மும்பையில் ஊடகவியலாளர் ஜெ.டே கொடூரமாக சாலைப் பயணத்திலேயே குறிவைத்து சுட்டுக் கொல்லப்பட்டார் என்ற சம்பவம் பெரிய அளவில் பேசப்படுகிறது. முதலில் "சோட்டா ஷகீல்" மீது சந்தேகம் என்று ஏடுகளில் காவலர் கூறினார்கள். வெகுண்டெழுந்த "சோட்டா ஷகீல்" தன்னிடம்தான் இதே காவல்துறையினர் இந்த கொலை பற்றிய செய்திகளை எடுத்துக் கூக்க கூறினர் என்று ஒரு ஆங்கில ஏட்டிற்கு "மறைவிடத்திலிருந்து" பேட்டி அளித்தார். அப்போதே யார் இந்த சோட்டா ஷகீல்? என்று நமது வாசகர்கள் கேள்வி எழுப்பியிருக்க வேண்டும். ஆனால் எழுப்ப வில்லை.
இப்போது "சோட்டா ராஜன்" குழுவினர் எழு பேர் இந்த கொலையை செய்தவர்கள் பிடிபட்டுள்ளார்கள் என்றும், அதில் மூன்று பேர் ராமேஸ்வரத்தில் பிடிபட்டதையும்,கொலையை எப்படி செய்தார்கள் எனவும் விளக்கி இருந்தனர். "சோட்டா ராஜன்" தொலைபேசியில் " ஒரு நடவடிக்கை" இருக்கிறது என்று கூறி, அதற்கான "பணத்தையும், கைத்துப்பாகிகளையும்" குறிப்பிட்ட இடத்தில் பெற்றுக் கொள்ளுமாறும் கூறியதை அவர்கள் பின்பற்றி, "கொள்ளப்படவேண்டியவரின்" மோட்டார்சைக்கில் என்னையும், ஆறடி உயரமானவர் என்ற அடையாளத்தையும் பெற்றுக் கொண்டு " செயலுக்கு" சென்றதாக கூறியிருந்தனர்.
அப்படியானால் சோட்டா ராஜன் யார் என்றாவது நமது மக்கள் வினவி இருக்க வேண்டும். அதையும் கேட்கவில்லை. பிறகு " ஜெ.டே என்ற அந்த ஊடகவியலாளர் ஏன் ஐரோப்பா சென்றார் என்றும், அங்கே யாரை சந்தித்தார் என்றும், பல கேள்விகளை ஏடுகள் வெளியிட்டார்கள். அதில் " தாவூது இப்ராஹீம்" கூட்டாளியை அவர் வெளிநாட்டில் சந்தித்தார் என்றும், சந்திக்க நேரம் கிடைத்தும் சந்திக்க வில்லை என்றும் செய்திகள் வெளியிடப்படுகின்றன. அதற்கும் சோட்டா ராஜன் கொலை செய்ய சொன்னதற்கும் என்ன சம்பந்தம்? தாவூது இப்ராஹிமிடம் அந்த ஊடகவியலாளர் "சோட்டா ராஜன்" பற்றிய விவரங்களை போட்டுக்கொடுத்திருப்பார் அல்லது போட்டுக்கொடுப்பார் என்ற சந்தேகத்தால் கொல்லப்பட்டார் என்று அந்த செய்தி விளக்குகிறது.
அப்படியானால் " தாவூது இப்ராஹிமிற்கும், சோட்டா ராஜனுக்கும்" அப்படி என்ன பகை? யார் இவர்கள்? ஏற்கனவே "துபாயில்" தாவூது இப்ராஹீம் மீது "சோட்டா ராஜன்" துப்பாக்கி சூடு நடத்த முயற்சித்தார் என்று ஒரு செய்தி சில ஆண்டுகளுக்கு முன்பு வந்தது நினைவுக்கு வரவேண்டும். அப்போதே சூடு பட்டது, "தாவூதின் தம்பி மீதுதான்" என்று விளக்கம் வந்ததையும் நினைவுக்கு கொண்டுவர வேண்டும். எதற்காக அவர்களுக்குள் சண்டை வரவேண்டும்? "தாவூது இப்ராஹிமின்" கூட்டத்தில்தான் "சோட்டா ராஜன்" ஒரு காலத்தில் இருந்தான். அதன் பிறகு "கும்பலுக்குள்" வந்த முரண்பாட்டில் வெளியேறினான். ஆனால் "சோட்டா ஷகீல்" தாவூது இப்ராஹிமின் கூட்டத்தில்தான் இன்னமும் இருக்கிறான்.
