Friday, August 26, 2011

தங்கையை உள்ளேயே சிறைவைக்க விரும்பும் அண்ணனா?


அப்பா "தலைவராக" இருக்கிறார். மூத்த அண்ணன் "மத்திய அமைச்சராக" ரசாயனத்துரையை பார்த்தும், பார்க்காமலும் இருக்கிறார். பேரங்கள் வணிகத்தில் முன்னேறி விட்டனரே. அதில் இளைய பேரன் கேட்டார் என்று, தலைவர் அந்த " தொலை தொட்பார்பு துறையை" வாங்கி தருகிறார். அதில் புதிய பணக்காரர்களான அம்பானிகளுக்கு, இளையவர் எல்லாம் செய்கிறார். பழைய பாரம்பரிய முதலாளி தனக்கு "டாடா" காட்டியதாக கோபபடுகிறார். டாட்டா, தாத்தாவிடம் வ்ருகிறார். அமைச்சரவை "கை" மாறுகிறது. கை நிறைய தங்கள் "பொம்மை" மூலம் குடும்பம் லாபம் பெறுகிறது. குடும்பத்தில் விழித்திக்கொண்டவன் கெட்டிக்காரன். வணிக சகோக்கள் உறவில் இருக்கும் " இளையவருகுதான்" அந்த வாய்ப்பு கிடைக்கிறது. அவரை " ஊடக சகோகளின்' வைக்கோல் கன்னுக்குட்டி என்றும் ஒரு "நக்கல் சொல்"உண்டு.

அதனால் தாத்தா தொடங்கிய புதிய "காட்சி ஊடகத்தில்" பயன் பெற்ற " பால்வாக்கள்" பணம் போட முயன்ற போது, தம்பிகாரரே அதை பெற்றுக்கொண்டார் என்பது பால்வா தரப்பு செய்தி. ஆனால் பணம் பெற்றதாகவும், காட்சி ஊடகத்தில் முக்கியத்தர் என்றும் "தங்கைகாரி" குற்றம் சாட்டப்பட்டு உள்ளே போகிறார். அடஹியே உணமியாக்கி அவரை உள்ளேயே தாலி, வெளியே வரவிடாமல் செய்ய இந்த "இளைய அண்ணனுக்கு" அப்படி ஒரு ஆசை. அதற்கு ஏற்றார்போல,ஒடகத்துரையை பெற்றுள்ள அமைச்சர், "பிணை வாங்க" உச்சநீதிமன்றம் செல்ல வற்புறுத்தி, அதுவே தங்கைக்கு எதிராக போய்விட்டது. அப்போதும் "தன்கைகாரியின்" கருத்தான "பிணை பெற உச்சநீதிமன்றம்" செல்ல வேண்டாம் என்ற கருத்து எடுபடவில்லை. இப்போது தனக்கு சம்பந்தமில்லாமல் " பிரதமரைய்டும், உள்துரையையும்" சாட்சிகளாக கூப்பிட தனது வழக்கறிஞர் கூறியது, தங்கைக்கு எதிராக போய்விட்டது. அதவே "பட்டத்திற்கு" துடிக்கும் அண்ணனுக்கு மகிழிச்சியை கொடுக்கிறது.

கனிமொழிக்கு முரண்பட்டு , அவரது வழக்கறிஞர் பேசினார்.


டில்லி "பாட்டியாலா நீதிமன்றம்" சீ.பி.ஐ. வழக்கை "பரபரப்புடன்" நடத்தி வருகிறது. திஹார் சிறையிலிருந்து, கனிமொழியும், ஆ.ராஜாவும், சரத்குமார் ரெட்டியும் நீதிமன்றம் வருகிறார்கள். ஆ.ராஜாவிற்கும், கனிமொழிக்கும் ஒரே வழக்கறிஞரை, "சுஷில் குமாரை" திமுக தலைமை நியமித்துள்ளது. முக்கிய குற்றவாளியாக முத்திரை குத்தப்பட்ட வழக்கறிஞர் ராஜாவிடமே , சுஷில் குமாரும் கலந்து பேசி, "வாதங்களை" தயார் செய்து கொள்கிறார். ராஜாவும்தனக்கு " தர்காபிர்கான" விவரங்களை எடுட்டிஹ்து கொடுத்து வருகிறார். இது இயல்பாகவே நடக்கக் கூடிய ஒன்றுதான். ராஜா மீது கூறப்பட்டுள்ள "குற்றச்சாட்டில்" அவர் "முதலில் வருபவருக்கு முதலில்" கொடுப்பது என்ற கொள்கையை பின்பற்றினார் என்பது முக்கிய குற்றச்சாட்டு. அந்த "முடிவை" எடுத்ததில் பிரதமரும், சிதம்பரமும் சேர்ந்துஎடுத்த முடிவு என்பது ராஜாவின் வாதம். அதாவது கொள்கை முடிவு எடுக்கும் போது, அன்றைய நிதி அமைச்சர் சிதம்பரமும், அன்றைய பிரதர் மன்மோகனும் இருந்து " கூட்டத்தின் குறிப்புகள்" எழுதப்பட்டு எடுத்த முடிவு அது.


அந்த "கூட்ட குறிப்புகளை" ஆ.ராஜா வழக்கறிஞரிடம் கொடுக்கிறார். அதே வழக்கறிஞர் கனிமொழிக்கும் பேசுவதால், கனிமொழி பற்றி பேசும்போது அந்த வாதத்தையும், அந்த "கூட்ட குறிப்புகளையும்" வழக்கர்டிஞர் சுஷில் குமார் நீதிமன்றம் முன்னால் வைக்கிறார். அது "ஊடகங்களில்" வெளியாகிறது. நாடாளுமன்றத்தில் அதைவைத்தே "பா.ஜ.க." பிரதமர் மீது பிரச்சனையை கிளப்புகிறது. மறுநாள் அதே பிரச்சனையை அதாவது, "பிரதமரும், சிதம்பரமும்" சாட்சிகளாக விசாரிக்கப்பட வேண்டும் எண்பதை ராஜா சார்பாக அதே வழக்கறிஞர் நீதிமன்றம் முன் வைக்கிறார். ராஜா மீது வைக்கப்பட்டுள்ள "குற்றச்சாட்டுகளுக்கு" அந்த வாதம் பொருத்தமானது. ஆனால் "கனிமொழி மீதான குற்றச்சாட்டுகளுக்கு " அது பொருத்தமானது அல்ல. கனிமொழி மீது "கலிஞர் டி.வி.க்கு" வந்த இருநூறு கோடி ரூபாய் பணம் சம்பந்தப்பட்ட வழாக்குதான் இருக்கிறது. அடஹ்ர்கு பிரதமரும், உள்துறையும் வரவேண்டிய அவசியம் இல்லை. இது வழக்கறிஞர் செய்த தவறு. இதிலும் தனக்கு சம்பந்தமே இல்லாமல் கனிமொழி மாட்டிக்கொண்டார். தேவை இல்லாமல் "பிரதமரையும், உள்துரையையும்" பகைத்துக்கொள்ளும் நிலைமை. அதில் அவருக்கு "நிலை தடுமாறிய நிலைமை".

முரண்டுக்கு மூக்கணாங்கயிறு கட்டணும்.


மரணதண்டனையை மூன்று தமிழருக்கு குறைப்பதோ, அல்லது நிர்வாக தடையை போடுவதோ, தமிழக அரசால் முடியும் என்ற சூழலில், புதிய தமிழகம் டாக்டர் கிரிஷ்ணசாமி, எழு கட்சி உறுப்பினர்களிடம் கையெழுத்து வாங்கி கொடுத்த "கவன ஈர்ப்பு தீர்மானத்தை" தான் ஒரு வார காலமாக எடுக்கவில்லை. தமிழக முதல்வரின் கட்டளைப்படி, பேரவைத் தலைவர் செயல்படட்டும். இன்று மீண்டும் எழுந்து தனது தீர்மானம் எடுப்பது பற்றி கிரிஷ்ணசாமியை பேசவிடவில்லை. அவரும் கோபத்தில், "வெளிநடப்பு" செய்துவிட்டார். இதுற்ற்ஹான் தமிழக சட்டமன்றத்தின் நிலைமை. முன்பே வந்த " மரணதண்டனை அமுலாக்கல் உத்தரவை" தமிழக உள்துறை ஒரு வார காலமாக "கிடப்பில்" வைத்திருந்தது. மத்திய அரசின் "நிர்ப்பந்தம்" மீண்டும் வார, அதை எடுத்து " சிறை அதிகாரிக்கு" அனுப்பியுள்ளது. அதை "முருகன், சாந்தன், பேரறிவாளன்" ஆகியோரிடம் சிறை அதிகாரி கொடுத்துவிட்டார். அவரும் "செப்டம்பர் ஒன்பதாம் நாள்" உங்களுக்கு "தூக்கு" என்றும் கூறிவிட்டார்.

தமிழக அரசை "மரணதண்டனைக்கு எதிராக" செயல்படுத்த, எதிர்க்கட்சி தலைவர் விஜயகாந்தும் "கவன ஈர்ப்பு தீர்மானம்" கொடுத்து விட்டார். அற்டஹியும் இன்று வரை எடுக்கவில்லை. அப்படி ஒரு "முரண்டா?" இந்த முரண்டை அடக்க "மூக்கணாங்கயிறு" எது? வருகிற "உள்ளாட்சி தேர்தலில்" தூக்கி எதிர்க்காதவர்கள் "ஒட்டுமொத்த தமிழகளின்" எதிரிகளாக அறிவிக்கப்படுவார்களே? வருகிற " நாடாளுமன்ற தேர்தலில்" இப்போது மூன்று தமிழர் தூக்கி எதிர்ப்பவர்கள் "ஒட்டுமொத்த தமிழர்களின்" எதிரிகளாக சித்தரிக்கப்படுவார்களே? அந்த " மூக்கணாங்கயிறு" இந்த ஆட்சியாளர்களுக்கு தெரியுமா? எத்தனை தூரம் "போற்குற்றங்களுக்கு துணை" போயிருந்தாலும், இப்போது "நாடாளுமன்றத்தில்" ஈழத்து இனப்படுகொலைகளை எதிர்த்து பேசி திமுக நற்பெயர் பெற்றுவருகிறதே? அந்த திமுக இந்த "தூக்குகளை" பயன்படுத்தி " மீண்டும் எழ" வாய்ப்பு இருக்கிறதே?

வருகிற தேர்தல் மட்டும்தான் இவர்களுக்கு "மூக்கனாங்கயிரா?" அல்லது "தமிழக இளைஞர்கள்" சிந்திப்பது போல "முத்துகுமார்களாக" அவர்களை ஆயிரக்கணக்கில் மாற்றுவது " மத்திய ஆட்சியாளர்களின்" திட்டமா?

Wednesday, August 24, 2011

"மரணதண்டனை ஒழிப்பு" ஒரே குரலாக ஒலிக்கட்டும்.

"மரணதண்டனை ஒழிப்பு" ஒரே குரலாக ஒலிக்கட்டும்.
மூன்று தமிழர் உயிர் காக்க ஒவ்வொரு தமிழரும், மனித உரிமை ஆர்வலர்களும் பெரு முயற்சிகளை தொடர்ந்து எடுத்து வருவது வேகப்பட்டுள்ளது. அவரவர் பாணியில் " முறையிடுவது", வேண்டுகோள் விடுப்பது", " கெஞ்சுவது", "நினைவு படுத்துவது" , "சட்ட நியாயங்களை சொல்வது", "முன்னுதாரணங்களை காட்டுவது", உணர்சிகரமாக பேசுவது", உணர்ச்சி முழக்கங்களை இடுவது", "வழக்கின் முடிவுறாதன்மையை சுட்டிக் காட்டுவது", "சாட்சிகளை வர்ணிப்பது", "குற்றம் சட்டப்பட்டவருக்காக வாதாடுவது", "இன உணர்வோடு குரல் கொடுப்பது", "விடுதலை செய்ய கோருவது", " பதிலுக்கு எதிரிகள் மீது பாய்வது", " அழுது புலம்புவது" , " ஆத்திரப்படுவது", இப்படி பல முறைகளிலும் இன்று குரல்கள் கிளம்பி வருகின்றன. அவதரி "ஒருங்குபடுத்தி", இன்றைய " சாத்தியப்பாடான கோரிக்கையான" "மரணதண்டனையை" "ஆயுள் தண்டனையாக குறையுங்கள்" எண்பதை தொடர் முழக்கமாக முன்வைக்க வேண்டிய தருணம் இது. மனித உரிமை தளத்தில் நின்று கொண்டு அவ்வாறு எழுப்பும் கோரிக்கைக்கு உலகம் செவி சாய்க்க முடியும். "மரணதண்டனை ஒழிப்போம்" என்ற உலக முழ்ஜக்கத்துடன் நாமும் சேர்ந்து கொள்வோம்.

Monday, August 22, 2011

அமெரிக்க் மாநிலங்களை முதல்வர் பின்பற்றலாமே?

