Wednesday, February 23, 2011

சோனியா-கருணா-டக்லஸ் சதியில் பாலுவின் படகு.

பிரவரி மாதம் இருபத்தி மூன்றாம் நாள் நியு இந்தியன் எச்ப்ரஸ் ஆங்கில ஏடு ஒரு செய்தியை அம்பலப்படுத்தி உள்ளது.சமீபத்தில் தமினாட்டை குலுக்கிய நிகழ்ச்சியான நூற்றாறு நாகப்பட்டினம் மீனவர்களை யாழ்ப்பாணத்தில் பிடித்துவைத்தது பற்றியா செய்தி அது. ஆனால் நடந்த அந்த நிகழ்ச்சி பற்றி ஒவ்வொருவரும் ஏன் இப்படி ஈழத்தமிழ் மீனவர்கள் மத்தியிலும், தமிழ்நாட்டு மீனவர்கள் மத்தியிலும் புதிய முரண்பாடு தோன்றுகிறது என்று வியந்து கொண்டிருக்கும் போது, அதற்கான அடிப்படை எப்படி திட்டமிடப்பட்டது என்று அந்த ஆங்கில நாளேட்டு செய்தி விளக்குகிறது. தடை செய்யப்ப்பட்ட மீன்பிடி வலைகளை தமிழ்நாட்டு மீனவர்கள் சிலர் பயன்படுத்துவதும், அதை ஈழ மீனவர்கள் தொடர்ந்து எச்சரித்துவந்ததும், அந்த முரண்பட்டு இந்த அளவுக்கு வெடித்ததா? என்ற கேள்வி எல்லோர் மனதிலும் இருந்தது. இழுவலை பயன்படுத்தி வரும் இந்திய மீனவர்களும், இழுவலையை பயன்படுத்தாத ஈழ மீனவர்களும், சந்திக்கும் முரண்பட்டு இவ்வளவு தூரம் கொண்டு சென்றதா என்றும் விவாதித்தோர் உண்டு.
ஆனால் அதற்குபிறகு, ஈழ மீனவர்களை வைத்து இந்திய தூதரக வாயிலில் போராட்டம் நடத்தியவர்கள் அரசியல் சூழ்ச்சிகள் செய்பவர்கள் என்று புரிய வேண்டி வந்தது. இதற்காகவே அங்கு அமைச்சராக இருக்கும் டக்லஸ் தேவானந்தா செயல்பட்டுள்ளார் என்பதும் தெரியவந்தது.அப்படியானால் இரண்டு நாட்டு மீனவர்களுக்கும் இடையில் உள்ள எருபாடுகளை பயன்படுத்தி டக்லஸ் நுழைந்துவிட்டார் என்றும், அதுவே அவர் ராஜபக்சேவிற்கு செய்யும் விசுவாச வேலை என்றும் ம்ட்டுமே எண்ண வேண்டியிருந்தது .இப்போது அதையும் தாண்டி கதை செல்கிறது. அதாவது அங்கே யாழ் கடல் எல்லைக்குள் சென்று மீன் பிடிக்க இழுவளைகளுடன் கூடிய படகுகளை அனுப்பியது அந்த படகுகளின் முதலாளி தி.மு.க.எம்.பி. டி.ஆர்.பாலு என்று தெரிய வந்துள்ளது.இது பயங்கர அதிர்ச்சி செய்தியாகும்.. ஏன் என்றால் தற்செயலாகவோ, அல்லது இயற்கையில் இருக்கின்ற முரண்பட்டு காரணமாகவோ எழுந்த ஒரு தகராறை சிங்கள அரசும், அவர்களின் அடிவருடி அமைச்சரான டக்ளசும் சேர்ந்து, தமிழ்நாட்டு மீனவர்களுக்கும், ஈழத்து மீனவர்களுக்கும் உள்ள பகையாக ஆக பார்க்கிறார்கள் என்பதே நமது புரிதலாக இருந்த நேரத்தில், அந்த நாடகத்தில் தி.மு.க.தலைமையின் விசவாச எம்/பி உள்ளே நுழைந்து குட்டையை குழப்பியுள்ளார் என்பது பெரும் அத்ர்ச்சிதானே?
இந்த நாடகம் திட்டமிட்டு நடத்தப்பட்டது என்று இப்போது தெரிந்துவிட்டது. அதுமாத்திரம் இன்றி இந்த நாடகத்தில் இந்திய அரசும், தமிழக அரசியல்வாதிகளும் ஈடுபட்டிருப்பதும் இப்போது வெளியே வந்துவிட்டது. அதிலும் குறிப்பாக இதுவரை கவலைப்படாமல் வெறும் கடிதம் எழுதுவதன் மூலம் தமிழ்நாட்டு மீனவர்களின் கொலைகளுக்கு வருத்தம் தெரிவித்து வந்த ஒரு முதுபெரும் அரசியல்வாதியான கலைஞர் கருணாநிதி இப்போது மட்டும் ஏன் தெருவுக்கு வந்து போராட தன் மகள் உட்பட பல்லாயிரக்கணக்கான கட்சி தொண்டர்களை இறக்கிவிட்டார் என்ற கேள்வி பதில் கிடைக்காமலேயே இருந்துவந்தது. இப்போது அதற்கும் பதில் கிடைத்திவுட்டது. அவரே எழுதி, அவரே நடித்த நாடகத்தில் கதாபாத்திரங்களாக பாலுவும், கனிமொழியும், நடித்திருக்கிறார்கள் என்பதும், அந்த தீவிலிருந்து அந்த நாடகத்தில் நடித்தவர் டக்லஸ் என்ற இலங்கை அமைச்சர் எனபதும் புரிந்துவிட்டது.
ராஜபக்சே என்ற அரச தஹ்ளைவரின் பதவியை காப்பாற்ற டக்லஸ் என்ற அவரது நண்பரும், கருணாநிதி என்ற இன்னொரு நண்பரும் ஏற்பாடு செய்த நாடகமா என்று கேள்வி எழுந்துள்ளது. என்னதான் ராஜபக்சேவிடம் பல வெகுமதிகளை பெற்றாலும், டக்ளசும், கருணாநிதியும் அப்படி தங்களை இழந்து அல்லது தாங்கள் அமபலப்பட்டு நண்பே ராஜபக்செவிர்க்காக இத்தகைய இழி செயலில் ஈடுபட மாட்டார்கள் என்பதும் அனைவருக்கும் தெரியும். ஏன் என்றால் இருவருமே அரசியலில் பழத்தை தின்று கோட்டையை போட்டவர்கள்.தங்களுக்கு லாபம் இல்லாமல், தங்காளின் நலன் முதன்மையாக இல்லாமல் இந்த இருவருமே எந்த தொழிலிலும், அல்லது நாடகத்திலும் ஈடுபட மாட்டார்கள். அப்படி இருக்கும் போது டக்ளசுக்கு இதில் எண்ண பலன்? அவர் மீது தமிழ்நாட்டு நீதிமன்றத்தில் உள்ள பிடி வாரண்டு ரத்து செய்யப்படவேண்டும். அதற்கு முதல்வர் கருணாநிதியின் தயவு வேண்டும். அதற்காக அவர் கருணாவின் எந்த நாடகத்திற்கும் ஒத்துழைப்பு கொடுக்க தயார் என்பது புரிகிறது.
அப்படியானால் தமிழக முதல்வர்தான் நாடகத்தின் கதை-வசன கர்த்தாவா? எதற்க்காக அப்படி ஒரு நாடகத்தை அரங்கேற்றி இரு நாட்டு தமிழ் மீனவர்கள் மத்தியில் கருணா என்ற முதல்வர் விளையாட வேண்டும்? சமீபத்தில் தமிழக கரையோரம் கொல்லப்பட்ட மீனவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருவதும், அதை ஒட்டி தமிழ்நாட்டில் மக்கள் மத்தியில் மத்திய-மாநில அரசுகளுக்கு எதிராக கோபம் கூடிவருவதும் முதல்வர் கருணாவிற்கு தெரியவந்தது. அதற்கு எண்ண வழி என்று டில்லியை அவர் கேட்டால் அவர்கள் கீறல் விழுந்த இசைத்தட்டு போல, கடலிலே எல்லையை கடக்க கூடாது என்று மட்டுமே கூறிவருகின்றனர். கடலிலே எல்லை கிடையாது என்பதும், குறிப்பாக மீன்வர்களுக்கு கடலில் மீன் பிடிக்க எல்லை கிடையாது என்பதும் பகிரங்கமாக மீனவர்கள் மைப்புகளால் முன்வைக்கப்படுவதும் அந்த உண்மை தெரிந்தால் இந்திய அரசின் வாதம் அம்பலமாகும் என்பதால் அந்த உண்மையை உடைக்க வேண்டும் என்றும் மத்திய-மாநில உலவுத்த்ரைகள் எண்ணின.

