Monday, January 31, 2011

கருணாநிதி ஆட்சி காவல்துறை ஆட்சியாக மாறுவ்து ஏன்?

கருணாநிதி ஆட்சி என்றாலே காவல்துறை தனது அத்துமீறல்களை அதிகமாக செய்துவரும் எனபது வழமையான ஒன்றாக ஏன் ஆனது? கருணாநிதி அந்த ளவுக்கு மக்கள் மீது கோபம் கொண்டவரா? இல்லையே? காவல்துறை மீது நம்பிக்கை கொண்டவரா? அதுவும் இல்லையே? அப்படியானால் இது ஒரு பொய்யான புனைவா? அப்படியும் சொல்லிவிடமுடியவில்லையே? கருணாநிதி ஆட்சியில்தான் கடந்த ஐந்து ஆண்டுகளில் அதிகமாக காவல்நிலைய மரணங்கள் நிகழ்ந்துள்ளன. அதுமட்டுமின்றி மோதல் சாவுகள் என்று அழைக்கப்படும் போலி மோதல் சாவுகள் நடந்துள்ளன. அப்படியானால் கருணாநிதி ஆட்சி காவல்துறையின் ஆட்சி என்பது உண்மைதான். ஆனால் காவல்துறையின் இதயம் கீடுவிட்டது என்று துறவை மொழிந்ததும் கருணாநிதிதான். ஏன் இப்படி ஒரு நிலை ஏற்படுகிறது?
தேர்தல்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள்தான் ஆட்சி அதிகாரத்தில் அமர்கிறார்கள். அவர்கள்தான் காவல்துறையை தலைமை தாங்கவேண்டி உள்ளது. அல்லது வழிகாட்டவேண்டி உள்ளது. தேர்தல்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுபவர்களில் ஒவ்வொருவரும் ஆட்சிக்கு வந்த உடன் வெவேறு மாதிரி நடந்துகொள்வது ஏன்? அதாவது சிலர் காவல்துறையை சார்ந்து ஆட்சி நடத்துகிறார்கள். சிலர் காவல்துறை கையில் வைத்துக்கொண்டு ஆட்சி நடத்துகிறார்கள். சிலர் காவல்துறையை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு ஆட்சி நடத்துகிறார்கள். இப்படி வேறுபட்ட நிலைகளை அணுகுமுறைகளாக வெவேறு ஆட்சியாளர்கள் வைத்திருப்பது எதனால்? இதில் கருணாநிதி எத்தகைய முறையை கையாள்கிறார்? எம்.ஜி.ஆர். எந்த முறையை கையாண்டார்? ஜெயலலிதா எந்த முறையை கையாண்டார்? கையாளும் முறைகள் சம்பந்தப்பட்ட மனிதர்களால் தேர்ந்தேடுக்கப்படுகிறதா? அல்லது அவர்களது நிலைமைக்கு ஏற்ப அவர்கள்மீது திணிக்கப்படுகிறதா?
நிர்வாகத்தை நடத்துவதற்கு அவர்கள் அதாவது ஆட்சியில் முதல்வர்களாக வீற்றிருக்கும் நபர் தனது தகுதிக்கு அல்லது தனது சிந்தனைக்கு ஒப்ப தேர்ந்தெடுக்கும் அணுகுமுறைகளில் இந்த காவல்துறையை கையாள்வது என்பதும் வருகிறது. எம்.ஜி.ஆர். தமிழ்நாட்டு மக்களது ஏகோபித்த ஆதரவுடன் தேர்தல்களில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனால் அவர் தனது வேருப்பத்திர்க்கு ஒப்ப அல்லது புரிதலுக்கு ஒப்ப காவல்துறையை கையாண்டார். அதாவது இந்திய அரசியல் சட்டம் என்ன சொல்கிறது என்பதைப்பற்றிக்கூட கவலையின்றி எழப்போராளிகளுக்கு தான் நினைத்த மாததிரத்தில் காவல்துறையில் உள்ள துப்பாக்கி ம்ற்றும் தோட்டாக்களை எடுத்து கொடுக்க அவரால் உத்திரவிட முடிந்தது. ஜெயலலிதா காவல்துறையின் அதிகாரிகளை கேள்வி மேல் கேள்வி கேட்டு தனது உத்திரவுகளை அமுல்படுத்த முடிந்தது.ஆனால் கருணாநிதியோ காவல்துறை அதிகாரிகள் சொல்வதை கேட்பதையே தாரக மந்திரமாக கொண்டுள்ளார். இது ஏன் என்பதே இப்போதுள்ள கேள்வி.
எம்.ஜி.ஆர். கட்சியை விட்டு வெளியேற்றப்பட்டதிலிருந்தே கருணாநிதி தனது வாக்கு வங்கியை வெகுவாக இழந்து விட்டார். அதனால் ஒவ்வொரு தேர்தலிலும் தனது கட்சியை பல கட்சிகளுடன் கூட்டணியாக இனத்து மாட்டுமே அவரால் தேர்தல்களில் போட்டிபோட முடிகிறது. காலப்போக்கில் இந்த தந்திரத்தையும் எம்.ஜி.ஆர ,ஜெயலலிதா இருவரும் பின்படர் தொடங்கி விட்டார்கள். ஆனாலும் கருணாநிதி தலைமையிலான தி.மு.க.விற்கும், ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க.விற்கும் வாக்கு வங்கியில் ஒரு பெரும் வேறுபாடு இருந்து கொண்டே உள்ளது. நாளுக்கு நாள் சுருங்கிவரும் வாக்கு வங்கியை கொண்ட கருணாநிதி அதை வைத்துக்கொண்டு ஆட்சிக்கு கூட்டனஈ மூலமோ, எதிர் தரப்பு வாக்குகள் பிரிந்ததை பயன்படுத்தியோ ஆட்சிக்கு வந்துவிடுகிறார். ஜானகியும், ஜெயலலிதாவும் வாக்குகளை பிரித்துக்கொண்டபோது ஒருமுறை இது நடந்தது. பிறகு விஜயகாந்த், கிருஷ்ணசாமி, கார்த்திக் என்று சிலராலும் அவ்வப்போது இது நடந்தது. எப்படி இருந்தாலும் குறைவான வாக்கு வங்கிகளையே கொண்ட கருணாநிதி ஆட்சிக்கு வந்த உடன் ப்ரோவித பயத்திலேயே ஆட்சிக்கட்டிலில் அமர்கிறார். அந்த இடத்தில்தான் அவரது காவல்துறை பற்றிய அணுகுமுறை தீர்மானிக்கப்படுகிறது.
பலவீனமான வாக்கு வங்கி கொண்ட கருணாநிதி காவல்துறையை முழுமையாக சார்ந்து நிற்க வேண்டி இருக்கிறது. ஆனால் காவல்துறை அதிகாரிகள் மீது கருணாநிதிக்கு நம்பிக்கை இருப்பதில்லை. அதனால் ஒவ்வொரு செயல்களை பற்றியும் காவல்துறை உயர் அதிகாரிகளிடம் கேட்டுவிட்டு, அதை நம்பாமல் மேலும் நான்கு பேரிடம் கேட்கிறார் என்று ஒரு முறை ஒரு உளவுத்துறை உயர் அதிகாரி சொன்னது நினைவுக்கு வருகிறது.இந்த பலவீனத்தை பயன்படுத்தி அவருக்கு ஏற்றார்போல பொய்கூறும் உயர் அதிகாரிகளும் இருக்கிறார்கள். அவர்களுக்கு ஏக தடபுடல்தான். இத்தகைய சூழலில்தான் கருணாநிதி காவல்துறை அதிகாரிகளை முழுமையாக சார்ந்து இருக்கிறார். இது தவிர தன்னுடைய வாக்கு வங்கி பலவீனத்தால் அவர் எப்போதுமே தனது கட்சிக்காரகளை சார்ந்து நிற்கிறார். கட்சிக்காரர்கள் ஒவ்வொரு காவல் நிலையத்திலும் தங்களது தர்பாரை நடத்த தவறுவது இல்லை. இதனால் கட்சிக்காரகளின் ஊதுகுழல்களாக காவல் நிலையங்கள் ஆகிவிடுகின்றன.
அதனாலேயே அப்பாவி மக்களுக்கு எதிராக காவல் நிலையங்கள் நடக்கின்றன. காவல் அத்துமீறல்கள் அதிகமாகின்றன. காவல் சித்திரவதைகள் கூடுகின்றன. காவல் நிலைய சாவுகளும் அடிக்கடி நிகழ்கின்றன. உச்சநீதிமன்ற வழிகாட்டல்களையும், தேசிய மனித உரிமை ஆணையத்தின் ஆலோசனைகளையும் ஒவ்வொரு காவல் நிலையத்திலும் ஒட்டி வைத்ததாலும் அதை எந்த காவல் அதிகாரியும் பின்பற்றுவது இல்லை. கட்சிக்காரர்கள் கூறுவதை ஒட்டியே புகார்களும், கைதுகளும் செய்யப்படுகின்றன. அப்பாவிகள் தொடர்ந்து பாதிக்கப்படுகிறார்கள்.
கட்சிக்காரகளின் ஆதிக்கம் போதாது என்று மூன்று ஆண்டுகளாக முதல்வரின் குடும்பத்தை சேர்ந்த ஒவ்வொருவரின் ஆதிக்கமும் அதிகமாகி வருகிறது.ஒரு முதலமைச்சருக்கு பதில் பத்து முதலமைச்சர்கள் இங்கே தலையிட்டு காவல்துறை அதிகாரிகளுக்கு கட்டளைகளை பிறப்பிக்கிறார்கள். முதல்வர் குடும்ப ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகமாகத்தொடங்கியது. ஆட்சியில் உள்ளவர்களிடம் நற்பெயர் பெற்றால்தான் தான் விரும்பிய இடத்தில் பணி செய்ய முடியும் என்று காவல் அதிகாரிகளும் நினைக்கிறார்கள். அதனால் முதல்வர் குடும்பமே அனைத்து காவல் நிலையங்களிலும் கோலோச்சுகிறது. சட்டமும், ஒழுங்கும் அதனால்தான் முழுமையாக கெடுகிறது. அதன்விளைவாக காவல்துறை அதிகாரிகள் தாங்கள் வைத்ததே சட்டம் என்ற நிலைக்குய் சென்று விடுகிறார்கள். தங்களுக்கு தெரிந்த ஒரே மொழியான வன்முறையையே கைதிகளிடம் காட்டுகிறார்கள் அதுவே காவல்நிலைய மரணங்களை அதிகரிக்கவைக்கிறது.
இது போதாதென்று சமீப காலமாக அதிகரித்துவருவது போலி மோதல் சாவுகள்.
துப்பாக்கி சண்டை நடந்ததாக படம் காட்டி காவல்துறை அதிகாரிகள் தாங்கள் விரும்புகிரவர்களைஎல்லாம் தீர்த்து கட்டிவிடுகிறார்கள். அதிலும் முதல்வர் குடும்பத்திலிருந்து சில நேரங்களில் பட்டியல் கொடுக்கப்படுகிறது. மோதல் சாவுகள் எப்ப்தேல்லாம் போலி மோதல் சாவுகள் என்று சந்தேகிக்கப்படுகிறதோ, அல்லது நிரூபனமாகிறதோ, அல்லது நம்பப்படுகிறதோ அப்பதேல்லாம் அவை சட்டவிரோத காவல் சாவுகளாக ஆகிவிடுகின்றன. அதாவது காவல் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட நபர்களை கையில் பிடித்து வைத்துக்கொண்டு அதை சட்டப்படி பதிவு செய்யாமலேயே போலி ம ஓதல் சாவுகளில் அவர்களை கொன்றுவிடுகிறார்கள். அதனால் அவையும் காவலில் கொள்ளப்பட்டதாகவே எடுக்கப்படவேண்டும். அவை சட்டப்படி காவலை பதிவு செய்யாத நபர்களை காவலில் கொள்ளும் முறை. அதிவும் தமிழ்நாட்டில் அதிகப்பட்டுவிட்டது.
ஆகவே நிர்வாகத்தில் அமர்ந்திருப்பவரின் அரசியல் உறுதி சம்பந்தப்பட்டதாக இந்த காவல்துறையின் அத்துமீறல்கள் புரியப்படவேண்டும். அதானால் பலவீனமான வாக்கு வங்கிகளை கொண்ட ஒரு நபர் ஏதோ ஒரு முறையில் ஆட்சிக்கு வந்துவிட்டால் அவரது போக்கு காவல்துறையை சார்ந்த ஒன்றாக மாறிவிடுகிறது. அதனாலேயே கருணாநிதியின் ஆட்சி காவல்துறையின் ஆட்சி என்று வர்ணிக்கப்படுகிறது. சென்ற முறைக்கு முன்முறை கருணாநிதி ஆட்சிக்கு வந்த போது இதையே தேசிய மனித உரிமை ஆணையத்தின் அன்றைய தலைவராக இருந்த முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதியரசர் ரெங்கநாத் மிஸ்ரா கருணாநிதி ஆட்சி பாற்றி குறிப்பிட்டார்.

Friday, January 28, 2011

கார்பரேட் நலனை கழட்டிவிடமுடியுமா ராகுலால்?

மகாராஷ்டிரா சென்று இன்று புரட்சிகரமாக பேசுகிறாரே ராகுல், அவரால் அனைத்து ஊழலுக்கும் காரணமான கார்பொரேட் நலனை கழட்டிவிட முடியுமா? என்னை கலப்பட கும்பலை விடக்கூடாது என்று அவுரங்கபாத்தில் இப்போது கூறிவரும் ராகுலுக்கு, அதன்பின்னே நிற்கும் காங்கிரசு சக்தி தெரியாதா? கருப்பு பணம் பற்றி கவலைப்படும் ராகுல், இந்திய அரசு அதை எதிர்த்து நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறும் ராகுல், மன்மோகனையும், பிரணாப் முகர்ஜியையும் குறை கூறுகிறாரா? அல்லது தனது தாயார் சோனியாவையே குறைகூறுகிரரா? அரசியல் கட்சிகளில் ஜனநாயகம் யில்லை என்று கூறும் ராகுல் நூறாண்டு காங்கிரசை தானே முதலில் குற்றம் சொல்லவேண்டும்? காங்கிரஸ் கட்சி தலைமை தங்கள் குடும்பத்திலே தங்கி இருப்பது ஜனநாயகம் என்கிறாரா?
நாட்டில் உற்பத்தியாகும் செல்வம் எல்லாம் ஏழைகளுக்கானது என்று கூறும் ராகுல், அதை அந்த ஏழைகள்தான் கல்வி மூலம், வேலை மூலம், உணவு மூலமனுபவிக்க வேண்டும் என்று கூறும் ராகுல், தனியார் கைகளில் கல்வியும், வேலையும், உணவும் போய்விட்டதை உணர்ந்துள்ளாரா? அதற்கு தங்கள் கட்சியின் கொள்கைகள்தான் காரணம் என்பதை புரிந்து கொண்டுள்ளாரா? எதற்க்காக இளைஞர்களை அரசியலுக்கு அழைக்கிறார்? அவர்களையும் ஊழல் படுத்தவா? அல்லது தனியார், கார்பரேட் கொள்ளைகளை நடத்தும் கொள்கைகளை குழிதோண்டி புதைக்கவா? தெளிவா வெளிய வாங்க ராகுல் அவர்களே. ஆறு மாதத்திற்குள் ஒவ்வொரு ஊழலுக்கும் நாவடிக்கை கோரும் ராகுல் அவர்களே, முதலில் காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஊழலுக்கும், ஆதர்ஷா ஊழலுக்கும், ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கும், காரணமான காங்கிரஸ் காரர்கள் மீது நடவடிக்கை எடுத்து விட்டு பேசுங்கள் ஐயா.

Friday, January 21, 2011

கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவி பாடும், ராஜா வீட்டு திண்ணை நாயும் தொடர்ந்து கொலைக்கும்.