இந்தியாவில் "யூனியன் பிரதேசங்கள்" எனப்படும் மத்திய அரசின் நேரடி பகுதிகள் தவிர,33 மாநிலங்கள் இருக்கின்றன. அதேபோல அமெரிக்காவில் மொத்தம் ஐம்பது { 50 } மாநிலங்கள் இருக்கின்றன. அங்குள்ள மத்திய அரசும் இந்திய மத்திய அரசைப் போலவே " மரணதண்டனையை" தனது சட்டத்தில் இன்னமும் வைத்துக் கொண்டுள்ளது. ஆனால் அங்குள்ள மாநிலங்கள் பல துணிச்சலாக முடிவு எடுத்துள்ளனர். அதாவது 13 மாநிலங்கள் " மரண தண்டனையை" தங்கள் மாநிலங்களில் "ரத்து" செய்துள்ளன. அங்குள்ள 50 மாநிலங்களில் 13 மாநிலங்கள் துணிச்சலாக இந்த காரியத்தை செய்துள்ளன.அவையாவன: அலாஸ்கா, ஹவாய், லோவா, மைனே, மசாசுசெட்ஸ், மிசிகன், மின்னேசோட்டா, நியு ஜெர்சி, வடக்கு டகோடா, ரோடே தீவு, வேர்மோன்ட், மேற்கு வெர்ஜினியா, விஸ்கான்சின், ஆகியவையே அந்த பதின்மூன்று மாநிலங்கள். அது தவிர, "நெபராஸ்கா" அன்ர மாநிலத்தில் உள்ள "உச்சநீதிமன்றம்" மரணதண்டனைகளை "மின்சாரம் பாய்ச்சி" நடத்துவது, " கொடுமையானதும், மனிதத்தன்மை அற்றதும்" என்று தீர்ப்பு கொடுத்துள்ளது. அதனால் அந்த மாநிலத்திலும் மரணதண்டனை செயல்பாட்டில் இல்லை.

இத்தகைய அதாவது அமெரிக்கா போன்ற "அரசு கட்டமைப்போ" அல்லது மாநிலங்களுக்கு தனி உச்ச நீதிமன்றங்களோ இந்தியாவில் இல்லை என்றாலும், இங்குள்ள மாநிலங்களின் "அமைச்சரவைகள்" இந்திய அரசியல் சட்டத்தில் இருக்கும் 161 ஆம் பிரிவு உட்பட பல்வேறு பிரிவுகளில் வழங்கப்பட்டுள்ள வாய்ப்புகளை பயன்படுத்தி, "மரணதண்டனையை, ஆயுள் தணடனையாக" குறைக்கலாம். அதற்கு அமெரிக்காவின் முன்னுதாரணத்தை , தமிழக முதல்வர் முதன் முதலாக இந்திய நாட்டில் பயன்படுத்தி, வரலாறு உருவாக்கலாம்.

மரணதண்டனையை ரத்து செய்த நாடுகள்.

மரணதண்டனையை ரத்து செய்த நாடுகள்.
அனைத்து நாட்டு பொதுமன்னிப்பு சபை, தனது அறிக்கையில், 137 நாடுகள் "மரணதண்டனையை" ரத்து செய்து விட்டன என்றும், 2008 ஆம் ஆண்டு அர்ஜென்டைனா, சிலி, உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் "சட்டவிரோதமானதாக" மரணதண்டனையை அறிவித்துவிட்டன என்றும் கூறியுள்ளது.மேலும் 2007 ஆம் ஆண்டு சீனா, ஈரான், பாகிஸ்தான், சவூதி அரேபியா, அமெரிக்கா ஆகிய நாடுகள் உட்பட 24 நாடுகளில் 1252 பேர் மரணதனடனையால் சாகடிக்கப்பட்டுள்ளனர். இது 2006 ஆம் ஆண்டு கொல்லப்பட்ட 1591 ஐ விட குறைவு. ஐம்பத்தியொரு நாடுகளில் கிட்டத்தட்ட 3350 பேர் இந்த தண்டனை மூலம் கொலைசெய்யப்பட்டுள்ளனர். உலகம்முழுவதும் 20000 கைதிகள் மரணதண்டனையை எதிர்பார்த்து சிறையில் இருக்கின்றனர்.

மரணதண்டனை சட்டத்திலிருந்து நீக்கப்பட்ட நாடுகளும், நீக்கப்பட்ட ஆண்டும்.
--------------------------------------------------------------------------------------------------------------------------
அல்பேனியா {2000 }, அன்டோர {1990 }, அங்கோலா { 1992 }, அர்ஜென்டைனா { 2008 }, ஆர்மேனியா{ 2003 }, அசெர்பைஜான் { 1998 }, ஆஸ்த்ரேலியா { 1984 }, ஆஸ்திரியா {1950 }, பெல்ஜியம் { 1996 }, பூடான் { 2004 }, போஸ்னியா -- ஹெர்ஸ்கோவினா { 1997 }, பல்கேரியா { 1998 }, கம்போடியா { 1989 }, கனடா { 1976 }, கேப் வேர்டே { 1981 }, சிலி {2008 }, கொலம்பியா { 1910 }, கூக் தீவுகள் { 2007 }, கோஸ்டா ரீகா { 1877 } கோடே டில்வைரா {2000 }, க்ரோஷயா {1990 }, சைப்ரஸ் { 1983 }, செக் குடியரசு { 1990 }, டென்மார்க் {1933 }, டிஜிபௌடி { 1995 }, டொமினிகன் குடியரசு { 1966 }, கிழக்கு தைமூர் { 1999 },மார்ஷல் தீவுகள்{ 1986 }, மவுரீஷியஸ் { 1995 }, மெக்சிகோ {2005 }, மைக்ரோனேசியா { 1986 }, மோல்டோவா { 1995 }, மொநாகா { 1962 }, மொண்டேநிக்ரோ { 2002 }, மொசாம்பிக் { 1990 }, நாம்பியா { 1990 }, நேபாளம் {1990 }, நெதர்லாந்து { 1870 }, நியூசிலாந்து { 1961 }, நிகாரகுவா { 1979 } , நியே , நார்வே { 1905 }, பலாவு , பனாமா { 1903 }, பராகுவே { 1992 }, போலந்து { 1997 }, போர்சுகல் { 1867 }, பிலிப்பைன்ஸ் { 2006 }, ருமேனியா { 1989 }, ரிவாண்டா { 2007 }, சமோவா { 2004 }, சன் மரினோ { 1848 }, சாவோ டோமே & பிரின்சிபி { 1990 }, செனெகல் {2004 }, ஈகுவேடார் { 1906 }, எஸ்டோனியா { 1998 }, பின்லாந்து { 1949 }, கிரீஸ் { 1993 }, கினியா- பிசாவா { 1993 }, ஹைதி {1987 }, ஹோண்டுரஸ்{ 1956 }, ஹங்கேரி { 1990 }, ஐஸ்லாந்து {1928 }, அயர்லாந்து { 1990 }, இத்தாலி { 1947 }, கிரிபாடி { 1979 }, லிபேரியா{ 2005 }, லியச் டெண்ச்டீன் { 1987 }, லித்துவானியா { 1998 }, லக்சம்பர்க் { 1979 }, மசிடோனியா { 1991 }, மால்டா { 1971 }, செர்பியா {2002 }, செய்செலஸ் { 1993 }, ஸ்லோவாக் குடியரசு { 1990 }, ஸ்லோவேனியா { 1989 }, சாலமன் தீவுகள் { 1966 }, தென்னாப்பிரிகா { 1995 }, ஸ்பெயின் {1978 }, ஸ்வீடன் { 1921 }, ஸ்விட்சர்லாந்து { 1942 }, துருக்கி { 2002 }, துர்க்மெனிஸ்தான் { 1999 }, துவாலு {1978 }, உக்ரைன் { 1999 }, இங்கிலாந்து { 1973 }, உருகுவே { 1907 }, உஸ்பெகிஸ்தான் { 2008 }, வனுவாட்டு { 1980 }, வாடிகன் நகரம் { 1969 }, வெனிசுலா { 1863 }.
இன்னமும் 70 நாடுகளில் மரணதண்டனை சட்டத்தில் இருக்கிறது. அவற்றில் "இந்தியாவும்" ஒன்று.

ஐ.நா. தீர்மானம்.
-------------------------------
2007 ஆம் ஆண்டு, டிசம்பர் 18 ஆம் நாள் ஐக்கிய நாடுகளின் பொதுக்குழு, " மரண தண்டனையை" ஒழிப்பதற்கான தீர்மானத்தை கொண்டுவந்தது. அப்போது சபையில் இருந்த உறுப்பினர்களில் "ஆகபெரும்பான்மையான" 104 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் "தீர்மானத்திற்கு ஆதரவாக" வாக்களித்தனர். 54 நாடுகள் எதிராகவும், 29 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் விலகியும் நின்றனர்.அந்த தீர்மானம் எண்: 62 / 149 . பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்ட அந்த தீர்மானத்திற்கு ஒரு "தார்மீக பலம்" உலக நாடுகள் மீது உண்டு. அதில் இந்திய நாடும் அடங்கும்.

ஐ.நா. போது சபையால் இதே "மரணதண்டனை ஒழிப்பிற்காக" இரண்டாவது தீர்மானம் ஒன்று 2008 ஆம் ஆண்டு, டிசம்பர் 18 ஆம் நாள் நிறைவேற்றப்பட்டது. அது முந்தைய ஆண்டின் ஐ.நா. தீர்மானத்தை அமுல்படுத்தியதற்காக, ஐ.நா. போது செயலாளரை பாராட்டி நிறைவேற்றப்பட்டது. 2010 ஆம் ஆண்டு ஐ.நா.வின் அருப்பத்தைந்தாவது அமர்வில் மரணதண்டனை ஒழிப்பு பற்றி விவாதிக்கப்படும் என்றும் அது கூறியது. இந்த இரண்டாவது தீர்மானத்திற்கு "ஆதரவு " முந்தியதை விட கூடியது. அப்போது 106 நாடுகள் இந்த தீர்மானத்திற்கு ஆதரவு கொடுத்தார்கள். 46 நாடுகள் எதிராகவும், 34 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமலும் இருந்தனர். உலகப் போது மன்னிப்பு சபை, வாக்களிக்காத நாடுகளையும் இந்த தீர்மானத்தை அமுலாக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டது.

Thursday, August 18, 2011

நாடு தழுவிய மக்கள் ஐ.மு.கூ.ஆட்சியை அடிபணிய வைத்துள்ளனர்.

அன்னா ஹசாரே அறிவிக்கும் "பட்டினிப் போராட்டத்தை" அரசாங்க அனுமதி பெற்று, அரசாங்கம் சொல்லும் எண்ணிக்கைக்கு உட்பட்ட மக்கள்தான் கலந்து கொள்ளவேண்டும் என்ற நிபந்தனையை ஏற்றுக்கொண்டு, அரசாங்கம் அதாவது டில்லி காவல்துறை சொல்லும் நாட்கள் மட்டுமே நடத்த வேண்டும் என்ற கட்டளைகளை மீறியதால், "கைது" செய்யப்பட்டார். அதை எதிர்த்து "நாடெங்கும் மக்கள் எதிர்ப்பு அலை" வீசியது. சென்னையிலும், தமிழ்நாட்டின் பல நகரங்களிலும் கூட, மக்கள் தெருவிற்கு வந்தனர். இது அன்னா ஹசாரே என்ற தனிநபருக்காக வந்த கூட்டமல்ல. மாறாக "ஊழலை எதிர்க்க வேண்டும்" என்ற உத்வேகத்திர்காக வந்த கூட்டம். முழுமையாக "பிற்போக்குத்தனம்" கொண்ட ஒருவர் என்று அவரது நெருக்கமானவர்களால் வர்ணிக்கப்பட்ட ஒரு மனிதர் அப்படி "கூட்டத்திற்கு" வந்திருந்தார். ஏன் என்று ஆராய்ந்தால், அவர் உட்பட ஒவ்வொரு மனிதனும் தனது "அறிவுக்கு" உட்பட்டு ஒவ்வொரு கருத்தை நம்புகின்றனர். ஆனால் அவர்களது இதயத்தில், " தாய்நாட்டு பற்றும், ஜனநாயக உணர்வும்" ஒவ்வொருவருக்கும் ததும்பிக்கொண்டு இருக்கிறது. அதனாதான் எல்லா மட்டங்களிலிருந்தும் மனிதர்கள் இந்த "ஊழல் எதிர்ப்பில்" கலந்துகொள்ள வருகிறார்கள்.

