Tuesday, May 10, 2011

ஏகபோகம் தமிழ்நாட்டில் மட்டுமா? இந்தியா பூரா?

சன் காட்சி ஊடக குழுவினரின் ஏகபோகம், ஊடகத்துறை தவிர, திரைத்துறை தவிர, திரையரங்குகள் தவிர, விநியோகத்தர் தவிர, எங்கும் நீடிக்கிறதே என்று பலரும், பல தொழில் செய்பவர்களும் தமிழ்நாட்டில் அதிர்ந்து போவதும் அவர்களே அதற்காக தேர்தலில் மாற்று வாராதா என்று என்குபவர்கலாகவும் இருப்பதை நாம் காண்கிறோம். ஆனால் வருகின்ற செய்திகளை தாமதமாக கண்கானித்தால், அதாவது ௨௦௦௯ ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்ததை கணக்கெடுத்தால், அந்த கலாநிதி மாறன் வகையறா, இந்தியா முழுவதும், இந்தி பேசும் மாநிலங்கள் உட்பட தனது ஊடக வலைப்பின்னலை விரிவாக்கி தனது கையில் போட்டுவருகிறார் எனபது புரியும்.


கிடைத்திருக்கும் தகவல்களின் ஆதாரப்படி, எப்.எம்.என்று அழைக்கப்படும் " ரேடியோ" வலைப்பின்னலில், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, என்ற தென்னிந்திய மாநிலங்கள் தவிர, மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், குஜராத், மத்திய பிரதேசம் ஆகிய வட மற்றும் மேற்கு மாநிலங்களிலும் தனகளது "சேவைகளை" விரிவு படுத்தியுள்ளனர். ரெட் எப்.எம். என்றுஅழைக்கப்படும் அந்த "ரேடியோ வலைப்பின்னல்" பொருளாதார பிரச்னைக்கு உள்ளான போது, அவர்களுக்கு நூறு கோடி கொடுத்து, அந்த அலைவரிசைகளில் அதாவது நிறுவனங்களில் 48 .9 விழுக்காடு பங்கை, கலாநிதி மாறன் வாங்கிவிட்டார். அதுதவிர அந்த நிறுவனத்தின் சிறுபான்மை பங்குகள் ஹைதராபாத்தை சேர்ந்த ஐ.டி. நிறுவனத்திற்கும், என்.டி.டி.வி. என்ற இருபத்திநாலு மணிநேரமும் ஒளிபரப்பப்படும் அலைவரிசையான காட்சி ஊடகத்திற்கும், மலேசியாவில் உள்ள அனந்த கிரிஷ்ணனுக்கு சொந்தமான ஆஸ்ட்ரோ நிறுவனத்திற்கும் சொந்தமாக உள்ளன.


இப்போது மேற்கண்ட பெரும் ஊடக நிறுவனகளுக்கு, சன் குழுமத்துடன் உள்ள வணிக உறவுகள் ஒன்றுக்குள், ஒன்று என்பது புரியப்பட முடியும். இந்த என்.டி.டி.வி. காட்சி ஊடகம்தான், ஸ்பெக்ட்ரம் ஊழலில் பிரதமர் பெயர் உச்சநீதிமன்றத்தில் சிக்கிக் கொண்ட பிறகு, காங்கிரஸ் கட்சியின் வாய் போல செயல்படும் ஊடகம் என்பதால் சில சித்து வேலைகளை செய்தது. அதாவது கபில் சிபில் என்ற வழக்காடும் வல்லமை பெற்ற மத்திய அமைச்சரை, பர்கா தத் என்ற ஊடகவியலாளர் மூலம் கேள்விகளை துளைத்து கேட்கச் சொல்லி, அவற்றிக்கு திறமையாக கபில் சிபல் பதில் கூறினார் என்ற தோற்றத்தை ஏற்படுத்தி பிரதமர் முகத்தை காப்பாற்ற பகீரத முயற்சி எடுத்துக்கொண்டனர். இ[பொது சோனியா குழுவில், ஊடகபெருந்தலை, தாயநிதிக்கு இருக்கும் செல்வாக்கு புரிய முடியும்.


இந்த ரெட் எப்.எம்.என்ற வலைப்பின்னலில் உள்ள ரேடியோக்களை, 93 .5 என்ற மெகா ஹெற்சில் கேட்கலாம். அது, மும்பை, கொல்கத்தா,கான்பூர், ஜாம்ஷெட்பூர், போபால்,ஜபல்பூர், இன்டோர், நாசிக், ஔரந்கதாபாத், நாகபுரி, பெங்களூரு, மைசூர்,மகளூர்,குல்பர்கா, கொச்சி, திருவனத்தபுரம், திருச்சூர்,கண்ணனூர், கோழிக்கோடு, ஹைதராபாத், விஜயவாடா, விசாகப்பட்டினம், வாரங்கல், ராஜமுந்திரி, திருப்பதி, அகமதாபாத்,வடோதரா, லக்னோ,ஐஸ்வால், அலகாபாத், வாரணாசி, ஜெய்பூர், புவனேஸ்வர், அசன்சால், சிலிகுரி, கான்க்டக், கவ்ஹதி, சில்லாங் ஆகிய உட்பட நாற்பது ரேடியோக்களை கட்டுப்படுத்துகிறது. அவை முதலில் 2002 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அதை எழு ஆண்டுகள் கழித்து அதன் நலிவு நேரத்தில் நூறு கோடிகளை விட்டெறிந்து சன் குழுமம் கைப்பற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் பங்குகள்" இந்தியா டுடே" நிறுவனத்திலிருந்து 2006 ஆம் ஆண்டு பல சிறு நிறுவனகளால் வாங்கப்பட்டது. அதில்பெரும் பங்கை சன் குழுமம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிவிட்டது.