ஆ.ராஜாவிற்கு ஆதரவாக ஸ்பெக்ட்ரம் ஊழல் ஒன்றுமே இல்லை என்று சொல்வதற்காக சென்ற வருடம் கடைசியில் ஒரு கூட்டத்தை சென்னை தியாகராயநகரில் போட்டிருந்தார்கள். அதில் தமிழ் ஊடக பேரவை என்று பெயர் போட்டு அந்த அமைப்பின் தலைவர் அனுமதி பெறாமலேயே போட்டிருந்தார்கள். அது வேறு விஷயம். அதில் ஊடகத்தில் இல்லாத சிலர், அதாவது ஊடகவியலாளர்களுக்கு இருக்கும் கடினங்களை உணராத சிலர்கூட, ஊடகம் பற்றி பேசினார்கள். அதுவும் வேறு விஷயம். ஏ.எஸ்.பன்னீர்செல்வத்தை தவிர, ஒரு காலத்தில் வெரிதாஸ் வானொலியில் இருந்ததாலும் கஸ்பரும் ஊடகவியலாலராக பேசினார். அதுவும் பரவாயில்லை. ஆனால் இன்று கலைஞர் டி.வீ.யிலும், அன்று சன் டி.வீ.யிலும் ஒரு நிகழ்ச்சியில் தொடர்ந்து உட்கார்ந்த காரணத்தாலேயே ஊடகம் பற்றி தெரியும் என்று நினைத்துக்கொண்டு ரமேஷ் பிரபாவும் பேசினார். பேசிவிட்டு போகட்டும். பெற்ற லாபத்திற்கு ஒரு பெரம்பலூர்காரர்,இன்னொரு பெரம்பலுர்காறரை ஆதரித்து பேசுவது வியப்பில்லை.
அதற்காக ஊடகவியலாளர்களின் பணியை பற்றி புரியாமல் குறை சொல்ல அவருக்கு உரிமையில்லை என்பது அவருக்கு புரியவில்லை. அதுவும் ஒரு பெண் பத்திரிகையாளரை பற்றி இழிவாக பேச ரமேஷ் பிரபாவிற்கு மட்டுமல்ல எந்த கொம்பனுக்கும் உரிமையில்லை. டேய், இது பெரியார் பிறந்த மண்டா, வாயை மூடு என்று யாரும் கேட்கவில்லை என்பதால் அப்படி அந்த உருவம் அன்று பேசியது. ராஜா விமானநிலையம் வரும்போது, ஒரு பெண் ஊடகவியலாளர் மேலே விழுந்து கேள்வி கேட்டார் என்று திரித்து, அந்த மறித்து கேட்ட நிகழ்வை, எல்லோரும் காட்சி ஊடகத்தில் கண்ட நிகழ்வை, கொச்சைபடுத்தி அந்த உருவம் அன்று பேசியது. அதற்குப்பின் அந்த ஆளை ஊடவியலாளர்கள் கண்டித்துள்ளனர். நானும் காட்சி ஊடகத்தில் எனது நிகழ்ச்சியில் கண்டித்து பேசினேன். நான் பணி செய்த வாரஇதழில் இந்த ரமேஷ் பிரபாவின் கண்ணியக்குறைவான பேச்சை கண்டித்து எழுதினேன்.அதற்குபிறகு அதேபாணியில் பெரியார்திடல் கூட்டத்தில் பேசியிருக்கிறார்.

இப்போது அண்ணாசாலையில் உள்ள தேவநேயபாவாணர் இல்லத்தில் இன்று[21st jan] நடந்த ராஜா அதரவு கூட்டத்தில் மீண்டும் இந்த ஆளு அதேபோல இன்னும் மோசமாக பேசியிருக்கிறான். அதாவது விமானநிலையத்தில் கூச்சமில்லாமல் ஒரு பெண் ஊடகவியலாளர் வந்து ராஜா மீது விழ்குந்தார் என்று இந்த ஆளு பேசியிருக்கிறான். இவன் பெர்டம்பளுரில் ராஜா மூலமாக தனது சொந்த நலனுக்கு பல நன்மைகள் பெற்றவன் என்பதனால், அதற்காக சீ.பி.ஐ. விசாரணை இன்னும் இவனுக்கு வரவில்லை என்பதனால், இப்படி கண்ட இடத்தில் கண்டபடி காநியக்குரைவாக பெண்களை பற்றியும், ஊடகவியலாளர்களின் பொறுப்பு மற்றும் தொழில் பற்றியும் பெசுகிராப்ன் என்றால் தமிழ்நாட்டில் நிலவம் கேவலமான ஜனநாயகமற்ற சூழலும், ஆள்வோரும் அடாவடித்தனமும் இவனுக்கு ஊக்கம் கொடுத்துள்ளது. இவன் ஒரு ஆளே இல்லை என்தால் இவன் பாற்றி பேசி பெரிய ஆளாக ஆக்கக்கொடாது என்பது உண்மைதான். அன்று விமானநிலையத்தில் நடந்தது பற்றிய உண்மை பலரும் காட்சி ஊடகத்தில் கண்டதுதான். ராஜாவை கேள்வி கேட்க முற்பட்ட பெண் நிருபரை ராஜாவின் அடியாட்களாக நினைத்துக்கொண்டு செயல்பட்ட செயலாளர்கள் தள்ளிவிடவும், மிரட்டவும் செய்தார்கள் என்பது இந்த முட்டாளுக்கு தெரியுமா அல்லது புரியுமா?
இப்படிப்பட்ட இழிவான பேச்சாளர்களை ராஜா வீட்டு திண்ணை நாயும் தொடர்ந்து கொலைக்கும் என்று சொல்வதை தவிர வேறு என்ன சொல்ல?

Wednesday, January 19, 2011

நீதிதேவதை தேர்விலேயே முறைகேடா?

மாவட்ட நீதியரசர் தேர்வு என்பது ஒரு முக்கியமான கட்டமாக நீதித்துறையிலே இருந்துவருகிறது. சமீபத்தில் நடந்த அத்தகைய தேர்வில் செய்யப்ப்பட்ட குளறுபடிகள் இப்போது அம்பலத்திற்கு வந்துள்ளன. வழக்கமாக மாவட்ட நீதியரசர்களுக்கான தேர்வு என்ற எழுத்து தேர்வு ஒன்று நடக்கும். அதில் பல வழக்கறிஞர்கள் கலந்துகொண்டு தேர்வு எழுவார்கள். ஏழு ஆண்டுகள் வழக்கறிஞராக தொழில் நடத்தியவர்கள் மட்டுமே இத்தகைய தேர்வில் எழுத முடியும். அப்படி இந்த முறையும் 2010 ஆண்டு அக்டோபர் மாதம் எழுத்து தேர்வு நடந்தது. அந்த தேர்வுக்கு கூட கேள்வித்தாள்கள் நான்கு வகைகளில் கொடுக்கப்பட்டதாகவும், அதில் மூன்று வகைகளிலிருந்து கேள்விகள் வந்துவிடும் என்றும் வதந்தி பரவியது. சிலர் அந்த கேள்வித்தாள் கசிந்ததாலேயே அதிக மதிப்பெண்கள் பெற்றார்கள் என்று சொள்ளப்படுவதைஎல்லாம் நாம் வதந்திகள் என்பதாக என்னலாம். ஆனால் அதற்கு பிறகு நடந்த கதைகள் ஏற்கத்தக்கதாய் இல்லை.
மாவட்ட நீதியரசர் தேர்வு என்பதை, தமிழ்நாடு பொது தேர்வு ஆணையம் மூலமாகத்தான் எடுக்கவேண்டும் என்று கூறினார்கள். நாம் உடனடியாக அவர்களிடம் சென்று விசாரித்தோம். அதற்கு மொத்தத்தில் தேவையான மாவட்ட நீதியரசர்கள் அதிகம் என்றும்., அதில் பத்து விழுக்காடு எண்ணிக்கையைத்தான் உயர்நீதிமன்றம் மூலம் எடுக்கிறார்கள் என்றும், மீதியை தேர்வாணையம் தான் தேர்வு செய்யும் என்றும் விளக்கம் அளித்தார்கள். இப்போது பதினேழு நீதியரசர்களை தேர்வு செய்ததில்தான் சிக்கல் எழுந்துள்ளது. அது மொத்தத்தில் பத்து விழுக்காடுதான் என்பது ஒரு செய்தி. அந்த பத்து விழுக்காடு தேவையை உயர்நீதிமன்றம் செய்கிறது என்பதுதான் அதில் உள்ள விவரம். அப்படி உயர்நீதிமன்றம் செய்யும்போதெல்லாம் தான் தேர்ந்தெடுத்த நபர்கள் பற்றிய விவரங்களை உயர்நீதிமன்ற இணைய தளத்தில் வெளியிடுவார்கள். அப்படி இந்த முறை வெளியிட்டார்களா? என்பதே கேள்வியாக நிற்கிறது.
எழுத்து தேர்வில் இந்தமுறை எழுதியவர்கள் எண்ணிக்கை 2524 பேர். அதில் 800 பேர் சுழி மதிப்பெண் எடுத்திருந்தார்கள். தேர்வு நடந்த அக்டோபர் மாதமே அதில் 103 பேர்தான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர்களது மதிப்பெண்களும் வெளியாகி விட்டது. அதன்பிறகு அந்த தேர்வான நபர்களுக்கு, வாய் மொழி தேர்வு நடந்தது. அது சென்ற ஆண்டின் நவம்பர் பதினொன்றாம் நாள் தொடங்கி பதின்மூன்றாம் நாள் வரை நடந்தது. வழக்கப்படி பதின்மூன்றாம் நாள் இரவில் அந்த வாய் மொழி தேர்வின் முடிவுகளை அதாவது எந்த பதினேழு பேர் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் என்பதை இணையதளத்தில் உயர்நீதிமன்றம் போடவேண்டும். அதுதான் வழமை. அந்த வழக்கமான செயல் இங்கே செய்யப்படவில்லை.
ஆனால் அதேநேரம் திடீரென தமிழ்நாடு அரசின் ஆணையாக யார், யார் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் என்று ஜி.ஒ. போட்டு, இந்த ஆண்டின் பதினோராவது ஆணையாக அது பதிவு செய்யப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றம் நடத்திய ஒரு தேர்வில் அதுவே தனது இனைய தளத்தில் வெளியிடாத ஒரு தேர்வு முடிவை எப்படி அரசாங்கத்தின் ஆணையாக வெளியிட முடியும்? அதுவும் அந்த அரசாணைக்கு தலைநிலைய செயலாளர் மாலதி கையெழுத்து போட்டிருக்கிறார்கள். அதாவது முதலமைச்சரின் ஒப்புதலுடன் மட்டுமே இப்படி ஆணையை வெளியிட முடியும். இந்த இடத்தில் உயர்நீதிமன்றம் தனது இணைய தளத்தில் போடாத ஒரு தேர்வு முடிவை எப்படி முதல்வர் தங்களது அரசாணையில் வெளியிடவைத்தார் என்பதிலும், பெரும் சந்தேகங்கள் கிளப்பட்டுள்ளன. உயர்நீதிமன்ற ஏன் வெளிப்படைத்தன்மையுடன் நடந்து கொள்ளவில்லை? ஒவ்வொரு நீதியரசர் பொறுப்புக்கும் எண்பத்தைந்து லட்சம் என்று பேசப்படும் செய்தியை நாம் நம்பாமல் இருக்கலாம். ஆனால் அதை மக்கள் நம்புவார்களா? இப்போது சக்திவேல், காந்தகுமார், நந்தகுமார், பாண்டியராஜன், நசீம பானு, அன்புராஜ், சுதாதேவி, பூர்ணிமா, தனபால், குமரப்பன், ஜோதிராமன், சுமதி, முருகன், சுரேஷ் விஸ்வநாத், ரஹ்மான், ராஜசேகர், இளவழகன் ஆகிய பதினேழு பேர்களை தமிழக அரசின் ஆணைய உத்தராவின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்று அறிவுத்துள்ளார்கள் இது எப்படி வெளிப்படைத்தன்மை. கொண்டது என்பதே நமது கேள்வி

Tuesday, January 18, 2011

ஜி.ஆரை குத்தவா, தனக்குதானே குத்தவா? 5000 விவசாயிகள் தற்கொலை

தமிழ்நாட்டில் விவாசாயிகளின் தற்கொலைகள் பற்றிய புள்ளிவிவரம் பொங்கல் வாழ்த்து செய்தியில் சீ.பி.எம்.செயலாளர் ஜி.ராமகிரிஷ்ணனால் கொடுக்கப்பட்டது. அதில் 5000 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளார்கள் என்று குறிப்பிட்டுள்ளார். அதுவும் 2005 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரை உள்ள புள்ளிவிவரம் அது. அதுவும் சீ.பி.எம். கட்சி எடுத்த புள்ளி விவரம் அல்ல அது. தேசிய குற்ற பதிவு காப்பகம் கொடுத்துள்ள புள்ளிவிவரம். அதை எடுத்துகூரியிருப்பதுதான் ஜி.ஆர். ஆனால் அதுவே நமது முதல்வருக்கு அடிவயிற்றை கலக்கிவிட்டது. எதிர்க்ல்கட்சி கூட்டணியில் இருப்பதால்தான் ஜி.ஆர். இப்படி எழுதுகிறார் என்பதாகவெல்லாம் அங்கலாய்த்து இருக்கிறார். முரசொலி நாளேட்டில் சனவரி-பதினெட்டாம் நாள் இதற்கு பதில் சொல்வதாக எண்ணிக்கொண்டு, மன்னிக்க முடியாத பொய் என்று பெரிய அளவில் கட்டம் போட்டு எழுதியிருக்கிறார். பெயர் போடாமல் எழுதப்பட்ட அந்த கட்டுரைக்கு கலைஞர்தான் பொறுப்பு என்பது அனைவருக்கும் தெரியும்.
ஜி.ஆர் . மேற்கோள் காட்டுவதற்கு முன்பே தி.மு.க. தலைமைக்கு அந்த தேசிய குற்றபதிவு காப்பகம் கொடுத்த புள்ளிவிவரம் ஒரு சவாலாக மாறிவிட்டது. அதனால் தற்கொலை என்றால் காவல்துறையின் பதிவேட்டில் பதிவாகி இருத்தல் வேண்டும் என்பதை அடிப்படையாக கொண்டு தன்னால் நியமனம் செய்யப்ப்பட்ட காவல்துறையின் தலைவரான டி.ஜி.பி. லத்திகா சரணை கொண்டு ஒரு மறுப்பு அறிககையை கொடுக்க வைத்துள்ளார். அய்யோபாவம் லத்திகா சரணும் அரசியல் தெரியாத நிலையில் அந்த அரசியல் அறிககையை வெளியிட்டுள்ளார். அதை நாம் உட்பட யாருமே கவனிக்காமல் இருந்துவிட்டோம். ஆனால் அதை எடுத்து இப்போது ஜி.ஆருக்கு பதில் என்ற பெயரில் முரசொலியில் போட்டு அந்த லத்திகா சரண் அறிககையை எல்லோர் கவனத்துக்கும் கலைஞர் கொண்டுவந்துவிட்டார்.அதில் தேசிய குற்றபதிவு காப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் உள்ள தற்கொலைகளை பாற்றி ஆய்வு செய்துள்ளார். அதாவது ஐந்து ஆண்டுகளில் 5000 விவசாயிகள் தற்கொலை தமிழ்நாட்டில் நடக்கவில்லை என்று அதில் லத்திகாச்சரனும் கூறவில்லை; முதல்வரும் மறுக்கவில்லை. ஆனால் அது எதற்க்காக நடந்தது எனபதில்தான் இவர்ககளுக்கு வேறுபாடு இருப்பதாக காட்டிக்கொண்டுள்ளார்கள்.
"வறுமை காரணமாகத்தான் விவசாயிகள் தற்கொலை செய்துகொல்கொண்டார்கள் என்று சொல்லியிருப்பது உண்மையின் அடிப்படையிலோ, புள்ளி விவரங்களின் அடிப்படையிலோ தயாரிக்கப்பட்ட விவரம் அல்ல. தெரிவிக்கப்பட்டுள்ள எண்ணிக்கை தற்கொலைக்கு என்ன காரணம் என்பதை பற்றி விசாரிக்காமலேயே தரப்பட்டுள்ளது.எனவே விவசாயிகள் வறுமை காரணமாக தற்கொலை செய்துகொண்டார்கள் என்றும், வேளாண்மை நடவடிக்கையின் போது, ஏற்பட்ட விரக்தியில் தற்கொலை செய்துகொண்டார்கள் என்றும் கூறுவது முற்றிலும் தவறானது.திண்டுக்கல் மாவட்டத்தில் இடியாபட்டி என்று கிராமம் இல்லை, இடியாகொட்டை என்றுதான் கிராமம் உள்ளது." என்ற ஒரு அரசியல் கலப்புள்ள அறிககையை லத்திகா சரண் மூலம் தாங்கள் வெளியிட்டதை இப்போது முதல்வர் தம்பட்டம் அடித்துள்ளார். இது தனக்குத்தானே குத்திக்கொல்வதாக இல்லையா?