"தாவூது இப்ராகிம்" தனது "அனைத்து நாட்டு வணிக வலைப்பின்னலில்" பல உதவிகளை பாகிஸ்தானின் உளவு நிறுவனமான "ஐ.எஸ்.ஐ. இடம் பெற்றுக் கொல்வது இயல்பான காரியமாக இருக்கிறது. அதனால் இந்திய அரசால் தாவூது மீது ஒரு "அச்சம்" இருந்து வருகிறது. "தாவூது இப்ராகிம்" மும்பையின் பிரிக்க முடியாத "வணிக வலைப்பின்னலுடன்" இருப்பது இந்திய அரசிற்கு தெரியும். மும்பையின் "திரைப்படத்துறை, பங்கு சந்தை, ஊடகத்துறை, அரசியல் தலைவர்கள்" ஆகியோருடன் "தாவூதிற்கு" உள்ள பின்னிப்பிணைந்த உறவு தெரியாதவர்கள் இந்திய உளவுத்துறை அல்ல.
ஆனால் "அரசியல் காரணங்களுகாக" இந்திய அரசின் உளவுத்துறையான "ஐ.பி.யும், ரா வும்" இந்த பாகிஸ்தானின் உளவுத் துறையான "ஐ.எஸ்.ஐ. யை எதிர்ப்பதற்காக" தாவூது இப்ராஹிம்மை பகைத்துக் கொள்கிறார்கள். அதனால் தாவூதும் பாக் உளவுத்துறைக்கு அதிகமாக உதவுகிறார். இதனால் "தாவூதுடன் முரண்பட்ட சோட்டா ராஜனை" இந்திய வெளிவிவகார உளவுத் துறையான "ரா" தனது கையாளாக பயன்படுத்தி வருகிறது. அதில் ஏற்பட்ட " துப்பாக்கி சூடுதான்" துபாயில் நடந்த ஒன்று. இப்போது "சோட்டா ஷகீல்" கதைக்கு வருவோம். அவர் இன்னமும் "தாவூதின் கும்பலில்" இருப்பவர். அதனால்தான் இந்த கொலையில் "சோட்டா ராஜன்" சம்பந்தப்பட்டது தெரிந்த உடனேயே "சோட்டா ஷகீலை" காவல்துறை அணுகி உதவி கேட்டது.
உதவியும் கேட்டுவிட்டு, தனக்கு எதிராக "கதையை" மாற்றிவிட காவல்துறை முயற்சித்த போதுதான் "சோட்டா ஷகீல்" ஊடகம் மூலம் பதிலடி கொடுத்தார். இப்போது கொலையை செய்தது "சோட்டா ராஜன்"கும்பல்தான் என்று காவல்துறையே ஒப்புக்கொள்ளவேண்டிய நிலைமை. ஏன் என்றால் கொள்ளப்பட்டது ஒரு "ஊடகவியலாளர்". சோட்டா ராஜன் மீது சந்தேகப்பட்டால் "சோட்டா ஷகீலிடம்" உதவி கேட்பது என்ற நிலையில்தான் "காவல்துறை" செயல்படுகிறது எண்பதை இந்த இடத்தில் நாம் புரிந்து கொள்ளவேண்டும். இரண்டு " நிழல் உலக தாதாக்கள்" இருந்தால் இருவரையும் ஒழிக்க முடியாத காவல்துறை, ஒருவர் பற்றி ஒருவரிடம் செய்தி எடுப்பார்கள் எண்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
ஏன் இரண்டு "நிழல் உலக தாதாக்களையும்" காவல்துறையால் ஒழிக்க முடியவில்லை? இரண்டு கும்பலும், "அரசியல்வாதிகளின்" அரவணைப்பில் மட்டுமே, காவல்துறையின் பெரிய அதிகாரிகளது துணையில் மட்டுமே, பவனி வருபவர்கள். அதானால் இந்த "அதிகாரவர்க்கம்" என்றைக்குமே "நிழல் உலக தாதாக்களை" ஒழிக்காது. அதேநேரம் அவர்களுக்குள் "மோதலை"உருவாக்கி அதில் பிழைப்பு நடத்துவார்கள். இங்கே " சோட்டா ஷகீல்" எங்கே இருந்து "செயல்படுத்துகிறார்" என்பது வெளியே தெரியாது. அதேபோல "சோட்டா ராஜன்" எங்கேயிருந்து "செயல்படுத்துகிறார்" என்பதும் யாருக்கும் தெரியாது.