இதே காரணம்தான் அந்த "இந்திய டுடே" நிறுவனத்தின் "ஹெட்லைன்ஸ் டுடே" யில் இப்போது ஒரு போய் கருத்து கணிப்பை வெளியிட்டு முதல்வரை திருப்தி படுத்தும் வேலையையும் தயாநிதி பார்க்க முடிந்தது. 2009 ஆம் ஆண்டு அகஸ்ட் 14 இல் "சூரியா எப்.எம்." இந்த ரெட் எப்.எம். இற்குள் கொண்டுவரப்பட்டது. 38 நகரங்களில் அது தனது ஒளிபரப்பை செய்யத் தொடங்கியது. முதலில் ஆங்கிலத்திலும், இந்தியிலும் , இருந்த அந்த ஒலிபரப்புக்கள், முழுமையாக இந்தி ஓயல்பரப்பாக மாற்றப்பப்ட்டன. அவை இசை, திரப் பாடல்கள் என்று ஒலிபரப்பிவருகின்றன. தமிழ்நாட்டை தவிர அனைத்து மாநிலங்களிலும், இது "ரெட் எப்.எம். என்ற பெயருடனே இயங்கிவருகிறது. அதன் முதலாளிகளாக கலாநிதி மாறனும், ஹன்ஸ்ராஜ் சக்செனாவும், அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன் தொலை தொடர்பு என்று சன் கேபிள் விசனும், சன் டி.டி.எச்.உம அறிவிக்கப்பட்டுள்ளன.

இதுதான் இன்றைய உண்மை கதை. ஆகவே சன் குழுமத்திடம் எந்த இந்திய அரசியல்வாதியும் தப்ப முடியாது. அந்த அக்டோபஸ் முன்னால் அடங்கிப் போயி ஆகவேண்டும் என்று அவர்கள் எதிர்பார்கிறார்கள். இது எப்புடி? .

காஸ்ட்ரோ 8 அடி பாய்ந்தால், கிலானி 16 அடி........,

அமெரிக்காவின் மாபெரும் சாதனை என்று பீற்றிக் கொள்ளும், அபோதாபாத்தில் ஒரு வீட்டில் இறங்கி சிலரை சுட்டுக் கொன்றது என்பது இருக்குமானால், அப்படி ஒரு ஐ.நா.வின் உறுப்பு நாடு ஒன்றில், இன்னொரு உறுப்பு நாடு இறங்கி திடீரென ஆய்தத் தாக்குதலை நடத்துவது, அமெரிகாவில்வர இருக்கும தேர்தலுக்கு வேண்டுமானால் வெற்றியாக இருக்கலாம். ஆனால் மானுடத்திற்கு, அது பின்பற்றிவரும் கொள்கைகளுக்கு, உலக நாடுகளின் இறையாண்மைக்கு, பிரிதொரு நாட்டிற்குள் தலையிடாமை என்ற கொள்கைக்கு, நிராயுதபாநியரை கொள்ளக் கூடாது என்ற அங்கீகரிக்கப்பட்ட விதிகளுக்கு, மனைவி,மக்கள்முன்பு ஒருவரை கொல்வது சரியா என்ற கேள்விக்கு, மாபெரும் தோல்வி என்றுதான் கொள்ளவேண்டும்.


காஸ்ட்ரோ எழுதியதில் இருந்த நியாயத்தை ஏற்கனவே பார்த்தோம். இப்போது கொலை நடந்து சில நாட்கள் கழித்து, பாகிஸ்தான் அதிபர் கிலானி, பேசுகிறார். அவர் உலக சமூகத்தை சிறிது பின்னால் சென்று பார்கச்சொல்கிறார். கடந்த 90 ஆம் ஆண்டுகளின் நிகழ்வுகளை நினைவுக்கு கொண்டுவருகிறார். சீ.என்.என். மூலம் ஆவணமாகி உள்ள அந்த செய்திகளை கவனத்திற்கு கொண்டு வருகிறார். ஆப்கானிஸ்தானில், அமெரிக்க உயர் அதிகாரிகள் நின்று கொண்டு, அவர்களே உதவி செய்து, இஸ்லாத்தின் பெயரிலும், நாட்டு பற்றின் பெயரிலும், "புனிதப் போர்" நடத்த வீடுகளுக்கும், மசூதிகளுக்கும் செல்லுங்கள் என்று அனுப்பப்பட்ட நிகழ்வுகளை கோடிட்டு காட்டுகிறார். அரேபியா தொண்டர்களை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பி "புனிதப் போரை" நடத்தவைத்ததை குறிப்பிடுகிறார்.அதன்மூலம் ஒசாமா பின்லாடேனையும், அல் கொய்தா இயக்கத்தையும் அமெரிக்கா தோற்றுவித்தது என்கிறார் கிலானி.