அப்படிப்பட்ட மக்கள் எழுச்சி, நாடெங்கும் வந்ததை தாங்கிக்கொள்ள முடியாத மத்திய ஆட்சியாளர்கள், " அன்னா ஹசாரே மக்கள் கூடிய ராமலீலா மைதானத்திலேயே" பட்டினி போராட்ட்டம் நடத்தட்டும் என்றும், மூன்று நாள்தான் அனுமதி எண்பதை, ஐந்து நாள், எழு நாள், பத்து நாள், கடைசியாக பதினைத்து நாள் என்று ஏற்றுக் கொண்டுள்ளனர். எத்தனை மக்கள் வேண்டுமானாலும் கலந்து கொள்ளட்டும் என்று அறிவித்துள்ளனர். அதாவது இந்திய அரசியல் சட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ள உரிமையான, யாரும் எங்கும், எப்போதும் போராடலாம் என்ற அடிப்படை உரிமையை அமைதியாக மறுதலித்து, தாங்கள் அனுமதி கொடுத்தால்தான், பட்டிப் போராட்டம் கூட நடத்த வேண்டும் எண்பதை "பதிவு" செய்வதில் ஆள்வோர் வெற்றி பெற்றுள்ளனர். மக்கள் எழுச்சிக்கும் ஒரு " வடிகால்" என்பதாக அந்த பட்டினி போரை அனுமதித்துள்ளனர்.

ஆனால், சிதம்பரம் கூறிய " காவல்துறைக்கு கைது செய்வதைத் தவிர வேறு வழியில்லை" என்று கூறிய வார்த்தைகள் பொய்த்து விட்டன. அதேபோல பிரதமர் கூறியபடி, " உச்ச நீதிமன்றத்திற்கு" அன்னா ஆதரவாளர்கள் செல்வதால், டில்லி காவல்துறை, நீதிமன்றம் போய் "விடுதலை" உத்தரவு பெற்றனர் என்ற கூற்றை, மறுத்து சிதம்பரம் "தான்தான் இல்லை காவல்துறையிடம்" விடுதலை செய்ய ஆலோசனை வழங்கினேன் என்ற சொல் "பொய்யாகிவிட்டது". இது சிதம்பரம் போன்ற " கொடூரமான பாசிஸ்டுகளுக்கு" கிடைத்த பதிலடிதான்.

Tuesday, August 16, 2011

மரண தண்டனையை ரத்து செய்ய பேரணி.

மரண தண்டனையை ரத்து செய்ய பேரணி.
இன்று மதியம் பெரியார் திராவிடக் கழகத் தலைவர் தோழர் குளத்தூர் மணி, பேராசிரியர் சரஸ்வதி ஆகியோர் "உள்நாட்டு அடக்குமுறை எதிர்ப்பு கூட்டமைப்பு" சார்பாக, கூட்டமைப்பின் அமைப்பாளர் தோழர் வேளுசாமியுடன் "ஊடவியலாலர்களை" சந்தித்தனர். அப்போது " பேரறிவாளன், சாந்தன், முருகன்" ஆகியோரின் மரண தண்டனையை நிறைவேற்ற திட்டமிட்டு, உள்துறை அமைச்சர் பா.சிதம்பரம் பரிந்துரையின் பேரில், குடியரசு தலைவர் பிரதீபா பாட்டில், "கருணை மனுவை" நிராகரித்த கொடுமையை கண்டிக்க "போராட்டங்களை" அறிவித்தனர். அதில் முதலில், ஆகஸ்டு 19 ஆம் நாள் காலை, பதினோரு மணிக்கு, சென்னை கடற்கரை சாலையில், "கலங்கரை விளக்கிலிருந்து" புறப்பட்டு, "உழைப்பாளர் சிலை" வரை "வேண்டுகோள் பேரணி" ஒன்று நடத்தப்படும் என்று கூறினர். அதில் "தமிழக அரசு" தனது பரிந்துரை மூலம் "மரண தண்டனையை" ரத்து செய்ய ஆளுநருக்கு ஆலோசை அனுப்பினால், அந்த "மூன்று தமிழகளின்" உயிர்கள் பதுகாகப்படுமேன்றனர். அதற்கு முன் உதாரணங்கள்" இருக்கின்றன என்றனர. சீ.ஏ.பாலன் வழக்கில், கேரள நம்பூதிரிபாட அமைச்சர்வை கொடுத்த "ஆலோசனையை" ஏற்று மத்திய அரசு "தன்ப்டனையை ஆயுள் தண்டனையாக" குறைத்தது என்று கூறினர். அதேபோல "தயா சிங் " வழக்கில் கருணை மனு குடியரசு தலைவரால் நிராகரிக்கப்பட்ட பிறகு, உச்சநீதி மன்றம் தணடனையை குறைத்தது என்றனர். மேற்கண்ட கோரிக்கைகாக அடுத்து "ரயில் மறியல்" போராட்டம் வரை திட்டமிட்டு உள்ளோம் என்றனர்.மேற்கண்ட "வேண்டுகோள் பேரணிக்கு" திரண்டு வரக் கோரினர். .

Friday, August 12, 2011

அவசரச்செய்தி. கிழக்கு மாகாணத்தில்.. சொல்லமுடியாத.....

அவசரச்செய்தி. கிழக்கு மாகாணத்தில்.. சொல்லமுடியாத.....
இப்போது கிழக்கு மாகாணத்தில் உள்ள திரிகோணமலை மாவட்டத்தில் இருந்தும், மட்டக்கிளப்பு மாவட்டத்தில் இருந்தும், தமிழ்ப் பெண்களிடம் இருந்து வரும் செய்திகள் "ஆரோக்கியமாக" இல்லை. இரவில் "தமிழர் வீடுகளில்" சிங்கள காடையர் புகுந்து தமிழ் பெண்களை "பாலியல் வன்முறைக்கு" உட்படுத்துகிறார்கள். அந்த "சிங்கள காடையர்கள்" முகங்களில் "கிரீஸ்" என்று சொல்லப்படும் எண்ணையை தடவிக் கொண்டு வருகிறார்கள். இவர்கள் சில நாட்களாக , " திரிகோணமலை" மாவட்டத்திலும், "மாட்டகிலப்பு" மாவட்டத்திலும் "தமிழர் வீடுகளில்" இரவு நேரத்தில் திடீரெனப் புகுந்து பேகல் மீது வன்முறை செய்கிறார்கள். அதனால் அலறிப்போன தமிழ்ப் பெண்கள், இரவுகளை "தூக்காமல்" கழ்க்கின்றனர். இந்த "கொடுமை" கடந்த ஒரு வார காலமாக நடந்து வருகிறது. " யாராவது தடுப்பீர்களா?" என்று அங்கிருந்து தமிழ் பெண்கள் அலறுகிறார்கள்.

Thursday, August 11, 2011

மரண தண்டனையில் "அரசியல் சதி" நடத்தும் ப.சிதம்பரம்?

மரண தண்டனையில் "அரசியல் சதி" நடத்தும் ப.சிதம்பரம்?
சிவகங்கை சீமான் "சின்னப்பையன் சிதம்பரம்" என்று கலைஞரால் ஒருமுறை வர்ணிக்கப்பட்டவர், வழமையாக "அறிவிக்கப்பட்ட மரணதண்டனைகளை" வைத்துக்கொண்டு "சித்து விளையாட்டு" விளையாடுவதில் கெட்டிக்காரர். ஏற்கனவே அவர் "அபசல்குறு"வின் மரணதண்டனையை "அமுல்படுத்தப்பாவ்கிறோம்" என்று அறிவித்து, அதன்மூலம் "பாகிஸ்தானை" தங்கள வழிக்கு கொண்டுவர மிரட்டியதில் "பிரபலமானவர்". பாகிஸ்தானுக்கும், அப்சல்குருவிற்கும் என்ன சம்பந்தம் என்று நாம் கேட்கலாம். உண்மைதான். எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால் "இந்திய-பாகிஸ்தான்" விவகாரத்தில் அல்லது "சண்டையில்" தொடர்ந்து இரண்டு நாட்டு அரசாங்கமும், இதுபோன்ற " போட்டி" விளையாட்டுகளை, சாதாரணமாக "காய்" நகர்த்துவார்கள். இதே சிதம்பரம் ஏற்கனவே "பாகிஸ்தான்" அரசாங்கம், "இந்திய குடிமகனான சர்பஜத்சிங்" கிற்கு கொடுக்கப்பட்ட "மரணதண்டனையை" நிறைவேற்ற போகிறோம் என்று ஒரு "பூச்சாண்டி" காட்டியபோது, அடஹ்ர்கு பதிலடி கொடுப்பதாக காட்ட, "அப்சல்குரு"விற்கு தாங்கள் மரணதண்டனையை நிறைவேற்றப் போகிறோம் என்று கூறினார். அதன்பிறகு இரண்டு நாடுகளும் "சமாதானம்" ஆகி பேச்சுவார்த்தைக்கு வந்துவிட்டனர்.

அப்சல்குரு காஷ்மிர்காரர். அவரை "நாடாளுமன்ற கட்டிடம்" மேல் நடந்த "தாக்குதலில்" சம்பந்தப்பட்டவர் என்று இந்திய நீதிமன்றம் "தண்டனை" கொடுத்திருக்கிறது. அவரை "காஷ்மீர் சுதந்திரத்திற்கு" போராடுபவர்கள் ஆதரிப்பது புரிய முடியும். ஆனால் "காஷ்மீர்" பிரச்சனையை வைத்து அரசியல் நடத்தும் பாகிஸ்தான் அரசும், அதேபோல "காஷ்மீர் தேசிய இனப்பிரச்சனையை" முஸ்லிம் பிரச்சனை என்று " திரித்து" விளையாடும் அரசியல்வாதிகளும் "கையாள்வது" அசிங்கமானது. அப்படி கையாண்டு வருவதன் விளைவு "அபசல்குருவை" தூகிலடக்கூடாது என்பது "முஸ்லிம் "பிரச்சனை" போலவும், "சர்பஜத்சிங்கை" தூகிலடக்கூடாது என்பது "இந்து மத" பிரச்சனை போலவும் இந்த அரசியல்வாதிகள் அல்லது "ஆளும் வர்க்க" அரசியல்வாதிகள் ஆக்கிவிட்டார்கள் அதற்காகவே ஒரு ஆளும்வர்க்க கட்சியை இவர்கள் "இந்துமதவெறி" கட்சியாக தக்கவைத்துக் கொண்டு இருக்கிறார்கள். அந்த "பா..ஜ.க.".கட்சி எப்போதும் "சர்பஜத்சிங்" பக்கம் பேசும். டில்லி இமாம் போன்றவர்கள் எப்போதும், "அப்சல்குரு" பக்கம் பேசுவார்கள். ஆனால் இந்த "இரண்டு கும்பல்களுக்கும்" அந்த இரண்டு "மரண தண்டனை " விதிக்கப்பட்டவர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை.


இப்படி ஆளும்வர்க்க கட்சிகள் நடத்தும் சித்து விளையாட்டில் நாம் எப்போதும் மாட்டிக்கொள்வது உண்டு. இப்போதும் "இரண்டு நாட்கள்" முன்பு "பாகிஸ்தான் அரசு" சர்பஜத்சிங் மரணதண்டனை விசயமாக ஒரு காய் நகர்த்தலை செய்தது. உடனே நமது "உள்துறையும்" அப்சல்குருவின் மரணதண்டனை விசயமாக "கருணை மனுவை" தள்ளுபடி செய்யச்சொல்லி "குடியரசு தலைவருக்கு" அறிக்கை அனுப்பியது. அதையொட்டியே, "ராஜீவ் கொலையில்" மரணதண்டனை வித்திக்கப்பட்ட " பேரறிவாளன், முருகன், சாந்தன்" ஆகியோருக்கும் "கருணை மனுக்களை" தள்ளுபடி செய்யச்சொல்லி "குடியரு தலைவருக்கு" உள்துறை அறிக்கை அனுப்பியதாக செய்தி வந்துள்ளது. அப்சல்குரு விஷயம் "பாகிஸ்தான்-இந்தியா" அரசுகளின் அடரசியல் பிரச்சனை என்றால், "ராஜீவ் கொலை மரணதண்டனை" என்பது எந்த அரசியல் பிரச்சனை என்று நாம் கேட்கவேண்டும். அதுவும் அப்படித்தான். இது, "மத்திய-மாநில" அரசுகளுக்குள் உள்ள அரசியல் பிரச்சனை. அதுவும் "சிதம்பரம்_ஜெயலலிதா" அரசியல் பிரச்சனை.அது எப்படி? என்று வினா எழலாம். ஜெயலலிதாவும், சிதம்பரமும் "ராஜீவ் கொலை" விசயத்தில் ஒரே கருத்தை கொண்டவர்கள்தானே? அவர்களுக்குள் அந்த விசயத்தில் எப்படி அரசியல் பிரச்சனை வரும்?