டி.ஆர்.பாலு பெயரைக்கேட்டாலே டில்லி நடுங்குகிறது

புதிய ஆண்டு தொடங்கியதும், பல ஊழல்களில் மத்திய காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியின் அரசியல் மரியாதை சர்ச்சைக்குள்ளானதும் சேர்ந்து தேவையை ஒட்டியும் அமைச்சரவையில் மாற்றங்கள் விவாதிக்கப்பட்டன. தலைமை அமைச்சர் பொறுப்பிலும், உள்துறையிலும், நிதிதுறையிலும், வெளிவிவகாரதுறையிலும், பாதுகாப்புதுறையிலும், எந்த மாற்றமும் கிடையாது என்றனர். ஆ.ராஜா, இருந்த அமைச்சர் பொறுப்பில் இன்று கபில்சிபல் அமர்ந்திருப்பதால் அந்த இலாக்கா பாற்றி விவாதம் எழவில்லை. மாறாக தி.மு.க.விற்கு இருந்த ஒரு மத்திய அமைச்சர் பொறுப்பை அதே கட்சியில் யாருக்கு கொடுப்பது என்ற சர்ச்சை எழுந்துள்ளது. சசி தரூர் இருந்த வெளிவிவகார துறை இணை அமைச்சர் பொறுப்பில் யாரை அமரவைப்பது என்பது காங்கிரஸ் கட்சியின் தலைவலி. மகாராஷ்ட்ராவின் முதல்வர் ஆதர்ஷ் வீட்டு வசதி வாரிய வீடுகள் ஊழலில் சிக்கி வெளியே போனபிறகு, அந்த இடத்தில் பிரதமரின் அலுவலக பொறுப்பில் இருந்த பிருதுவிராஜ் சவான் மகாராஷ்டிராவின் முதல்வர் பொறுப்பில் அமரவைக்கப்பட்ட
பிறகு, அந்த இடம் காலியானது. அதற்கும் காங்கிரசில் ஆள் பார்க்கும் படலம் ஆண்டின் புதிய படலமானது. கபில் சிபல் கையில் முக்கிய இரண்டு இலாக்காகலான ஐ.டி.யும், மனிதவள மேம்பாடுமா என்றும் கட்சிக்குள் கேட்கப்பட்டது.
வருகிற சட்டமன்ற தேர்தல்கள் நடைபெற இருக்கும் மாநிலங்களில் உத்தரபிரதேச மாநிலம் காங்கிரசின் குறிப்பாக சோனியா மற்றும் ராகுலின் நேரடி கவனத்தில் இருப்பதால், அந்த மாநிலத்தை சேர்ந்த வாக்கு வங்கிகளை குறிவைக்க ஒரு முஸ்லிம் மற்றும் ஒரு இந்து பிரமுகர்களுக்கு மத்திய அமைச்சர் பொறுப்புகளை கொடுத்து அவர்கள் மூலம் வாக்கு வங்கிகளை திடப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி நினைக்கிறது. அதற்காக தங்கள் கட்சி தலைமையின் விசுவாசிகளான மத்திய துணை அமைச்சர்கள் இருவருக்கு அதாவது உத்தரபிரதேசத்திலிருந்து வந்தவர்களுக்கு அப்படி பொறுப்புகளை கொடுக்கவும் திட்டமிட்டார்கள். அதில் சல்மான் குர்ஷித் பெயரும், ஸ்ரீ மகேஷ் ஜெய்ஸ்வால் பெயரும் அடிபட்டது. அதேபோல ஆந்திர மாநிலத்தில் ஜகன் மோகனின் விலகலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள காங்கிரஸ் அதை சரிசெய்ய, தெலுங்கானாவிற்கு ஒரு அமைச்சர், கடலோர ஆந்திராவிற்கு இன்னொரு அமைச்சர் என்று பிரித்து கொடுப்பது பற்றியும் விவாதிதித்தார்கள்.
தமிழ்நாட்டிலிருந்து ஒரு தி.மு.க. மத்திய அமைச்சரை தேர்வு செய்ய கட்சிக்குள் டி.ஆர்.பாலு, டி.கே.எஸ்.இளங்கோவன், மற்றும் ஏ.கே.எஸ்.விஜயன் என்ற பெயர்கள் அடிபட்டாலும், பிரதமர் டி.ஆர்.பாலுவை விரும்பவில்லை என்பது பகிரங்கமாக தெரிந்து விட்டது. ஏற்கனவே டி.ஆர்.பாலு இருந்த கப்பல் துறை மூலம் அவர் சேது சமுத்திர திட்டம் என்ற பெயரில் கடலில் போட்டேன் என்று கூறி முந்நூறு கோடியை முழுங்கியதை பிரதமர் அலுவலகம் மறக்கவில்லை. அதற்குமுன்பு சுற்று சூழல் அமைச்சரவை என்ற பெயரில் அடித்த காசுகளையும் கனகு பார்க்கிறார்கள். ஆகவே புதிய ஆள்களை டில்லிக்கு காட்டவேண்டிய நிலைமையில் கலைஞர் இருக்கிறார். அதனால்தான் சாதி பிரநித்தித்த்துவம் என்ற பெயரில் ஆ.ராஜாவிற்கு பதில் ஏ.எஸ்.கே. விஜயன் சரியாக இருக்கும் என்ற பார்வை கருணாநிதி கருதுவதாக தெரிகிறது.

தமிழீழ அரசுக்கு அங்கீகாரம். /./ டில்லி அதிர்ச்சி

தென் சூடான் விடுதலை பெறுகிறது. அதன் விடுதலை நிகழ்வில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. தனிநாட்டிற்கான வாக்கதேப்பு முடிவடைந்தவுடன் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினை தென் சூடானுக்கு வருமாறு சூடான் மக்கள் விடுதலை இயக்கம்[ எஸ்.பி.எல்.எம்.] அழைத்துள்ளது. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விஸ்வநாதன் உருத்திரகுமாரன் அதுபற்றி கொடுத்த அறிக்கையில்," இது அரசாங்கத்திற்கான அங்கீகாரம் மட்டுமின்றி ஈழ விடுதலை போராட்டத்திற்கான அங்கீகாரமும் ஆகும் என்றார். விடுதலை பெற்ற தென் சூடான் மக்களின் மகிழ்ச்ச்சியை ஈழத்தமிழர்கள் தெளிவாக புரிந்துகொள்வதுடன் அதில் இணைந்துகொள்கிரார்கள் என்றார். இந்த உறவு புதிதல்ல. மே 2009 இல் பிலடல்பியா நகரில் நடந்த நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் நிகழ்வில் சூடான் மக்கள் விடுதலை இயக்க பிரதிநிதி கலந்துகொண்டார். தென் சூடானின் விடுதலை போராட்டத்திற்கும், தமிழீழ விடுதலை போராட்டத்திற்கும் உள்ள ஒற்றுமை பற்றியும், விடுதலை போராட்டங்கள் சந்திக்கும் சவால்கள் பற்றியும், ஈழத்தமிழ் மக்களுடனான தங்கள் திட வோற்றுமையுனர்வை குறிப்பிட்டு உரையாற்றினார்.வடக்கு சூடானிலிருந்து, தெற்கு சூடான் மக்கள் விடுதலை பெற போராட்டத்தை சூடான் மக்கள் விடுதலை இயக்கம் நடத்திவந்தது. சுதந்திர தென்சூடான் அரசை அமைக்கவுள்ளது.
ஒரு தனிநாடு உதயமாவதன் மூலம் தென் சூடான் மக்கள் நீண்டகாலமாக அனுபவித்த துன்பங்கள் தொலைந்துபோகும். அவர்களது போராட்டத்தின்போது சுமார் இருபது லட்சம் மக்கள் மடிந்திருக்கிறார்கள். பொதுமக்கள் மருத்துவ உதவியின்றியும், பட்டினியாலும், கூட்டாக படுகொலை செய்யப்பட்டும், இறந்துபோனார்கள். தென் சூடான் போலவே தமிழீழமும் விரைவில் விடுதலை பெரும் என்ற நம்பிக்கை பிறக்கிறது. 1977 நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின்போது, வட்டுக்கோட்டை தீர்மானத்திர்க்கமைய தமிழீழ தனியரசினை அமைப்போம் என்று வாக்கு கேட்ட கட்சிகள் ஈழத்தில் அறுதிபெரும்பான்மை வாக்குகளை பெற்றன. ஆயுதப்போராட்டம் ஸ்ரீ லங்காவில் ஆரம்பிப்பதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே, ஈழத்தமிழர்கள் தங்கள் நிலைப்பாட்டினை இவ்வாறு அமைதியாகவே வெளிப்படுத்தினார்கள்.புலம் பெயர்ந்த மக்கள் அண்மையில் பல்வேறு நாடுகளிலும் நடத்திய வாக்கெடுப்பின் மூலம் தமது தாயகத்தில் இறைமையுள்ள தனிநாடு ஒன்றை அமைப்பதற்கான தமது அரசியல் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளனர். 2009 இல் நடந்த இறுதிப்போரின்போது நடைபெற்ற தமிழின படுகொலை தமிழருக்கென தனிநாடு உருவாவது மட்டுமே அவர்கள் உயிருடன் வாழ்வதை உர்திசெய்யும் ஒரே தீர்வாகும் என்பதை தெளிவாக்கி நியாயப்படுத்தியுள்ளது. அடக்குமுறை அரசுகளான சூடானின் ஆட்சியாளருக்கும், இன்றைய ஸ்ரீ லங்காவின் ஆட்சியாளருக்கும் சீனாவே சர்வதேச பாதுகாவலார்க்க செயல்பட்டுவருகிறது. சூடானின் அரசதலைவர் பஷீர் இனப்படுகொலை குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள அதேவேளை, ஸ்ரீ லங்கா அரச தலைவர் ராஜபக்சே இனப்படுகொலை குற்றவாளியாக சில காலத்தில் அறிவிக்கப்படவுள்ளார். தென் சூடானிய மக்களுக்கும், அவர்களது சூடான் மக்கள் விடுதலை இயக்கத்திற்கும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கமும், தமிழீழ மக்களும் வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறேன் என்று உருத்திரகுமார் தெரிவித்துள்ளார்.

Saturday, January 15, 2011

தமிழன் என்றால் உழவன் என்றல்லோ பொருள்

தை மாதம் முதல் நாள். பொங்கல் திரு நாள். அறுவடை திருநாள். உழவுத்தமிழன் தான் குடும்பத்துடன் வயலில் வியர்வை சிந்தி, உழைத்து சேர்த்த நெல்மணிகளை அறுத்து குவித்து மகிழும் நாள். அதையே பொங்கலாக பொங்கி, குடும்பம், குடும்பமாக கரும்பு கட்டி கொண்டாடும் திருநாள். அதனால் அதுவே ஆண்டாண்டு காலமாக வழங்கப்படும் தமிழர் திருநாள். உழவுத்தொழில் தமிழனின் பழம் பெரும் தொழில். உழுது, விதைத்து, தண்ணீர் பாய்ச்சி, நாத்து நட்டு, வரப்பு கட்டி, களை பிடுங்கி, உரமிட்டு, அறுவடைக்கு காத்திருக்கும் உழவுத்தமிழனை தமிழகம் மரபு வழியில் சந்தித்து வந்தது. அதையே பசுமை புரட்சியின் கதாநாயகர்களும், விவசாயத்தை அறிந்திராத அரசியல்வாதிகளும், தமிழ்நாட்டின் இயற்கை விவசாயத்தை திட்டமிட்டு அழிக்க தலைப்பட்டனர்.வீரிய விதைகளை இறக்கிவிட்டு, மரபு விதைகளை விரைந்து அழிப்பதில் முன்னேறினர். அமெரிக்கா தாயாரிப்பான வீரிய விதைகளால் உருவாகும் பூச்சிகளை அழிக்க, பூச்சி மருந்துகளை அங்கிருந்தே இறக்குமதி செய்தனர். அதுபோன்ற பூச்சிமருந்து தயாரிப்புதான், போபாலில் நச்சு வாயுக்களை கக்கி மனிதர்களை அழித்தது. அதுவும் அமெரிக்கா பன்னாட்டு மூலதன நிறுவனம்தான். தவிர செயற்கை ரசாயன உரங்களை கொண்டுவந்து கொட்ட தொடங்கினர். இவையெல்லாமே பன்னாட்டு நிறுவங்களுக்கு வங்கத்தை கொடுத்தது.
நிலமற்ற உழவனோ, சிறு நில உழவனோ, நடுத்தர விவசாயியான உழவனோ, நசுக்கப்படும் நிலை கண்டு, ஆள்வோர் கவலை கொள்ளவில்லை. நிலங்களும் இப்போது பன்னாட்டு நிறுவனங்களுக்கு விலை போகின்ற நிலைமை. இயற்கை விவசாயம் மட்டுமே, மரபு வழி விதிகளும், உரங்களும், மட்டுமே விவசாயத்தை காப்பாற்றும் என்ற நிலைமை அதவே இயக்கமாக ஆகின்ற ஒரு சூழல். இத்தகைய சூழ்நிலையில் இந்த பொங்கல் வருகிறது. நமதி உழவர்களின் உழைப்பால் விளைந்த விளைபொருள்களை சந்தைக்கு எடுத்துச்செல்லும்போது, அமெரிக்காவின், ஐரோப்பாவின் மானியம் பெரும் விவசாயி உறவாக்கிய விலை பொருள்களை சந்தைஎன்கும் குவிக்க ஊக்குவிக்கும், ஒரு அரசு. அதற்காகவே உலக வர்த்தக அமைப்பு மூலம் செய்துகொள்ளும் ஒப்பந்தத்தில் இந்திய அரசு வெளிநாட்டார் பொருள்களை சந்தையில் இறக்குகிறது. இதுவே இந்திய விவசாயத்தை நசுக்க வெளிசக்திகள் செய்யும் சதியாக ஆகிறது. இத்தகைய சூழலில்தான் இந்த பொங்கலும் வருகிறது. உழவுத்தமிழன் கணக்குப்பார்க்கும் நாளாக இதை காணவேண்டும்.
பயிர் நிலங்கள் யார் கையில்? உழுபவன் கையில் இருக்கும் நிலங்கள் ஊருக்கே உணவை தரும். சோம்பேறிகள் கைகளில் இருக்கும் நிலங்கள் தரிசாகும். தரிசாக போடப்படும். பயிர் நிலங்கள் சோம்பேறிகள் கைகளில் குவிந்து கிடந்தால் உழைப்பவன் அதிலே கூலியாகிறான். உழவு தொழிலை ஈடுபாட்டுடன் செய்பவன் உழும் நிலத்தின் உரிமையாளனாக இருந்தால் மட்டுமே உழவுக்கும், தொழிலுக்கும் ஊக்கம் கிடைக்கும். சிலர் கைகளில் குவிந்து கிடக்கும் பயிர் நிலங்களை, உழுபவன் கைகளில் பெரும்போதே, உழவுத்தமிழர் வாழ்வு பெறுவான். உழவர் திருநாள், தமிழர் திருநாள் என்பது உண்மையானால் உழவர் விடுதலை மாத்திரமே தமிழர் விடுதலையை சாத்தியமாக்கும் என்ற உண்மையை உணரவேண்டும்.
பொங்குக பொங்கல். பொங்குக உண்மை. பொங்குக விடுதலை உணர்வு.

Monday, January 10, 2011

அவர் ஒன்று சொல்ல, நாம் ஒன்று நினைக்க....

தி.க. நடத்திய நாத்திக மாநாட்டில், பேரா.நாகநாதன் பேசினார். அதை முரசொலி ஏட்டில் ஜனவரி-பத்தாம் நாள் ஆறாம் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். கிறிஸ்து பிறப்பதற்கு 325 ஆண்டுகளுக்கு முன்பு, இந்திய துணைக்கண்டத்தின் வடமேற்கு பகுதியில் அலக்சாண்டர் படைஎடுத்தபோது, சமண அறிஞர்கள் அவரை புறக்கணிக்க, அதற்கான காரணம் கேட்ட அலக்சாண்டரிடம் அவர்கள், "மன்னர் அலக்சாண்டர் அவர்களே, ஒவ்வொரு மனிதனுக்கும் இந்த புவிப்பரப்பில் இருப்பதற்கு நாங்கள் நின்று கொடிருக்கின்ர இடமே போதுமானது. நீங்களும் எங்களை போன்று ஒரு மனிதர். இருப்பினும் நீங்கள் எப்போதுமே ஓய்வில்லாமல் சுற்றி சுழன்று கொண்டு இருக்கிறீர்கள்.எந்த பயனுமில்லை " என்று அவர் வெற்றி பெற்ற நிலங்கள் பற்றி கூறினார்களாம். அதுவேதான் நமக்கும் தோன்றுகிறது. கலைஞர் அவர்களே, நீங்கள் ஒரு மன்னர் போல ஆண்டுவருகிறீர்கள். நீங்கள் வாங்க குவித்த நிலங்கள், தமிழ்நாட்டில் மட்டுமின்றி, கர்நாடகாவிலும், கேரளாவிலும் மட்டுமின்றி, இலங்கை தீவிலும், மல்ய்சிய அருகிலும், மௌரீஷியாசிலும், ஏன் இருக்கின்றன. இதுதான் இப்போது மக்களது

Friday, January 7, 2011

பொய் சொன்னார் முதல்வர்?