அடக்குமுறை, ஒடுக்குமுறை, ஆகியவற்றால் கோபமும், விரக்தியும் அடைந்துபோன மக்களை பயன்படுத்தி, எப்படி ஒசாமா பின்லேடன் உலக அரங்கில் "பயங்கரவாதத்தை" நிகழ்த்தினார் என்றும் கூறுகிறார். அந்த கோபமும், விரக்தியும் இன்னமும் பதில் சொல்லப்படாமலே இருந்தால், அதுவே இன்னொரு வடிவில் வெடிக்கும் என்கிறார். சீனாவிற்கு ஆறுதல் தந்ததற்கான நன்றியை சொல்கிறார். பாகிஸ்தான் ராணுவத்தையும், உளவுத்துறை ஐ.எஸ்.ஐ.யையும் மட்டுமே குறை கூறுவதை கேள்வி கேட்கிறார் கிலானி. உலக உளவுத்துறைகள் அனைத்துமே தோற்றுவிட்டன என்பதுதான், அபிதாபாத்தில் பின்லேடன் இருந்த செய்தி காட்டுகிறது என்கிறார். கிலானியின் இந்த பாய்ச்சல் அமெரிக்காவின் கொடு முகத்தை மப்லப்படுத்துவதாக அமைந்துள்ளது.

Monday, May 9, 2011

பிடல் காஸ்ட்ரோ கூறுவதால் ஏற்றுக்கொள்வார்களா?

அமெரிக்கா தான்" பயங்கரவாதத்தை எதிர்த்த போரை" நடத்தி வருவதாக கூறிவருகிறது. அதில் ஒன்றுதான் பாகிஸ்தானுக்கு உள்ளே புகுந்து, நிராயுத பாணியாக இருந்த ஒரு பெரியவர் பின் லதனை சாய்த்து விட்டோம் என்று இறுமாப்பு கொள்கிறார்கள். அது பற்றி, கியூபா நாட்டு போராளித்தலைவர் " பிடல் காஸ்ட்ரோ" எழுதுகிறார். அவர் ஏற்கனவே அமெரிக்காவால், அதன் உளவு துறையால், அதன் சீ.ஐ.ஏ.வால் "பலமுறை" படுகொலை செய்யப்படுவதற்காக இலக்காகி ஒவ்வொரு முறையும் தப்பியவர். அமெரிக்காவிற்கு அருகே ஒரு நாட்டில் அமெரிக்காவின் முதலாளித்துவ பொருளாதாரத்தை ஏற்காத காரணத்தால், கியூபாவும், அதன் சிற்பியான பிடல் காஸ்ட்ரோவும் தொடர்ந்து அமெரிக்காவால் குறி வைக்கப் பட்டவர்கள். அவர் இந்த பின்லேடன் கொலை பற்றி எழுதுவதால் அது கவனிக்கத் தக்கது.

அமெரிக்காவில் 2001 ஆம் ஆண்டு நடந்த 9 / 11 தாக்குதல் நேரத்தில் கியூபா உடனடியாக அதில் பாதிக்கப்பட்டோருக்கு மருத்துவ உதவிக்கும், மனிதாபிமான ரீதியாக உதவி செய்தது என்கிறார். அதுமட்டுமின்றி உடனடியாக அமெரிக்கா முக்கிய விமானப் படைக்கு அந்த நாட்டில் உடனடியான பாதுகாப்பு கேள்விக்குரியானதால், கியூபா நாட்டில் அவை தரையிறங்க உதவிகள் செய்ஹ்டுள்ளோம் என்கிறார். அதுதான் தக்க சமயத்தில் பயங்கரவாதத்தை எதிர்த்து செய்யும் உதவிகள். ஆனால் இப்போது அமெரிக்கா கொலை செய்துள்ள பின் லேடன், ரசியாவிற்கும், சீனாவுற்கும் எதிராக, செயல்பட்டவர். அவருக்கு அப்படி செயல்பட அமெரிக்கா நிதி உதவி, ஆயுத உதவி, ஆயுத பயிற்சி ஆகியவற்றை அளித்தது என்றும் குறிப்பிடுகிறார்.

அப்படிப்பட்ட பின்லாடனை இன்று பாகிஸ்தான் என்ற 25 கோடி முஸ்லிம் மக்கள் கொண்ட ஒரு நாட்டில் அந்த மக்களுக்கும் அரசுக்கும் தெரியாமல், பின்லேடனின் மனைவி, மகள் முன்பே, நிராயுடாத பாணியான அவரை சுட்டு கொன்று கொலை செய்துள்ளது.என்று எழுதுகிறார்.அது மட்டுமின்றி, மனித உரிமைகளுக்கு சிறிதும் மதிப்பு கொடுக்காமல் இப்படி அவர்களது சுற்றத்தார் முன்னிலையிலேயே படுகொலை செய்த அமெரிக்காவின் செயல் எந்த வகையில் நியாயம் என்று வினவுகிறார்.

யாழில் சிங்களவன் நடத்தியதை சென்னையில் தமிழன் நடத்தினால்?