அதற்கு அவர்கள் இருநாட்டு மீனவர்கள் மத்த்டியில் உள்ள வேறுபாடுகளை பயன்படுத்த திட்டமிட்டனர்.ஆனால் அவர்களுக்கு அத்ரிச்சி தரும் விதத்தில் இருநாட்டு மீனவர்களும் இணைந்து கடலில் இருநாட்டு மீனவரும் இருநாட்டு எல்லைகளிலும் மீன் பிடிக்க உரிமை உண்டு என்று அறிவித்தனர். இன்றுவரை அறிவித்துக்கொண்டும் இருக்கின்றனர். அவர்களுக்குள் சமாதானமாக போய்விட்டால் இரு நாட்டு அரசுகளுக்கும் தலைமை ஆதிக்கம் இல்லாமல் போய்விடும். அதனால்தான் அந்த வேறுபாடுகளை பயன்படுத்த அவர்களுக்குள் உள்ள ஒப்பந்தமான இழுவளையுடன் யாழ் கரைக்கு வரவேண்டாம் எனபதையே மீற ஒரு திட்டம் போடப்பட்டது. அதை நிறைவேற்ற டி.ஆர்.பாலுவின் படகுகள் முதலாளியின் கட்டளையுடன் பயன்படுத்தப்பட்டன என்பதே இப்போது வடக்கு இலங்கையின் பாதிரியார் வெளியிட்டிருக்கும் தகவல். டி.ஆர்.பாலு என்பவர் சிறிய கப்பல்கள் மூலம் ஆழ்கடல் மீன்பிடித்து அதன் மூலம் தமிழக மீனவர்களுக்கு ஏற்கனவே துரோகம் இழைத்துவருபவர். அந்த மனிதரின் படகுகள் சில நாகப்பட்டினம் பகுதியில் இந்த வேளையில் ஈடுபட்டது இப்போது அம்பலமாகி உள்ளது.
அதனால்தான் தி.மு.க.தலைமை திடீரென அந்த பிரச்சனையில், பதினாலு மணி நேரத்திற்குள் பல்லாயிரம் மக்களை வாகனங்கள் ஏற்பாடு செய்து அழைத்துவந்து, இலங்கை எத்ரிப்பு என்பதாக ஒரு ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளது என்பதும் இப்போது தெரிந்துவிட்டது.

Tuesday, February 22, 2011

இயற்கையும் , செயற்கையும், ஈழத்தமிழரை வதைப்பதால் கிளர்ச்சி எழும்.