பிரதமரை சந்தித்து விட்டு வந்த கருணாநிதியை சந்தித்த ஊடகத்தாரை அவர் எப்படி ஏமாற்றினார் என்பது ஒரு பெரிய கதை. ஆண்டின் மூன்றாம் நாள் காலையில் ஆளுநர் மாளிகையில் தலைமை அமைச்சர் மன்மோகன் சிங்கை சந்தித்து விட்டு வெளியே வந்த முதல்வர் கருணாநிதி, தான் முந்திய நாள் ஏன் பிரதமருடன் ஒப்புக்கொண்ட சந்திப்பை ரத்து செய்தார் என்ற கேள்விக்கு, தான் ஒரு கூட்டத்தில் இருந்ததாகவும், அதில் பேச்சாளர்கள் பட்டியல் அதிக நீளமாக இருந்ததாகவும் அதனால் தான் அங்கிருந்து பிரதமரை வரவேற்கவும் சரி, அவரை சந்தித்து பேசவும் சரி செல்லமுடியவில்லை என்று ஒரு முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயன்றுள்ளார். வைரமுத்துவின் ஆயிரம் பாடல் வெளியீட்டு விழாவில் கருணாநிதி பேசி முடிக்கும்போது ஆண்டின் இரண்டாம் நாள் இரவு ஏழரை மணி. விமான நிலையத்தில் பிரதமரை வரவேற்க முதல்வர் செல்ல வேண்டிய மரபுவழி பணி என்பது இரவு ஏழே முக்காலுக்கு. வைரமுத்து விழா நடந்த லீ மெரிடியன் ஓட்டலில் இருந்து விமான நிலையம் செல்ல முதல்வரின் வாகன வரிசைக்கு ஐந்து நிமிடம்தான் எடுக்கும். அதன்பிறகு பிரதமர் ஆளுநர் மாளிகைக்கு வந்தபிறகு முதல்வர் அவரை சந்திக்க ஏற்பாடு செய்யப்ப்பட்ட நேரம் எட்டே காலில் இருந்து எட்டே முக்கால் வரை. அந்த ஆளுநர் மாளிகைக்கும் லீ மெரிடியன் ஓட்டலில் இருந்து செல்ல ஐந்து நிமிடம் கூட எடுக்காது. ஆகவே கருணாநிதி திட்டமிட்டு இரண்டு சந்திப்புகளையும் தவிர்த்திருப்பது வெள்ளிடை மலையாக தெரிகிறது.ஆனாலும் தனது திடீர் முடிவால் கூட்டணியும் பாதிக்கும், ஆட்சியையும் பாதிக்கும் என்று அறிவுரை கூறிய மகனின் கருத்தை ஏற்று தனது முடிவை மறுபரிசீலனை செய்த கருணாநிதிதான் அடுத்த நாள் அதாவது ஆண்டின் மூன்றாம் நாள் பிரதமரை ஆளுநர் மாளிகையில் சந்தித்திருக்கிறார். அதை அப்படியே ஊடகத்தாரிடம் மறைக்க முயன்று தோற்றுப்போனார் என்பதுதான் அன்று நடந்த கூத்து. இரவு முழுவதும் தெருக்கூத்து நடக்கும் என்று சென்னை சங்கமம் பற்றி அறிவித்த மகளின் சொல்லை, அன்று இரவே ஒரு சிறிய தெருக்கூத்தை நடத்தி கான்பித்திவிட்டார் போலிருக்கிறது அவரது தந்தை.

பணியிடத்தில் பாலியல் வன்முறை!

பணியிடங்களில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு எதிரான ஒரு சட்ட முன்வடிவு நாடாளுமன்றத்தில் முன் வைக்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தில் சில விஷயங்கள் உரிய முறையில் எழுதப்படவில்லையெனவும் அவை மாற்றியமைக்கப்பட வேண்டுமெனவும் மேலும் சில விஷயங்கள் சேர்க்கப்பட வேண்டுமெனவும் பெண்கள் அமைப்பினர் கருதுகின்றனர். இல்லையெனில் இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்ட நோக்கமே நிறைவேறாமல் போய்விடும். இச்சட்டத்தின் 14வது பிரிவு தவறான, தீயநோக்கம் கொண்ட புகார் அளிக்கும் பெண்களைத் தண்டிப்பது பற்றிக் கூறுகிறது. இந்த நாட்டில், பாலியல் வன்கொடுமைக்கெதிராகப் புகார் செய்வதென்பதே அரிதினும் அரிது. அச்சத்தினாலும் சில தவறான கருத்துக்களினாலும் பாதிக்கப்படும் பெண்களில் மிகச்சிலர் தான் புகார் கொடுக்க முன்வருகின்றனர். சமூக யதார்த்தம் இவ்வாறிருக்கையில் பெண்களைப் பாதுகாப்பதற்கு என்று சொல்லி கொண்டுவரப்படும் இந்தச் சட்டத்தை பெண்களுக்கு எதிரானதாக இந்த 14வது பிரிவு ஆக்கிவிடுகிறது. மேலும் தவறான புகார் அளிப்பவரைத் தண்டிப்பதற்கு தான் வேறு சட்டம் ஏற்கனவே இருக்கிறதே. எனவே இப்பிரிவினை நீக்கிவிட வேண்டும். இந்தச் சட்டம், அமைப்பாக்கப்படாத பெண் தொழிலாளர்களைக் கவனத்தில் கொள்கிறது. ஆனால் வீட்டுப்பணிகள் செய்யும் பெண்கள் கவனத்தில் கொள்ளப்படவில்லை. வீட்டுப்பணி செய்யும் பெண்களுக்கு நேரும் பாலியல் கொடுமைகள் பற்றி ஷைனி அஹுஜா வழக்கு நன்றாக உணர்த்துகிறது. எனவே ‘பணியிடம்’ என்பதில் ‘வீடு’ என்பதும் ‘வசிப்பிடம்’ என்பதும் சேர்க்கப்பட வேண்டும். மாணவியர் மற்றும் நோயாளிகள் ஆகியோர் பாதிக்கப்பட்டால் அவர்களும் புகார் அளிக்கும் விதத்தில் ‘பணியிடம்’ என்பது வரையறை செய்யப்பட வேண்டும். இந்தச் சட்டத்தின் பிரிவு 15, இழப்பீடு பற்றிக் குறிப்பிடுகிறது. ஆனால் இழப்பீட்டை எப்படிப் பெறுவது என்பதைப் பற்றி எதுவுமே சொல்லப்படவில்லை. குற்றவாளிக்கு அதிகபட்சம் ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கலாம் என்று பிரிவு 25 கூறுகிறது. அபராதம் மட்டும் போதுமானதல்ல, சிறைத்தண்டனையும் விதிக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வருங்காலத்தில் நேரக்கூடிய பணியிழப்பு, பணிநிலை உயர்வு இழப்பு போன்றவற்றுக்கு நிவாரணம் அளிக்கும் சட்டப்பிரிவு இச்சட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும். இவ்வாறு மேலும் சேர்த்தல்களும் செழுமைப்படுத்தல்களும் இச்சட்டத்தில் தேவைப்படுகின்றன. நாட்டிலுள்ள அனைத்து பெண்கள் அமைப்புகளின் தலைவர்கள், பிரபலமான பெண் மருத்துவர்கள், வழக்குரைஞர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் ஆகியோரின் விவாதத்திற்கும் பரிசீலனைக்கும் சுற்றுக்கு விடப்பட்டு தேசிய அளவில் பெண்கள் ஆய்வு செய்து விவாதித்து அதன் மூலம் இந்தச் சட்ட முன்வடிவு உருவாக்கப்படுவது தான் முழுமையானதாகவும் முறையானதாகவும் இருக்கும். அதை விடுத்து, அரசுக்கு ஏன் இந்த அவசரம்? நோக்கமே நீர்த்துப் போய்விடுகிறதே!

இலங்கையை,

முன்னர் தென்ஆப்ரிக்கா எவ்வாறு நிறவெறி நாடாக இருந்ததோ அதேபோல, இப்போது இலங்கை சிங்களபௌத்த இனவெறி நாடாக இருக்கிறது. கடந்த ஆண்டு முடிவடைந்த உள்நாட்டு போரில் இலங்கை அரசு பல்வேறு போர்க் குற்றங்களையும், மனித குலத்திற்கு எதிரான குற்றங்களையும் செய்துள்ளதாகவும் அவற்றை சர்வதேச நீதிமன்றம் விசாரணை நடத்தவேண்டும் என்றும் கோரிக்கைகள் உலகம் முழுக்க வலுத்து வருகின்றன. அதனால் கிரிக்கெட் போட்டிகள் ஏற்பாட்டுக் குழுவான, ஐ.சி.சியும், பி.சி.சி.ஐயும் நடத்துகின்ற கிரிக்கெட் போட்டிகளில் இலங்கை கிரிக்கெட் அணிக்கு வாய்ப்பளிக்கக்கூடாது. மேலும், 20/20யில் இணைந்துள்ள கிரிக்கெட் அணிகள் இலங்கை ஆட்டக்காரர்களையும் அதில் சேர்த்து கொள்ளக்கூடாது. தென்ஆப்ரிக்க வெள்ளையர் அரசு நிறவெறிக் கொள்கையைக் கடைபிடித்து அந்நாட்டின் பூர்வீக குடிகளான, கருப்பின மக்களை ஒடுக்கியதுபோல, இப்போது இலங்கை அரசு ஈழத்தமிழர்களை ஒடுக்கி வருகிறது. 30 ஆண்டுகாலமாக நடந்து வந்த போரில், சிங்கள அரசுப்படைகளால் 1 லட்சம் ஈழத்தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 2009ம் ஆண்டு மே மாதம் மட்டுமே 30 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டனர். அந்தப் போருக்கு பிறகு, 3 லட்சம் மக்கள் உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்தோராக முள்வேலி முகாம்களுக்குள் அடைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் மறு குடியமர்த்தல் இன்னும் முழுமையாக நடைபெறவில்லை. மேலும், 14 ஆயிரம் இளைஞர்கள் புலிகள் இயக்கத்தோடு தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில், சிங்கள அரசால் சிறை வைக்கப்பட்டுள்ளனர். பல ஆயிரம் இளைஞர்களைப் பற்றி எந்தத் தகவலுமில்லை. 2009ம் ஆண்டு நடந்த போர்க் குற்றங்கள் பற்றியும் இப்போது சிங்கள அரசின் அடக்குமுறை நடவடிக்கைகள் பற்றியும் விசாரணை நடத்தப்பட வேண்டுமென உலக சமூகம் கோரிக்கை விடுத்து வருகிறது. ஐரோப்பிய ஒன்றியம், இலங்கையில் இருந்து இறக்குமதியாகும் ஆயத்த ஆடைகளுக்கு ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகையை நிறுத்திவிட்டது. இந்தச் சூழலில் கிரிக்கெட் அமைப்புகள் இந்தப் புத்தாண்டில் இலங்கை கிரிக்கெட் அணியைப் புறக்கணிக்க வேண்டும் என்று தமிழின ஆர்வலர்கள் பரப்புரை தொடங்கி விட்டனர்.