இப்போது நடக்குமரசியலில், "கடந்தகால" அரசியல் விளையாடுகிறது. இப்போது "ஜெயலலிதா" உலகத் தமிழர்களால் பாராட்டப்படுகிறார். அதை "மத்தியஅரசோ" காங்கிரஸ் கட்சியோ விரும்பவில்லை. குறிப்பாக "ஜெயலலிதா" கான்க்கியர்ஸ் தலைமையை எதிர்த்து "காய்" நகர்த்துகிறார். அடஹ்ர்கு "தான் கேட்டும்" கீட அளவு "நிதியை" மத்திய அரசு கொடுக்கவில்லை என்பதே முக்கிய காரணமாக இருக்கலாம். ஆனால் அதற்கு ஓடிக்கொண்டிருக்கும் " தமிழினப் பிரச்சனை" ஒரு தந்திரமாகக் கூட பயன்படத்தான் செய்யும். இந்த நேரத்தில், "உலகத் தமிழர்" மத்தியில் கருணாநிதியின் "தலைமை நாற்காலி" பறிக்கப்பட்டதாக ஒரு கருத்து இருக்கிறது. அந்த "நாற்காலியை" ஜெயலலிதா பறித்துக் கொள்ளக்கூடாது என்பதில் மத்திய அரசுக்கு அக்கறை உண்டு. அதை உள்துறை மூலம் தான் அவர்கள் செய்யவேண்டும். அதேநேரம் ஜெயலலிதா சிதம்பரத்திற்கு எதிராக கடுமையான போராட்டத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளார். சிதம்பரமும் விடுவதாக இல்லை. சமீபத்தில் சென்னையில் கைது செய்யப்ப்பட்ட ஒரு திமுக முன்னால் எம்.எல்.ஏ. விடமிருந்து, அதாவது "சிதம்பரத்தின் முன்னால் பினாமி" இடமிருந்து, சிதம்பரம் சம்பந்தப்பட்ட பல " ரகசிய காணொளி குறுந்தகடுகள்" பிடிபட்டுள்ளன என்று கசிந்த செய்தி காரணமாக இருக்கலாம். இப்போது ஜெயலலிதாவிற்கு "பெருகி வரும்" தமிழின ஆதரவை உடைக்கவேண்டிய பொறுப்பு சிதம்பரத்திடம் உள்ளது.

கோத்தப்பாய் இந்த நேரம் பார்த்து உளறிக்கொட்டி, ஜெயலலிதாவின் புகழை "தமிழர்கள்" மத்தியில் உயர்த்திவிட்டான். அதை எப்படி உடைப்பது? "ராஜீவ் கொலையாளிகள்" என்று அறிவிக்கப்பட்டவர்கள் மேல் உள்ள "மரண தண்டனையை" இப்போது நிறைவேற்றப் போகிறோம் என்று கிளப்பி விட்டால், "தமிழின உணர்வாளர்கள்" ஜெயலலிதாவை பாராட்டும் வேலையை விட்டுவிட்டு, "ராஜிவ்கொலை" பற்றி பேசுவார்கள். அந்த சிக்கலில், "ராஜ்விகொலையை வைத்து " அரசியல் செய்வதில் சளைக்காத ஜெயலலிதா, "தமிழின உணர்வாலர்களிடமிருந்து" தனிமைப் படுவார். ஆகவே அந்த "ஆயுதத்தையும்" எடுக்க சிதம்பரம் துணிந்து விட்டார். ஆகவே இப்போது அதிகமாக பேசவேண்டியவர்கள், "மனித உரிமை" ஆர்வலர்கள்தான். "உலகப் போது மன்னிப்பு சபை" மற்றும் பி.யு.சீ.எல். ஆகிய பிரபல மனித உரிமை அமைப்புகள் "மரண தண்டனைக்கு" எதிராக "தொடையை" தட்டிக் கொண்டு போராடி வருகின்றன. "பேரறிவு, முருகன், சாந்தன்" பிரச்சனை வெறும் "தமிழினப்" பிரச்சனை அல்ல. அது "ஒரு மனித உரிமை "பிரச்சனை" சிதம்பரமே அரசியல் செய்யாதே. "மனிதர்களின் உயிர்களில்" உனது அரசியல் சதுரங்கத்தை ஆடாதே என்று நாம் குரல் எழுப்பவேண்டும்.

Tuesday, August 9, 2011

ஈழத்திற்குள் புகுந்து, படம் எடுத்து, விவரம் பதித்த "தமிழ் நங்கை"

ஈழத்திற்குள் புகுந்து, படம் எடுத்து, விவரம் பதித்த "தமிழ் நங்கை"
இன்று { 09 -08 -11 } இரவு 07 .30 மணிக்கும், 09 .30 மணிக்கும் " ஹெட்லைன்ஸ் டுடே" காட்சி ஊடகத்தில் , "போருக்கு பிறகு" தமிழீழப் பகுதிகளில் "நேரடியாக" ஒரு ஊடகவியலாளர் சென்று, " இலங்கை அரசாங்க அனுமதியோ" அல்லது அவர்கள் நிபந்தனை விதிப்பதைப் போல " பாதுகாப்பு அமைச்சக அனுமதியோ" பெறாமல், அதனாலேயே "சுதந்திரமாக" யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு போன்ற மாவட்டங்களுக்கும், அங்குள்ள " இடம் பெயர்ந்த மக்கள் வாழும் முகாம்களுக்கும்" சென்று அவர்களது நேர்காணல்களையும், காநோளிகளையும் "கைகேமரா" மூலம் பதிவு செய்து வந்துள்ளவற்றை காணலாம். சென்னையில் உள்ள அந்த காட்சி ஊடகத்தின் பெண் ஊடகவியலாளரான" பிரியம்வதா" அந்த சாதனையை செய்துள்ளார். எந்த நேரத்திலும் "பிடிபட்டு" துன்புறுத்தப்படலாம் என்று தெரிந்தும், எந்த சமயத்திலும் " கொள்ளப்படலாம்" என்று புரிந்தும், அந்த இளம் ஊடகவியலாளர் அத்தகைய செயலை செய்து, "தமிழர்களின்" நிலைமையை உலகறியச் செய்துள்ளார். "ரசாயன குண்டுகள்" எறியப்பட்ட ஆதாரங்கள் அதில் கிடைத்துள்ளன. இனியும் "போர்குற்றங்கள்" நடைபெறவில்லை என்கிறார்களா?

Monday, August 8, 2011

ஜெயலலிதாவை தாக்கிய கோதபாயேவை என்ன செய்ய?

இலங்கை அரசத்தலைவரின் தம்பியும், இலங்கை பாதுகாப்பு செயலாளரும், பசில் ராஜபக்சேவின் சகோவும், ஜமால் ராஜபக்சே என்ற பேரவைதளைவரின் தம்பியும், நமால் ராஜபக்சேவின் சித்தச்ப்பாவுமான, தமிழின இரத்தம் குடித்த காட்டுமிராண்டி, அமெரிக்க குடியுரிமை பெற்ற கோதபாயே ராஜபக்சே, இந்திய காட்சி ஊடகமான "ஹெட்லைன்ஸ் டுடே" ஆசிரியருக்கு கொடுத்த நேர்காணலில்,[ இன்று இரவு ஒன்பது மணிக்கு ஒளிபரப்பு } தமிழக முதல்வர் பற்றி " அதிகப்பிரசிங்கித்தனமாக" தாக்கி பேசியுள்ளான். "இலவச ஆலோசனைகளை" ஜெயலலிதாவிற்கு கொடுத்துள்ளான்.
'
தமிழக சட்டப்பேரவை "சென்ற சட்டப்பேரவை" போல இல்லாமல், முதல்வர் முன்முயற்சியிலேயே "ஒரு தனி தீர்மானம்" மூலம் அந்த இரத்தவெறி இலங்கை சிங்கள கும்பலை "போற்குற்றவாளிகல" என்றும், அவர்கள் மீதான "பொருளாதாரத் தடை" விதிக்கவும், "ஏகமனதான தீர்மானத்தை" நிறைவேற்றியது, இலங்கை அரசை அச்சப்படுத்தியது. அந்த தீர்மானத்தின் அமுலாக்கலில் மத்திய அரசை "நிர்ப்பந்தம்" செய்ய எடுக்கப்படும் முயற்சிகள், அந்த இரத்தவெறி இன அழிப்புவாதிகளை " அசிங்கமாக " பேசவைத்துள்ளது. உலகத் தமிழர்கள் மத்தியில் செல்வி.ஜெயலலிதாவிற்கு ஆதரவு கூடுவதும், அவரை அவர்கள் எதிர்பார்த்து நிற்பதும் "தமிழின விரோதிகளுக்கு" ஆத்திரத்தை கிளப்பியுள்ளது.

அதவிளைவே, இந்த "கோத்தப்பாய் பேட்டி". அதில் "ஜெயா தனது வேலையை பார்க்கட்டும்" என்கிறான் அந்த கொடுங்கோலன். ஜெயாவிற்கு "தமிழர்கள் மீது அக்கறை " இருப்பதாக சொல்கிறாரே, முதலில் தனது "தமிழ்நாட்டில் உள்ள மீனவர்களை, இலங்கை மீனவர்கள் செல்வாக்கின் கீழ் இருக்கும் கடல் பகுதிக்குள் வரவேண்டாம்" என்று சொல்லட்டும். என்பதாக திரிக்கிறான். ஏ.கோத்தப்பாய், இரண்டு கரைகளின் தமிழ் மீனவர்களும், 1983 ஆம் ஆண்டிற்கு முன்பு, கரையின் இருபுறமும் "போகவர இருந்து மீன் பிடித்துவந்தார்கள்" என்பது உனக்கு தெரியுமா? உன் அறிவுக்கு எட்டுமா? கடலில் அதுவும் இந்த பதினெட்டு மைல் அகலக் கடலில், இருபுறமும் உள்ள "மீனவர்களுக்கு எல்லை கிடையாது" எனபது உனக்கு விளங்குமா? "மீன்பிடி தொழிலில்" இப்படி குறுகிய தூரத்தில் உள்ளவர்கள் மத்தியில் "எல்லை போடமுடியாது" என்பதாவது உனக்கு புரியமுடியுமா? இந்திய மத்திய அரசு வேண்டும் என்றே "கடலில் எல்லை" என்ற இல்லாத பிரச்னையை கிளப்பி வருவதால், அவர்களது "ஆலோசனையில்" நீ இதை கூறுகிறாயா?

அடுத்து, "எங்கள் தமிழக முதல்வரைப்" பார்த்து, "அடுத்த நாட்டு பிரச்சனையில் உங்கள் தலையை நுழைக்காதீர்கள்" என்று கூறுகிறாயே? உனக்கு எவ்வளவு "நெஞ்ச ழுத்தம்" இருந்தால், தமிழ்நாட்டின் ஏழரைக் கோடி மக்களின் தலைவரை, இன்று உலகத்தமிழினம் எதிர்பார்ப்பில் இருக்கும் ஒரு தலைமையைப் பார்த்து இந்த "வார்த்தையை" கூறுவாய்?" எது அடுத்தநாட்டு பிரச்சனை? ஒன்றரை லட்சம் தமிழர்களை நீயும் உன் சகோதரர்களும் சேர்ந்து கொல்வீர்கள்? அது "அடுத்தநாட்டு பிரச்சனை" என்று நாங்கள் சும்மா இருக்க வேண்டுமா? நீ எங்கள் நாட்டு மீனவர்கள் "ஐநூற்று நாற்பத்தி மூன்று" பேரை நடுக்கடலில் "கொலை" செய்வாய்? நாங்கள் அடுத்தநாட்டு பிரச்சனை என்று கைகட்டி நிற்கவேண்டுமா? அது, கருணாநிதி என்ற உனது "சகா" ஆண்ட காலத்தோடு முடிந்துவிட்டது.

உனக்கு ''தைரியம்" கொடுத்தது 'டில்லிதான்" என்பது எங்களுக்கு தெரியும். அதே டில்லி "உன்னையும் உன் சகோகளையும்" தமிழ்நாட்டில் பெரும் அளவு செல்வாக்குடன் "ஜெயலலிதா வெற்றி" பெற்று வந்துவிட்டார், அதனால் அவரை எபப்டியாவது "ந'அத்பு கொள்ளுங்கள் என்று கூறியதே? அப்போது நீயும் உன் தம்பியும் "டில்லியிடம் பேசி, தமிழக முதல்வரை சந்திக்க பல முயற்சிகளை எடுத்தீர்களே? இப்போது "அது எதுவும் பலிக்காத நிலையில்" டில்லி உங்களிடம் "கை விரித்துவிட்டதே?" தமிழக அரசை "''பகைத்துக்கொள்" என்று கூறிவிட்டதே? அதற்குபிறகு நீ சிங்கள ஆன்மிக பயணிகள்" என்ற பெயரில் " உன் ஒற்றர்களை" அனுப்பி சென்னையில் "'சட்ட ஒழுங்கை கெடுக்க முயற்சி செய்தாயே? அதையும் இங்கே உள்ள தமிழக அரசு முறியடித்து" விட்டதே? அதற்கு பிறகு டில்லி" கொடுத்த "தைர்யத்திதானே" இப்படி நேர்காணலில், கண்டபடி உளறுகிறாய்? இதை தமிழ்மக்கள் சந்திப்பார்கள்.

