர்களது" நிலை பற்றி பேசினார்கள். அதில் "தமிழர்களின் அடையாளம்" பற்றியும் பேச்சு வந்தது. "தமிழர் விரோத சக்திகள் இன்று திட்டமிட்டு, மத ரீதியாக தமிழர்களைப் பிரிக்கிறார்கள்" என்ற செய்தியையும் சொன்னார்கள். முஸ்லிம் தமிழர்களையும், கிறித்துவ தமிழர்களையும், தமிழின அடையாளத்திலிருந்து பிரிக்க ஒரு "சதி" நடப்பதாகவும், அதற்கான "பரப்புரை" செய்யப்படுவதாக்கவும்கூட கருத்துக்கள் வெளிவந்தன.

அத்தகைய முயற்சிகள், "சிங்கள சூழ்ச்சி" என்பதாக இலங்கையில் வர்நிக்கப்படவேண்டும் என்றும், இந்திய அரசின் உளவுத்துறை சூழ்ச்சி என்று காணப்படவேண்டும் எனவும் அங்கே கூறப்பட்டது. அதுதவிர "தமிழ்நாட்டில் ஆயிரம் ஆண்டுகளாக இரண்டறக் கலந்துவிட்ட, தெலுங்கு, கன்னட, மலையாள அடிப்படையை" ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கொண்டிருந்த அல்லது பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு இடம் பெயர்ந்த மக்கள், தம்ழ்நாட்டு தமிழர் பண்பாடுகளுடன் இரண்டறக் கலந்து "தமிழர்களாகவே" மாறிவிட்ட போதும் அவர்களை "மாற்று மொழியினர்" என்று முத்திரை குத்தி உடைக்கும் போக்கு இருக்கிறது என்றும் கூறப்பட்டது. அத்தகைய போக்கு டில்லி அரசால் அவர்களது உளவுத்துறையால் வரவேற்கப் படுகிறது என்பதும் எடுத்து வைக்கப்பட்டது. அதாவது பல பத்து ஆண்டுகளாக "தமிழர் வாழ்வியலுக்காக" போராடிவரும் சக்திகளை புறந்தள்ள இப்படி ஒரு சூழ்ச்சி செய்யப்படுகிறது என்றும் அங்கே கூறப்பட்டது.

அதனால் "தமிழர் அடையாளத்தை" புரிந்து கொள்வதில் ஸ்டாலின் கோரியுள்ள விளக்கம் எடுத்துக் கொள்ளப்படவேண்டும் எனக் கோரப்பட்டது. அதில் "ஒரே எல்லைக்குள், ஒரே பொருளாதார முறையில், ஒரே பண்பாட்டில், ஒரே மொழியில் இணையும் மக்கள் கூட்டம்" ஒரே தேசிய இனம் என்று கோரப்பட்டது நினைவு கூறப்பட்டது.அந்த கூட்டத்தில் உரையாற்றிய மருத்துவர் எழிலன், " பார்ப்பன சக்திகளிடம்" எச்சரிக்கையாக இருக்கவேண்டும் எண்பதை வலியிருத்தினார். இந்திய அரசு இப்போது "ஒற்றையாட்சியை நோக்கி" செல்கிறது என்றார். பார்ப்பனர் அல்லாத சக்திகளும் "தமிழர் விரோத பார்ப்பனீய அணுகுமுறைகளை" எடுத்துள்ளதை வழக்கறிஞர் பாண்டிமாதேவி நினைவு படுத்தினார். திருமுருகன் காந்தி பேசும்போது, " ஹிலாரி கிளிண்டன், ஜெயலலிதா, ராஜபக்சேவின் பிரதிநிதியாக இருக்கும் ஏன்.ராம்" ஆகியோர் செய்யும் செயல்களை கவனம் வேண்டும் என்றார். ராஜபக்சேவை போர்க்குற்றவாளி என அறிவிப்பதை விட, தமிழீழம் வேண்டும் என்பதே நமது குறிக்கோள் என்று அவர் கூறினார்.

பேராசிரியர் சரஸ்வதி பேசும்போது, " ராஜபக்சேவை போர்குற்றவாளி என்று அறிவிப்பதும், தமிழீழம் அடைவதும்" எதிர் எதிரானது அல்ல என்றும், இரண்டும் "ஒரே நாணயத்தின் இரண்டு வெவ்வேறு பக்கங்கள்" என்றும் கூறினார். ஹெட்லைன்ஸ் டுடே ஊடகத்திலிருந்து வந்த " ராஜேஷ் சுந்தரம்" ஊடகங்களில் "சாதகமான" சக்திகளை புரிந்து கொண்டு அவர்கள் மீது செயலாற்ற வேண்டும் என்றார். விடுதலைப் புலிகளின் " கொரில்லா தந்திரமும், போர் தந்திரமும்" ஊடககங்கள் இடையேயும், பரப்புரையிலும் கையாளப்படவேண்டும் என்றார். "தமிழர்களுக்கான கல்வி' என்ற தளிப்பில், வழக்கறிஞர் பாண்டிமாதேவியும், காரை மைந்தனும் பேசினார்கள். " "தாய் தமிழ் பயிற்றுமொழிக் கல்வியை" அவர்கள் வலியுறுத்தினர். கல்வி கற்றவர்கள் இன உரிமை விசயத்தில் முன்னே நிற்க வேண்டும் என்று பாண்டிமாதேவி வலியுறுத்தினார்.