தெருமுனை கூட்டங்கள் போடுவோம்

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள சிறப்பு பயங்கர சட்டத்தின் அடிப்படையில், ராய்பூர் நீதிமன்றம் டாக்டர். பினாயக் சென்னிற்கு, ராஜதுரோக குற்றச்சாட்டு வழக்கில் ஆயுள்தண்டனை வழங்கியதை கண்டித்தும், பினாயக்கை விடுதலை செய்யகோரியும், சென்னை மக்கள் சிவில் உரிமை கழகம் தியாகராயநகரில் கூட்டம் நடத்தியது. அதில் வேலூர் கிறித்துவ மருத்துவ கல்லூரியைச் சேர்ந்த மருத்துவர்களும், மருத்துக ஆசிரியர்களும், மாணவர்களும் கலந்துகொண்டது சிறப்பு நிகழ்ச்சி. பினாயக்கின் ஆசிரியரான டாக்டர்.சகாரியா பேசியது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. ஒரு மருத்துவர் எப்படி மனித உரிமை நடவடிக்கைகளில் ஈடுபட முடியும் என்று பலரும் ஆச்சரியப்படலாம்; அதுவும் மனித உரிமை மீறல்களை எதிர்த்து களப்பணிக்கு செல்லலாம் என்று கேட்பார்கள் என்று தொடங்கினார். மருத்துவ சேவையில்கூட அடிப்படையான கேள்விகளை பினாயக் கேட்டுக்கொண்டே இருப்பார். அதுதான் அடிப்படையான அறிவாளியின் அணுகுமுறை. அதனால்தான் பினாயக் சென்னிற்கு, 3000 பேர் விண்ணப்பிக்கும்போது 15 பேருக்கே கிடைக்கும் எம்.டி.படிக்கும் வாய்ப்பு டில்லியில் கிடைத்தது. இவ்வாறு தனது மாணவன் பினாயக்கை ஆசிரியர் புகழ்ந்தார். எடைகுறைவு, சத்துக்குறைவு என்று மனிதர்கள் பாதிக்கப்படுவது, ஒரு ரசாயன பிரச்சனை அல்ல; அதன் தொடர்பு மருத்துவ விசயமல்ல; ஆனால் சமூக விஷயம் என்றார் டாக்டர்.சகாரியா. அது உணவுப் பாதுகாப்பு சம்பந்தப்பட்டது என்று ஒரு பெரிய அரசியல் பொருளாதாரத்தையே அப்போது சுட்டிக்காட்டிவிட்டார். தேவையான சத்துணவு மக்களுக்கு கிடைப்பதை ஒட்டியே சத்தீஸ்கரில் வறுமைக்கான வாய்ப்புகள் இருக்கின்றன. இது முழுமையாக அரசாங்க நிர்வாகத்தின் செயல்பாடு பற்றிய பிரச்சனை. அதனால்தான் ஒரு மனித உரிமை ஆர்வலர் இதில் அதிக கவலையை காட்டினார்; அதுவே அதிக அளவில் செழிப்பான மூலப்பொருள்கள் கொண்ட ஒரு மாநிலமான சத்தீஸ்கரில் அதிகமான அளவில் ஏழ்மை இருப்பதால் இயல்பாகவே ஒரு மனித உரிமை ஆர்வலருக்கு அங்குள்ள மனித உரிமை பிரச்சனைகளில் ஈடுபட மட்டும்தான் உணர்வு வரும் என்று பினாயக்கின் ஆசிரியரான சகாரியா கூறினார். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் பினாயக்கை பிணையெடுக்க வேண்டும் என்றும், அவர் மீதான குற்றச்சாட்டு நீக்கப்படவேண்டும் என்றும், அதற்கான உயர்மட்ட விரைவு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் நாம் குரல் கொடுக்கவேண்டும் என்றார். தான் பினாயக் விடுதலைக்காக ஒரு நிதியை சட்ட ரீதியாக தொடங்கியிருப்பதாக கூறினார். அமர்வு நீதிமன்ற விசாரணைக்காக மட்டுமே, தாங்கள் திரட்டிய நிதியில் ரூ.23 லட்சம் செலவழிந்ததாகவும், மீண்டும் அதற்கான அதிக திரட்டுதல் செய்யப்படவேண்டும் என்றும் கூறினார். பொதுமக்கள் அபிப்ராயம் ஊடகங்கள் மூலமாக உருவாக்கப்பட வேண்டும் என்றும், அதற்காக ஊடகங்களுக்கு தொடர்ந்து கடிதங்கள் எழுதுவதை பழக்கமாக கொள்ளவேண்டும் என்றும் அந்த மருத்துவர் கூறினார். பினாயக் சென்னின் மனைவி இலினா, ஆங்கில காட்சி ஊடகத்தில் பேசும்போது, தங்கள் குடும்பம் வேதனைப்படுகிறது என்றாலும், இந்த நாடு எந்த அளவிற்கு வேதனைகளை கொண்டுள்ளது என்பதுதான் முக்கியம் என்று கூறியதை மருத்துவர் சகாரியா சுட்டிக்காட்டினார். தான் சிறையில் இருந்தாலும், தனக்காக குரல் கொடுக்க வெளியே ஆட்கள் இருக்கிறது என்றும், ஆனால் சிறையில் இருக்கும் பல அப்பாவிகளுக்கு அதுபோல இல்லையே என்று பினாயக் கூறியதாகவும், அவரது ஆசிரியர் கூறினார். பினாயக் போன்று இன்றைய இளைஞர்கள் தங்களை மிகவும் பின்தங்கியுள்ள ஆதிவாசி மக்களின் பிரச்சனைகளில் ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் என்று அப்போது மருத்துவர் தெரிவித்தார். அடுத்து பேசிய வேலூர் சிஎம்சியைச் சேர்ந்த மருத்துவர் சாரா பட்டாச்சாரியா, 1968ல் தான் கல்லூரியில் சேரும்போது, பினாயக் இரண்டாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்த மாணவன் என்று தொடங்கினார். ஆண்கள் மட்டுமே நடத்திய விடுதி நாடகங்களில், பெண்கள் பங்குகொள்ள விதிகள் தடுத்தபோது பினாயக் பெண் வேடமிட்டு, பெண்களுக்காக பேசி, நடித்ததை அவர் நினைவு கூர்ந்தார். அப்போது கிறித்துவ மாணவர்கள் இயக்கம் இருந்தது. பினாயக் கிறித்துவராக இல்லாவிட்டாலும், அந்தக் கூட்டங்களுக்கு வந்து செவிமடுப்பார். மிகவும் நுணுக்கமான தன்மையைக் கொண்டவர் பினாயக். ஒருமுறை ஒரு நோயாளிக்கு இதய நோய்க்காக டெஜாக்சின் கொடுக்கும்போது, உடன்கொடுக்கவேண்டிய பொட்டாசின் மருந்தை கொடுக்க பினாயக் மறந்துவிட்டார். நினைவு வந்தவுடன், அந்த நோயாளி வீட்டிற்கு ஓடிச்சென்று மீதமுள்ள மருந்தையும், கொடுத்துவிட்டுத்தான் திரும்பினார். அந்த அளவிற்கு நுண்ணிய ரீதியில் தன்மைகள் கொண்டவர். எம்.டி. முடித்தபிறகு, டெல்லி அருகேயுள்ள ஒசங்காபாத்தில் வன்முறையற்ற மக்கள் இயக்கங்களுடன் இறங்கி செயல்பட்டார். சத்தீஸ்கர் பகுதியில் ஆதிவாசிகளான, தொழிலாளர்கள் மத்தியில் ஷங்கர் குஹா நியோகி என்ற தொழிற்சங்கத் தலைவர், செயல்பட்டு வந்தார். அவர் முக்கியமாக சுரங்கத் தொழிலாளர்களை அமைப்பாக்கி செயல்பட்டார். நியோகியுடன் சேர்ந்து அந்த சுரங்கத் தொழிலாளர்கள் மத்தியில் பினாயக் பணி செய்ய தொடங்கினார். அங்கே சாகித் மருத்துவமனை என்ற இடத்தில் 300 ரூபாய் சம்பளம் வாங்கிகொண்டு, நியோகியின் தொழிலாளர்கள் மத்தியில் மருத்துவ சேவை செய்து வந்தார். இப்போது அந்த மருத்துவமனை நூறு படுக்கைகள் கொண்டதாக வளர்ந்துவிட்டது. சுரங்கத் தொழிலாளர்களின் போராட்டங்கள் அமைதியாக நடந்து வந்தன. அப்போது தொழிலதிபர்களும், அரசும், குண்டர்களும் சேர்ந்து நியோகியை சுட்டுக்கொன்றனர். பஹ்ரூ நல்லா என்ற கிராமத்தில் ஆதிவாசி மக்கள், ஆற்றோர விவசாயம் செய்து வந்தவர்கள் அணைக்கட்டிற்காக கட்டாய இடம்பெயர்ப்புக்கு உள்ளானார்கள். அத்தகைய சூழலில் அந்த வட்டாரத்தில், காசநோய், மலேரியா ஆகியவற்றிற்காக சுகாதாரப் பணியாளர்களை பயிற்சி கொடுத்து உருவாக்கியவர் பினாயக் சென். அதனால், அங்குள்ள ஆதிவாசி மக்கள் அவரை “பகவான்” என்று அழைப்பார்கள். மாநில அரசாங்கம் தனது சுகாதார மையத்தில் பினாயக்கையும், இலினாவையும் உறுப்பினர்களாக ஆக்கியது. மாநிலத்தின் கனிமவள வளர்ச்சி ஆணையம், பன்னாட்டு மூலதன நிறுவனங்ககளை உள்ளே கொண்டுவந்தது. அதன் மூலம் 6070 கிராமங்கள் முழுமையாக காலி செய்யப்பட்டன. வீடுகளெல்லாம் உடைக்கப்பட்டன. அந்த சூழ்நிலை பற்றி ஆய்வு செய்து, பினாயக் பேசினார். அதுவே அரசுக்கு கோபத்தை உருவாக்கியது. மாநிலத்தில் ஊட்டச்சத்து குறையுள்ளோர் அதிகமாக இருந்தனர். மருத்துவமனையில் நோயாளிகள் உட்கார்ந்திருக்கக் கூட இடமில்லாமல் இருந்தது. இத்தகைய சூழ்நிலைகளையும் பினாயக் எடுத்துக் கூறினார். மேற்கண்ட விவரங்களை மருத்துவர் சாரா விளக்கி கூறினார். அடுத்து பேசிய வேலூர் கிறித்துவ மருத்துவக் கல்லூரியின் மருத்துவர் ஆனந்த் சகாரியா, வேலூர் மருத்துவக் கல்லூரியின் மாணவர்களும், ஆசிரியர்களும் சேர்ந்து பினாயக் சென்னின் விடுதலைக்காக ஓர் அறிக்கை தயார் செய்திருப்பதாக அதை ஆங்கிலத்திலும், தமிழிலும் வெளிப்படுத்தினார். அடுத்து பேசிய பியுசிஎல் மாநில தலைவர் வழக்கறிஞர் சுரேஷ், பினாயக் வழக்கில் அரசும், காவல்துறையும் எந்த அளவிற்கு தவறாகவும், கோமாளித்தனமாகவும், நடந்துகொண்டனர் என்பதை விளக்கினார். அதாவது, இலினாசென் எழுதிய ஒரு இணைய அஞ்சல் பிரதியில் ஐ.எஸ்.ஐ. என்ற எழுத்துக்களை வைத்துக்கொண்டு, தம்பதியர் இருவருக்கும் பாகிஸ்தான் உளவுத்துறையான ஐஎஸ்ஐயுடன் தொடர்பிருப்பதாக நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் வாதாடினார் என்று கூறிவிட்டு, பினாயக் குடும்பத்தினர் எழுதிய கடிதம் டெல்லியில் உள்ள ஐஎஸ்ஐ என்ற இன்டியன் சோசியல் இன்ஸ்டியூட் என்ற உண்மையை அவ்வாறு திரித்து கூறியதை அம்பலப்படுத்தினார். சிறையில் இருக்கும் 74 வயதுடைய நாராயண் சன்யால் என்ற மாவோயிஸ்ட் கைதியுடன் தொடர்புகொண்டதாக பியுஷ் குஹாவும், பினாயக்கும் குற்றம் சாட்டப்பட்டனர். பினாயக் வீட்டில் சோதனையிடப்பட்டு எடுக்கப்பட்ட 33 தாள்களிலும், பினாயக், சோதனையிட்ட அதிகாரி, சாட்சி ஆகியோருடைய மூன்று கையெழுத்துக்களும் பெறப்பட்டிருந்தன என்றும், அவ்வாறு கையெழுத்துக்கள் பெறப்படாத மூன்று கடிதங்களை, பினாயக் சன்யாலிடம் பரிமாறிகொண்டதாக காவல்துறை குற்றம் சாட்டியிருந்தது என்றார். அதுமட்டுமின்றி, கூடுதல் குற்றப்பத்திரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு ஆவணம் எந்தவொரு கையெழுத்தும் இல்லாமல் இருந்தது என்றும், அதை அடிப்படையõக வைத்து நீதியரசர்கள் தண்டனை வழங்கியுள்ளார்கள் என்றும், கண்டன குரல் எழுப்பினார். பியுசிஎல் சார்பாக பினாயக் சென்னின் விடுதலைக்காக தொடர்ந்து தெருமுனைக் கூட்டங்கள் நடத்தப்படும் என்றும் அங்கே அறிவிக்கப்பட்டது.

சோனியா தி.மு.க.விரகி வைத்த செக்

கலைஞருக்கு சோனியா வைத்த “செக்” இந்திய தலைமை அமைச்சர் மன்மோகன் சிங் அவரது சென்னை வருகையின்போது, 98வது அகில இந்திய அறிவியல் மாநாட்டை ஜனவரி 3ம் தேதி திறந்து வைத்தார். அதையொட்டி “அடையார் பூங்கா” என்ற கலைஞரின் கனவுத் திட்டத்தையும், திறந்து வைப்பார் என்று முதலில் அறிவித்திருந்தார்கள். அதில் பிரதமர், துணை முதல்வர் ஸ்டாலினுடன் ஒரே மேடையில் கலந்துகொள்ளும் போது, திமுககாங்கிரஸ் கூட்டணி பலமாக இருக்கிறது என்பதாக தமிழக மக்களுக்கு அறிவித்துவிடலாம் என்ற கனவையும் சேர்த்தே முதல்வர் தாங்கிவந்தார். அந்தக் கனவிற்கும், கலைஞரின் கனவுத் திட்டத்திற்கும் ஒரு இடி வந்தது. மத்திய சுற்றுச்சூழல் இலாக்காவின் அனுமதி அடையாறு பூங்கா திட்டத்திற்கு இன்னமும் கிடைக்கவில்லை என்பது, பிரதமர் அலுவலகத்திற்கு சொல்லப்பட்டது. அதையொட்டி அந்தத் திறப்புவிழா நிகழ்ச்சியை பிரதமர் அலுவலகம் ரத்துசெய்தது. இந்த மாற்றம் யாரால் வந்தது என்று அறிவாலயம் ஆய்வு செய்தது. மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், எப்போதும் திமுக தலைமைக்கு எதிராகவே காய் நகர்த்துகிறார் என்பதாக திமுக எம்பிக்கள் தங்கள் தலைவரிடம் கோள் சொன்னார்கள். ஜெய்ராம் ரமேஷ் காங்கிரஸ் கட்சிக்குள் எந்த கோஷ்டியைச் சேர்ந்தவர் என்று திமுக தலைவர் ஆய்வு செய்தார். ராகுல்காந்தி தான், தனக்கெதிராக கருத்துக்களை பரப்புகிறார் என்பது காங்கிரஸ் தலைமை பற்றி கலைஞரின் கணிப்பு. அதனால், ராகுல்காந்தி கோஷ்டியைச் சேர்ந்தவர் தானே, ஜெய்ராம் ரமேஷ் என்று கருணாநிதி வினவினாராம். அதற்கு அவருக்கு வேண்டிய காங்கிரஸ் கட்சியின் எம்பிக்கள் எடுத்துச்சொன்ன செய்தி அறிவாலயம் தலைமையை அதிர்ச்சியடைய செய்ததாம். ஜெய்ராம் ரமேஷ் அன்னை சோனியா கோஷ்டியைச் சேர்ந்தவர் என்றும், ராகுல்காந்திக்கு அவர் மீது அத்தனை பிரியம் கிடையாது என்றும், அந்த திமுக தலைமைக்கு நெருக்கமான காங்கிரஸ் பிரமுகர்கள் கூறிய விளக்கம்தான், திமுக தலைமையை அதிர்ச்சியடைய செய்துள்ளது. அப்படியானால், சோனியா காந்தியே திமுகவிற்கு எதிராக காய் நகர்த்துகிறாரா என்ற கேள்வி அறிவாலயம் வட்டாரத்தில் இப்போது சுற்றி வருகிறது. கூட்டணியையும் உடைக்காமல், கூட்டணி வலுவாக இருக்கிறது என்பதாகவும் காட்டாமல் சோனியா விளையாடும் விளையாட்டை, திமுக தலைமை உன்னிப்பாக கவனிக்கத் தொடங்கியுள்ளது. மன்மோகனுடன் நல்லுறவு இருப்பதாக நம்பிகொண்டு இருக்கும் தமிழக முதல்வர், அடையாறு பூங்கா திறப்புவிழா மறுக்கப்பட்டாலும், வருகைப் புரிந்த மன்மோகனுடன் இணைந்திருக்கும் படங்கள், தமிழக மக்களுக்கு சென்று சேரவேண்டும் என்பதில் கவனம் எடுத்தது. அதையொட்டியே, ஜனவரி 2ம் நாள் இரவில் முதல்வரும், பிரதமரும் நடத்திய சந்திப்பும், அறிவியல் மாநாட்டில் துணை முதல்வர், பிரதமருடன் கலந்துகொண்டதும் படங்களாக, காட்சிகளாக ஊடகங்களில் வந்துவிட்டது என்ற தற்காலிக அகமகிழ்வில் திமுக தலைமை இப்போது இருக்கிறது.

ஸ்டாலினும், நெல்லை தி.மு.க.வின் கோஷ்டிகளும்.

ஸ்டாலினை கவிழ்க்குமா நெல்லை திமுக?
திருநெல்வேலிக்கு திமுகவின் துணைப்பொது செயலாளர் மு.க.ஸ்டாலின் சென்றார். எல்லா தென்மாவட்டங்களையும் போல, நெல்லை திமுகவும் தலைமையில் உள்ள கோஷ்டிகளால் பிளவுப்பட்டு நிற்கிறது. நெல்லை மாவட்டச் செயலாளர் கருப்பசாமி பாண்டியன், ஸ்டாலின் கோஷ்டியைச் சேர்ந்தவர். நெல்லை சட்டமன்ற உறுப்பினர் மாலைராஜா, அழகிரி கோஷ்டியைச் சேர்ந்தவர். அமைச்சர் பூங்கோதை, கனிமொழி கோஷ்டியைச் சேர்ந்தவர். கருப்பசாமி பாண்டியன் கூட்டுகின்ற மாவட்ட கட்சியின் ஆலோசனைக் கூட்டங்களுக்கு, அழகிரி கோஷ்டியின் தானைத்தலைவர் மாலைராஜா, ஆரம்பம் முதலே வருவதில்லை. நெல்லை மேயர் ஏ.எல்.சுப்ரமணியன், முறையாக மாவட்டச் செயலாளர் கூப்பிடும்போதெல்லாம் வந்துவிடுவார். பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினரும், அமைச்சருமான டி.பி.எம். மைதீன்கான், தொடக்கம் முதல், நெல்லை சந்திப்பு கைலாசபுரத்தில் உள்ள கருப்பசாமி பாண்டியனின் அலுவலகத்திற்கு வந்து ஆஜராகிவிடுவார். அந்த அமைச்சருக்கு அதனால் “முறைவாசல்” என்று பெயர். இப்படிதான் வழமையாக, கோஷ்டி முறைகள் போய் கொண்டிருந்தன. சமீபத்தில் கோஷ்டி சண்டையில் புதிய மாற்றங்கள் வந்துவிட்டன. தென்மண்டலத்திலும், தன் அதிகாரத்தை நிறுவிக்கொண்டதாக கருவிக்கொள்ளும் மு.க.ஸ்டாலின் நெல்லை வந்தார். அதற்கான, ஆலோசனைக் கூட்டத்தை மாவட்டம் ஏற்பாடு செய்திருந்தார். மேயர் பயந்துபோய் கலந்துகொண்டார். பூங்கோதை வேறு கோஷ்டி என்பதால் வரவில்லை. மாலைராஜா வழக்கம்போல் வரமாட்டார். முறைவாசலாக இருந்த அமைச்சர் மைதீன்கானுக்கு என்ன வந்துவிட்டது? “க”னா அழைப்புக்கு காணõமல் போய்விட்டார். விசாரித்தோம். ஓராண்டாகவே கைலாசபுரத்திற்கு மைதீன்கான் வருவதில்லை என்றார்கள். கங்கைகொண்டான் வட்டாரத்தை மாசுபடுத்தும் கோகோ கோலா நிறுவனம் கொடுத்த “நன்கொடை”யில், சுற்றுச்சூழல் அமைச்சர், “க”னாவிற்கு பங்கு கொடுக்கவில்லை என்பதால், மாவட்டம் கோபப்பட்டதாம். எத்தனை பேருக்குத்தான் மேலே உள்ளவர்களுக்கு பங்கு கொடுப்பது என்று அமைச்சர் நொந்துகொண்டாராம். அதனால் தான் ஓராண்டாக வரவில்லை என்றார்கள். ஸ்டாலின் கலந்துகொண்ட கூட்டத்தில், பாளையங்கோட்டை தொகுதியில் தளபதி நிற்கவேண்டும் என்று சுப.சீத்தாராமன் மூலம் மாவட்டம் சொல்ல வைத்தார். இது மைதீன்கானுக்கு கொடுத்த ஆப்பு என்றார்கள். மாலைராஜாவுடன் சேர்ந்துகொண்டு, மைதீன்கான் அழகிரி கோஷ்டியிடம் சேர்ந்துவிட்டார். அழகிரியும் மைதீன்கான் பேத்தி திருமணத்திற்கும் வருகைப் புரிந்தார். மாவட்டமும் பெயரளவிற்கு விளம்பரம் கொடுத்து கொண்டார். ஆனால், கோஷ்டி சண்டை முறுக்கேறி வருகிறது என்பது தான் உடன்பிறப்புகளின் படப்பிடிப்பு. ஸ்டாலினை தெற்கே நிற்க வைத்தால், தென்மண்டல செல்வாக்கும் திசைமாறும் என்பது ஒரு கணக்கு. பாளையங்கோட்டை தொகுதிக்குள் மேலப்பாளையம் வருகிறது. சிறுபான்மை முஸ்லிம்கள் வாக்குகளும், தேவர்கள் வாக்குகளும், தேவேந்திரர் வாக்குகளும் தொகுதி வெற்றியை தீர்மானிக்கும். அதனால் திமுகவிற்கு சிறிதளவுகூட வாய்ப்பில்லை. அப்படியானால், ஸ்டாலினை கவிழ்க்கத்தான் இந்தத் திட்டமா என்று எதிர்தரப்பு பேசுகிறது. மைதீன்கான் நின்றால் முஸ்லிம் ஓட்டுக்களை கூட பெறமுடியாத சூழலில், டெப்பாசிட் இழப்பது உறுதி என்று “க”னா கோஷ்டி கூறுகிறது. மாலைராஜாவிற்கும் நெல்லை தொகுதியில் அதே நிலைதான் என்பது திருத்து ஊரைச் சேர்ந்த மாவட்டத்தின் கணிப்பு. எப்படியோ, நெல்லை திமுகவிற்குள் இருக்கும் குழப்பங்கள், பகிரங்கமாக வெளியே வருகின்றன.