முள்ளிவைகால் இறுதி போரில் பலாயிரகனகான தமிழர்களை கொன்று குவித்த சிங்கள ராணுவ கொடியவர்களை, தமிழர்கள் அல்லாத உலக மனித உரிமை ஆர்வலர்கள், ஐ.நா. நிபுணர் குழு மூலம் அம்பலப்படுத்தியிருந்தனர். அதாவது பாதிக்கப்பட்டவர்கள் தமிழர்கள். பாதிப்பை ஏற்படுத்தியவர்கள் சிங்களர்கள். பாதிக்கப்பட்ட தமிழர்கள் சாத்வீக வழியில், தங்கள் கோரிக்கைக்கு ஒரு அடிப்படையாக ஐ.நா. நிபுணர் குழு முன்வைத்துள்ள " போர்குற்ற அறிககையை" வைத்துக்கொண்டு அதை அமுல்படுத்துங்கள் என்று தமிழ்நாடு முழுவதும், ஏன் இந்தியா முழுவதும் கையெழுத்து வாங்குகின்றனர். ஆயுதம் தூக்கி, எதிரியை ஓட, ஒட விரட்டிய கரங்கள் இன்று கைகளில் தாள்களை ஏந்தி, கையெழுத்து வாங்கும் நிலைக்கு தங்களை இறக்கிகொண்டுள்ளனர். அதை கோழைத்தனம் என்று சிங்கள வெறியர்கள் எண்ணிவிட்டார்கள் போலும்.

உலகம் முழுக்க உள்ள தமிழன் கோழைகளாக சிங்கள வெறியன்களுக்கு, பட்டிருக்கிறது போலும். அதனால் பாதிப்பை ஏற்படுத்திய சிங்கள வெறியர்கள், தாங்கள் செய்த தவறுகளை சுட்டிக் காட்டும் ஐ.நா. அறிக்கைக்கு எதிராக கோபம் கொந்தளிக்க பேசிவருகிறார்கள். அதுமட்டுமின்றி ஐ.நா. அறிக்கைக்கு எதிராக கையெழுத்து வாங்கும் வேலையையும் தொடங்கி இருக்கிறார்கள். தங்கள் சொந்தப் பகுதியான தென்னிலங்கையை விட்டு, பாரம்பரிய தமிழர் பகுதியான "யாழ்பாணத்தில்" போய் இறங்கி, அங்கே தமிழர்களை அடித்து, துன்புறுத்தி, அதிலும் கத்தோலிக்க அருள் தந்தையை கூட விடாமல், துரத்தி சென்று தமிழர்களுக்கு எதிராக வலுக்கட்டயமாக கையெழுத்து வாங்கி இருக்கிறார்கள். பாதிப்பை ஏற்படுத்திய "சிங்களம்" தனது குண்டர் படை மூலம் இதை செய்யுமானால், பாதிப்புக்கு உள்ளாகியுள்ள தமிழர்கள் எதை செய்யவேண்டும் என்று வரலாறு எதிர்பார்கிறது?

இந்தியாவிலும், உலகின் ஒவ்வொரு பகுதியிலும் இருக்கும் தமிழர்கள், அந்தந்த பகுதியில் உள்ள சிங்களர்களை, நல்ல எண்ணத்தோடு அணுகி, சிங்கள போர்வெறியர்கள் செய்த குற்றங்களுக்கு எதிராக ஐ.நா. நடவடிக்கை கோரி, சிங்கள அப்பாவி மக்களிடம் கையெழுத்து வாங்க வேண்டும் என்பதைத்தான் உலகமும், அதன் வரலாறும் எத்ரிர்பார்கின்றன என்பது நமக்கு புரிகிறது. அப்படி ஒரு அமைதி புரட்சியை, சிங்கள மக்களும் விரும்புவார்கள் என்பதால், எங்கெங்கு சிங்களர்கள் கண்களுக்கு தென்படுகிரார்களோ, அங்கெல்லாம் சென்று அவர்களது மனிதாபுமான் சிந்தனை மீது நம்பிக்கை கொண்டு அவர்களை நெருங்கி அணுகி, தமிழர்கள் கையெழுத்து வாங்கி அதை விரைவில் ஐ.நா.விற்கு அனுப்பிவைக்கவேண்டும் என்பதுதானே சரியான் கோரிக்கையாக இருக்கும்.

Sunday, May 8, 2011

கோத்தபாயேவை சந்திக்க நிரூபமாராவும், சீவசங்கர்மேணனும் ஏன் போகணும்?

வருகிற மே 13 ஆம் நாள், .கொழும்பு சென்று, இந்திய அரசின் வெளிவிவகார துறையின் செயலாளர் நிரூபமா ராவ், மற்றும் " தேசிய ஆலோசனை குழு" தலைவர் சிவசங்கர் மேனன் ஆகியோர் சந்திக்க இருக்கிறார்கள். இந்த திடீர் சந்திப்பு ஏன்?.யார் இந்த கோத்தபாயே? இலங்கையில் 2009 ஆம் ஆண்டு மே மாதத்தில் நடந்த, நான்காவது வாணி போரில், " பெரும் போர் குடர்ந்கள்" நடந்ததாக இன்று ஐ.நா. நிபுணர் குழு வெளியிட்டதால் ஒரு பர,பரப்பு உலக சமூகம் மத்தியல் கிளம்பியுள்ளது. அந்த "போர்குற்றங்களை" இழைத்தது என்று, இலங்கை அரசத்தலைவர் மஹிந்த ராஜபக்சே குற்றம் சாட்டப்பட்டாலும், களத்தில் நடந்த அனைத்து சிங்கள ராணுவ, "தமிழின அழிப்பு" மோசடிகளுக்கும் நேரடி பொறுப்பாக இருப்பவர், இலங்கையின் பாதுகாப்பு செயலாளரான " கோத்தபாயே ராஜேபக்சே" என்ற மஹிந்த ராஜபக்சேவின் அன்பு தம்பிதான்.