Thursday, August 4, 2011

தமிழக சட்ட-ஒழுங்கை கெடுக்க சிங்கள முயற்சி.

சிங்களம் அடிபட்ட "பாம்பை" போல இப்போது உணர்கிறது. நாலாவது வன்னிப் போர் நடக்கும் போதுகூட, தமிழ்நாட்டில் மற்றும் இந்தியாவில் தங்களுக்கு "எதிரான" குரல் எழுப்பப்பட வில்லை என்று "இறுமாந்திருந்த" வேளையில் எல்லாமே இப்போது தங்களுக்கு எதிராக நடப்பதாக "சிங்களம்" கணக்கு போடுகிறார்கள். " புலிகளை பயங்கரவாதிகள்" என்று முத்திரை குத்தியபோது, உலகம் ஒத்துழைத்தது. "அப்பாவி மக்களும் புலிகளுடன் சேர்ந்த போராளிகள்தான்" என்று சிங்களம் முத்திரை குத்திய போதும், உலகம் கண்டுகொள்ளவில்லை. "வெள்ளைக் கொடியுடன் சரனைந்த புலிகளை" படுகொலை செய்தபோதும், உலகம் "பெரிதாக கண்டுகொள்ளவில்லை". இப்போது என்ன வந்துவிட்டது? "தமிழக சட்டமன்றமும், இந்திய நாடாளுமன்றமும்" சிங்களத்திற்கு எதிராக முனு, முணுக்கின்றன? இதுதான் சிங்களம் இன்று கேட்கும் கேள்வி.

உண்மைதான். அப்பாவி ஈழத் தமிழர் கொல்லப்பட்டபோதும், பகிரங்க இன அழிப்பு நடந்தபோத்யும், புலிகளை எதிர்த்து "ரசாயனக் குண்டுகளையும், கொத்துக் குண்டுகளையும்" பயோன்படுத்திய போதும, தமிழக மக்களை அடக்கி ஆள ஒரு கருணாநிதி முதல்வராக இருந்தார். அந்த சூழலின் "மௌனத்தை" உடைக்க "முத்துக் குமார்" என்ற தம்பி "உயிராயுதமாக" தன்னைத்தானே ஆக்கிக்கொண்டு, பெரும் "தீப்பொறியை" கிளப்பி விட முயன்றான். அதயும் அடக்க "ஜாபர் சேட்" போன்றோர் முயன்று வெற்றி பெற்றனர். இப்போது "பீனிக்ஸ் பறவை" போல மீண்டும் தமிழன்" எழுகிறான்.இந்த முறை "ஜெயலலிதா" முகம் "தமிழ் முகமாக" மாறி, "தமிழர் எழுச்சிக்கு" பயன்படுகிறது. இது அடுக்குமா? என்று சிங்களம் அலறுகிறது. "எத்தனையோ தேசிய இனப் பிரச்சனைகளை" எதிர்கொண்டு சமாளித்தவர்கள் நாங்கள். எங்களிடமே இந்த தமிழினம் விளையாடுகிறதா?"" என்று மத்திய உளவு நிறுவனமான "ரா' வேலை செய்கிறது. திட்டம் தீட்டுகிறது. சூழ்ச்சி செய்கிறது.


அதன் விளைவே "திடீரென சிங்கள எம்.பி.களை " நாடாளுமனரதிற்கு அழைப்பதும், அவர்களுக்கு "எதிர்ப்பு" கொடுத்தால், அதற்காக " வந்தவர்களிடம் "மன்னிப்பு" கேட்பதும் , அதன்மூலம் "இந்தியாவின் மானத்தை கப்பலேட்டிரிவிடுவதும்" வட இந்திய நாடாளுமன்ற முறைகளாக இருக்கலாம். அதுவும் "திட்டமிட்டு" நடத்தப்பட்டதாக தெரிகிறது. "டில்லிக்கு சொல்லாமல் தமிழக சட்டப்பேரவை போர்க்குற்றவாளி, மற்றும் பொருளாதார தடை" என்று "தீர்மானம்" போட்டதை , மத்திய அரசும், பிரதமர் அலுவலகமும், வெளிவிவகாரத் துறையும், "ரசிக்கவில்லை". அந்த "தீர்மானங்களை" வைத்து ஹிலாறி கிளிண்டன், முதல்வர் ஜெயலலிதாவை சந்த்தித்தையும், அவர்கள் வரவேற்கவில்லை. இலங்கை எம்.பி.கள் "நாடாளுமன்றம் வந்தபோது, அதிமுக உறப்பினர்கள் எதிர்ப்பு முழக்கம் இட்டதையும்" டில்லி வெறுப்பாகவே பார்க்கத் தொடங்கி உள்ளது. அவற்றிற்கு எல்லாம் பதில் கொடுக்க டில்லி நினைக்கிறது.

தமிழ்நாட்டில் "ஈழப்ப் பிரச்சனையை"' ஒட்டி சட்ட-ஒழுங்கை குலைத்தால், தானாகவே அதிமுக அரசு தனது " சட்ட-ஒழுங்கை 'பாதுகாக்க " தமிழின உணர்வாளர்கள்" மீது "நடவடிக்கை" எடுப்பார்கள் என்று டில்லிக்கு கொழும்பு ஆலோசனை கூறியுள்ளது. இது "பழைய" அதிகாரிகள் சிலர் மூலமும் உறுதி செய்யப்பட்டதாகத் தெரிகிறது. அதை ஒட்டி, கொழும்பு தனது உளவுத் துறையான "என்.ஐ.பி." மூலம் "ஐம்பது சிங்கள இளைஞர்களை" இந்தியா வந்திருப்பவர்களை சென்னைக்கு அனுப்பி, அவர்களை "பகிரங்க ஊர்வலமாக" வெளியே தெரியும்படி "பவனி வர" ஏற்பாடு செய்தது. புதன்கிழமை காலை அந்த திட்டம் செயலுக்கு வந்தது. சென்றல் ரயில் நிலையத்திலிருந்து "ஐம்பது சிங்கள இளைஞர்கள் சிங்கள எழுத்துக்கள் கொண்ட பனியன்களை மாட்டிக்கொண்டு" ஊர்வலம் போல நடந்துவந்தனர். அவர்களது கைகளில் "சிறிய சிங்களக் கொடிகளை" பிடித்துக் கொண்டு வந்தனர். அத்தகைய ஊர்வலத்திற்கு காவல்துறை இங்குள்ள "தமிழர்களுக்கே கூட" அனுமதி கொடுப்பதில்லை. அப்படி "காவலர் அனுமதி இல்லாமல்" அந்த சிங்கள படையெடுப்பு சென்னை நகரில் பகிரங்கமாக நடந்தது.

அந்த சிங்கள ஊர்வலம் நேராக "புரசவாக்கத்தை: அடைந்து "ஏ.ஜே.விடுதி" என்ற வட இந்தியர் விடுதிக்கு போய் சேர்ந்தது. சிங்களமும் டில்லியும் சேர்ந்து போட்ட "சதி" நடைபெறாமல், அந்த "சிங்களப் பொடியன்களுக்கு" உள்ளேயே "ஜே.வி.பி. என்றும், ராஜபக்சே ஆள்" என்றும் சண்டை அவ்ந்துவிட்டது. அந்த சண்டை "புரசைவாக்கம் கடைவீதியை" அசிங்கப்ப்டுத்தியது. அதுகண்ட "தமிழ் இளைஞர்கள்" எங்கள் ஊருக்கு வந்து என் சட்ட-ஒழுங்கை குலைகிறீர்கள் என்று கேள்வி கேட்டார்கள். கேள்வி கேட்டது குற்றமாகிப் போனதால், செய்தி அறிந்த "கொழும்பு" தலையிட்டு, "டில்லியை" உசுப்பி விட்டு, அதமூலம் "தமிழ் இளைஞர்களை" கைது செய்ய வைத்திருகிறார்கள். இது "அந்நிய சதியால்" தமிழக சட்ட'-ஒழுங்கை கெடுக்க" எடுக்க[ப்பட்ட முயற்சியே. வம்பு செய்த "சிங்கள இளைஞர்கள்" ஏன் வந்தார்கள்?, என்று வந்தார்கள்?, எதற்கு வந்தார்கள்?, என "காவல்துறை" புலனாய்வு செய்து, "தூண்டிவிட்ட" அந்நிய உளவுப்படை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Wednesday, August 3, 2011

கெய்ரோ வழியில் கொழும்பு போகவேண்டும்

எகிப்து நாட்டில் இதுவரை "எதேச்சதிகாரியாய்" கோலோச்சி வந்த "போச்னிக் முபாரக்" மக்கள் புரட்சியின் முன் நிற்கமுடியாமல், ஆர்ப்பாட்டகாரர்களை "சுட்டுக் கொன்றதற்கும்" சேர்த்து, தனது மக்களையே தனது நாட்டு சொத்துகலையே ஊழல் செய்து கொள்ளை அடித்ததர்காகவும், இன்று "கெய்ரோ நீதிமன்றத்தில்" கைதியாக நின்றுகொள்ள முடியாத நிலையில் படுத்துக் கொண்டு விசாரணையில் கலந்து கொள்ளள வைக்கப்பட்டுள்ளான். "முபாரக், அவனது இரண்டு மகன்கள், அவனது உள்துறை அமைச்சர், அவர்களது ஆறு உதவியாளர்கள்" அனைவரும் அந்த "கைதிகள் கூண்டில்" பூட்டப்பட்டுள்ளனர். இந்த "காட்சியை" நாம் காணும்போது, "கொழும்பை" எண்ணிப்பார்க்கிறோம்.

நாட்டின் சொத்துகளை"கொள்ளை" அடித்த "ராஜபக்சே சகோதரர்கள்" இதே நிலையைத்தானே இலங்கையில் ஏற்படுத்தி உள்ளனர்? "தமிழின அழிப்பு" ஒன்றை திட்டமிட்டு நடத்திய " மகிந்தா, அவனது தம்பிகள் கோத்தபாயே, பசில்" ஆகியோரும் இதே "இழிநிலையை" விட மோசமான "இனப்படுகொலையை" நடத்தியதை, இன்றும் "இன சுத்திகரிப்பை" நடத்திக்கொண்டு இருப்பதை உலகம் நன்று அறியும்.ஆகவே "முபாரக்கை விட மோசமான ஒரு விசாரணை" இந்த மகிந்தா கொம்பளுகாக காத்திருகிறது.."கெய்ரோ வழிகொளும்பில்" கோலாகலமாக அரங்கேறும் நாளை எதிர்பார்த்து ஒவ்வொரு "தமிழர் உள்ளமும்" எங்கிவருகிறது

Tuesday, August 2, 2011

சூ.சாமி ஒரு "சூ,மந்திரக்காளியா?

அமெரிக்கா விரும்பியவுடன் "இந்தியாவிற்குள்" ஒரு "மத மோதல் சூறாவளியை" உருவாகும் வல்லமை அந்த "ஆளுக்கு" இருக்கிறதா? அந்த "ஆள்" வேண்டுமானால் அமெரிக்கா ஒற்றராக இருக்கலாம். ஆனால் "ஹார்வேர்ட்" பலகலைக் கழகத்தில் கற்ற அல்லது கற்கும் அனைவரும் அப்படி இருக்க வேண்டிய அவசியம் இல்லையே? இப்போது ஜூலை 11 இல் அதாவது அமெரிக்கா " தாவூது இப்ராஹீம்" பற்றி "பட்டியலில்" அறிவித்த பின்,மூன்றாம் நாளில், அந்த மும்பை குண்ட வெடிக்க வைத்தார்கள். அதனால் "அமெரிக்கா" பக்கம் மேலும் இந்தியா சாயவேண்டும் என்ற எதிர்பார்ப்பு.

அடுத்து ஜூலை 16 இல், சு.சாமி என்ற சுப்பிரமணிய சாமியை மும்பையிலிருந்து வெளிவரும் "டி.ஏன்.எ." என்ற டெய்லி நேசனல் அனலிசிஸ்" ஏட்டில் ஒரு "தூண்டிவிடும்" கட்டுரையை எழுத வைத்தார்கள். அதில் அவர் "இஸ்லாமிய பயங்கரவாதம்-எப்படிஒழிப்பது" என்று தலைப்பிட்டு எழுதினர். அதில் "இந்தியாவில்உள்ளமுஸ்லிம்கள் எல்லோரும் தங்களை பாரம்பரிய இந்துக்களாக இருந்தவர்கள்" என்று அறிவிக்கவேண்டும் என்று எழுதினார். மதமாற்றம் தடை செய்யப்படவேண்டும் என்றார். இந்து மதத்திற்கு திரும்ப வருவதை ஏற்றுக் கொள்ளவேண்டும் என்றும் எழுதினார்.