ஆனால் அது எல்லாமே "இந்திய உளவுத்துறையான "ரா" மற்றும் "ஐ.பி." யின் பெரிய அதிகாரிகளுக்கு தெரியும். ஆனாலும் அவர்கள் "பிடிக்க மாட்டார்கள்" தாங்கள் தங்களது முதலாளிகளான "இந்திய அரசிற்கு" சில அவசியமான "வன்முறை வேலைகளை" செய்வதற்காக அந்த "தொடர்புகளை" தங்களிடமே வைத்துக் கொள்வார்கள். அதாவது "அரசின் இந்த உளவுத்துறைகள்" இயங்கும் "நிழல் தாதாக்களை" விட கொடியவர்கள். ஏன் என்றால் "தாதாக்கள்" மக்களிடம்தான், மக்கள் மத்தியில்தான் வாழவேண்டும். ஆனால் "உளவுத்துறை" குண்டர்கள் "நமது வரிப்பணத்தில்" எங்கே வேண்டுமானாலும் "மேட்டுக் குடியாக" வாழலாம்.
இப்போது "தாவூதுக்கு சோட்டா ராஜன்" பற்றிய தகவல்களை கூறுவார் என ஒரு ஊடகவியலாளர் சுடப்பட்டு கொள்ளப்பட்டது வெளியே வந்திருக்கிறது. இதே கதையில் அந்த ஊடகவியலாளர் பற்றியும் பல செய்திகள் உண்டு. அதை அடுத்த கட்டுரையில் காணலாம்.
Wednesday, June 29, 2011
சென்னைமெரீனா நினைவேந்தல் பற்றி குமுதம் விவரிப்பு
கீழே காணும் இணைய தளத்தில், " பெருந்தீயாய் சுட்டெரிக்கட்டும்" என்ற தலைப்பில் உள்ள "காணொளியை" காணவும். அது ஜூன் 26 இல் கடற்கரை மணலில் நடந்த பல்லாயிரக்கணக்கான தமிழர்களின் "மெழுகுவர்த்தி ஏந்தல்" நிகழ்வையும், அது பற்றிய நேர்காணல்களையும் காட்டும். அதில் "திருமுருகன், புலமைப் பித்தன், விடுதலை ராஜேந்திரன்,திருச்சி வேலுசாமி, புகழேந்தி தங்கராஜ், தாமரை, அய்யநாதன், டி.எஸ்.எஸ்.மணி, வேல்முருகன், சீமான்,காசிஅனந்தன் ஆகியோர் நேர்காணல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. இந்த பெரும் சேவையை, "குமுதம் டாட் காம்" செய்துள்ளது. ஏகலைவனின் முயற்சியால் இந்த தொகுப்பு நிறைவாகி உள்ளது. http://nerudal.com/
Monday, June 27, 2011
ஈழத்தமிழ் மக்களுக்காக, தொப்புள்கொடி உறவுகளின் தோழமை.
ஜூன்-26ஐ.நா.அறிவித்த"அனைத்துநாட்டுசித்திரவதை எதிர்ப்பு நாள்".
அன்று இந்தியாவின் சென்னையில் "தமிழ் உறவுகள்" நடத்திய மாபெரும் "மெழுகு வர்த்தி நினைவேந்தல்" நிகழ்வு ஒரு பெரும் ஆதரவை "ஈழத் தமிழ் உறவுகளுக்கு" ஏற்படுத்தியிருக்கிறது. பல்லாயிரக்கணக்கில் தமிழ் மக்கள், பெண்கள், ஆண்கள், குழந்தைகள் உட்பட பங்கு கொண்டு, மெரீனா கடற்கரையில் "மழைத்தூரல்களுக்கு" நடுவே அமைதியாக அமர்ந்து "கைகளில் மெழுகுவர்த்திகளை" ஏந்தி, தெரிவித்த "தோழமை" உலகின் மனச்சாட்சியை உலுக்குவதாக அமைந்தது.