தி.மு.க. காங்கிரசு உறவில்

தடுக்கி விழுந்தாலும்,மீசையில் மண் ஒட்டவில்லை.
சென்னைக்கு பிரதமர் மன்மோகன் வந்தார். புது ஆண்டின் இரண்டாம் நாள் இரவு ஏழு நாற்பத்தைந்திற்கு சென்னை விமான நிலையம் வந்து இறங்கினார். மரபுப்படி முதல்வர் கருணாநிதி வரவேற்க வருவார் என்ற எதிர்பார்ப்பு எல்லோரிடமும் இருந்தது. அது ஏன், மன்மொகனிடமே இருந்தது. விமான நிலையத்தில் மன்மோகனை வரவேற்க வந்திருந்த துணை முதல்வர் மு.க.ஸ்டாலினிடமும், தனக்கு டில்லியில் அடிக்கடி பரிச்சயமான கனிமொழியிடமும், பிரதமர் முதல்வர் வருகிறாரா என்று வினவினார். அதற்கு கனிமொழி, ஆங்கிலத்தில் வந்துவிடுவார் என்று மட்டும் கூறினார். நிதி அமைச்சர் பேராசிரியரை விமான நிலையத்திற்கு கலைஞர் அனுப்பி இருந்தார். ஆனால் கருணாநிதி விமான நிலையம் சென்று பிரதமரை வரவேற்க செல்லக்கூடாது என்று முடிவு செய்து விட்டார். அதேநேரத்தில் வைரமுத்துவின் ஆயிரம் பாடல்கள் வெளியீட்டு விழாவில், லீ மெரிடியன் ஓட்டலில் முதல்வர் இருந்தார். சென்னையில் இருந்து லீ மெரிடியன் ஓட்டலுக்கு சென்ற முதல்வர் அந்த இடமான கத்திப்பாரா சந்திப்பிலிருந்து விமான நிலையம் செல்ல அதிக நேரம் பிடிக்காது. முதல்வரின் வாகன வரிசை ஐந்தே நிமிடத்தில் விமான நிலையம் அடைந்துவிட முடியும். வேண்டுமென்றே பிரதமரை வரவேற்க கருணாநிதி வரவில்லை என்று காங்கிரசு தலைவர்கள் முணு,முணுத்தார்கள். எல்லா காங்கிரசு தலவர்களும் விமான நிலையத்தில் தங்கள் வருகையை பதிவு செய்திருந்தார்கள். அதனால்தான் அந்த முணு முணுப்பையும் வெளியிட்டார்கள். முதல்வர் விமான நிலையம் வருவாரா, மாட்டாரா என்றே தெரியாத நிலையில் காவல்துறையிலிருந்து, அரசியல் தலைவர்களிலிருந்து, அமைச்சர்களிலிருந்து, ஊடவியலாலர்களிளிருந்து அனைவருக்குமே அதிர்ச்சி தரும் செய்தியாக கலைஞர் வரவில்லை என்பது அங்கே தெரியவந்தது. அதைப்பற்றி பேசிய முதல்வர், மரபை மீறி தமிழுக்காக வந்துள்ளேன் என்று லீ மெரிடியன் விழாவில் கூறினார். உண்மையில் தமிழுக்காகத்தான் மரபை முதல்வர் மீறினாரா? அல்லது காங்கிரசுடன் உள்ள உறவில் வந்த விரிசலால் மரபை மீறி எதிர்ப்பு கொடுத்தாரா? இந்த கேள்விதான் அனைவர் மத்தியிலும் சுற்றி வந்தது. வட இந்திய அதிகாரிகளான பிரதமர் அலுவலக ஆட்கள் தமிழக முதல்வரின் சந்திப்புக்கு அதிக அல்லது போதுமான முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்று கருணாநிதி காதுகளில் சிலர் போட்டுவிட்டார்கள். அதுவும் அடையாறு பூங்கா திறப்பு விழாவை ரத்து செய்த பிரதமரின் அலுவலகம், அதேநாளில் வருகை தரும் பிரதமரை வரவேற்க முதல்வர் வரவேண்டும் என்பதற்கு என்ன முக்கியத்துவம் கொடுத்தார்கள் எனபது முதல்வரின் அலுவலகத்தில் பெரும் பிரச்சனையாக பேசப்பட்டது. அதன்விளைவே முதல்வர் இப்படி மரப்பு மீறி பிரதமரை வரவேற்க விமான நிலையம் செல்லவில்லை என்பதே அவர்கள் வட்டாரத்தில் பேசப்பட்ட செய்தி. அடுத்து ஒரு அதிர்ச்சி செய்தி அனைவரையும் திகைக்கவைத்தது. ஆளுநர் மாளிகைக்கு சென்று இரவு எட்டு பதினைந்து முதல் எட்டு நாற்பத்தைந்து வரை முதல்வர், பிரதமரை சந்திப்பதாக இருந்தது. ஆனால் முதல்வர் ஆளுநர் மாளிகைக்கு செல்லவில்லை. இதுவே பிரதமரை அவமதித்ததாக டில்லி அதிகாரிகள் கருதினார்கள். அதேநேரத்தில் புதிய தலைமை செயலகத்தில் முதல்வரை சந்திக்க அதிகாரிகள் ஓடுவதை ஊடகத்தார் கண்டனர். அதையொட்டி முதல்வர் புதிய தலைமை செயலகம் வந்திருக்கிறார் என்ற செய்தி தீயென பரவியது. எதற்காக பிரதமருடன் உள்ள சந்திப்பை முதல்வர் ரத்து செய்தார் என்பது ஒரு புதிராகவே ஆகிவிட்டது. மத்திய அரசின் சில நடவடிக்கைகள், தி.மு.க.வை திக்குமுக்காட செய்துவருவதை தாங்கமுடியாத முதல்வர் எது வந்தாலும் பரவாயில்லை என்று பிரதமரை அவரது வருகையை புறக்கணிக்க முடிவு செய்துவிட்டார் என்று ஆளும் வட்டாரங்கள் கூறின. ஆனால் அதிகாரிகளோ இது நல்லதொரு முன்னுதாரணம் அல்ல என்றும், இது பெரும் விளைவுகளை ஏற்படுத்தும் என்றும், மிகவும் வருத்தப்பட்டனர். தங்கள் வருத்தத்தை தங்கள் சொல் கேட்டு வழக்கமாக நடக்கும் துணை முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் கூறினர். அவரும் உடனே அதன் எதிர்விளைவுகளை உணர்ந்தார். உடனடியாக தனது அன்பிற்குரிய மருமகன் இளைய அமைச்சர் தயாநிதியையும் வரச்சொல்லி, இருவரும் புதிய தலைமை செயலகம் சென்றனர். அங்கே கலைஞரை தளபதி சமாதானப்படுத்த தொடங்கினார். பிரதமரை சந்திக்க நேரம் கேட்டு வாங்கியதும் முதல்வரின் அலுவலகம்தான் எனும்போது, அதை செயல்படுத்தாமல் இருப்பது என்பது பிரதமரையே பெரிதும் அவமானப்படுத்துவது என்று ஆகிவிடும் என்பதாக பக்குவமாக தளபதி தந்தைக்கு அறிவுரை கூறினார். அதன்பிறகு இப்போது என்ன செய்யலாம் என்று கோபம் தணிந்த முதல்வர் கேட்க, பிரதமர் சென்னையில்தான் மறுநாளும் இருப்பதால், மறுநாள் காலையில்கூட முதல்வர் பிரதமரை சந்திக்கலாம் என ஸ்டாலினும், தயாநிதியும் ஆலோசனை கூறினர்.அதையொட்டி சரி என்று முதல்வர் கூற, உடனே தயா பிரதமரின் அந்தரங்க செயலாளரை தொடர்பு கொண்டு மறுநாள் காலை அதே ஆளுநர் மாளிகையில் முதல்வர், பிரதமரை சந்திப்பதற்கான நேரத்தை ஒதுக்க வேண்டினார். அதற்குள் இந்த அதிர்ச்சியால் தாக்கப்பட்ட மன்மோகன் அதிலிருந்து விடுபடாத நிலையில், உடனடி தொலைபேசியில் அடுத்த நேர ஒதுக்கீடு கேட்டு வந்த செய்தியால் ஆறுதலடைந்தார். டில்லியிலிருந்து தனக்கு திட்டு வந்துவிடக்கூடாதே எனபதில் அவர் கவனமாக இருந்திருப்பாரோ என்னவோ.மறுநாள் ஆண்டின் மூன்றாம் நாள் காலையில் ஆளுநர் மாளிகையில் காலை எட்டு முப்பது மணிக்கு, பிரதமரை முதல்வர் சந்தித்தார். அப்போது தமிழ்நாட்டிற்கு வெள்ள நிவாரண நிதி பற்றி பேசி, தனது கோரிக்கைக்கு வெற்றி என்று கருணாநிதி அறிவித்தார். எப்படியோ தடுக்கி விழுந்தாலும், மீசையில் மண் ஒட்டவில்லை என்பதுபோல கருணாநிதி நடந்துகொண்டார்.
தந்தைக்கு, மகன் செய்த உபதேசம் காங்கிரசுடன் சண்டை போட தயாரான கருணாநிதியின் இரண்டாம் தேதி இரவு செயல்பாட்டை மாற்றி அவரை மீண்டும் பிரதமரை சந்திக்க ஏற்பாடு செய்த, தனையனான துணை முதல்வரின் முயற்சியை, தந்தைக்கு மகன் செய்த உபதேசம் என்று சத்தியமூர்த்தி பவனில் நக்கலடித்தார்களாம். அந்த நக்கல் அறிவாலயம் வரை தெரிந்து ஏற்கனவே காங்கிரசு மீது கோபமாக இருக்கும் தி.மு.க. மூத்த தலைவர்கள் மத்தியில், கலைஞர் எடுத்த முதல் முடிவு வரவேற்க்கத்தக்கது என்றும் கூறத்தொடங்கிவிட்டார்கள்.

தெருநாடகம்முதலில் மரபு மீறி விமான நிலையம் செல்லாமல் தவிர்த்தது, பிறகு தலைமை அமைச்சரிடம் கேட்டு வாங்கி பெற்ற நேரத்தை புறக்கணித்து அவரை சென்று சந்திக்காமல் இருந்தது, பிறகு மனம் மாறி மீண்டும் பிரதமரிடம் நேரம் கேட்டு மறுநாள் சந்தித்து, ஆகிய எல்லாமே காங்கிரசு தலைமையை ஏமாற்ற செய்த நாடகம் என்றும், அதை தெருவில் நடந்த நிகழ்ச்ச்சி என்பதால் தெருநாடகம் என்றும் காங்கிரசார் விமர்சிக்கத்தொடங்கி உள்ளார்கள்.
டி.ஆர்.பாலு ஏன் போனார்?
ஆண்டின் மூன்றாம் நாள் காலையில் ஆளுநர் மாளிகை சென்று தலைமை அமைச்சரை சந்திக்க சென்ற முதல்வர் கருணாநிதி, முக்கியமாக தனது சந்திப்பு தமிழக மக்களுக்கான நலன்களுக்காக மத்திய அரசின் உதவி கேட்கும் சந்திப்பு என்று தமிழக மக்களிடம் காட்டிக்கொள்ள விரும்பினார். அதனாலேயே அதை வெள்ள நிவாரண நிதி கேட்கும் சந்திப்பு என்பது போல சித்தரிக்க விரும்பினார். அதுபோலவே சித்தரிக்கவும் செய்தார். அப்போது டி.ஆர்.பாலுவையும், உள்துறை செயலாளர் மாலதியையும் ஆளுநர் மாளிகைக்கு அழைத்துசென்றார். எதற்காக பாலுவை அழைத்து செல்லவேண்டும்? இந்த கேள்வி தயாநிதி ஆதரவாளர்கள் மத்தியில் கிளம்பியுள்ளது. முந்திய நாள் இரவில் தயாநிதிதான் ஸ்டாலினுடன் சேர்ந்துகொண்டு முதல்வரையும் இணங்க வைத்து, பிரதமரின் சந்திப்பை மறு உறுதி செய்தவர். என்றும் ஆனால் அவரை அழைத்துச்செல்லாமல் தலைவர் எப்படி டி.ஆர்.பாலுவை அழைத்து செல்லலாம் என்றும் அவர்கள் கோபம் கொண்டனர். இதுபற்றி தி.மு.க. தலைமைக்கு நெருக்கமானவர்களிடம் கேட்டபோது, மத்திய அரசின் நிதி என்பது நாடாளுமன்றத்தின் அங்கீகாரத்தை நாளை பெறவேண்டிய ஒன்று என்றும், அதனால் நாடாளுமன்ற கட்சியின் தலைவரரான டி.ஆர்.பாலுவை அழைத்துசென்ற தலைவரின் முடிவுதான் சரியானது என்றும் கூறினர்.
பொய் சொன்னார் முதல்வர்? முழு பூசணிக்காயை சோற்றில் மறுத்தார் முதல்வர்
பிரதமரை சந்தித்து விட்டு வந்த கருணாநிதியை சந்தித்த ஊடகத்தாரை அவர் எப்படி ஏமாற்றினார் என்பது ஒரு பெரிய கதை. ஆண்டின் மூன்றாம் நாள் காலையில் ஆளுநர் மாளிகையில் தலைமை அமைச்சர் மன்மோகன் சிங்கை சந்தித்து விட்டு வெளியே வந்த முதல்வர் கருணாநிதி, தான் முந்திய நாள் ஏன் பிரதமருடன் ஒப்புக்கொண்ட சந்திப்பை ரத்து செய்தார் என்ற கேள்விக்கு, தான் ஒரு கூட்டத்தில் இருந்ததாகவும், அதில் பேச்சாளர்கள் பட்டியல் அதிக நீளமாக இருந்ததாகவும் அதனால் தான் அங்கிருந்து பிரதமரை வரவேற்கவும் சரி, அவரை சந்தித்து பேசவும் சரி செல்லமுடியவில்லை என்று ஒரு முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயன்றுள்ளார். வைரமுத்துவின் ஆயிரம் பாடல் வெளியீட்டு விழாவில் கருணாநிதி பேசி முடிக்கும்போது ஆண்டின் இரண்டாம் நாள் இரவு ஏழரை மணி. விமான நிலையத்தில் பிரதமரை வரவேற்க முதல்வர் செல்ல வேண்டிய மரபுவழி பணி என்பது இரவு ஏழே முக்காலுக்கு. வைரமுத்து விழா நடந்த லீ மெரிடியன் ஓட்டலில் இருந்து விமான நிலையம் செல்ல முதல்வரின் வாகன வரிசைக்கு ஐந்து நிமிடம்தான் எடுக்கும். அதன்பிறகு பிரதமர் ஆளுநர் மாளிகைக்கு வந்தபிறகு முதல்வர் அவரை சந்திக்க ஏற்பாடு செய்யப்ப்பட்ட நேரம் எட்டே காலில் இருந்து எட்டே முக்கால் வரை. அந்த ஆளுநர் மாளிகைக்கும் லீ மெரிடியன் ஓட்டலில் இருந்து செல்ல ஐந்து நிமிடம் கூட எடுக்காது. ஆகவே கருணாநிதி திட்டமிட்டு இரண்டு சந்திப்புகளையும் தவிர்த்திருப்பது வெள்ளிடை மலையாக தெரிகிறது.ஆனாலும் தனது திடீர் முடிவால் கூட்டணியும் பாதிக்கும், ஆட்சியையும் பாதிக்கும் என்று அறிவுரை கூறிய மகனின் கருத்தை ஏற்று தனது முடிவை மறுபரிசீலனை செய்த கருணாநிதிதான் அடுத்த நாள் அதாவது ஆண்டின் மூன்றாம் நாள் பிரதமரை ஆளுநர் மாளிகையில் சந்தித்திருக்கிறார். அதை அப்படியே ஊடகத்தாரிடம் மறைக்க முயன்று தோற்றுப்போனார் என்பதுதான் அன்று நடந்த கூத்து. இரவு முழுவதும் தெருக்கூத்து நடக்கும் என்று சென்னை சங்கமம் பற்றி அறிவித்த மகளின் சொல்லை, அன்று இரவே ஒரு சிறிய தெருக்கூத்தை நடத்தி கான்பித்திவிட்டார் போலிருக்கிறது அவரது தந்தை.