எந்த "சாதியில்" வேண்டுமானாலும் "திரும்பி வருகிறவர்கள்" ஸ்ர்கப் படவேண்டும் என்றும் எழுதினார். அதாவது ஒரு " இடதுவிலக்கை இந்துத்துவாவிற்கு" கொடுத்திருந்தார். இஸ்லாம் போர்தொடுத்து பிடித்த நாடுகளில் எல்லாம் "நூறு விழுக்காடு" முஸ்லிம்களாக இரண்டு பத்தாண்டுகளில் மாறிவிட்டார்கள் என்றும், ஆனால் எண்ணூறு ஆண்டுகள் கடுமையாக இஸ்லாம் ஆண்டும் கூட "ஒன்றுபட்ட இந்தியாவில் எழுபத்தி ஐந்து விழுக்காடு இந்துக்களே " இறந்தனர் என்றும் அதனால் 'அடிப்படைவாதி இஸ்லாமியர்கள்" இந்தியாவில் பயங்கரவாதம் செய்ய விரும்புவதாகவும் எழுதினார். இது நிச்சயமாக ஒரு வல்லரசின் சாதிகளுக்காக தீட்டப்பட்ட " நச்சு ஆராய்ச்சி விதையாகத்தான்" இருக்க வேண்டும்.

அந்த கட்டுரையை உடனடியாக "ஹார்வேர்ட்" பல்கலைகழக "இந்திய மாணவர்கள்" எதிர்த்து " மனு" ஒன்றை இணையத்தில் கட்டவிழ்த்து விட்டனர். அதில் " மதவெறி தூண்டும் கட்டுரை எழுதிய சு.சாமியயுடன் ஹார்வேர்ட் பலகலை இனி எந்த தொடர்பும்" வைத்துக் கொள்ளகூடாது என எழுதி இருப்ன்தனர். அவர்கள் "குமார் என்றும் சஞ்சய் பின்டோ" என்றும் பெயர் கொண்ட அதாவது இந்தியாவின் "இந்து மத" பின்னனி கொண்ட ஆராய்ச்சி மாணவர்கள். அவர்களதுவேண்டுகோளுக்குஉடனடியாக"இருநூறு மாணவர்கள்" கையெழுத்திட்டனர்.

இந்தியாவில் உள்ள "சிறுபான்மை உரிமை கவுன்சில்" ஜூலை 19 இல்,தனது கூட்டத்தில் இந்த புகாரை எடுத்துக் கொண்டது. இனி இந்தியமக்கள்தான் இந்த "சதிகார சாமியை" கவனத்துக் கொள்ளவேண்டும்.,"மதச்சார்பற்ற சக்திகளுக்கு" ஒரு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் "சு.சாமி" இந்திய தலைமை அமைச்சர் மன்மோகனை உச்சநீதிமன்ற நீதியரசரின் கோபத்திலிருந்து "காப்பாற்ற பிணை" எடுத்தவர் எனபதையும் நாம் நினைவு படுத்தவேண்டும். மீண்டும் மன்மோகனுக்கு ஆபத்து வரும் இந்நேரம் சு.சாமி "வன்முறையை" கிளப்பி விடுகிறாரா?

தமிழர் தலைவருக்கு போட்டியா?

எதிர்பாராத இடத்திலிருந்து தமிழருக்கு ஆதரவாக ஒரு தீர்மானம் சட்டமன்றத்தில் முன்வைக்கப்பட்டது. உலகத்தமிழர்கள் திணறிப் போனார்கள். அதனால் "நீங்கள்தான் இனி எங்கள் நம்பிக்கை" என்றனர். அந்த அளவுக்கு "அக்மார்க் முத்திரை வாங்கிய தமிழினத் தலைவர்களும்", "தமிழக மக்களும்" தங்களுக்கு எந்த உதவியும் தரவில்லையே என்று ஏங்கிப் போன "உலகத் தமிழினம்" இப்படித்ட் தான் தனது உணர்வுகளை காட்டமுடியும். ஆனால் "தனித் தானே தமிழினத் தலைவன்" என்று தம்பட்டம் அடித்துக்கொண்டவர்களால் அதைத் தாங்கமுடியாது. அதனால் அப்போதே "குதர்க்கம்" பேசினர்.

அடுத்து அமெரிக்காவின் "ஹிலாரி கிளிண்டன்" வேறு வருகை புரிந்தார. அவர், இவரை அடக்கிவிடுவார் என்றனர். அதற்கும் நாம் "இருக்கும்" என்றோம். ஆனால் "ஹிலாரியும்" தமிழக முதல்வர் சொல்கேட்டு மாறிவிட்டாரோ என்று நினைக்குமளவுக்கு "அமெரிக்காவின் பொருளாதார தடையும்" வந்துவிடும்போல இருக்கிறது. அதுகண்டு இங்குள்ள தமிழர்கள் " அந்த அம்மாவை" உண்மை தமிழச்சி என்று பாராட்டுகிறார்கள். இது நமது "அக்மார்க்" தமிழர் தலைவருக்கு பொறுக்கவில்லை. " உலகத் தமிழர்கள் அவரை உத்தமத் தாய் " என்று கூறுகிறார்களே என்று இப்போது "புலம்புகிறார்".


அடுத்து நாடாளுமன்றத்தில் "ஈழத் தமிழர்" பிரச்சனையை எழுப்பச் சொல்லி "தலைவி" சொல்ல, அதிமுக எம்.பி.களோ,இலங்கை "சிங்கள எம்.பி.களின் வருகையை" e எதிர்த்து "குரல்" எழுப்பி அந்த "தலைவி" புகழை உலகத் தமிழர்கள் மத்தியில் மேலும் உயர்த்தி விட்டனர். இப்போது "பா.மா.க. வெளியே வந்து "தனி அணி" என்கிறது. "வி.சீ.க" நானும் அப்படியே என்கிறது. "ம.தி.மு.க." வுடன் சேர்வோம் என்கின்றனர். அதன்மூலம் அதிமுக பெற்ற இடத்தை "தமிழினத் தலைவர்" இடத்தை உடைத்துவிடுவார்கள் என்று திமுக தலைமை அதிர்பார்த்து நிற்கிறது என்றும் ஒரு "குரல்" கேட்கிறது. எப்படியோ "தனக்கு கிடைக்காத" தமிழினத் தலைவர் நாற்காலி "அந்தமாவுக்கு" போய்விடக் கூடாது என்பதுதானே "அக்மார்க் தலைவரின்" உள்ளத்து ஆசை?

மானம் கப்பலேறி போகுதே.

இந்திய அரசுக்கு மானம் இல்லை. இலங்கை எம்.பி.களை வரவேற்று அவர்களை "தமிழ்நாட்டு எம்.பி.கள் எதிர்த்து முழக்கம் இட்டால், அதற்காக அந்த "சிங்கள பவுத்த பேராண்மை வாதிகளான போர்குற்றம் புரிந்த இரத்தக்கைகளுக்கு" கை கொடுத்து அவர்களிடம் மன்னிப்பு கேட்கும் ஒரு "மக்கள் அவைத்தலைவரை" கொண்டிருக்கும் நாடு. தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறப்பினர்கள் ஒருசேர எதிர்ப்பு கொடுத்தான் கூட, அது தமிழ்நாட்டு மக்களின் அதாவது எழரைகோடி மக்களின் உணர்வு என்று தெரிந்தும்கூட, மக்களவையை நடத்தும் "மீராகுமார்" புரிந்துகொள்ளவில்லைஎன்றால், இத நாட்டை இந்த நாடாளுமனறத்தை இனியும் எதற்காக "தமிழர்கள்" மதிக்க வேண்டும்?

இலங்கை எம்.பி.களின் குழுவிற்கு தலைமை தாங்கி வந்திருப்பவர் அங்குள்ள நாடாளுமன்ற லேரவைத் தலைவர். அதாவது அரசத் தலைவர் "மகிந்தாவின்" சகோதரர். அவரிடம் மீராகுமார் மன்னிப்பு கேட்கிறார் என்றால், ஒன்றரை லட்சம் தமிழர்களை கொன்றதற்காக, "ராஜபக்சே கும்பலும், டில்லி ஆட்சியாளர்களும்" எத்தனை முறை "தமிழர்களிடம்" மன்னிப்பு கேட்கவேண்டும்? ஜகஜீவன்ராமின் மகள் என்பதற்காகவும், ஒரு தலித் பெண் என்பதற்காகவும் இதுவரை மரியாதை தந்துவந்தோம் மீராகுமாருக்கு என்று நாம் கூறவேண்டி இருக்கிறது. தமிழகமே எழுந்து "டில்லியே ராஜபக்சேவிற்கு உதவியதற்காக தமிழர்களிடம் மன்னிப்பு கேள்" என்ற குரலை உயர்த்தவேண்டிய கட்டம் வந்துள்ளது. இதைத்தான் இன்று காலை வின் காட்சி ஊடகத்தின் நிகழ்ச்சியான" செய்திகளும், நிஜங்களும்" எடுத்து சொன்னது.

Monday, August 1, 2011

வாஷிங்க்டன்னை அசைத்த சென்னை தீர்மானம்.

ராஜபக்சே ஒரு போர்க்குற்றவாளி என்பது தமிழர்கள் மத்தியில் மிக சாதாரணமாக உலகெங்கும் அறிந்த, அறிவிக்கப்பட்ட பழைய செய்தி. இப்போதுதான் அது தமிழர்களையும் தாண்டி, உலக சமூகத்தில் உள்ள அனைத்து மக்கள் மத்தியிலும், அனைத்து நாடுகள் மத்தியிலும், அனைத்து ஊடகங்கள் மத்தியிலும் சென்றடைந்துள்ளது. ஒரு சிறிய தீவில் உள்ள சிறுபான்மை தேசிய இனம் மீது, பெரும்பான்மை தேசிய இனத்தை சேர்ந்த ஒரு " அடாவடி குண்டர் படை" தொடர்ந்து தாக்குதல்களை நடத்துவதும், நிலங்களை ஆக்கிரமிப்பதும், பெண்களை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்துவதும், சிறுபான்மை தேசிய இனத்திற்கு வேலை வாய்ப்புகளை மறுப்பதும், பகிரங்கமாக இன ஒடுக்கலை தொடர்வதும் செய்யும்போது, அதற்கு பதில் கொடுக்க, சிறுபான்மை தேசிய இனத்தின் இளைஞர்கள் "ஆயுதம்" தாங்கிய போர் மூலம் தங்களது "விடுதலையை" சாதித்துக்கொள்ள எழுவது, உலகம் முழுவதும் நடக்கின்ற ஒரு நிகழ்வுதான். அதுதான் இலங்கை தீவில் வாழும் "ஈழத்தமிழர்" விடுதலைப் போராட்டத்திலும் நிகழ்ந்தது. அந்த "விடுதலைப் போரை" உலக விதிகளின் படி நடத்தாமல், " மனித உரிமை மீறல்களையும், போர் குற்றங்களையும்" இழைத்ததுதான் ராஜபக்சே கும்பல் செய்த குற்றம். "இன ஒடுக்களில்" இருந்து "இன அழிப்புக்கு" பரிணாம வளர்ச்சி பெற்ற ராஜபக்சே கும்பல் இத்தகைய "போர் குற்றங்களை" மிக சாதரணமாக இழைக்கத் தலைப்பட்டார். அதனால்தான் இத்தகைய "உலக சமூகத்தின்" கண்டித்தலுக்கு உள்ளாகியுள்ளார்.