திருமுருகன் எடுத்த முன்முயர்ச்சிக்கு பல்வேறு தமிழ் அமைப்புகளும், மீனவர் அமைப்புகளும், தனி மனிதர்களும், கொடுத்த ஆதரவு "உலகம் முழுவதும் உள்ள தமிழரை ஒன்றாக சேர்ப்பதாக" இருந்தது. திரைப்பட இயக்குனர் மணிவண்ணன் இது பற்றி கூறும்போது, "இது எந்த ஒரு தலைவருக்கோ, அல்லது அமைப்ப்ற்கோ வந்த கூட்டமல்ல.ஈழத்தமிழருக்கு ஆதரவாக தமிழ்நாட்டு
மாக்கள் கொடுத்தஆதரவு"என்றுகூறினார்.குறிப்பிட்ட நேரத்திற்கு வராத தலைவர்கள், தாமதமாக வரும்போது, அதுவே அவரகளது நுழைவு ஏற்படுத்திய சல,சலப்பையும், அதனால் ஏற்பட்ட நெரிசலும், கட்டுப்பாட்டை குலைக்கவே உதவின. அதில்; இருக்கையிலிருந்த முக்கியமானவர்கள் கூட பாதிக்கப்படும் நிகழ்வு நடந்திருக்கக்கூடாது. ஆனாலும் அதையும் தாண்டி, அந்த மாபஐம் தமிழ் மக்கள் கூட்டம் அமைதியாக கலந்து கொண்டு கொடுத்த ஆதரவு மெய் சிலிர்க்கும்படி இருந்தது.
காசி அனந்தன், பழ.நெடுமாறன், புலமைப் பித்தன், வேல்முருகன்,சீமான், பேராசிரியர். சரஸ்வதி, விடுதலை ராஜேந்திரன், திருச்சி வேலுசாமி, ஓவியர் வீரசந்தானம், மருத்துவர் எழிலன்,மீனவர் தலைவர்கள் மகேஷ், ரூபேஷ், மாறன், சரவணன், திருமுருகனுடன் பணியாற்றிய ராஜ்குமார் பழனிச்சாமி, உமர், ராஜா ஸ்டாலின், ம.திமுக. வேளச்சேரி மணிமாறன், மல்லை சத்தியா, தாமரை, தியாகு, டேவிட்பெரியார்,புலம்பெயர்ந்த தமிழர்கள்,ராவணன்,குணசேகரன்,பாண்டிமாதேவி, ஏகலைவன், அரக்கோணம் விமலா, நெல்லை சிவகுமார், அன்பு தென்னரசு, டி.எஸ்.எஸ்.மணி, ஓவியர் புகழேந்தி, வா.மு.சேதுராமன், தெய்வநாயகம், ஓவியர் புருஷோத்தமன், தவசி குமரன், தனசேகரன், இன்னும்பல பிரமுகர்கள் கலந்துகொண்டது சிறப்பு சேர்த்தது.
நினைவு தூண்கள் இரண்டு "மறைந்த தமிழ் தியாகிகளுக்காக" உருவாக்கப்பட்டிருந்தது எல்லோரையும் அமைதி கொள்ள வைத்தது. மலர்கள் தூவப்பட்ட படுக்கைகளில், மணலில் "மெழுகுவர்த்தியை" வைத்து எரியூட்டிய நிகழ்வுகள் நெகிழ் வைத்தன. துண்டறிக்கைகளையும், சுவரொட்டிகளையும், இணையதள பரப்புரைகளையும், குறுன்செய்திகளையும், நேரடி அணுகுமுறைகளையும், பல அமைப்புகளின் தலைவர்களையும் சந்திப்பதன் மூலம் மட்டுமே இந்த நிகழ்ச்சி ஒழுங்கு செயப்பட்டது. இதன்முழு காரணமாக,முன்முயர்ச்சியாக இருந்தவர் என்றவகையில் திருமுருகனை பர்ராட்டாமல் இருக்க முடியாது.

Friday, June 24, 2011
முதல்வரின் தீர்மானத்திற்கு வலுச்சேர்க்க மெரினாவில் கூடுவோம்.