கடைசியாக தீர்மானங்கள் வாசிக்கப்பட்டன. அவற்றில் " தமிழர்கள் மதம் தாண்டி சிந்திப்பதும், பழமை பண்பாட்டை உடைப்பதும் அவசியம்" என்று கூறப்பட்டது."சாதிகளை உடைப்பதும், பெண்ணடிமைத்தனத்தை உடைப்பதும்" தேவை என்பது வலியுறுத்தப் பட்டது.தமிழ்நாட்டு சட்டப்பேரவை கொண்டுவந்த " போர்குற்றவாளிகளை தண்டிப்பதையும், பொருளாதார தடையை இலங்கைக்கு அறிவிப்பதையும்" வரவேற்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 1981 ஆம் ஆண்டு எம்/ஜி.ஆர். அறிவித்த "உலகத் தமழ்ச் சங்கம்" பத்து கோடி நன்கொடையை அப்போது பெற்றதாயும், அதற்கு பதினாலு ஏக்கர் நிலம் மதுரையில் நீதிமன்றம் முன்னால் வழங்கப்பட்டதையும், அவை தஞ்சை தமிழ்ப் பலகலைக் கழகத்தின் க்கட்டுப்பாட்டில் இருப்பதையும், அதை மாற்றி களைஞர் ஆட்சி " உலகத் தமிழ் செம்மொழி தொல்காப்பியர் பேரவை" என்று ஏற்படுத்தியதையும் சுட்டிக் காட்டி, அதில் எம்.ஜி.ஆர்.செய்த திட்டத்தை இன்றைய தமிழக அரசு மீண்டும் கொண்டுவர கூட்டம் கேட்டுக் கொண்டது.

"நாடு கடந்த தமிழீழ அரசு "பற்றிய விளக்கத்தை பேரா.சரஸ்வதி அளித்தார். அப்போது அந்த "நாடு கடந்த தமிழீழ அரசாங்க தோழமை மையம்' இந்தியாவில் ஏற்படுத்தி செயல்படுகிறோம் என்பதையும் எடுத்துக் கூறினார். திருமுருகன் தனது உரையில் " நிறுவனங்களை தமிழர் நாளுக்காக" ஏற்படுத்துவது பற்றி கூறினார். மொத்தத்தில் ஐமப்துக்கு மேற்பட்ட தமிழின ஆர்வலர்கள் கலந்து கொண்ட கூட்டமாக அது இனிது நிறைவுற்றது.

குட்டிமணி,ஜெகன்,தங்கத்துரை கொலைகள் சென்னையில் நினைவு.

1983 ஆம் ஆண்டு 25 ஆம் நாள் வெலிக்கடை சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழ்க் கைதிகளை, சிங்கள காடையர்கள், சிங்கள கைதிகள், சிங்கள ராணுவத்தினர் இணைந்து சிறைக்குள் அவர்களது அறைகளுக்குள் புகுந்து தாக்கினார்கள். வெட்டினார்கள். கண்களைப் பறித்தார்கள். படுகொலை செய்தார்கள். அதில் டெலோ இயக்கத்தின் தலைவர்களாக இருந்த "குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன்" ஆகியோர் குறிப்பாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டனர்.குட்டிமணி தனது மரணதண்டனையை எதிர்பார்த்து இருக்கும்போதே, தனது கண்களை தானம் செய்ய விரும்புவதாகவும், தன் கண்கள் மாறப்போகும் "தமிழ் ஈழத்தை" காணவேண்டும் என்றும் கூறியிருந்தார். அதனாலேயே அவர்களது "கண்களை சிங்களக் காடையர்கள்" பறித்து எடுத்து அவர்களை கொலை செய்தனர்.

இந்த நாளில், அந்த தமிழீழத் தியாகிகளின் நினைவாக, சென்னை மயிலாப்பூர் நொச்சிக்குப்பத்தில் அவர்களது படங்களை வைத்து, அனைத்து இந்திய மீனவர் சங்கங்களின் கூட்டப்பினர்" மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். அதில் "நாடு கடந்த தமிழீழ அரசாங்க தோழமை மையம் அமைப்பாளர் பேரா.சரஸ்வதி" , "உலகத் தமிழர் பேரமைப்பு பொருளாளர் சந்திரேசன்" , அகில இந்திய பாரம்பரிய மீனவர் சங்க தலைவர் எஸ்.எ.மகேஷ், மனித உரிமை ஆர்வலர் டி.எஸ்.எஸ்.மணி, வழக்கறிஞர் அருள், தமிழ்நாடு மீனவர் முன்னேற்ற சங்கம் தலைவர் கபடி.மாறன், பெரியார் திராவிடர் கழகம் தென் சென்னை மாவட்ட எயலாளர் தபசி குமரன், மற்றும் மீனவர் சங்க முன்னோடிகள் கலந்து கொண்டார்கள். ஆர்வம் மிகுதியால் அங்கே வந்த காவல்துறை அதிகாரிகளும் முதலில் திகைத்துவிட்டு பிறகு "குட்டிமணி, ஜெகன்" பற்றி கேட்டு தெரிந்து கொண்டது வித்தியாசமாக இருந்தது.