இலங்கை முழுவதும் பலத்த மழை. முதல் மழை பொய் இரண்டாம் மழை மேலும் அதிகமான சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. பதினெட்டு மாவட்டங்களில் அந்த தீவு முழுவதும் பாதிக்கப்பட்ட மக்கள் வீடுகள் இழந்து தவிக்கிறார்கள். அதில் சிங்கலரும், ஈழத்தமிழரும், தமிழ் பேசும் முஸ்லிம்களும் இருக்கின்றனர். ஆனால் பதினெட்டு மாவட்டங்களில் மூன்றே மாவட்டங்களில்தான் அதிகமான பாதிப்பு. அந்த மூன்று மாவட்டங்களும் முறையே மாட்டகிலப்பு , அம்பாறை, திருகோணமலை ஆகியவையே. அவை மூன்றும் கிழக்கு மாகாணத்தில் வருகின்றன. அதாவது தமிழர் பகுதிகளாக அடையாளம் காட்டப்பட்டவை. அதிக சேதம் நடந்துள்ள அந்த மாவட்டங்களை சிங்கள் இன வெறி அரசு கவனிக்கவே இல்லை.
பாதிக்கப்பட்ட சிங்கள பகுதிகளுக்கு சென்ற அரசத்தலைவர் மஹிந்த ராஜபக்ஷே, தமிழர் பகுதிகளை எட்டிக்கூட பார்க்கவில்லை. மொத்தம் பதிமூன்று லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இலங்கை அரசு மொத்தம் நூறு கோடி ரூபாயை இதர்த்க்காக நிவாரத்தொகையாக ஒதுக்கியுள்ளது என்று அறிவித்துள்ளார்கள். பாதிக்கப்பட்ட பதிமூன்று லட்சம் மக்களுக்கும் இந்த நூறு கோடி ரூபாய் பணம், பிரித்துக்கொடுத்தாலே ஆளுக்கு நூறு ரூபாய் கூட வராது. ஒரு நாளைக்கு நூறு ரூபாய் பணத்தில் மூன்று வேலையும் சாப்பிடவேண்டும். இந்திய பணத்தில் அது முப்பது ரூபாய்க்கு சமம். அதை வைத்துக்கொண்டு எப்படி அரைவயிறை கூட நிரப்பமுடியாதே?அந்த அளவுக்கு மக்கள் மீது அக்கறை இல்லாத ஒரு அரசு அங்கே இருக்கிறது. அதிலும் மூன்று கிழக்கு மாவட்டங்களிலும் வாழும் தமிழர்களான முஸ்லிம்களும், இந்துக்களும், கிறித்துவர்களும், ஒவ்வொரு மாவட்டத்திலும் சுமார் ஆயிரம் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.அந்த முகாம்கள் பாடசாலைகளிலும், பொது இடங்களிலும் அமைக்கப்பட்டுள்ளன.
ஒரு முகாமில் குறைந்தது இரநூற்றைம்பது குடும்பங்கள் தங்கியுள்ளனர். அதாவது ஆயிரம் தமிழர்கள் தங்கி உள்ளனர். அதில் இந்துக்களும், முஸ்லிம்களும் கலந்தே இருக்கின்றனர்.போர் நேரத்தில் தமிழர்களாக இருக்கும் முஸ்லிம்கள், இந்துக்கள் மத்தியில் பியாவை ஏற்படுத்துவதில் வெற்றிபற்றிருந்த சிங்கள அரசு இப்போது இயற்கையின் பேரழிவால் இந்துக்களும், முச்ளிம்க்களுமாக இருக்கும் தமிழர்கள் மத்தியில் ஒரே முகாமில், ஒன்றாக தங்கி ஒன்றாக உணவு உண்டு ஒன்றாக பேசி பழகி வாழ்ந்துவரும் நிலைமையை சகித்துக்கொள்ள முடியவில்லை. போர்தான் தமிழர்களை கொடுமையாக பதித்தது என்றால், சுனாமி தான் இடையில் பெரும் பாதிப்பை தமிழர்களுக்கு ஏற்படுத்தியது என்றால், அதைவிட இப்போது பெய்த இந்த மழை மாபெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இவ்வாறு மூன்று மாவட்டங்களிலும் மொத்தம் மூவாயிரம் தமிழர்களின் நிலைதான் உள்ளதிலேயே அதிக கடினப்பாட்டுடன் இருக்கிறது. அவர்கள் மத்தியில் மக்கள் சார்பு அமைப்புகள் தான் உதவிகளை செய்து வருகின்றன. அதில் கிழக்கு மாகாண வெள்ள அனர்த்த முகாமைத்துவ குழு ஒன்று செயல்பட்டு வருகிறது. அதற்கு அனுப்பபடுகின்ற நிதிகளை அது பொருள்கள் வாங்கி கொடுத்து இடம் பெயர்ந்துல்லோரை கவனித்து வருகிறது. அதில் கணிசமாக முஸ்லிம் ஆர்வலர்களும் செயல்படுகின்றனர். சிங்கள சூழ்ச்சியால் பிரிக்கப்பட்ட முஸ்லிம், இந்து சகோதரர்கள் இங்குதான் சேர்ந்து உதவிகளை செய்வதும், சேர்ந்து அமர்ந்து உண்பதுமான இணக்கம் ஏற்பட்டுவருகிறது.
இயற்கையின் சீற்றத்தால் ஏற்பட்ட இடரை பயன்படுத்தி தமிழ் இனத்தை மேலும் அழிக்க சிங்கல பேரினவாத அரசு திட்டமிட்டுவருகிறது.