ஜூன் 26 என்பது "அனைத்து நாட்டு சித்திரவதைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நாள்". அந்த நாள் இன்றைய சூழலில், ராஜபக்சேவின் "தமிழின அழிப்பு உலகம் முழுவதும் அம்பலமாகி உள்ள" நேரத்தில், முக்கியத்துவம் பெறுகிறது. அதாவது இலங்கையின் திர்க்கட்சியாக இருந்தாலும், "சிங்கள பௌத்த பேராண்மை கொள்கையை" உறுதியாக தூக்கிப் பிடிக்கும் ரணில் விக்ரமசிங்கே சென்னை விமான நிலையத்தில் ஊடகவியலாளர்களிடம், " ஐ.நா. போர்விதி மீறல் ஒப்பந்தத்தில் கையெழுத்து போடாத இலங்கை அரசை எந்த ஒரு போர் விதி மீறல் தீர்மானமும்" கட்டுப்படுத்தாது என்று கூறினான்.
அதேசமயம் உலகம் முழுவதும், "ஐ.நா.வின் சித்திரவதை எதிர்ப்பு ஒப்பந்தத்தில் "இலங்கை கையெழுத்து போட்டுள்ளது என்ற குரல் எழும்பியது. அந்த " சித்திரவதைக்கு எதிரான அனைத்து நாட்டு ஒப்பந்த நாள் " ஜூன் 26 இல் வருவதால், அதே நாளில், தமிழின உணர்வாளர்கள் ஒன்று கூடி, சென்னை கடற்கரை மெரினாவில், கண்ணகி சிலைக்கு பின்புறம் கடற்கரை மணலில், மாபெரும் "மெழுகுவர்த்தி ஏந்தல் நிகழ்வினை" நடத்த திட்டமிட்டுள்ளனர். இது "தமிழக சட்டப்பேரவை நிறைவேற்றிய தீர்மானத்தையும்? வலுப்படுத்துவதாக அமையும். டில்லியின் முழுமையான "தலையீடுகளையும்" தாண்டி, முதல்வர் செல்வி.ஜெயலலிதா நிறைவேற்றிய "தனித் தீர்மானமான" போர்குற்றம் செய்தவர்களை, "போர் குற்றவாளிகள்" என்று அறிவிக்க கோருவது, தில்லியையும், கொழும்பையும் அச்சுறுத்தி உள்ளன.
டில்லியும், கொழும்பும் அந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பை மறைமுகமாக கொடுத்து வரும்போது, "சட்டப் பேரவை தீர்மானத்திற்கு முழுமையாக தமிழக மக்கள் மன்றம் வலுச் சேர்கிறது" எண்பதை இந்த ஞாயிறு கடற்கரை அணிதிரட்டல் மூலம் தமிழ் மக்கள் நிரூபிப்பார்கள்.

நிரூபமா ராவ் அமெரிக்காவின் எடுபிடியா?
நிருபமா ராவ் இந்திய வெளிவிவகார செயலாளராக வந்தார். முக்கியமாக இலங்கை அரசின் தமிழின அழிப்பு வேலைகளை செய்வதற்கு துணை சென்றார். அதில் இந்திய அரசின் நலனை நிலை நிறுத்தினார். இலங்கையில் தமிழின அழிப்பை நடைமுறைப்படுத்த, அந்த போருக்கு முழு உதவியையும் செய்தது இந்திய அரசு என்றால், அதற்கான டிப்படையை போட்டுக்கொடுத்து, உலக அளவிலான " பயங்கரவாதத்திற்கு எதிரான போர்"என்ற பெயரைக் கொடுத்தும் அமெரிக்காவின் கைங்கரியம்தான். ஐரோப்பிய நாடுகளிலும், இங்கிலாந்திலும்,இந்தியாவிலும், "புலிகளை பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தி" தடை செய்ய ஏற்பாடு செய்ததும் அமெரிக்காதான் என்பது இப்போது பகிரங்கமாகி உள்ளது.
இத்தகைய சூழலில், நிரூபமா ராவ் அமெரிக்காவின் எதிர்பார்ப்பிற்கு இணங்க " இலங்கை-இந்திய உறவை" பேணி பாதுகாத்தார் என்பதால், அதில் இலங்கையை சீனா பக்கம் முழுமையாக சார்ந்து நிற்க விடாமல் கையாண்டார் என்பதால் அது அமெரிக்காவின் நலனை பேணுவதில் உள்ள கெட்டிகாரத்தனம் என்றுதான் புரியப்படவேண்டும். அதுமட்டுமின்றி "இந்தியாவில் முக்கிய பதவிகளுக்கு வருவோரை" தேர்வு செய்யும்போது, சிறந்த உளவுத் துறை வைத்திருப்பதாக டில்லியால் நம்பப்படும் அமெரிக்கா சொல்கின்ற நபர்களை அந்த பதவிகளில் போடுவது இந்திய அரசுக்கு வாடிக்கைதான்.