13 நாளாக கடலில் தவித்த சென்னை மீனவர்கள்

10 நாளாக கடலில் தவித்த சென்னை மீனவர்கள்மத்திய அரசு படையின் அலட்சியம் கடந்த 4.12.2010 அன்று சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்திலிருந்து காலை கூN02 ஊகீஆஇ412 என்ற மீன்பிடி ஃபைபர் படகு ரமேஷ், ராஜேஷ், ஜெயக்குமார், தேசப்பன் ஆகிய நான்கு மீனவர்களும் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அப்பொழுது அவர்கள் சென்ற ஃபைபர் படகின் இன்ஜின் பழுதாகி அவர்களால் சரிசெய்ய முடியாமல் நடுக்கடலில் செய்வது அறியாது தங்களுக்கு உதவிபுரிய அருகில் எந்த படகும் இல்லாததாலும், தங்கள் கைபேசி தொடர்புகொள்ள முடியாத தூரத்திற்கு நீர் ஓட்டத்தின் காரணமாக ஃபைபர் படகு இழுத்து செல்லப்பட்டதால், யாரையும் தொடர்புகொள்ள முடியவில்லை. அதனால் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள தங்கள் படகில் அருந்த நங்கூரத்தை இட்டனர். ஆனால் கடலின் ஆழம் அதிகமாக இருந்ததால் காற்றின் வேகம், நீரின் ஓட்டம், திடீரென்று வீசிய புயல் போன்ற காரணங்களால் அவர்கள் செலுத்திய நங்கூரம் திடீரென்று அறுந்து சென்றுவிட்டது. தாங்கள் என்ன செய்வது என்று தெரியாமல் தங்களுடைய தொழில் அனுபவத்தைக் கொண்டு தங்கள் படகின் இன்ஜினைக் கயிற்றில் கட்டி தண்ணீரில் இறக்கினார்கள். அதிகமாக வீசிய புயலால் இன்ஜினும் அறுந்து சென்றுவிட்டது. உடனே தங்களை காப்பாற்ற யாரவது வருவார்கள் என்ற நிலையில் தங்களுடைய படகிலேயே வீசிய புயலில் தங்களைப் பாதுகாத்துக் கொண்டு அமர்ந்து இருந்தனர். படகானது சென்னையில் இருந்து தெற்கு நோக்கி கடல் நீரோட்டத்தின் காரணமாக ஆழ்கடலில் சென்று கொண்டு இருந்தது. தாங்கள் எடுத்துச் சென்ற உணவுகள் ஒரிரு நாட்கள் மட்டுமே இருந்தன. அதன்பிறகு தங்களை பாதுகாத்துக்கொள்ள கடல்நீரின் (உப்பு நீர்) குடிக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டனர். 14.12.2010 அன்று காலை இலங்கை நாட்டிற்கு நேர் எதிரே ஆழ்கடலில் டியூனா மீன்பிடித்துக் கொண்டிருந்த தூண்டில் விசைப்படகு ஒன்று தொழில் செய்துகொண்டு இருந்ததை அறிந்து தங்களால் முடிந்தவரை தங்கள் கை வசம் இருந்த துணி மற்றும் கைகளால் அசைத்து அழுகுரலை எழுப்பி அவர்களின் பார்வை தங்கள் மேல் படும்படி செய்தனர். அந்த விசைப்படகு அவர்களைக் காப்பாற்றியது. அவ்விசைப்படகு நீர் கொழும்பின் துறைமுகத்தின் விசைப்படகு வெர்னால்டு ஃபர்னான்டோவுக்கு சொந்தமானது. அந்த விசைப்படகு அவர்களை காப்பாற்றியதும், சென்னையில் உள்ள அவர் நண்பர் தயாளனிடம் தொலைபேசியில் தகவல் கொடுக்கப்பட்டு, அதன் பிறகு அனைத்து அரசு அதிகாரிகளுக்கும், மீன்வளத்துறை அமைச்சருக்கும், அவர்கள் குடும்பத்திற்கும் தகவல் கொடுக்கப்பட்டது. படகு காணாமல்போன, டிசம்பர் 14ம் தேதியே மத்திய அரசின் கடலோர காவல்படைக்கு தெரியப்படுத்தியும், அவர்கள் எந்தவொரு தீவிர முயற்சியும் எடுக்காமல் ஹெலிகாப்டரில் தாங்கள் தேடியதாகக் கணக்கு எழுதி வைத்துவிட்டு, வழக்கம்போல் தமிழ் மீனவர்களின் நெருக்கடிக்கு பாராமுகம் காட்டிவிட்டனர். இதனாலேயே, சென்னை மீனவர்களுக்கு மத்திய அரசின் மீது எந்தவொரு நம்பிக்கையும் இல்லாமல் போய்விட்டது என்று இந்திய மீனவர் சங்கத்தின் தலைவர் தயாளன் ஆத்திரத்தோடு கூறினார். மேற்படி காணாமல்போன விசைப்படகு திருக்கோணமலை என்ற துறைமுகத்திற்கு 17.12.2010 அன்று காலை சென்றடைந்தது. அதன் பிறகு இலங்கை கடற்படையால் அனைத்து ஆய்வுகளும் செய்யப்பட்டு அவர்கள் தற்சமயம் இலங்கையில் இருக்கிறார்கள். இந்திய மீனவர் சங்கத்தலைவர் தயாளன், தனக்கு தெரிந்த நண்பர்கள் இலங்கையிலுள்ள நீர் கொழும்பில் இருப்பதனால், அவர்களை தொடர்புகொண்டு காணாமல் போனவர்கள் பற்றி கேட்டறிய முடிந்தது. தமிழக அரசாலோ, மத்திய அரசாலோ என்ன முடிந்தது?

ஆண்டையும், அரசும் சேர்ந்தால்

42 ஆண்டுகளுக்குப் பிறகு, கீழவெண்மணியில் எரிந்த நெருப்பின் தீப்பொறிகள் பல்வேறாக அன்று வெடித்தன. டிசம்பர் 25ம் நாள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து, குக்கிராமங்களைச் சேர்ந்த கூலி விவசாயிகளும், அவர்களுக்கு ஆதரவாக குரல் எழுப்புவோர்களும், அன்றைய தஞ்சையும், இன்றைய நாகையுமான மாவட்டத்தில், கீவளூர் வட்டத்தில் தேவூர் அருகேயுள்ள வெண்மணி கிராமத்திற்குள் அணி திரண்டனர். எந்த ஆண்டும் இல்லாத அளவில் இந்த ஆண்டு கிராமத்திற்குள் நுழையும் பாதையில், பல கடைகள் அமைத்திருந்தார்கள். சடங்காகவும், விழாவாகவும் ஆக்காமல் ஆண்டையும், அரசும் சேர்ந்து செய்த படுகொலைக்கு எதிராக, நெருப்பாறு ஓடவேண்டும் என்ற புரட்சியாளர்களது பயணமும் அங்கே தென்பட்டது. பல பத்தாண்டுகளாக விவசாயத் தொழிலாளர்களது கூலி உயர்வுக்கானப் போராட்டத்தை கட்டமைத்து நடத்தி வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செல்வாக்கின் கீழ், வெண்மணி தியாகிகள் நினைவிடமும், தியாக தீபத்தை நினைவுச் சுடராக வடித்ததும், அந்தக் கிராமத்தில் நடுநாயகமாக திகழ்ந்தது. சிபிஎம், சிபிஐ, புதிய தமிழகம் மற்றும் பல்வேறு அமைப்பினரும் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்த வந்து கொண்டிருந்தனர். சிபிஎம் தலைமையிலான சிஐடியூவினர் தங்களது நீதி திரட்டலின் மூலம் கட்டப்பட்டு வரும் மாபெரும் நினைவுக் கூடத்தைத் தோழர்கள் வெளியூர்காரர்களுக்கு விளக்கமளித்துக் கொண்டிருந்தனர். புதிய தமிழகம் தலைவர் டாக்டர்.க.கிருஷ்ணசாமி, தியாகிகள் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதைச் செலுத்தினார். தொண்டர்கள் மண்ணுரிமை மீட்க தன்னுயிரை தந்த தியாகிகளுக்கு வீரவணக்கம் என்று முழக்கமிட்டனர். டெல்டா மாவட்டங்களில் விவசாயத் தொழிலாளர்கள் நிலமற்ற ஏழைகளாக இருக்கும் நிலையில், அவர்களுக்கு விவசாயம் செய்ய 2 ஏக்கர் நிலம் வழங்கி, கொடுத்த வாக்குறுதியை கருணாநிதி அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் என்று அப்போது டாக்டர் கூறினார். அதற்காக, 2011ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 26ம் தேதி மண்ணுரிமை மாநாடு என்றும் அறிவித்தார். சிபிஎம் தலைமையிலான தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் 2 புத்தக வெளியீடுகளும், அதை வெளியிடுவதற்கான மேடையும் வெண்மணியில் அமைக்கப்பட்டிருந்தது. சிபிஎம் மாநிலச் செயலாளர் சி.ராமகிருஷ்ணன் வெளியிட, இமானுவேல் பேரவை சந்திரபோஸ் அதை பெற்றுக்கொண்டார். மேடையில் அமைக்கப்பட்டிருந்த மைக்கின் மூலம் பேச்சாளர்கள் பேசுவார்கள் என்று தோழர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், சிபிஎம் எடுத்த அரசியல் நிலைப்பாட்டிற்கு மாறுபட்டு சந்திரபோஸ் பேசி விடுவாரோ என்ற அச்சத்தில் மேடை நிகழ்ச்சியில் யாரும் பேசாமலேயே நன்றி கூறி முடித்துக் கொண்டனர். அதுபற்றி நான் சந்திரபோஸிடம் கேட்டபோது, வர்க்கப் போராட்டமாக கூலி உயர்வுப் போராட்டத்தை சிபிஎம் நடத்தி வரும்போது, அதில் அனைத்து சாதிகளைச் சேர்ந்த கூலி விவசாயிகளும் இருந்தனர். ஆனால் பண்ணையார்களோ, இது சாதி கட்டுமானம் கொண்ட சமூகம் என்பதை உணர்த்தும் வகையில் தாழ்த்தப்பட்ட மக்களின் குடியிருப்புகள் மட்டுமே தாக்கப்பட்டு, அவர்கள் மட்டுமே எரிக்கப்பட்டனர். அதனால், சாதியும் வர்க்கமும் இணைந்தே இந்த இடத்தில் ஆதிக்கவாதிகளால் தாக்கப்பட்டு வருகிறது. மேற்கண்ட கருத்தை நம்மிடம் கூறிய தோழர் சந்திரபோஸ், வாய்ப்பு கொடுத்திருந்தால் இதே கருத்தை அங்கே வலியுறுத்துவதாக இருந்தேன் என்று கூறினார். பேச்சாளர்களுக்கு வாய்ப்புக் கொடுக்காமல் திடீரென்று தவிர்த்த சிபிஎம்யின் நடைமுறையைக் கண்டித்து தோழர்களிடம் பேசிவிட்டு வந்ததாகவும் கூறினார். அஞ்சலி செலுத்த வந்திருந்த புரட்சியாளர்கள் சிலர், சிபிஎம் கட்சிக்கு லாபகரமாக, “ராமையாவின் குடிசை” என்ற ஆவணப்படத்தை எடுத்து, அதில் நீதிமன்றத்தால் மறுக்கப்பட்ட தண்டனையை புரட்சியாளர்கள் கொடுத்த உண்மையை கொச்சப்படுத்திவிட்டார்கள் என்றும் கோபப்பட்டார்கள். அதையெடுத்த இயக்குநரை பாரதி கிசும்புக்குமார் என்று நக்கலடித்தார்கள். 1968ம் ஆண்டு கீழவெண்மணியில் நெருப்பில் இடப்பட்ட 44 உயிர்களும், ஒரு உண்மையை உலகிற்கு உரத்து கூவின. ஆண்டையும், அரசும் சேர்ந்துதான் கூலி விவசாயியை எதிர்த்து நிற்கிறது. கூலி உயர்வு போராட்டத்தை நடத்தியவர்கள், அதில் ஆண்டையைப் பார்த்துவிட்டு, அரசை விட்டுவிட்டால் வர்க்கப் போராட்டத்தில் உழைப்பவர் பக்கத்தில் சாம்பலே மிஞ்சி நிற்கும். எதிரி எடுக்கின்ற ஆயுதத்தை, உழைப்பவர்கள் கையிலெடுத்தால் கூலி போராட்டமும், விடுதலை போராட்டமாக வீறுகொண்டு எழும். மேற்கண்ட வகையில் பல்வேறு விதமான மாறுபட்ட கருத்துக்களுடனும், வெண்மணி தியாகிகளின் நினைவுகளுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. நூறு பூக்கள் மலரட்டும்; நூறு விதமான கருத்துக்கள் உதிக்கட்டும் என்ற மாசேதுங்கின் மேற்கோள் தான் நமக்கு நினைவுக்கு வந்தது.