அதேசமயம் பன்னாட்டு மூலதன நிறுவனங்கள் இலங்கைக்கு அதிகமாக வரத்தொடங்கிவிட்டன. அப்படி வருகின்ற நிருவனகளை தங்களுடைய தென்னிலங்கை பகுதியில் இறங்கவைத்து சிங்களர்கள் வசிக்கும் தென்னிலங்கையை வளமாக்க வேண்டும் என்று ஆள்வோர் இனி செயல்படத்தொடன்கினர். ஆனால் அந்த பன்னாட்டு மூலதன நிறுவங்கள் அந்து இறங்கும்போதே அவர்களுக்காக ஒதுக்கப்படும் இடங்களில் சிங்கள மக்களை, அப்பாவி மக்களை, ஏழை மக்களை இடம் பெயரச்செய்யவேண்டியதாயிற்று. இதுவே சிங்கள ஏழை, எளிய மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்த தொடங்கிவிட்டது. அந்த எதிர்ப்பிலிருந்து எப்படி தப்பிப்பது என்று இலங்கை அரசு இந்திய அரசிடமும், பன்னாட்டு மூலதன நிருவங்களிடமும் ஆலோசனை கேட்டது. அதற்கும் அந்த வல்லாண்மை சக்திகள் ஆலோசனை வழங்கினார்கள்.
அதாவது இலங்கை தீவில் சிங்களர் வசிக்கும் பகுதியான தென்னிலங்கையில் ஜே.வீ.பி. என்ற ஜனதா விமுக்தி பெரமுன என்று அழைக்கப்படும் ,'மக்கள் விடுதலை முன்னணி' அமைப்பு அல்லது கட்சி இருக்கிறது. இது மஹிந்த ராஜபக்சேவின் ஆளும் கட்சிக்கு பெரும் தொல்லையாக இருக்கும் ஒரு கட்சி. அதாவது இந்த ஜே.வீ.பி. கட்சி மகிந்தா முதல் முறை ஆட்சிக்கு வரும்போது, அவருடைய கூட்டணியில் இருந்தது. அதன்பிறகு அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை மஹிந்த தன் பக்கம் இழுக்க தொடங்கிய பிறகு மஹிந்த எதிர்ப்பு கட்சியாக மாறிவிட்டது. அந்த கட்சி நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு ஆயுதப்புரட்சியை இலங்கை தீவி நடத்தியது.சிங்களர் இளைஞர்கள் மத்தியில் இருந்த வறுமை, வேலையில்ல திண்டாட்டம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு அந்த கட்சி அப்போது சே குவேரா வழியில் ஆயுத கிளர்ச்ச்சியை நடத்தியது.அதில் சிங்கள ராணுவம் செய்த கொலைகளில் வீட்டுக்கு ஒரு இளைஞர் கொல்லப்பட்டார். அவ்வாறு கோளை செய்யப்ப்பட்ட சிங்கள புரட்சியாளர்கள் ஒரு லட்சம் பேருக்கு அதிகமாக இருப்பார்கள். அந்த கட்சி மீண்டும் இந்த பன்னாட்டு மூலதன நிறுவங்களின் உள்நுழைவை எதிர்த்து, இடம் பெயர்ந்து தவிக்கும் சிங்கள ஏழை மக்களை பயன்படுத்தி மீண்டும் ஒரு கிளர்ச்சியை நட்த்திவிடக்கூடாது என்று வள்ளன்மை சக்திகள் மஹிந்த அரசுக்கு ஆலோசனை கூறின.
அதையொட்டி நஹிந்த அரசு புதிய தந்திரம் செய்தது. அதுதான் தென்னிலங்கையில், கட்டாயமாக இடம் பெயர் வைக்கப்பட்ட அப்பாவி சிங்கள மக்களை, வடக்கு, கிழக்கு தமிழர் பகுதிகளில் கட்டாய குடியமர்த்தல் என்ற முறையை அமுல்படுத்த தொடங்கிவிட்டது. அதாவது ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பதுபோல, வடக்கு-கிழக்கு தமிழர் பகுதிகளில் தமிழர்கள் பெரும்பான்மை அல்லது தமிழர்கள் மாட்டுமே வாழ்கிறார்கள் என்ற நிலைமையை மாற்றி அங்கும் சிங்களவர்களை கணிசமான அளவில் கொண்டுபோய் குடியமர்த்தி, அதன்மூலம் கலப்பு இனமாக அந்த வட்டார மக்களை மாற்றிவிட்டால், தமிழின எழுச்சியை, தமிழின விடுதலை உணர்வை, தமிழர் வாழும் பகுதி என்ற அடையாளத்தை மாற்றிவிடலாம் என்று சிங்கள பேரினவாத அரசு இப்போது மனப்பால் குடிக்கிறது.அதன்விளைவே மட்டகிளப்பு பகுதியிலும், அம்பாறை மாவட்டத்திலும் ஏற்கனவே செய்ததுபோல, திரிகோணமலையில் கணிசமாக சிங்களரை குடியமர்த்தியத்தை போல, யாழ்ப்பாணத்திலும், வவுனியாவிலும், மன்னாரிலும், முல்லைத்தீவிலும் இப்போது சிங்கள மக்களை கொண்டு சென்று குடியமர்த்திவருகிறது. அதேநேரம் சிங்கள ராணுவ வீரர்களின் குடும்பங்களையும் அந்த வடக்கு மாகான பகுதிகளில் குடியமர்த்தி வருகிறது.
ஆனால் சூழ்ச்சிகள் மூலம் தமிழின சுத்திகரிப்பை நடத்திவரும் சிங்கள பேரினவாத அரசான ராஜபக்சே அரசு, சிங்கள மக்களின் கோபத்திற்கும் உள்ளாகி, அந்த மக்களே தமிழின பெரும்பான்மை மக்களின் சுய நிர்ணய போராட்ட்டத்திற்கு ஆதரவாக வடக்கு-கிழக்கு மாகாணங்களில் ஒத்துழைக்கும் ஒரு புதிய எழுச்சிக்கு வித்திடலாம் எனபதும் வரலாறு தெரிந்தவர்களுக்கு விளங்கி க்கொள்ளமுடியும்.