அவ்வாறுதான் "எம்.கே.நாராயணனும், சிவசங்கர மேநோனும், நிரூபமா ராவும் தேர்வு செய்யப்பட்டார்கள். அன்ஹா விசவாசத்தை நிரூபமா அராவ் முறையாக காட்டுவார். இப்போது "காஷ்மீர் பிரச்சனயை" அமெரிக்கா விரும்பும் பாணியில் கையாளத் தொடங்கியுள்ளார். பாகிஸ்தானுடன் உள்ள நட்பை அமெரிக்கா விரும்பும்படி பேசி வருகிறார். அதேபோல "அமெரிக்கா விரும்புவது போல, மியான்மரில், சூ கியூ வுடன் பேசச் சென்று அவரை நிதானப்படுத்தி அங்குள்ள ராணுவ ஆட்சியாளர்களையும் காப்பாற்றி உள்ளார். இத்தகைய வேலைகளை அவசர் அவசரமாக செய்வதன் மூலம், தான் அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரக தூதுவராக போக தகுதி உள்ளவர் எண்பதை நிரூபித்து கொண்டுள்ளார்

Thursday, June 23, 2011
கனிமொழிக்கு அன்று கோபம், தணித்தார் கலைஞர்
கனிமொழிக்கு உச்சநீதிமன்றத்தில், பிணை கிடைக்கவில்லை. அது பெரியதொரு இழப்பு. ஏன் என்றால் சிறையில் உள்ளவர்கள் எப்போதுமே பிணிக்கு, மேல் முறையீடு என்று அடுத்த கட்ட உயர்ந்த நீதிமன்றத்திற்கு செல்ல அவசரப்பட மாட்டார்கள். ஏன் என்றால் உயர்ந்த நீதிமன்றத்தில் ஒரு முறை பிணை மறுப்பு வந்துவிட்டால், அடுத்து பிணை போட மிக தாமதமாக ஆகும்.இது உள்ளே இருய்க்கும் எல்லா கைதிகளுக்கும் தெரிந்த செய்தி. வெளியே உள்ளவர்களுக்கு தெரியாது, விளங்காது. அதே விசயம்தான் கனிமொழி விசயத்திலும் நடந்தது.
கனிமொழியும், சரத் குமார் ரெட்டி யும், தங்களுக்கு உச்சநீதிமன்றத்தில் பிணிக்கு முறையிடக்கூடாது என்பதில் உறுதியாக கூறி வந்தனர். அவர்களுக்கு இந்த ரகசியம், சிறைக்குள் சென்ற உடனேயே பல கைதிகளின், மற்றும் சிறைத்துறை காவலர்களின் ஆலோசனைகளில் தெரிந்து விடும், தெரிந்து விட்டது. அதனால் அதில் உறுதியாக இருந்தனர். ஆனால் அமைச்சர் ஜகத் ரட்சகனும், டில்லியில் ராஜாத்தி குழுவிற்கு உதவி வரும் துறை என்பவரும் அதற்கு எதிராக ஏதோ தாங்கள் அதிக அக்காரை கொண்டவர்களாக காட்டிக்கொண்டு, உச்சநீதிமன்றம் செல்ல வற்புறுத்தினர். அவர்களுக்கு இதன் விவரம் தெரியாது. களிஞருக்கும், ராஜாத்திக்கும் விவரம் புரியவில்லை. ஏற்கனவே இவர்களை ஏமாற்றி ஒரு பெரிய அதிகாரி இப்போது அகதிகள் முகாமிற்கு அனுப்பப் பட்டவர் பல பத்து கோடிகளை சம்பாதித்து விட்டார் என்ற கருத்தும் இருய்க்கிறது.