இந்த கொடிய மனிதனை ஐ.ந. சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் இலங்கை "போர்குற்ற அறிக்கை" பற்றிய விவாதம் வருவதற்கு முன்னால், எதற்காக இந்திய அரசின் முக்கிய முடிவுகளை எடுக்கும், மற்றும் முக்கிய முடிவுகளை அரங்கேற்றும் இரண்டு முக்கிய அதிகாரிகள் கோத்தபாயேவை சந்திக்க வேண்டும்? நிரூபமா ராவ் இந்திய வெளிவிவகார செயலாளர். அவர் இந்த நேரத்தில் இலங்கை அரசை அனைத்து நாட்டு சமூகத்திலிருந்து காப்பாற்ற ஆலோசனை கொடுக்க போகிறாரா? என்ற கேள்வி எழுகிறது. அதையும் தாண்டி, "சிவசங்கர் மேனன்" இந்த ஈழத்தமிழர் இன அழிப்பு போரில் ஒரு முக்கிய பங்காளி. அந்த முக்கிய போர்குற்ற பங்காளி இப்போது அங்கே சென்று, இந்திய அரசின் "போர்குற்ற பங்கை" மறைக்கவோ, இலங்கை அரசின் போர்குற்றங்களை திசை திருப்பி விடவோ ஏதாவது சதி திட்டங்களை ஆலோசிப்பதற்கு செல்கிறாரா என்ற கேள்வி தமிழர்கள் மத்தியில் எழுந்துள்ளது.


அதற்கு அவர்கள் தேர்ந்துடுதுள்ள நாள் மே 13 . இது மேலும் சந்தேகத்தை வலுப்படுத்துகிறது. அதாவது ஈழத்தமிழர் மீதான இன அழிப்பு நடவடிக்கைகளில், இந்தியாவில் உள்ள தமிழ்நாட்டில்தான் ஈழரை கோடி தமிழர்கள் இருக்கிறார்கள் என்றும், அவர்கள் கொந்தளித்தால் இந்திய அரசு "தமிழின அழிப்பை" வெற்றிகரமாக செயல்படுத்த முடியாது என்றும், ஏற்கனவே இந்திய உளவு துறைகள் மத்திய அரசுக்கு தெளிவுபடுத்தி இருந்தன. அதை ஒட்டி, மத்திய அரசும் தமிழ்நாட்டு ஆள்வோருக்கு முக்கியத்துவம் தந்து, அவர்கள் மூலம் அனைத்து ராஜபக்சே ஆதரவு பணிகளையும் செய்து, இன அழிப்பு போரை ஒரு கட்டம் சாதித்துவிட்டது. . அதில் நேரடியாக ராஜபக்சேவும், தமிழக முதல்வர் களிஞருக்கு கடிதம் எழுத, அதை அடிப்படையாக வைத்து கலைஞரும், பத்து நாடாளுமன்ற உறுப்பினர்களை அனுப்பி வைக்க என்ற கதைகள் அரங்கேறியது. ராஜபக்சே இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களை அனுப்ப சொல்லி, இந்திய தலைமை மைச்சர் மன்மோகனுக்கு கடிதம் அனுப்பவில்லை. மாறாக தமிழக முதல்வருக்கே கடிதம் அனுப்பினார். அது வெற்றியும் பெற்றது. காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறப்பினர்கள் உட்பட கலைஞரின் கட்டுப்பாட்டில், வழிகாட்டலில் இலங்கை சென்று வந்ததும் முதல் அறிககையை கலைஞரிடம் காட்டிவிட்டே டில்லி சென்றதும் நடந்த கதை.


அந்த அளவுக்கு தமிழ் பேசி,பேசியே வளர்ந்த ஒரு இயக்க தலிவரையே கைக்குள் போட்டு தனது சதிகளை நடத்திட ராஜபக்சேவிற்கு ஆலோசனை வழங்கியவர்களும் இதே டில்லி அதிகாரிகள்தான்.இப்போது பதின்மூன்றாம் நாள் அவர்களுக்கு ஏன் இந்த அவசரம்? அன்று தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளிவரும் நாள். டில்லிக்கு ஒரு பெரும் சந்தேகம். தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு, திமுக கூட்டணி வெற்றிபெற்று வராமல், அதிமுக கூட்டணி வெற்றிபெற்று வந்துவிட்டால், இலங்கை பிரச்சனையை எப்படி சமாளிப்பது? ஏற்கனவே அதிமுக தலைவி செல்வி.ஜெயலலிதா தனது அறிக்கைகளில் தெளிவாக ஐ.நா. அறிக்கை பற்றி குறிப்பிட்டுள்ளார். டில்லி அரசுக்கு சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளார். அதில் போர்க்குற்றவாளி ராஜபக்சே மற்றும் பொறுப்பாளர்களை, " அனைத்து நாட்டு விசாரணைக்கு உட்படுத்த" மத்திய அரசு முயற்சிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அதற்காக தேவைப் பட்டால் " இலங்கை அரசின் மீது பொருளாதார தடையை" அறிவிக்கலாம் என்றும் ஆலோசனை கூறியுள்ளார். இதை மத்திய அரசு கவனமாக் கவனித்துள்ளது.