இலங்கையில் சிறுபான்மை இனமான " தமிழினத்தின்" மீது நடத்தப்பட்ட வன்முறைகளும், ஒடுக்குதல்களும், அறுபது ஆண்டுகளாக நடந்து வந்த போதும், அதை உலக சமூகத்தின் மத்தியில் தொடர்ந்து பல "தமிழ் அறிஞர்களும், ஈழதேசத்தின் மனித உரிமை ஆர்வலர்களும்" எடுத்துசென்ற போதும், உலகம் அதற்காக செவி சாய்த்ததாக தெரியவில்லை. முப்பது ஆண்டுகளுக்கு முன்பு, இலங்கை அரசுடன் அதாவது இலங்கை சிங்கள அரசுடன் ஒரு உரசல் வந்த காலத்தில், இலங்கை சிங்கள அரசை தன் பக்கம் சாய வைப்பதற்காக, அன்றைய இந்திய அரசை ஆண்டுவந்த இந்திரா காந்தி, ஒரு "ஈழத்தமிழருக்கு" செவ்வி கொடுத்து, "தமிழீழம்" மலர்வதற்கான பரப்புரைக்கு உதவுவார் என்ற எண்ணத்தை ஏற்படுத்தினார். அதையொட்டி நடந்த இலங்கை இனக் கலவரத்தில் தமிழர்கள் அதிகமாக படுகொலை செய்யப்படுவதை,காரணமாக வைத்து, "ஈழத் தமிழர் இளைஞர்களுக்கு" ஆயுதப் பயிற்சி கொடுத்து, ஆயுதங்களும் அளித்த இந்திரா காந்தி, "ஈழத் தமிழர்கள்" மீதான அடக்குமுறைகளையோ, "தமிழின விடுதலை" என்ற செய்தியை , உலக சமூகம் மத்தியில் கவனமாக கொண்டுசெல்லவில்லை.அதுதான் இந்திராகாந்தி செய்த "தந்திரம்"


இவாறு தொடர்ந்து "ஈழத் தமிழர்" இனம் ஏமாற்றப் பட்டு வந்தது. அந்த நேரத்திலும் உண்மையாக ஈழத் தமிழருக்காக அவர்களது போர்படையான "விடுதலைப் புலிகளுக்காக" .ஆயுத உதவியும், நிதி உதவியும், பாதுகாப்பும், ஆறுதல்களும், ஆக்கபூர்வமான மன உறுதியும் கொடுத்து யார் என்று பார்த்தால், அது அன்றைய தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். மட்டுமே என்பது புரிய முடியும். அந்த எம்.ஜி.ஆர். இன் வாரிசாக தமிழக அரசியலில் இறங்கியுள்ள செல்வி.ஜெயலலிதா, ஈழத் தமிழர்களின் உரிமை சம்பந்தப்பட்ட விசயங்களில், கருணாநிதி எடுத்த முடிவுகளுக்கு எதிராக தனது காய்களை நகர்த்தினார். ஈழத் தமிழர்களின் போர்ப்படையாக உண்மையில் வெற்றி பெற்று திகழ்ந்த "விடுதலைப் புலிகளின்" படைக்கு எதிராகவே கருணாநிதி தனது ஒவ்வொரு செயல்களையும் செய்து வந்தார் என்பது கண்கூடு. அதற்கு போதுமான அளவு :மத்திய உளவு நிறுவனமான" டில்லியில் இருந்து இயக்கப்படும் "ரா" அமைப்பின் ஆலோசனைகளும், ஆதரவும் இருந்து வந்தது. " கம்பும் உடையாமல், குதிரைக்கும் நோகாமல்" தனது வண்டி ஒட்டுதலை கருணாநிதி செய்துவந்தார்.அதாவது "ஈழத் தமிழருக்கு ஆதரவு கொடுப்பது போல ஒருபுறம் காட்டுவதும், டில்லிக்கு சொன்னபடி கேட்பதும்" என்பதாக தனது அரசியல் பாதையை அமைத்துக்கொண்டார். "பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன்" என்ற பழமொழிக்கு பொருத்தமானவராக கருணாநிதி இருந்துவந்தார்.


இப்போது இலங்கையில் போர் முடிந்ததாக அறிவிக்கப்பட்ட பிறகு இரண்டு ஆண்டுகள் ஆன பிறகு, புதிய ஒரு நிலைமையை "தமிழக சட்டப்பேரவை" ஏற்படுத்தி உள்ளது. அத்தகைய ஒரு சூழலை ஏற்படுத்தியவர் தமிழக முதல்வர் செல்வி.ஜெயலலிதா.அதாவது "நாடாளுமன்ற தேர்தல் பரப்புரை" காலத்தில், அதிமுக தலைவர் செல்வி.ஜெயலலிதா ஈழத்தமிழர் பிரச்சனைக்கான தீர்வாக," தமிழீழம் விடுதலை"பெறவேண்டும் என்று கூறியிருந்தார். அது தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் அடியாழம் வரை சென்றடைந்தது என்றாலும், அந்த தேர்தல் "ஈழத் தமிழர் பிரச்னையை" நிபந்தனையாக கொள்ளவில்லை என்பதும், அத்தகைய தந்திரத்தில் கருணாநிதி தற்காலிகமாக வென்றுவிட்டார்" என்பதும் அன்றைய நடப்புகள். ஆனால் நிலைமை அப்படியே இருந்துவிடவில்லை. சட்டமன்ற தேர்தல் வந்தது. அந்த நேரத்தில் "ராஜபக்சேவின் போர்குற்றங்களை உலகறியச்செய்யும்" காரியங்கள் நிறைவேறி வந்தன. சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடந்து முடிந்தது. ஐ.நா. பொதுச்செயலாளர் ஏற்படுத்தியிருந்த "நிபுணர் குழு" தனது அறிககையை வெளியிட்டது. அதில் "ராஜபக்சே கும்பல் போர்குற்றங்கள் புரிந்ததை" பட்டியலிட்டிருந்தது. அதை படித்த இன்றைய முதல்வர் செல்வி.ஜெயலலிதா அன்றே அதற்கான " அனைத்து நாட்டளவு விசாரணை" நடத்தப்படவேண்டும் என்று அறிவித்தார்.

அத்தகைய அறிவிப்பு உலகத் தமிழர் மத்தியில் பிரமிப்பை ஏற்படுத்தியது.. ஏன் என்றால் அதுவரை செல்வி.ஜெயலலிதா பற்றி,,அவர் "ஈழத் தமிழருக்கு எதிரானவர் என்றும், ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் எதிரானவர்" என்றும் திமுக தரப்பு "பொய்யுரைகளை" எங்கணும் விதைத்து இருந்தது. இதேபோலத்தான் எம்ஜீஆரை திமுக தரப்பு," மலையாளி" என்று பரப்புரை செய்து அவரை "தமிழர் விரோதி" எனச் சித்தரித்து வந்தது. இது வழமையாக கருணாநிதி செய்துவரும் தந்திரம். மற்றவர்களை அதாவது தனக்கு எதிராக அரசியல் அரங்கில் "வெற்றி பெற்றவர்களை" எல்லாம் "தமிழர் விரோதிகள்" என்று முத்திரை குத்தி ஒரு "அக்மார்க்" பதிவை செய்த்குவிடுவார் கருணாநிதி. அதன்மூலம் "தமிழர்களுக்கு தான் மட்டுமே" தலைவர் என்பதாக ஒரு மாயத் தோற்றத்தை ஏற்படுத்த தொடர்ந்து முயன்று வருகிறார். எம்.ஜிஆர் விடுதலைப் புலிகளுக்கு செய்த உதவிகள் மூலம் அந்த மாயத்தோற்றம் ஈழத் த்யமிழர்கள் மத்தியில் உடைந்துவிட்டது.


இப்போது மீண்டும் ஜெயலிதா எதிர்ப்பு என்பதிலும் "தமிழர்" அடையாளத்தை திசை திருப்பி விடும் கருணாநிதியின் முயற்சி ஓரளவு வெற்றி பெற்றிருந்தது.அந்த நேரத்தில்தான் இந்த ஜெயலலிதா அறிவிப்பு தேர்தல் நடந்த பிற்பாடு எவ்ளிவன்தது. அதைப்பற்றி கூறும்போது கவிஞர் காசி அனந்தன் " வாக்கெடுப்புக்கு பிறகு ஜெயலலிதா ராஜபக்சே கும்ப்பலை போற்குற்றங்களுகாக அனைத்து நாடளவில் விசாரணை" செய்யவேண்டும் எனக் கூறுவது சிறப்பானது என்றார். அதை அடுத்து சேனல் நாலு வெளிப்படுத்திய " இலங்கையில் கொலைக்களம் " என்ற ஆவணப்படம் ஆளும் அதிமுக தலைமை உட்பட உலகத் தமிழர்களை உலுக்கி விட்டது. அதன் விளைவாக, வாக்கு எண்ணிக்கை முடிந்த நாளன்று, ஜெயா டி.வி.காண நேர்காணலில், அதிமுக தலைவி ஒரு செய்தியை சொல்லியிருந்தார். அதாவது "போர்க்குற்றவாளி ராஜபக்சேவை அனைத்து நாட்டு விசாரணைக்கு" உட்படுத்தவேண்டும்" என்பதே அந்த கோரிக்கை. அந்த முழக்கம் டில்லியில் அதிகாரத்தில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமையையும், தலைமை அமைச்சர் அலுவலகத்தையும் அதிகமாக தாக்கம் செலுத்தியது.

இந்தியா இலங்கை போரில், "தமிழர் இன அழிப்பில்" முக்கிய பங்கு வகித்தது என்பது உலகம் அறிந்த ஒரு செய்தியாக இருக்கிறது. அதிலும் போர்குற்றங்கள் செய்த ராஜபக்சேவிற்கு எதிராக உலக நாடுகள், "ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில்" பிரச்னையை எழுப்பிய போது, இந்திய ரசுதான் மகிந்தாவை பிணையில் எடுத்தது என்பதும் உலகறிந்த உணமையாக இருக்கிறது. அப்படி சூழலில், தமிழகத்தில் வெற்றி பெற்ற செல்வி.ஜெயலலிதா, எம்ஜீஆர் எப்படி டில்லியின் காய் நகர்த்தலுக்கு எதிராக, ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக முடிவுகளை செய்தாரோ அதே போல, ஜெயலலிதாவும், டில்லி தனது வலியுறுத்தல்களை எழுப்பும்போதே, ஈழத் தமிழருக்கு ஆதரவான காரியங்களை செய்யத் தொடங்கினார். வாக்கெடுப்பு நடந்த உடனேயும்,, வாக்கு எண்ணிக்கை முடிந்த உடனேயும் தமிழக முதல்வராக பொறுப்பெடுக்க இருந்த செல்வி.ஜெயலலிதா, தனக்கே உரிய முறையில் "ராஜபக்சே கும்பலுக்கு எதிராக அனைஹ்து நாட்டு விசாரணை" நடத்த வலியுறுத்தியதை டில்லி ரசிக்க வில்லை. விரும்பவில்லை. அதை சட்டமன்ற தீர்மானமாக நிறைவேற்ற கூடாதே என்று பல முயற்சிகள் மூலம் டில்லி "தடைகளை" ஏற்படுத்தியது.

அனைத்தயும் கேள்விப்பட்ட ஜெயலலிதா தனது நிலைப்பாட்டில்,உறுதியாக இருந்துகொண்டே, "தமிழினத்திற்கு" ஆதரவான ஒரு தீர்மானத்தை மன்றத்தில் கொணர முடிவு செய்தார். ஆனால் அதை உணர்ந்துகொண்டால் டில்லி அதை தடுக்க பல வேலைகளை செய்யும் என்று அவருக்கு தெரியும். ஆகவே "ஆளுநர் உரையில்கூட" அத்தகைய தீர்மானம் வருவதற்கான சுவடை காட்டவில்லை. அது பல தமிழ்நாட்டு அரசியல்வாதிகளுக்கு வியப்பாகவும், கோபமாகவும் மாறியது. சிலர் கொந்தளித்தார்கள். சிலர் தங்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் மூலம் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் போது அது பற்றி பேசத் தலைப்பட்டனர். ஆனால் செல்வி.ஜெயலலிதா ஒரு காரியத்தை எடுத்தால் தான் இணங்கும்வரை அதிலிருந்து மாறமாட்டார் என்ற உண்மை அவர்களுக்கு புரியவில்லை. மற்ற அரசியல்வாதிகளைப் போல அவரையும் நினைத்து அவர்கள் உரலை இடித்துக் கொண்டிருந்தனர்.

திடீரென ஆளும் கட்சியின் தோழமைக் கட்சிகளே வியக்கும் வண்ணம், ஒருநாள் காலை ஒன்பது மணிக்கு தங்கள் இருக்கைகளில் "முதல்வர் முன்மொழியும் தனித் தீர்மானமாக "இலங்கையின் போர்குற்றங்களை ஐ.நா. சபை விசாரிக்க மத்திய அரசு நிர்ப்பந்திக்க வேண்டும் என்றும், அதற்காக பொருளாதார் தடைமூலம் நிர்ப்பந்திக்க வேண்டும் என்றும்" ஒரு அறிக்கை வைக்கப்பட்டுள்ளது கண்டு உள்ளப்ப்பேருவகை கொண்டனர். அந்த தீர்மானம் ஏகமனதாக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. அதேபோல எல்லோருடைய அதிர்ச்சிக்கு மறுநாளே, இன்னொரு தீர்மானம் வந்தது. அது" கச்சத்தீவு மீட்டெடுப்பு" தீர்மானம். இப்படி டில்லியின் அதிர்ச்சிக்கு வழிவகுக்கும் இரண்டு தீர்மானங்களையும் தனகளது கூட்டணி கட்சிகளுக்கே சொல்லாமல் திடீரென கொண்டுவந்து அனைத்து உறுப்பினர்களின் பேருவகையுடன் நிறைவேற்றிய செல்வி.ஜெயலலிதா அதன்மூலம் தான்" தமிழர்களுக்காக நிற்கும் உணமையான தமிழச்சி" என்று நிரூபித்து விட்டார்.