உச்சநீதிமன்றம் மறுத்தது மட்டுமின்றி, குடர்ப்பத்திற்கை தாக்கலான பிறகுதான் கீழ் கோர்டில் பிணிக்கு அணுக வேண்டும் என்று வேறு கூறி விட்டது. இது பெரிய அடி. சிறைக்குள் உள்ளே இருப்பவர்களுக்கு தான் அதன் அருமை தெரியும். கனிமொழிக்கு பயங்கர கோபம். தந்தையிடம் கடுமையாக பேச எண்ணி இருந்தார். அது களிஞருக்கும் தெரிந்து விட்டது. அதனால்தான் அவர் முதலில் கனிமொழியை தனியாக பத்து நிமிடம் சந்தித்தார். அப்போது முதலில் கலிஞர் கண்ணீர் விட்டு விட்டார். பாவம். மகளும் கண்ணீர் விட்டு விட்டார். திட்டு .வாங்காமல் தான் தஹ்ப்பித்த பிறகுதான், ராசாத்தியை உள்ளே அனுமதித்து அவருடன் பத்து நிமிடங்கள் மகளை சந்தித்து உரையாடினார்.
எப்படியோ, கனிமொழியை பழிவாங்க எண்ணிய குடும்பத்தின் பிற உர்ப்பினர்களுக்கு இது திருப்தியைத் தந்திருக்கும். ஆனால் அவர்களுக்கும் வருகிறது வரலாறு என்று கணிம்ழிகுழுவினர் கூறுகிறார்கள்.

Monday, June 20, 2011
கனிமொழிக்கு பிணை மறுப்பு யாருக்கு எதிரானது?
கனிமொழி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை ஸ்பெக்ட்ரம் ஊழலில் சீ.பி.ஐ. சம்பந்தப்படுத்தி கித்து செய்துள்ளது. அவர்தான் 'கலைஞர் டிவி.க்கு" முக்கிய ஆலோசகர் என்றும், அவர்தான் கலைஞர் டிவி.யை இயக்கியவர் என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அப்படிக் குற்றம் சட்ட எதுவாக "அமிர்தம்" கொடுத்த சாட்சியையும், "ஆசிர்வாதம்" கொடுத்த சாட்சியையும் சீ.பி.ஐ. கூறுகிறது. நமக்கு தெரிந்து "கலைஞர் டி.வி.க்கு பின்னாலிருந்து இயக்கியவர் அல்லது அதற்கான முயற்சியை செய்தவர் இதே அமிர்தம் என்பதுதான். அமிர்தத்திற்கு, தயாநிதி மேலும், கலாநிதி மேலும்தான் அதிக பாசம் உண்டு. அவர்களது "சன் டி.வி.க்கு எதிராக கலைகர் டி.வி.யை நிறுத்துவதில் கனிமொழிக்கு பங்கு உண்டு என்று அவர் நினைக்கலாம் அல்லது கோபப்படலாம்.
அதற்காக அவர் அப்படி ஒரு "சாட்சியத்தை" கொடுத்திருக்கலாம். ஆனாலும் முழுமையாக "குடும்பத்திற்குள்" ஒருவர் அவர். அவரை " குடும்பத் தலைவர்"தான் கேட்க முடியும் அல்லது "திசி திருப்ப" முடியும். ஆனால் "கனி வெளியே வந்தால்" சாட்சிகளை "கலைத்துவிடுவார்" என்பதுதான் சீ.பி.ஐ.யின் குற்றச்சாட்டு. "ராஜாத்தி குடும்பத்தை சேர்ந்த கனி" எப்படி "தயாளு குடும்பத்தை சேர்ந்த அமிர்தத்தை" கலைக்க முடியும்? இரண்டு குடும்பத்திற்கும் ஆகாது என்பது நாடறிந்த உண்மை. "கலைஞர்" மட்டும்தான் "அமிர்தம் என்ற சாட்சியை"கலைக்கும் வல்லமை கொண்டவர். அப்படியிருக்கையில் அவரை உள்ளே வைக்காமல் , கனியை சிறையில் வைப்பதனால் எப்படி "சாட்சியை" கலைக்காமல் சீ.பி.ஐ பார்த்துக் கொள்ளும்?