அதன்விளைவாக தேர்தல் முடிவு வெளியாகும்போது, தங்களை கேள்வி கேட்கும் அரசு தமிழ்நாட்டில் அமையும்போது, எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்த இந்த இலங்கை பயணத்தை இந்திய முக்கிய அதிகாரிகள் மேற்கொள்வதாக தெரிகிறது. தமிழ்மக்கள் என்ன செய்யப்போகிறோம்? .

நாடு கடந்த தமிழீழ அரசு தோழமை மையம் கூடியது.

வழக்கம் போல, பேராசிரியர் சரஸ்வதி வீட்டில், மாலையில் சனிகிழமை "நாடு கடந்த தமிழீழஅரசு தோழமை மையம்" கூடியது. நடத்திய பேரணி பற்றிய " நிறை-குறை" பற்றிய ஆய்வு நடத்தியது. திட்டமஈட்ட காலத்திலிருந்து, துண்டறிக்கை வெளியிட்டது, அனுமதி பெற்றது, அணி திரட்டியது, எழுத்து பலகைகள் தயாரித்தது, சுவரொட்டி ஒட்டியது, கொலை செய்யப்ப்பட்ட மீனவர்களின் படங்கள் தயாரித்து அட்டைகளாக்கியது, துணி பதாகை தயாரித்தது, முழக்கங்கள் தயாரித்தது, எழுப்பியது, பேரணி நடத்தியது, ஊடகங்களை அழைத்தது, தமிழ் காட்சி ஊடகங்களில் அனைத்தும் ஒளிபரப்பியது, நியூ இந்தியன் எச்ப்றேஸ் தவிர எந்த ஒரு தமிழ், ஆங்கில அச்சு ஊடகங்களும் வெளியிடாதது, அதற்கான தடுப்பு சக்திகளை அடையாளம் கண்டது, அதையொட்டி அனைத்து ஊடக தலைமைகளையும் சந்திக்க திட்டமிடுவது, இணைய தள ஊடகங்களில் பல வகைகளில் சித்திகளையும், படங்களையும், அவரவர் வெளியிட்டது, போன்ற பல செய்திகளும் பரிமாறப்பட்டது.

கூட்டத்தில் பேராசிரியர் சரஸ்வதி, டாக்டர் பானுமதிபாச்கர், வழக்கறிஞர் பாண்டிமாதேவி, மணிமேகலை,பெதிக-தவசி, தமிழர் உலகம் காஞ்சி தமிழினியன், ச்வ்ரி, மீனவர் முற்போக்கு சங்க மா.கி, இந்திய மீனவர் சங்க தயாளன், தட்சிணா, அகில இந்திய பாரம்பரிய மீனவர் சங்க ரூபேஷ், தமிழ்நாடு மீனவர் முன்னேற்ற சங்க கோபலகிருஷ்ணன், திரைப்பட கலைஞர் சாத்தப்பன்,இந்திய தவ்ஹித் ஜமாத் மொய்தீன், த.தே.வி.இய. தோழர்கள்,ஊடகவியலாளர் மணி, பாலு, செல்வராஜ், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டியக்கம் காணும்போது, திட்டமிட்டதை கடந்து தனி நபர், அல்லது தனி அமைப்பு முன்னிலைப் படுத்த முயல்வதை தவிர்க்க உறுதி ஏற்கப்பட்டது. அதேபோல "தோழமை மையம்" கொண்டுள்ள பண்பாடான அந்த இடத்தில் திரட்டிய நிதியை அங்கேயே வெளியிட உறுதி செய்ய முடிவெடுக்கப்பட்டது. பேரணி இருபது நூறுகளை கடந்து திரண்டது பாராட்டப் பட்டது. பெண்கள் இயக்கங்களின் பங்கு அணிதிரட்டலில் மிகுந்து நின்றது. மீனவர் சங்கங்களும், மீனவ பஞ்சாயத்துகளும், அதிக அளவில் திரண்டது பாராட்ட தக்கது. முஸ்லிம் அமைப்புகளான " மனித நேய மக்கள் கட்சி" " தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்" " இந்திய தவ்ஹித் ஜமாத்" ஆகியவை தமிழ் உணர்வுடன் வேகமாக முழக்கமிட்டு, கொடிகள் பிடித்து வந்தது பாராட்டப் பட்டது. "நாம் தமிழர் இயக்கம்", " புதிய தமிழகம்", " தமிழ் தேசிய விடுதலை இயக்கம்", காஞ்சி மக்கள் மன்றம், மே 18 இயக்கம்,மற்றும் பல்வேறு தமிழ் அமைப்புகள், கலந்து கொண்டது பாராட்டப் பட்டது.