திருமாவை திருப்பி அனுப்பியது கொழும்பா? டில்லியா?

பார்வதியமாளின் இறுதி அஞ்சலி நிகழ்விற்கு சென்னையிலிருந்து இலங்கை செல்ல நெடுமாறனின் உதவோயாளர்கள் இருவர் செல்ல இருந்ததாகவும், அவர்களை இலங்கை அரசின் ராணுவம் அனுமதிக்க முடியாது என்று கூறிவிட்டதாகவும் வைகோ சென்னை இரங்கல் கூட்டத்தில் கூறினார். அப்போதுகூட திருமாவும், நண்பர்களும் செல்லவதை இலங்கை அனுமத்தித்துவிட்டது என்றுதான் செய்திகள் வெளிவந்தன. அதற்கு காரணம் அவர்கள் தமிழக முதல்வரின் நெருக்கத்தில் இருப்பதால் என்று பலரும் எண்ணினார். ஆனால் இப்போது இங்கிருந்து சென்று கொழும்பு விமான நிலையத்தில் இறங்கிய திருமாவையும், நண்பர்களையும் கொழும்பின் ராணுவ தலைமை திருப்பி அனுப்பியுள்ளது. இதை செய்தது யார்?
சென்ற முறை தமிழக முதல்வருக்கு இலங்கை அரசத்தலைவர் ராஜபக்சே அனுப்பிய கடிதத்தை ஒட்டி, கலிஞர் ஏற்பாட்டில் அனுப்பப்பட்ட பத்து நாடாளுமன்ற உறுப்பினர்களில் திருமாவும் சென்றார். அப்போது அதை ஏற்றுக்கொண்டிருந்த இலங்கை அரசு இப்போது ஏன் இப்படி நடந்து கொள்ளவேண்டும்? இலங்கையில் இப்போது எல்லாமே அரசத்தலைவர் பணிப்படைதான் [பிரசிடன்ஷியல் டாஸ்க் போர்ஸ்] என்றும்,அதற்கு கொத்தபாஎதான் தலைமை தாங்குகிறார் என்றும் கூறப்படுகிறது. அவர்தான் இத்தகைய முடிவை எடுத்திருக்கவேண்டும். அந்த கொத்தபாயே இந்திய மத்திய அரசுக்கு மிகவும் நெருக்கமாக இருப்பதையும் அவர்களது ஆலோசனைப்படி நடப்பதாகவும் தெரிகிறது. அப்படியானால் காங்கிரஸ் தலைமையிலான நடுவண் அரசு இத்தகைய உத்தரவை கொடுத்துள்ளதா? டில்லி சொல்லித்தான் திருமாவை கொழும்பு திருப்பி அனுப்பியதா?
டில்லி ஏன் அப்படி செய்யவேண்டும்? ஏற்கனவே டில்லி சம்மதத்துடன் தானே கலைஞர் பத்து எம்பிக்களை இலங்கை அனுப்பினார்? இப்போது என்ன வந்துவிட்டது? வந்துவிட்டதே? தமிழக தேர்தல் வந்துவிட்டதே? அதில் தி.மு.க தலைமை காங்கிரசை ஓரங்கட்ட பா.மா.க.விற்கு முப்பத்தொரு தொகுதி என ஒதுக்கிவிட்டதே? அதனால்தானே காங்கிரஸ் வழிகாட்டலில், சீ.பி.ஐ. அன்புமணியின் உதவியாளரை குறிவைத்து சோதனை செய்து மிரட்டுகிறது? அடுத்து தி.மு.க. தலைமையின் நெருக்கத்தில் உள்ள திருமாவை திருப்பி அனுப்பி தி.மு.க.விற்கு மைமுக தொந்தரவை அல்லது அவமானத்தை கொடுக்க இப்படி ஒரு உத்தியா? இதுதான் இப்போது எழும் கேள்விகள்.

பார்வதியம்மாள் மரணம் தரும் பாடம்?