மேற்கண்ட தீர்மானம் உலகத்தமிழர் மத்தியில் அவரது மரியாதையை உயர்த்தியது. நாடு கடந்த தமிழீழ அரசாங்க தலைமை அமைச்சர் விஸ்வநாதன் உருத்திரகுமாரன் நியு யார்க்கில் இருந்து அளித்த தனது அறிக்கையில், செல்வி.ஜெயலலிதாதான் தனைகளுக்கு "தமிழீழம்" பெற்றுத்தர ஒரே நம்பிக்கை என்று கூறும் அளவுக்கு பாராட்டுக்கள் குவிந்தன.இதுவே அமெரிக்க அரசாங்கத்தை ஆட்டியது. அதனால்தான் இந்தியாவிற்கு வருகை புரியும்போது, அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் சென்னை வருவதும், முதல்வரை சந்திப்பதும் நிகழ்ந்தன.அப்போதும், ஹிலாரி ஜெயலலிதாவிடம் "இந்திய அரசு தெற்கு ஆசியாவில் நடக்கும் விவகாரங்களுக்கு தலைமை ஏற்கவேண்டும்" என்று கூற,, முதல்வரோ "நீங்கள் இலங்கை போர்குற்றங்களை விசாரிக்க அனைத்து நாட்டு நிர்ப்பந்தத்தை" ஏற்படுத்துங்கள் என்று பதில் கூறினார்.

அதவே அடுத்த இரண்டாவது நாள், அமெரிக்க நாடாளுமன்றம் முன் வைப்பதற்காக " இலங்கை மீது பொருளாதார தடையை விதிக்க அதன்மூலம் போர்குற்ற விசாரணையை ஏற்படுத்த" ஒரு தீர்மானம் முக்கிய குழுவால் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்த அமெரிக்க முயற்சி, முதல்வர் ஜெயலலிதாவின் தீர்மானத்தின் எதிரொலிதான் எண்பதை உலக சமூகம் புரியத்தொடங்கி விட்டது. இப்போது உலகத் தமிழர்கள் மத்தியில் ஜெயலலிதாதான் "தனகளுகான ஒரே நம்பிக்கை" எனபது நிற்கிறது. இதன்மூலம் "சென்னை தீர்மானம் வாஷிங்க்டனை நிர்ப்பந்த்தித்துள்ளது" என்பதும் வெள்ளிடை மலையாக புரிந்துவிட்டது.

நிருபமாராவ் இந்தியரா? சிங்களரா?

இந்தியாவின் வெளிவிவகாரத் துறையின் இதுவரை செயலாளர் நிரூபமா ராவ், இந்தியக் குடிமகள் என்ற உணர்வுடன் இருக்கிறாரா? இல்லையா? என்ற கேள்வி சமீபத்திய அவரது செயலால் எழுந்து நிற்கிறது. அவர் "வெளிவிவகார துறையின் செயலாளர் பொறுப்பிலிருந்து மாற்றப்பட்டு, அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகத்தின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார் எண்பதை சாதாரணமாக "தமிழர்களால்" எடுத்துக் கொள்ள முடியவில்லை. ஏற்கனவே "இலங்கையில் நடந்த தமிழினப் படுகொலையில் டில்லியின் பங்கு முக்கியமானது" என்று உலகத்தமிழர்களுக்கு தெரிந்திருக்கும்போது, அதை "செம்மையாக" செய்து முடித்தவர்களில் இந்த நிரூபமா ராவும் முக்கிய பங்காற்றியவர். அதற்காகத்தான் அவருக்கு இப்படி அமெரிக்காவில் இந்திய தூதராக இருங்கள் என்று மத்திய அரசு பதவி உயர்வு கொடுத்திருக்கிறதா? என்பது தெரியவில்லை.

இலங்கையில் "போர்க்குற்றவாளி மகிந்தா" தொடர்ந்து பதவியில் இருக்க, இந்திய அரசு நிரூபமா ராவ் மூலம் அனைத்து ஏற்பாடுகளையும் ச்ய்துவருவதும் ஊர் அறிந்த செய்தி. அப்படிப்பட்ட "கெட்டிக்கார" தமிழர் விரோதி என்று சோதிக்கப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட நிரூபமா ராவை ஏன் டில்லி அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரக தூதராக அனுப்பவேண்டும்? அமெரிக்காவில் உள்ள ஈழத் தமிழர்கள் " நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை" நடத்திவரும் வேளையில் அதை எதிர்த்து ராஜபக்சே பல்வேறு இடையூறுகளை செய்தும் வெற்றிபெறாத சூழலில், "ராஜபக்சேவின் நண்பர்" என்று சோதிக்கப்பட்ட நிரூபமா ராவை டில்லி வாஷிங்க்டனுக்கு அனுப்புகிறது.

சிங்களத்தால் செய்யமுடியாத "காரியங்களை" சிங்களத்திற்காக செய்துதர டில்லி இசைந்திருக்கும் வேளையில், முதல் கட்டமாக "ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில்" ராஜபக்சே மீதான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளில் இருந்து அந்த போற்குற்றவாலையை காப்பாற்றிய டில்லி அதிகாரவர்க்கம் தனது விசுவாசமான பிரதிநிதியை வாஷிங்க்டனுக்கே அனுப்பும் நிர்ப்பந்தம் இப்போது உருவாக்கி உள்ளது."போர்குற்றம் என்று வந்தால் உங்களை காட்டிக்கொடுத்துவிடுவேன்" என்று கூறும் ராஜபக்சேவை காப்பாற்ற அமெரிக்காவில் "ராஜபக்சே ஆதரவு சிங்கலார்கள்" பயன்பட மாட்டார்கள் என்பது டில்லிக்கு தெரிந்துவிட்டது.

அதனாலேயே "இந்திய தூதர்" என்ற முகத்துடன் "ராஜபக்சேவின் கைத்தடி" ஒருவரை அமெரிக்கா அனுப்ப டில்லி முடிவு செய்தது. அதற்கு "தகுதியான ஆள்" நிரூபமா ராவ்தான் என்பது அவர்களது கணிப்பு. சரி. பேசாமல் அமெரிக்கா போகவேண்டியதுதானே. அந்த "அம்மா" ஏன் கொழும்பு சென்று ராஜபக்சேவிடம் "பிரிவு உபசாரம்" வாங்கிவர வேண்டும்? தனது வெளிவிவகார துறை செயலர் பதவியில் இருக்கும்போது, கொழும்பு சென்றது "அதிகாரபூர்வமானது". அந்த பதவியிலிருந்து வெளியே வந்த பிறகு, ராஜபக்சே "பிரிவு உபசாரம்" செய்ய அழைப்பு விடுத்தாராம் இந்த நிரூபமா ராவ் சென்றாராம். இவாறு தந்து கொழும்பு பயணத்தை அவர் விளக்குகிறார்.

அதாவது "போர்க்குற்றவாளி" என்று உலகமே சொல்லும்போது, அந்த போர்க்குற்றவாளி" ஒரு பெரிய அதிகாரியை "பிரிவு உபசாரத்திற்கு அழைப்பு"விடுத்தார் எனபதும், அந்த உயர் அதிகாரியும் சென்று அதை ஏற்றுவந்தார் என்பதும் எதைக் காட்டுகிறது? நிரூபமா ராவ் தனிப்பட்ட முறையில் ராஜபக்சேவின் நண்பராக இருக்கிறார் என்பதும், அவருக்காக "தனிப்பட்ட முறையில் விசுவாசமாக இருப்பார்" என்பதும் இதில் புலப்படுகிறது. இவர் எப்படி அமெரிக்கா சென்று இந்திய நலனை பாதுகாப்பார்? இவர் சிங்கள, பவுத்த வெறி பிடித்த ராஜபக்சேவின் நலனை பாதுகாக்க "இந்தியா" பெயரை பயன்படுத்த போகிறாரா?

மன்னார்குடியில் ஒரு அம்பேத்கர் பேரவை தொடக்கம்

ஞாயிறு அன்று மன்னார்குடி நகரில், "அம்பேத்கார் அறிவாலயம்" என்ற ஒரு நடுநாயகமாக கட்டப்பட்ட ஒரு மணடபத்தில், " அம்பேத்கார் ஜனநாயக இளைஞர் பேரவை" என்ற புதிய அமைப்பின் தொடக்க விழா நடந்தது. ஏற்கனவே "களப் பணியாளர்களாக" வரலாற்றை சந்தித்த தோழர்கள், செல்வராஜ், சதாசிவம் போன்றோர் "வெண்மணி" என்ற அடைப்புக் குறியுடன் அந்த பேரவையின் தொடக்கத்தை ஏற்பாடு செய்திருந்தார்கள். 1968 ஆம் ஆண்டு டிசம்பர் 25 இல், "கீழ வெண்மணி" கிராமத்தில் "நாற்பத்தி நாலு" தாழ்த்தப்பட்ட விவசாயக் கூலிகளை "கூண்டோடு" எரித்துக் கொலை செய்த " நெல் உற்பத்தியாளர் சங்க" தலைவர் "கோபாலகிருஷ்ண நாயுடுவை" உயர்நீதிமன்றம் விடுதலை செய்தபோது, "மக்கள் மன்றம்" நக்சல்பாரி புரட்சிகர கட்சியான, "இந்தியக் கம்யுனிஸ்ட் கட்சி{ மார்க்சிசிட்--லெனினிஸ்ட்}" யின் கொரில்லாபடை "அழித்தொழிப்பு" செய்தது. அந்த கட்சி "வினோத் மிஸ்ரா" தலைமையில் நடத்தப் பட்டுக்கொண்டிருந்தது.

அந்த "புரட்சிகர நடவடிக்கை" உலகம் முழுவதும் மக்களால் பாராட்டப்பட்டது. அந்த வழக்கில் காவல்துறை வீட்டில் யிருந்த சிலரை முதலில் கைது செய்து "தண்டனை" வாங்கிக் கொடுத்து. அதன்பிறகு அந்தவட்டரத்தில் இருந்து நக்சல்பாரி இயக்கத்திற்கு சென்ற சிலரை கைது செய்து அவர்கள் மீது "கொலைவழக்கு" போட்டது. அவர்களும் பிறகு விடுதலை ஆனார்கள். ஆனால் காவல்துறை அவர்களை "நக்சல்பாரி இயக்கத்தின் "கொரில்லாப்படை" என்று அறிவித்தது. அந்த தோழர்களான, "வெண்மணி செல்கராஜ், வெண்மணி சுப்பிரமணியன், வெண்மணி சதாசிவம்" ஆகியோர் இணைத்து இப்போது இந்த "அம்பேத்கார் ஜனநாயக இளஞர் பேரவை" அமைப்பை தோற்றுவித்துள்ளனர். அவர்களுடன் பழைய தோழர்களான "மழலை சிங்காரவேலு, அரங்க குணசேகரன், டி.எஸ்.எஸ்.மணி, தடா ரவி" ஆகியோரும் உரையாற்றினர்.

அதில் நிறைவேற்றப்பட்ட ஒன்பது தீர்மானங்களில், " தாழ்த்தப்பட்டோர், சிருபான்மையருக்கான பாதுகாப்புக்கு தனி சட்டம்" கேட்டிருந்தனர்." பஞ்சமி நிலங்களை மீட்டெடுக்க" கோரியிருந்தனர். "தாட்கோ நிதி" யை தாழ்த்தப்பட்டோருக்கே பயன்படுத்த கோரியிருந்தனர். "சமச்சீர் கல்வி என்பது பொதுப் பாடத்திட்டம் மட்டுமலா, உள்கட்டுமான வசதிகளிலும், கல்விக் கட்டணம் தவிர்ஹ்த்ட கட்டணம் வசூலிப்பதிலும், ஏழை, பணக்கார வேறுபாடு இல்லாத திட்டம்" வேண்டும் எனக்க கோரியிருந்தனர். "நாடாளுமன்றம் முதல் ஊராட்சிவரை உள்ள உறுப்பினர்கள், அரசு ஊழியர்கள் தங்கள் பிள்ளைகளை "அரசுப் பள்ளிகளில்" சேர்க்கவேண்டும்" என்று கோரிக்கை வைத்தனர். கட்சிகள் உட்பட அமைப்புகள் எல்லோரும் தங்கள் உறுப்பினர்களை அவரவர் பிள்ளைகளை அரசுப்பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என்றனர்.

நில மோசடிகளை நடவடிக்கை மூலம் தமிழக அரசு மீட்டெடுக்க எவ்ண்டும் என்றனர். இலங்கையில் "தமிழினப் படுகொலையை செய்ததற்காக மத்தியரசு தமிழர்களிடம் மன்னிப்பு கோரவேண்டும் " என்றொரு தீர்மானம்.போற்குற்றவாளியை தண்டிக்கவும், பொருளாதரா தடை கோரியும் போடப்பட்ட தமிழக அரசை பாராட்டி ஒரு தீர்மானம். இலங்கை உள்ளாட்சி தேர்தல்களில், வடக்கு,கிழக்கு மாகான மக்கள் "தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு: வெற்றி தேடித் தந்ததன் மூலம், இரண்டு தேசிய இனமும் இனியும்செர்ந்து வாழமுடியாது" என்பது தெளிவாவதால், "தமிழீழம்" அமைய வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என்றொரு தீர்மானம்.