மின்சார இயக்கத்தில் ஒலிபெருக்கி வைத்திருக்க வேண்டும் என்று உணரப்பட்டது. துனடரிக்கை சிறியதாக இருந்திருந்தால் பொதுமக்கள் படிக்க ஏதுவாக இருக்கும் என்றும் கூறப்பட்டது.அழைப்பு கொடுத்தான் வார இயலாத கட்சிகள், அமைப்புகள் பற்றியும் விவாதிக்கப்பட்டது "தோழமை மாயம்" கட்டப்பைப்பு கட்டும்பணியை செய்ய பலரும் வலியுறுத்தினர். " நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்" மீது எழுந்துள்ள கேள்விகளும் விவாதிக்கப் பட்டது. அதன் செயல்களை வைத்துதான் எந்த ஒரு அமைப்பு பற்றியும் கருத்து கொள்ள முடியும் என்று ஏற்கப்பப்ட்டது. "நா.க.த.ஈழ.அரசு." செயல்பாடுகளின் விளைவு ஐ.நா. அறிக்கை வெளிவர உதவியதும் பாராட்டப் பட்டது..

ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை மீது "கையெழுத்து இயக்கம்" நடத்தி, "நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்" பெற்றுக்கொள்ள அனுப்பிவைக்க முடிவு செய்யப்பட்டது. அதற்கான படிவங்கள் விநியோகிக்கப்பட்டன. மே 12 முதல் 18 வரை, "கருப்பு பட்டை" அணிய திட்டமிடப்பட்டது. " முள்ளிவாய்க்கால் படுகொலைகளை " யொட்டி, கண்டன கூட்டங்களை நடத்த திட்டமிடப்பட்டது.மே 16 இல், "வடபழனி" யிலும், மே 17 இல் " ராயபுரம்" பகுதியில் மீனவர் சங்கங்கள் பொறுப்பிலும், மே 18 இல் காஞ்சியில் "தமிழர் உலகம்" சார்பிலும், " தோழமை மையம்" கண்டன கூட்டங்கள் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. மே 18 இல் "பெரியார் தி.க." சென்னையில் நடத்தும் கண்டன கூட்டம் பற்றியும் தெரிவிக்கப்பட்டது. மேற்கொண்டு "கையெழுத்து இயக்க" பணிகள் முடுக்கி விடப்பட்டன.

Saturday, May 7, 2011

வென்றால் வெளியே. தோற்றால் உள்ளேயா?

சீ.பி.ஐ. நீதிமன்றமும், அதில் வாய்தா கெட்ட சீ.பி.ஐயும் சேர்ந்து கனிமொழி பிணை விசாரணை முடிவை, மே பதினாலாம் தேதிக்கு ஏன் தள்ளிவைக்க வேண்டும்? அந்த அளவுக்கு இந்த நாடும், இந்த நாட்டின் உயர் புலனாய்வு நிறுவனமும், அதன் நீதிமன்றமும், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் முடிவுகளை எதிர்பார்க்கும் கைப்பாவைகளா? என்ற கேள்வி எங்கு நோக்கினும் எழுந்துள்ளது. மே பதிமூன்றாம் நாள் தமிழக தேர்தல்முடிவுகள் வெளிவருகிறது. அதில் அதிமுக அணி பெரும்பான்மையுடன் வெற்றி பெரும் என்பது மக்களின் கணிப்பு. அதற்கு விரோதமாக ," நாங்கள் கடைசி நேரத்திலும், வாக்குக்கு ஐநூறு ரூபாய் குறைந்த பட்சம் கொடுத்துள்ளோம். அதனால் தேர்தல் முடிவுகள் இழுபரியாகத் தான் வரும்" என்று திமுக தரப்பு பரப்பி வருகிறது.

அதை பார்த்து காங்கிரஸ் தரப்பும் ஒரு போதை ஏறி நிற்கிறது. அப்படி இழுபறி நிலையில் திமுக தரப்பு வந்தால், கூட்டணி அமைச்சரவை என்பதுதான் உறுதி என்றும், அதில் காங்கிரஸ் துணை முதல்வர் பொறுப்பை வாங்கி கொள்ளலாம் என்றும் கருதி இத்தகைய ஏற்பாட்டை தனது செல்வாக்கில் உள்ள சீ.பி.ஐ. மற்றும் நீதிமன்றம் மூலம் செய்துவருகிறது. இந்த முடிவு நீதிமன்றத்தில் அறிவிக்கப்படுவதற்கு முன்பே, திமுக தலைவர்கள், குலாம் நபி ஆசாத்தை சந்தித்து, நீங்கள் கண்ணிமொழியை கைது செய்தால், நாங்கள் அமைச்சரவையை விட்டு விலகி விடுவோம் என்று எச்சரிக்கை செய்ததும் ஏடுகளில் வந்துவிட்டது. இந்த எச்சரிக்கைக்கு அடிபணிந்து காங்கிரஸ் இப்படி ஒரு ஏற்பாட்டை செய்துள்ளது என்று நாடே ஒட்டுமொத்தமாக கூடி கூப்பாடு போடுகிறது.