அடுத்த "சாட்சி" திருச்சிகாரரான "ஆசிர்வாதம்". அவர் " கனிமொழி அடிக்கடி கலைஞர் டி.விக்கு வந்து போவார்" என்று சாட்சி சொன்னாராம். இது எப்படி "கனிமொழியை குற்றவாளியாக ஆக்கும்?" இந்த "சாட்சியான ஆசிர்வாதம்"என்பவர் ஆ.ராஜாவின் உதவியாளராக இருந்தவர். அவர் முன்னால் ரயில்வே ஊழியர். இப்போது ஒய்வு பெற்றுவிட்டார். இவர் ஏதோ நம்மூர் அதிகாரி ஆயிற்றே என்று டில்லியில் இவரை நம்பி ஆ.ராஜா தனது உதவியாளராக வைத்திருந்தார். பொதுவாக ராஜா நம்பி பழகிய பல உடையார் சமூக நண்பர்களில் இவரும் ஒருவர்..இவர் ராஜாவிடம் முரண்பட்டு வந்தபோது, "தயாவால்" அணுகப்பட்டு, ராஜாவிடம் இருந்த "பல ஆவணங்களையும், போடோ படங்களையும்" கூட எடுத்துக் கொண்டு "தயாவிடம்" கொண்டு பொய் கொடுத்து விட்டார். அதனால்தான் அவர் "தயாவின்" போட்டியாளர் "கனிக்கு" எதிராக "சாட்சி" சொல்லியுள்ளார்.இந்த "ஆசிர்வாதத்தை" கனி பிணையில் வந்தால் மட்டும் கலைத்து விடமுடியுமா?
"ஆசிர்வாதம், அமிர்தம்" ஆகியோரை கலைக்கும் திறமை அல்லது பலம், "குடும்பத் தலைவருக்கு" மட்டுமே உள்ளது. அவர் வெளியே இருக்கும் போது, கனி வெளியே வந்தால் கலைத்து விடுவார் என்பது எத்தனை ஏமாற்று? தவிர கலைஞர் கூற்றுப்படியே , தனது மகள் எந்த குற்றமும் அறியாதவர் என்றும், அவரை கலைஞர் டி.வி.யில் அவரது விருப்பத்திற்கு மாறாக "பங்குதாரர்" ஆகியது தான் தான் என்றும் பகிரங்கமாக கூறியுள்ளாரே? ஆப்டியானால் "விசாரிக்கப் படவேண்டியவர்" கலைஞர்தானே? எதற்கு கனிமொழியைபோய் துன்புறுத்துகிறார்கள்?
இப்போது உச்சநீதிமன்றம் கனிமொழிக்கும் , சரத்குமார் ரெட்டிக்கும் "பிணை மறுத்துவிட்டது" . விசாரணை நீதிமன்றத்தில், " பெண் என்ற காரணத்தை காட்டி, 437 பிரிவின் கீழ், குற்றப்பத்திரிகை வைத்த பிறகு, "பிணை கேளுங்கள்" என்று ஒரு நல்ல ஆலோசனையையும் கூறியள்ளது. இந்த ஆலோசனை சிலரது " வயிற்ரை கலக்கத் "தொடங்கியுள்ளது. ஒரு பெரும் "ஊடக பெருசசாளி" விரைவில் கைதாவார் என்ற செய்தி இருக்கிறது. அந்த மூன்றாவது குற்றப்பத்திரிகையில் அவர் மாட்டுவார் என்றும் தெரிகிறது. அவருக்கும் இதே நிலைதானே உச்சநீதிமரம் கூட எடுக்கும். அல்லது எடுக்க வேண்டும். அவரையும் "விசாரணை நீதிமன்றத்தில்" பிணை கேளுங்கள் என்றுதான் கூறும். ஆனால் அவருக்கு "பெண் என்ற அடிப்படையில்" எந்த பிரிவின் கீழும் பிணை கேளுங்கள் என்று கூறா முடியாதே? இதுதான் "தன் வினை தன்னை சுடுமா?"
சரி. "குடும்பத் தலைவர்" கனி மாட்டினால் பரவாயில்லை. தன் மகன் "கழகத்திற்கு பட்டத்து இளவரசனாக" வரவேண்டும் என்று ஆசைப்படுகிறாராமே? அதனால்தான் வெறும்" நீலிக் கண்ணீர்" மட்டுமே கனிமொழிக்காக விடுகிறார் என்று சீ.ஐ.டி. காலனி நினைக்கிறதே? இந்த "உச்சநீதிமன்ற பிணை மறுப்பு" யாருக்கு எதிரானது?

Subscribe to:
Posts (Atom)