ஒரு மூதாட்டி போதுமான மரஐத்துவ உதவி கிடைக்காமல் விரைந்து மரணம் நோக்கி பயணம் ஆனது இந்த உலகிற்கு புதிய செய்தியல்ல. ஒரு உயிர் போர் நடந்த ஊரில் சரியான வைத்தியம் இல்லாததால் விரைந்து மரணத்தை தழுவியதும் செய்தியல்ல. இனவெறி பிடித்த நாட்டில் நோயாளியான ஒரு தாய், அரசு உதவி இன்றி மரணம் அடைந்தார் என்பதும்கூட புதிய செய்தியல்ல. ஒரு போராளியின் தாய்க்கு அடக்குமுறை அரசு அலட்சியம் காட்டி மரணத்தை விரைவு படுத்தியது என்பதும் இந்த உலகிற்கு புதிய செய்தியல்ல. ஒரு விடுதலை வீரரின் அன்னைக்கு இப்படி இழைக்கப்பட்டதும் புதிய விசயமல்ல. ஒரு இனத்தின் தலைவனை பெற்றெடுத்த தாய்க்கே இப்படி நிலைமையா என்றால் உலகில் பல இடங்களில் அப்படி நடந்திருக்க வாய்ப்புண்டு. அப்படி ஒரு நிகழ்வு தமிழீழ தசிய தலைவரின் தாய்க்கு நிகழ்ந்ததால் தமிழ் உணர்வாளர்களுக்கும், உலகம் தழுவிய தமிழருக்கும் நெஞ்சில் ஈட்டி குத்தியதுபோல இருக்கலாம். ஆனால் இங்கே நடந்தது மேற்கண்ட நிகழ்வுகளில் ஒன்று என்று எப்படி கூறமுடியும்?
ஈழத்தமிழர்கள் உலகம் தழுவிய அளவில் வசிக்கும் தமிழர்களான ஒன்பது கோடியில் ஒரு அங்கமாக இப்போது இனம் காணப்படுபவர்கள். அவர்களுக்கு இனச்சொந்தங்களாக அருகே இருக்கும் இந்தியாவில் உள்ள தமிழ்நாட்டில் ஆறரை கோடி தமிழர்கள் இருக்கிறார்கள். அத்தகைய நாட்டில் தேர்தல்கள் மூலம் தாங்கள் விரும்பியவர்களை தேர்ந்தெடுக்கும் உரிமை இருப்பதாக இந்த உலகம் நம்புகிறது. அப்படிப்பட்ட இந்தியாவில் இருக்கும் தமிழ்நாட்டில் உள்ள தமிழகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு கட்சிதான் அங்கே ஆளுகிறது. அதற்கு தமிழர்கள் மத்தியில் தமிழுக்காகவும், தமிழர்களுக்காகவும் வாழ்வதாக பெரிய அளவில் விளம்பரப்படுத்தப்பட்ட ஒருவர் முதலமைச்சராக இருக்கிறார். அத்தைகைய சூழலில் இந்த தாயாரின் மரணம் சம்பவித்துள்ளது. அப்படியானால் அததகைய வாய்ப்புகளை நம்பாமல் அல்லது பரிசீலிக்காமல், அல்லது பயன்படுத்தாமல் இந்த மூதாட்டி இருந்துவிட்டாரா?
பார்வதியம்மாள் சிகிச்சைக்காக சிங்கபூர் சென்றவர் அவரது கடைசி விருப்பத்திற்கு இணங்கவும், நண்பர்களின் ஒத்துழைப்புடன் மருத்துவ சிகிச்சை பெறவும் தமிழ்நாட்டிற்கு வார விரும்பினார். அதற்காக இலங்கையில் உள்ள இந்திய தூதரகம மூலம் விசா பெற்றுக்கொண்டு சென்னை வந்து இறங்கினார். அப்போதே விமான நிலையத்திலேயே திருப்பி அனுப்பபட்டார். இந்திய ஹை கமிஷன் கொடுத்த விசாவையே ஏற்காமல் அவரை திருப்பி அனுப்ப முடிவு செய்த புண்ணியவான்கள் யார் என்ப்வதே உலக தமிழர்கள் மத்தியில் எழுந்துள்ள கேள்வி. தமிழக முதல்வர் கலைஞரை பொறுத்தவரை அவருக்கு பார்வதியம்மாள் திருப்ப அனுப்பட்டபிறகு ஊடகங்களின் செரிதிமட்டுமே தெரியும் என்றி சொல்லிவிட்டார். ஒரு முதலமைச்சரை பொய் சொன்னார் என்று நாம் எப்படி குற்றம் சாட்டமுடியும்? ஏனென்றால் பார்வதியமாலை துரித மரணத்திற்கு தள்ள காரணமாக இருந்த அந்த சென்னை விமான நிலைய நாடகமான திருப்பி அனுப்பியது என்பது உலக தமிழர்கள் மத்தியில் கழுவப்பட முடியாத ஒரு பெரும் கரையாக பதிந்துவிட்டது.அத்தகைய குற்றத்தை கலைஞர் செய்தார் என்று நாம் கூசாமல் சொல்லக்கூடாது அல்லவா?
நடந்த நிகழ்வுகள் ஒரு முடிவுக்கு நம்மை தள்ளுகின்றன. மேற்கண்ட நிகழ்வுகளால் இப்போது ஏற்பட்டிருக்கும் பார்வதியம்மலின் மரணம் என்பது ஒரு கொலைதான் என்பதும், அதை செய்தா காரணமானவர்கள் கொலைக்குற்றவாளிகல்தான் என்றும் உலக தமிழர்களின் வரலாறு பதிவு செய்யும். ஆகவேதான் இதற்க்கு நாம் யாரையும் காரணமானவர்கள் என்று உடனடியாக முடிவு செய்ய முடியாது.இன விடுதலை போர் நடக்கும் போது நடந்த போர்க்குடர்ந்களுக்காக பலரும் இன்று உலக மக்கள் மத்தியில் குற்றவாளிகளாக நின்று கொண்டு இருக்கிறார்கள். அதிலும் சிலர் இந்திய மண்ணில் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் பட்டியளிடப்பட்டுக்கொண்டிருக்கலாம். ஆனால் அதைவிட ஒரு தனிப்பட்ட உயிரை மருத்துவ சிக்கிச்சை இடிக்காமல் செய்து கோளை செய்வது என்பது கொடிய மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றம். ஆகவேதான் நம்மால் அதற்கு காரணம் என்று யாரையும் உடனடியாக குற்றம் சொல்லமுடியவில்லை.
ஆனாலும் வரலாறு என்பது ஒரு நாள் உணமையான குற்றவாளியை பகிரங்கப்படுத்தவே செய்யும. சென்னை விம்மான நிலையத்திற்கு சென்று நூறு காவல் படைகளுடன் பார்வதியம்மலை திரும்ப அனுப்ப காவல்துறை ஆணையர் ஜாங்கிட் ஈடுபட்டார் என்று செய்திகள் கூறுகின்றன. அவர் அமுலாக்குபவராக இருக்கலாம். அவருக்கு அந்த உத்தரவை கொடுத்தவர்கள் யார்? முதல்வர் கலைஞர் தனக்கு தெரியாது என்று கூறிவிட்டார். அப்போது உணமியான குற்றவாளி யார் எனப் அதை இன்றைய தமிழ்நாட்டு தேர்தல் நேரத்தில் கண்டுபிடித்து தடனை வழங்கவேண்டிய போயிருப்பில் முதல்வர் கலிஞர் இருக்கிறார். அதையே உலக தமிழினமும் கேட்கிறது.

Friday, February 18, 2011

அமபலப்படுத்தலிலும் ஆணாதிக்கமா?