ஏற்கனவே தி.மு.க. தங்களை பத்தொன்பது நாடாளுமன்ற உறுப்பினர்களை வைத்துக் கொண்டு மிரட்டுகிறது என்று கோபம் கொண்ட காங்கிரஸ், தமிழ்நாடு சட்டமன்ற போது தேர்தலில், திமுக தோற்கட்டும் என்று , தேர்தல் ஆணையத்திடம் கறாராக இருங்கள் என்பதாக கூறியிருந்தது அனைவருக்கும் தெரியும். அப்படி திமுக தோற்றால் தான், மத்தியில் உள்ள ஐக்கிய முற்போக்கு அரசாங்க ஆட்சியில் மிரட்டல் வேலை செய்யாமல், ஒழுங்காக காங்கிரசை சார்ந்து நிற்பார்கள் என்பது காங்கிரஸ் கட்சியின் டில்லி தலைமையில் இருக்கும் வாதம்.. இப்போது தப்பி, தவறி திமுக சொல்வது போல, இழுபறி நிலையில் அவர்கள் கூட்டணி மூலம் அதிக அளவில் வந்துவிட்டால், அதை வைத்து கூட்டணி அமைச்சரவையில் பங்கு வாங்க வேண்டும் என்பது காங்கிரஸ் தலைமைக்கு ஏற்பட்டிருக்கும் புதிய ஆசை. அதற்கேற்றார்போல அவர்கள் காய் நகர்த்துவதுதான் இந்த மே பதினாலு கனிமொழி பிணை பற்றிய தீர்ப்பு என்ற முடிவு.

ஏற்கனவே கண்கியர்சுக்கு அறுபத்தி மூன்று தொகுதிகளை தரமாட்டேன் என்று சொன்ன கலைஞரை நிர்ப்பந்திக்க, ஒருபுறம் ஐந்து காங்கிரஸ் தலைவர்கள் அறிவாலயத்தில் கீழ் தளத்தில் அமர்ந்து பேரம் பேசும்போதே, இதே சீ.பி.ஐ. யை பயன்படுத்தி, இதே ஸ்பெக்ட்ரம் வழக்கிற்காக, விசாரணை என்ற பெயரில், தயாளு அம்மையாரையும், கனிமொழியையும் அதே அறிவாலய மேல்மாடியில், விசாரணை என்று கொக்கி போட்டு, அந்த நிர்ப்பந்தத்தில், கலைஞரை காங்கிரசுக்கு தமிழ்நாட்டில் அறுபத்தி மூன்று தொகுதி என்று ஒப்புக்கொள்ள வைக்கவில்லையா? அதே செயல்தந்திரம் தானே இப்போதும் தொடர்கிறது? இந்த ஸ்பெக்ட்ரம் ஊழல் கண்கிரச்காரன் கையில் கிடைத்ததும் கிடைத்தது அதை வைத்து திமுகவை இந்த பாடு படுத்துகிறான்.

காங்கிரஸ் என்பது அந்த அளவுக்கு ஒரு மோசடியான அமைப்பு எண்பதை அவர்கள் இதில் பச்சையாக நிரூபிக்கிறார்கள். இப்போது கனிமொழி பின்னால் முழு கட்சியும் போய் நின்று விட்டது. அழகிரியும், தயாநிதியும் எடுத்த னைத்து முயற்சிகளும், கனிமொழியை தனிமை படுத்துவதில் வெற்றி பெறவில்லை. சென்ற 2009 நாடாளுமன்ற தேர்தலில், இதே ஸ்பெக்ட்ரம் பணம் டவேரா காரில் சென்றது என்றும், அறிவாலயத்திலிருந்து புறப்பட்டு செல்லும்போது ஒரு சிறு தொகையான ஐந்து கோடியை கடத்திய ஓட்டுனரை தேடி சாட்சி எடுத்து சீ.பி.ஐ. அவித்துல்லார்கள் என்றும் ஒரு ஏடு போட்டுவிட்டது. அந்த பணம் மட்டுமல்ல, அப்போது அறிவாலயத்திலிருந்து லார்ரி,லார்ரி யாக பணம் வெள்ளை கோணிகளில், எடுத்து செல்லப்பட்டதும், அதை மதியம் நேரத்தில் காவல்துறை பல சாலைகளிலும் அனுமதித்ததும் இனி யார் வெளியே கொண்டுவரப்போகிரரகள்?

அதேபோல இந்த முறை தேர்தலிலும் அதே மதிய நேரத்தில், சிறிய டெம்போ லாரிகளில், அதேபோன்ற வெள்ளை சாக்கு மூட்டைகளில், பணம் " கலைஞர் அரங்கத்திலிருந்து" அறிவாலயத்தில் எடுக்கப்பட்டு , பின்புற வழியான "வானவில்" பாதை வழியாக வெளியே சென்றதை யார் நிரூபிக்க போகிறார்கள்? இவை எல்லாமே ஸ்பெக்ட்ரம் பணம்தான் என்றால், உள்ளே இருக்கும் திமுக வின் கொள்கை பரப்பு செயலாளர் ஆ.ராஜாவிற்கு முழு கட்சியும் நன்றி சொல்ல வேண்டுமே?