தமிழ்ப் பெண்ணுக்கெதிராக

தமிழ்ப் பெண்ணுக்கெதிராகதமிழ்ப் பெண்ணை நிறுத்திய ராஜபக்சே
யாழ்ப்பாணம் பொது நூலக மண்டபத்தில் 2010 டிசம்பர் 18ம் தேதி சனிக்கிழமை நடக்கவிருந்த மனித உரிமைகள் பற்றிய கருத்தரங்கு நடக்கவிடாமல், கடைசி நேரத்தில் 17ம் தேதி வெள்ளிக்கிழமை அனுமதியை ரத்து செய்துவிட்டார் யாழ்ப்பாண நகர மேயர் யோகேஸ்வரி பற்குணம். மே 19க்குப் பிறகு; வடக்கு கிழக்கில் ஏற்பட்ட முன்னேற்றம்; என்ன விலை? யார் முன்னேறினார்கள்? என்ற தலைப்பில் கருத்தரங்கு நடத்துவதற்காக கருத்தரங்கு எற்பாட்டாளர்களான கொழும்பு நகரைச் சேர்ந்த ஷெரின் சேவியர் தலைமையிலான ஹோம் ஃபார் ஹ்யூமன் ரைட்ஸ் எனும் அமைப்பும், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சிந்தனைக் கூடம் எனும் அமைப்பினரும் டிசம்பர் 3ம் தேதியை அந்த மண்டபத்தை ஏற்பாடு செய்திருந்தனர். பேரா.எஸ்.கே.சிற்றம்பலம், பேரா.வி.பி.சிவநாதன், அரசுசாரா நிறுவனங்கள் குழுமத்தின் செயலாளர் அருட்திரு. ஜே.செல்வராஜா, சி.எஸ்.ஐ.முன்னாள் பிஷப் அருட்திரு.டாக்டர்.எஸ்.ஜெபனேசன், பேரா. எஸ்.கிருஷ்ணராஜா, மட்டக்களப்பு உளத்தியல் நிபுணர் டாக்டர் கடம்பநாதன், டாக்டர் முரளி வள்ளிப்புரநாதன், பேரா.எம்.சின்னதம்பி, பேரா.ஆர்.சிவசந்திரன். எஸ்.ரவீந்திரன், சுடர் ஒளி மற்றும் உதயம் இதழ்களின் முன்னாள் ஆசிரியர் என்.வித்யாதரன் மற்றும் வெரைட் ஆய்வு நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் நிஷான் டி மெல் ஆகிய கல்வியாளர்களும் பிரபலங்களும் அந்த கருத்தரங்கில் கலந்து கொள்வதாக இருந்தனர். தன்னுடைய ஊழியர்கள் கூட்டத்தை அந்த நாளில் அந்த மண்டபத்தில் நடத்த வேண்டியிருப்பதால், இந்தக் கருத்தரங்குக்கு கொடுக்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்பட்டது என மேயர் யோகேஸ்வரி பற்குணம் கூறினார். ஆனால், இலங்கையின் அதிகார மட்டத்திலிருந்து வந்த அதிகாரத்துடன் கூடிய வாய்மொழி வலியுறுத்தலால் தான், மேயர் அனுமதியை ரத்து செய்தார் என்று விவரமறிந்த வட்டாரங்கள் கூறுகின்றனர்.

Sunday, January 2, 2011

ராஜா ---------தயா மோதல்.

ஆ.ராஜா வுடன் , தயாநிதி குழுவினர் முரண்பட்டு இருப்பதோ, முரண்பாடுகளை கிளப்பிவருவதோ, அதிகார மோதலுக்காக ராஜாவை அம்பலப்படுத்த தயா முயற்சி எடுப்பதோ தெரிந்த பழைய செய்திகள். ஆனால் அது அடுத்த கட்டத்திற்கு வந்துள்ளது புதிய செய்தி. டில்லி, சென்னை, பெரம்பலூர், திருச்சி, திருவானைக்காவல் ஆகிய இடங்களில் ஒரே நேரத்தில் திடீரென நடந்த சீ.பி.ஐ. சோதனைகள், யாரால் தூண்டப்பட்டன? யார் அதுகண்டு மகிழ்ந்தார்கள்? கட்டளை அனுப்பும் இடத்தில் அமர்ந்து கொண்டு அதற்கான ஆதாரங்களை கொடுத்தது யார்? இப்படிப்பட்ட கேள்விகள் இப்போது எழுந்துள்ளன.
இதுவரை ராஜா மீது தனக்கு இருந்த முரண்ப்பாட்டை அல்லது போட்டியை அல்லது தனக்கும், டாட்டாவுக்கும் இடையே இருந்த வர்த்தக போட்டியில் ஆ.ராஜா டாட்டாவால் பயன்படுத்தப்பட்டார் என்ற கோபத்தை, அய்யோபாவமான ராஜா மீது காட்டுவது தயாநிதிக்கு வாடிக்கையாக போய்விட்டது. இதில் ராஜாவின் அறிவு வளர்ச்சிக்காகவும், சிந்தனை திறமைக்காகவும், ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து வந்தவர் என்ற காரணத்திற்க்காகவும் அவரை ஊழல்களுக்கு மத்தியிலும் ஆதரித்து வந்த சில நண்பர்கள் வசமாக இந்த வலையில் சிக்கிக்கொண்டனர். ஊழலுக்கு சாதியும், மதமும், ஏகபோக எதிர்ப்பும் கிடையாது என்று அந்த நண்பர்களுக்கு ஏனோ தெரியாமல் போய்விட்டது. இப்போது சோதனைகள் வந்தபின்பு அதை உணர்ந்திருப்பார்கள்.
சீ.பி.ஐ. சோதனைகளை நடத்த சில மனிதர்களின் வீடுகளை அடையாளம் காட்டியது தயாநிதிதான் என்றும், அதை அவர் தந்திரமாக தனக்கு இருக்கும் பழைய மற்றும் புதிய தொடர்புகளான அதிகார வர்க்க சக்திகளை பயன்படுத்திகொண்டார் என்றும் ராஜா ஆதரவாளர்கள் கருதுகிறார்கள். அதிலும் குறிப்பாக தலைமை அமைச்சர் அலுவலக சக்திகளையே பயன்படுத்திகொண்டார் என்பதே அவர்களது கணிப்பு. கணிப்பொ, கண்டுபிடிப்போ, இங்கே சென்னையிலும், திருச்சியிலும், பெரம்புலூரிலும் அந்த சீ.பி.ஐ. சோதனைகள் நடந்து கொண்டு இருக்கும் போது, தயாநிதி மாறன் டில்லியில் அமர்ந்து கொண்டு, அதை ரசித்துக்கொண்டும் அதை இயக்கிகொண்டும் இருந்தார் என்று கூறுகிறார்கள்.
தி.மு.க. தலைவர் குடும்பத்தில் உள்ள உள்பகை இந்த அளவுக்கு போயிருப்பதால் தான் இப்போது அனைத்தும் அம்பலமாகி இருக்கின்றன.

அழகிரி அபகரிப்பில் ,அமெரிக்கன் கல்லூரியா?

1881 ஆம் ஆண்டு மதுரையில் உருவாக்கப்பட்டது அமெரிக்கா கல்லூரி. அமெரிக்கா மதுரை மிஷன் என்ற பெயரில் ஒரு சொசைடி தொடங்கப்பட்டு, அதன் மூலம் இந்த கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது. 129 ஆண்டுகள் பயணித்த இந்த கல்லூரியில் கடந்த எட்டு ஆண்டுகளாக சில சுய நல விரும்பிகளின் தலையீட்டால், தேக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த சுய நல விரும்பிகள் தங்கள் குடும்பத்திற்கும், தங்கள் அரசியலுக்கும் அந்த கல்லூரியை தாரைவார்க்க விரும்பி சில சித்து விளையாட்டுகளில் ஈடுபட்டுவருகிறார்கள். எந்த ஒரு குறிப்பிட்ட நிறுவனத்துக்கும் உட்படாமல், சுதந்திரமான சொசைடிஆக அந்த சொசைடி நடந்துவந்தது. அதன்மூலம் மதுரையிலேயே மிக நல்ல பெயரை அந்த கல்லூரி பெற்றுவந்தது. பல அறிஞர் பெருமக்களை உருவாக்கித்தந்த கல்லூரி என்ற பெயரையும் அது பெற்றிருந்தது. தென்னிந்திய திருச்சபையுடன் நல்ல உறவை இந்த கல்லூரி கொண்டிருந்த போதும், தனித்து இயங்க அனைத்து உதவிகளையும் திருச்சபை இந்த கல்லூரிக்கு இத்தனை ஆண்டுகளாக செய்து வந்தது. தென்னிந்திய திருச்சபையை சேர்ந்த உறுப்பினர்கள் இந்த கல்லூரி விசயத்தில் தொடர்ந்து தங்களது ஒத்துழைப்பை நல்கி வந்தனர். இந்த சொசைட்டிக்கு சொந்தமான நிலம் நாற்பத்தேழு ஏக்கர். அதற்குள் இந்த கல்லூரியும் கட்டப்பட்டுள்ளது.
இதுவரை குறைந்த கட்டணத்தில் கல்வி கொடுக்கும் கல்லூரி என்ற நற்பெயரையும் இது எடுத்துள்ளது. சுய-நிதி கல்லூரிகள் எல்லாம் கட்டண கொள்ளை அடித்துவரும் இந்த காலத்தில் அந்த நாள் தொட்டு ஒரு நல்ல பெயருடன், நல்ல கல்வியை கொடுக்கும் ஒரு பிரபல கல்விநிலையம் மதுரையின் மத்திய பகுதியில் இருப்பது மதுரை மாநகருக்கே பெருமைப்படக்கூடிய விஷயம். இந்த கல்லூரியில் ஆசிரியர் நியமனத்திலும் சரி, மாணவர் சேர்க்கையிலும் சரி, விடுதி கட்டணங்களிலும் சரி, விடுதி உணவு கட்டணத்திலும் சரி, இதுவரை ஒரு நல்ல பெயரையும், முன்மாதிரி கல்லூரி என்ற பெருமையையும் இந்த அமெரிக்கன் கல்லூரி எட்டியிருக்கிறது என்றால் மிகையாகாது. அப்படிப்பட்ட ஒரு கல்லூரியை மதுரை மட்டுமின்றி, தென் மாவட்டங்களில் உள்ள அனைவரும் பாராட்டுவர். இந்த கல்லூரியில் தென்மாவட்டங்களை சேர்ந்த பலரும் இந்த கல்லூரியில் படித்து இன்று உலகம் முழுவதும் கல்வி பணியிலும், சமூக பணியிலும், நிர்வாக பணிகளிலும், நீதித்துறை பணிகளிலும், சிறப்பாக பெயர் பெற்று இருக்கிறார்கள். அப்படிப்பட்ட அனைவரும் உலகம் முழுவதிலுமிருந்து கேட்டுக்கொண்ட பிறகே நாம் இந்த கல்லூரியில் நடைபெறும் சிக்கல் பற்றி ஆராய்ந்து எழுத தலைப்பட்டோம்.
இந்த கல்லூரியை உருவாக்கும்போது உருவான சட்ட,திட்டங்களில், கல்லூரிக்கு முதல்வராக வருபவர்தான் கல்லூரியின் நிர்வாக குழுவிற்கு தலைமை தாங்க வேண்டும் என்று இருக்கிறது. அந்த விதியை அமுல்படுத்துவதில்தான் இப்போது பிரச்சனை எழுந்துள்ளது. தென்னிந்திய திருச்சபையுடன் நல்ல உறவை பேணும் வகையில் இந்த கல்லூரியின் நிர்வாக குழுவில், திருச்சபையின் பிஷப்பிற்கும் ஒரு நிர்வாக குழு உறுப்பினர் என்ற பொறுப்பு கொடுக்கப்படவேண்டும் என்று இருக்கிறது. அந்த வகையில் இந்த கல்லூரியின் பதினான்கு பேர் கொண்ட நிர்வாக குழுவில், திருச்சபையின் பிஷப்பும் ஒரு நிர்வாக குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால் அதன் விதிகளின் படி, கல்லூரி முதல்வர்தான் நிர்வாக குழுவிற்கு தலைமை தாங்குவார். திருச்சபை தனது உதவியுடன் இயங்கும் கல்வி சாலையில் மதச்சார்பற்ற அணுகுமுறை இருக்கவேண்டும் என்ற நல்ல எண்ணத்துடன் அவ்வாறு கல்லூரி நிர்வாகத்தை முதல்வர் கையிலே கொடுத்துள்ளது. அதேசமயம் திருச்சபையின் பங்களிப்பும், பயன்பாடும் இருக்கும் விதத்தில் அதன் பிஷப்பையும் ஒரு நிர்வாக குழு உறுப்பினராக இருக்க ஏற்பாடு செய்துள்ளது.
2002 ஆம் ஆண்டிலிருந்து இந்த கல்லூரியை அங்குள்ள சீ.எஸ்.ஐ. பிஷப்பான கிறிஸ்டோபர் ஆசிர்வாதம் தனது குடும்பத்தின் கையிலெடுக்க முயற்சி செய்ய தொடங்கினார். கல்வி நிலையத்தில் நேரடியாக மத தலைவர் நுழையாமல் இருப்பது கல்விக்கு பாதுகாப்பு என்ற எண்ணம் இல்லாமல், அந்த கல்லூரியின் சொத்தை ஒரு தனி மனித சொத்து கண்ணோட்டத்துடன் மத தலைவர் பார்க்க தொடங்கியதி கெடுவைப்பானது என்று கிறித்துவ நம்பிக்கை கொண்ட பக்தர்களின் கருத்தாக இருந்தது. அதனால் அந்த கல்லூரியின் மாணவர்களும், முன்னாள் மாணவர்களும் சேர்ந்து இந்த பிஷப்பின் போக்கை கண்டித்து போராட தலைப்பட்டனர். அதில் பிரபல பேராசிரியர் சாலமன் பாப்பையா முன்னாள் நின்றார். அதற்கு எதிராக தனக்கும் ஆள்வோரின் ஆதரவு வேண்டுமே என்று கருதிய பிஷப்ப், தனது மைத்துனரான சென்னை பிஷப் எஸ்ரா சற்குணத்தை தொடர்பு கொண்டார். அவர் ஏற்கனவே தி.மு.க.காரர் என்ற பெயரை பெற்றிருப்பதனால், மதுரையின் தி.மு.க. தீர்மானிக்கும் சக்தியிடம் அந்த விவகாரத்தை ஒப்படைத்தார்.
இப்படித்தான் அழகிரி இந்த விசயத்தில் இறங்கியிருக்கிறார். பிஷப் கிறிஸ்டோபர் ஆசிர், பிஷப் எஸ்ரா சர்குனத்திற்கு மாமா மகன் என்பதாலும், இருவரும் நாசரேத் அருகே உள்ள பண்டாரவளையை சேர்ந்தவர்கள். அதேசமயம் முதல்வராக உள்ள சின்னராசும் சாயர்புரத்தை சேர்ந்தவர். முதல்வருக்கு அடுத்து துணை முதல்வர்தான் முதல்வர்ரக வரவேண்டும் என்ற விதி இங்கே கடைப்பிடிக்கப்படுகிறது. ஆனால் முதல்வருக்கு நிர்வாக தலைமை என்பதை உணர்ந்த பிஷப் கிறிஸ்டோபர் ஆசிர் இப்போது தனது உறவுக்காரரான மோகனை அந்த பொறுப்புக்கு அதாவது கல்லூரி முதல்வர் பொறுப்புக்கு கொண்டு வார கடினமாக முயன்று வருகிறார்.

பா.ஜ.க.மீது பாயும் முரசொலி

. முரசொலியில் கடந்த திங்கள் அன்று, சின்னகுத்தூசி மூலம் ஒரு கட்டுரையை கருணாநிதி எழுத வைத்துள்ளார். அதில், நீரா ராடியாவிற்கு பா.ஜ.க.அரசின் ரகசியங்களை அன்று அமைச்சராக இருந்த அனந்தகுமார் முன்கூட்டியே வழங்கியது உண்டா? இல்லையா? என்பது முதல் கேள்வி. டில்லியில் பா.ஜ.க.அரசு நீரா ராடியாவிற்கு வசந்த் குஞ்ச பகுதியில் நிலம் ஒதுக்கியதா? இல்லையா? அந்த நிலத்தில் நீரா ராடியாவின் அறக்கட்டளைக்கு அடிக்கல் நாட்டும் விழாவில் அத்வானி கலந்து கொண்டு பாராட்டினாரா? இல்லையா? பா.ஜ.க. ஆட்சியில் நீரா ராடியா ஓல கோடி ரூபாயை சுவிஸ் வங்கி கணக்கில் செலுத்தினாரா? இல்லையா? நீரா ராடியா சுவிஸ் வங்கியில் போட்ட கருப்பு பணத்தில் பல பா.ஜ.க. தலைவர்களின் பணமும் உண்டா? இல்லையா?அனந்தகுமாருடன் மட்டுமின்றி பா.ஜ.க.வின் அகில இந்திய தலைவரான நித்தின் கட்காரிக்கும், நீரா ராடியாவிற்கும் வர்த்தக தொடர்பு இருக்கிறது என்பது உண்மையா? இல்லையா? --இப்படியாக கருணாநிதி சார்பாக கே.பி.சுந்தராம்பாள் போல முரசொலி பாடத்தொடங்கிவிட்டது. அப்படீனா நீரா ராடியா கூட சேர்ந்த எல்லோரும் வர்த்தக உறவும், சுவிஸ் வங்கி கருப்பு பணமும் வைத்திருப்பார்கள் என்று முரசொலி ஒப்புக்கொள்கிறதா? என்று பொதுமக்கள் கேட்க மாட்டார்களா?