கலைஞர் டி.வீயில் சோதனை நடத்தியது சீ.பி.ஐ. சரி இது செய்தி. அதையே ஒரு ஏடு தனது எதிர்ப்பு உணவிலிருந்து தி.மு.க. ஆபீசில் ரைடு என்று போட்டது. அதுகூட தி.மு.க. அலுவலகத்தில் கலைஞர் டி.வீ. இருப்பதால் அப்படி படுவதற்காக தங்கள் காழ்ப்புணர்ச்சியை பயன்படுத்திக்கொண்டார்கள் என்றும் பார்க்கலாம். அல்லது ஆச்சர்ய செய்தி, அதிர்ச்சி செய்தி,என்ற வணிக நோக்கு என்று கூறிவிடலாம். ஆனால் அந்த டி.வீ.யில் அறுபது பங்கு மூலதம் தயாளு அம்மையார் பெயரிலும், இருபது விழுக்காடு பங்கு மட்டுமே கனிமொழி பெயரிலும் ஒப்புக்கொள்ளும் ஊடகங்கள் எதற்க்காக குறைவான பங்கை கோடுள்ள கனிமொழியை மட்டுமே ஓரங்கட்டி செய்தி வெளியிடுகிறார்கள்?
கலைஞரின் இன்றைய அதிகாரபூர்வமான மனைவி தயாளு என்பதாலும், துணைவிதான் ராஜாத்தி என்பதாலும், இந்த பாரபட்சம் காட்டப்படுகிறதா? ஆனாலும் உண்மைக்கு மாறாக இத்தகைய பாரபட்சம் காட்டுவது ஆணாதிக்கம் இல்லையா? அதிகாரத்தை கையில் வைத்துள்ள ஸ்டாலின், அழகிரி ஆகியோரது தாயார் என்பதால் எல்லா ஊடகங்களும் வலைகின்றனவா? அதுகூட ஆணாதிக்கம் இல்லையா? கனிமொழி ஒரு ஆணாக இருந்தால் வேறு மாதிரி நடக்குமா? அலல்து முதல் மனைவிக்கு கொடுக்கும் மரியாதையை ஆணாதிக்க சமூகம் இரண்டாவது மனைவிக்கு கொடுக்க கூடாது என்று சொல்வதால் வந்த விளைவா? அல்லது எல்லாவற்றிற்கும் காரணமான தயாநிதி தங்கள் குடும்பத்தைவிட இன்னொரு குடும்பமான ராஜாத்தி மீது மட்டுமே அனைத்து இழிவும் பொய் செற்றட்டும் என்று எண்ணுகிறாரா? ஊடகங்கள் குறி வைப்பதும்கூட ஆணாதிக்க பார்வையிலா? அவங்க வீட்ல அவங்க கட்சில, அவங்க கூட்டணில ஊழல் செய்வதில் ஆணோ, பெண்ணோ வேறுபாடு காட்டுவதில்லையே? அப்புறம் அதை அம்பலப்படுத்துவதில் மட்டும் என்ன பால் வேறுபாடு?

கடலில் கழிவுகளை கிருஷ்ணா கவ்வுவாரா?

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா தமிழக மீனவர்களுக்கு ஒரு அறிவுரை கூறியுள்ளார். அதாவது மீனவர்கள் இந்திய எல்லையை கடலில் கடக்காமல் கவனமாக இருக்கவேண்டுமாம். ஏய் கிரிஷ்ணாவே உமக்கு கடலில் இந்திய எல்லை என்றால் என்ன என்று தெரியுமா? யோவ், நீங்க தமிழ்நாட்டு கரையில் வந்து என்ன நிலைமை என்று பார்த்திருக்கீங்களா? ஏய் நீரு டில்லில உட்கார்ந்துகிட்டு ராஜபக்ஷேவை திருப்தி படுத்த ஏதாவது உளருகிரீரா? தமிழ்நாட்டு கடல்கரைக்கும் இலங்கை கடல்கரைக்கும் உள்ள தூரம் வெறும் பதினெட்டு மைல்கல்தான் என்பது உமக்கு தெரியுமா? அதிலும் நாட்டு படகுகள் பல பாரம்பரியமாக மீன் பிடித்து வருபவர்கள் கடலில் உள்ள முதல் ஐந்து கடல் மைல்கல்தான் செல்லமுடியும் என்பது தெரியுமா? அதற்குமேலும் சென்று நாட்டு படகு மீனவர்கள் மீன் பிடிக்க விரும்பினாலும் உங்கள் ஆட்சியின் திட்டத்தால் விசைப்படகுகள் இறக்கிவிடப்பட்டுள்ளதால், கடலில் எங்கள் பாரம்பர்ய மீனவர்களின் நாட்டு படகுடன் போட்டி போட்டு இந்த விசை படகுகள் அடிக்கடி சண்டை போட்டு வருவது உமக்கு விளங்குமா?
அதனால் சமாதானத்தை இங்கே தமிழ்நாட்டு மீனவர்களுக்குள் செய்யும்போது, முதல் ஐந்து மைகளுக்குதான் நாட்டு படகு மீனவர்கள் மீன் பிடிக்கவேண்டும் என்று ஒவ்வொரு கடலோர மாவட்டங்களிலும் ஒப்பந்தம் செய்து மீன் பிடித்துவருவது குளிர்சாதன அறையில் இமர்ந்திருக்கும் உமக்கு விளங்குமா? அதனாலேயே விசை படகு மீனவர்கள் அதையும் தாண்டிதான் மீன் பிடிக்க கடலில் இறங்க வேண்டும் என்பதாவது உமக்கு சொன்னார்களா? அப்படி செல்லும்போது ராம்ச்வரம் பகுதியில் பத்து மைல்கள் வரை பாறை இருப்பதை உங்களுக்கு நாகல் புரியவைக்கமுடியுமா? அதையும் தாண்டித்தான் விசை படகுகள் மீன் பிடிக்க செல்லவேண்டும் எனபது உங்கள் அமைச்சகத்திற்காவது தெரியுமா? அதற்கு பெயர் இந்திய எல்லையை தாண்டுவது என்று உங்கள் விளக்கம் கூறினால் நீங்கள் மீன் பிடி தொழில் பற்றி அறியாமையில் உள்ள மூடன் என்பதை யாரவது உங்களுக்கு சொன்னார்களா?
இதுவரை சொல்லாவிட்டாலும் இப்போதாவது சொல்கிறோம் கேட்டுக்கொள்ளுங்கள். கடலில் மீனவனுக்கு எல்லைகள் கிடையாது. இல்லாத எல்லையில் [போடமுயலும் கிரிஷ்ணாவே, உங்கள் புத்தி இப்படி மழுங்கி பொய் இருப்பது தொடருமானால் தமிழக மீனவர்களின் போராட்டம் உங்களை நோக்கி திரும்பாதா? உங்கள் ஆட்சி செய்த லட்சணம் கடலோரம் முழுவதும் கழிவுகளை கக்கும் கம்பனிகளை கட்டியிருக்கிறீர்கள். அந்த கழிவுகளை பிடிக்க கடலில் இறங்க சொல்கிறீர்களா? கிரிஷ்ணாவே நீங்கள் அந்த கடல் கழிவுகளை கவ்வுவீர்களா?

மழை, வெள்ளத்தால் மூழ்கும் ஈழத்தமிழர்கள்

இலங்கை முழுவதும் பலத்த மழை. முதல் மழை பொய் இரண்டாம் மழை மேலும் அதிகமான சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. பதினெட்டு மாவட்டங்களில் அந்த தீவு முழுவதும் பாதிக்கப்பட்ட மக்கள் வீடுகள்;ஐ இழந்து தவிக்கிறார்கள். அதில் சிங்கரும், ஈழத்தமிழரும், தமிழ் பேசும் முஸ்லிம்களும் இருக்கின்றனர். ஆனால் பதினெட்டு மாவட்டங்களில் மூன்றே மாவட்டங்களில்தான் அதிகமான பாதிப்பு. அந்த மூன்று மாவட்டங்களும் முறையே மாட்டகிலப்பு, அம்பாறை, திருகோணமலை ஆகியவையே. அவை மூன்றும் கிழக்கு மாகாணத்தில் வருகின்றன. அதாவது தமிழர் பகுதிகளாக அடையாளம் காட்டப்பட்டவை. அதிக சேதம் நடந்துள்ள அந்த மாவட்டங்களை சிங்கள் இன வெறி அரசு கவனிக்கவே இல்லை.
பதிக்கப்பட்ட சிங்கள பகுதிகளுக்கு சென்ற அரசத்தலைவர் மஹிந்த ராஜபக்ஷே, தமிழர் பகுதிகளை எட்டிக்கூட பார்க்கவில்லை. மொத்தம் பதிமூன்று அச்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இலங்கை அரசு மொத்தம் நூறு கோடி ரூபாயை இதர்த்க்காக நிவாரத்தொகையாக ஒதுக்கியுள்ளது என்று அறிவித்துள்ளார்கள். பாதிக்கப்பட்ட பதிமூன்று லட்சம் மக்களுக்கும் இந்த நூறு கோடி ரூபாய் பணம், பிரித்துக்கொடுத்தாலே ஆளுக்கு நூறு ரூபாய் கூட வராது. அந்த அளவுக்கு மக்கள் மீது அக்கறை இல்லாத ஒரு அரசு அங்கே இருக்கிறது. அதிலும் மூன்று கிழக்கு மாவட்டங்களிலும் வாழும் தமிழர்களான முஸ்லிம்களும், இந்துக்களும், கிறித்துவர்களும், ஒவ்வொரு மாவட்டத்திலும் சுமார் ஆயிரம் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.அந்த முகாம்கள் பாடசாலைகளிலும், பொது இடங்களிலும் அமைக்கப்பட்டுள்ளன.
ஒரு முகாமில் குறைந்தது இரநூற்றைம்பது குடும்பங்கள் தங்கியுள்ளனர். அதாவது ஆயிரம் தமிழர்கள் தங்கி உள்ளனர். அதில் இந்துக்களும், முஸ்லிம்களும் கலந்தே இருக்கின்றனர்.
இவ்வாறு மூன்று மாவட்டங்களிலும் மொத்தம் மூவாயிரம் தமிழர்களின் நிலைதான் உள்ளதிலேயே அதிக கடினப்பாட்டுடன் இருக்கிறது. அவர்கள் மத்தியில் மக்கள் சார்பு அமைப்புகள் தான் உதவிகளை செய்து வருகின்றன. அதில் கிழக்கு மாகாண அனர்த்த பாதிப்பு முகாமைத்து குழு ஒன்று செயல்பட்டு வருகிறது. அதற்கு அனுப்பபடுகின்ற நிதிகளை அது பொருள்கள் வாங்கி கொடுத்து இடம் பெயர்ந்துல்லோரை கவனித்து வருகிறது. அதில் கணிசமாக முஸ்லிம் ஆர்வலர்களும் செயல்படுகின்றனர். சிங்க சூழ்ச்சியால் பிரிக்கப்பட்ட முஸ்லிம், இந்து சகோதரர்கள் இங்குதான் சேர்ந்து உதவிகளை செய்வதும், சேர்ந்து அமர்ந்து உண்பதுமான இணக்கம் ஏற்பட்டுவருகிறது.
இயற்கையின் சீற்றத்தால் ஏற்பட்ட இடரை பயன்படுத்தி தமிழ் இனத்தை மேலும் அழிக்க சிங்க பேரினவாத அரசு திட்டமிட்டுவருகிறது.